TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 27 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்காண்பனவற்றில் எதனைத் தொடங்கினார்?
Q2
'நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
Q3
நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
Q4
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
Q5
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
Q6
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
Q7
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
Q8
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
Q9
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனின் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 - 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
Q10
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிதவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தைக் குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
Q11
கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.
Q12
கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் பெரும் புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிருவாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
Q13
வங்காளத்தின் பரசத் பகுதியில் நடைபெற்ற வஹாபி கிளர்ச்சிக்குத் தலைமையேற்றவர் யார்?
Q14
1831-32இல் நடந்த கோல் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் _______.
Q15
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q16
இந்திய தேசிய காங்கிரசின் முதல் (1885) தலைவர் யார்?
Q17
உலுகுலன் (பெரிய கலகம்) என்றழைக்கப்பட்ட முண்டா கிளர்ச்சி நடைபெற்ற இடம் _______.
Q18
1857இல் கான்பூரில் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நானா சாகிப் யாருடைய தத்துப்பிள்ளை?
Q19
1857 கிளர்ச்சியில் பேகம் ஹஸ்ரத் மகால் தலைமையேற்ற இடம் _______.
Q20
சிராஜ்-உத்-தௌலா தோற்கடிக்கப்பட்ட பிளாசிப் போர் நடைபெற்ற நாள் _______.
Q21
1857 மே 11இல் மீரட் சிப்பாய்கள் தில்லி செங்கோட்டைக்குச் சென்று யாரை இந்துஸ்தானின் மாமன்னராக அறிவித்தனர்?
Q22
1806ஆம் ஆண்டு வேலூரில் சிப்பாய்கள் எதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்?
Q23
1858 நவம்பர் இந்திய அரசு சட்டத்தின்படி இந்தியாவுக்கான பொறுப்பு யாரிடம் வழங்கப்பட்டது?
Q24
1875 தக்காண கலவரங்களின் முதல் பதிவான நிகழ்வு நடந்த இடம் _______.
Q25
முண்டா கிளர்ச்சிக்கு முன் சிதைந்த குண்ட்கட்டி முறை என்பது _______.
Q26
லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது _______.
Q27
தூத்துக்குடியில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்12 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சமூக அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3 இரண்டாம் உலகப்போர் 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் 8 தேசியம்: காந்திய காலகட்டம் 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 11 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 12 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 13 இந்தியா – வேளாண்மை 14 இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 15 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 16 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 17 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 18 இந்திய அரசியலமைப்பு 19 நடுவண் அரசு 20 மாநில அரசு 21 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 22 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 23 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் 24 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 25 உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 26 அரசாங்கமும் வரிகளும் 27 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்