March 2025 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வின் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.
Q1
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?
- A. சீனா
- B. ஜப்பான்சரி
- C. கொரியா
- D. மங்கோலியா
விளக்கம். 1894-95 சீன-ஜப்பானியப் போரில் சீனாவைத் தோற்கடித்த ஜப்பான் கிழக்கு ஆசியாவின் வலிமை மிக்க நாடாக உருவானது.
Q2
இத்தாலி யாருடன் லேட்ரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது ?
- A. ஜெர்மனி
- B. ரஷ்யா
- C. போப்சரி
- D. ஸ்பெயின்
விளக்கம். 1929இல் முசோலினியின் இத்தாலி போப்புடன் லேட்ரன் உடன்படிக்கை செய்து வாடிகனை தனி நாடாக ஏற்றது.
Q3
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது ?
- A. 1975
- B. 1976சரி
- C. 1973
- D. 1974
விளக்கம். 1975இல் சைகோன் வீழ்ந்த பின் 1976இல் வடக்கு, தெற்கு வியட்நாம் முறையாக ஒன்றிணைக்கப்பட்டன.
Q4
கூற்று : ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
- A. கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
- B. கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.சரி
- C. இரண்டுமே தவறு.
- D. காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விளக்கம். குழந்தைத் திருமணத்தை எதிர்த்து விதவை மறுமணத்தை ஆதரித்ததால்தான் புலே ஆதரவற்றோர் விடுதிகளையும் விதவைக் காப்பகங்களையும் திறந்தார்.
Q5
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த பின்னணியில் நிறைவேற்றப்பட்டது ?
- A. கோல் கிளர்ச்சி
- B. இண்டிகோ கிளர்ச்சி
- C. முண்டா கிளர்ச்சிசரி
- D. தக்காண கலவரங்கள்
விளக்கம். பிர்சா முண்டா தலைமையிலான முண்டா கிளர்ச்சிக்குப் பின் 1908இல் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
Q6
இந்தியாவின் காலநிலை ________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
- A. அயனமண்டல ஈரக் காலநிலை
- B. நிலநடுக்கோட்டுக் காலநிலை
- C. அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலைசரி
- D. மித அயனமண்டலக் காலநிலை
விளக்கம். பருவக்காற்றுகளின் திசை மாற்றம் இந்தியக் காலநிலையைத் தீர்மானிப்பதால் அது அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை எனப்படுகிறது.
Q7
________ என்பது ஒரு வாணிபப் பயிர்.
- A. பருத்திசரி
- B. கோதுமை
- C. அரிசி
- D. மக்காச் சோளம்
விளக்கம். பருத்தி விற்பனைக்கும் தொழிலுக்கும் பயிரிடப்படுவதால் வாணிபப் பயிர்; மற்றவை உணவுப் பயிர்கள்.
Q8
இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் :
- A. குஜராத்
- B. இராஜஸ்தான்
- C. மகராஷ்டிரம்சரி
- D. தமிழ்நாடு
விளக்கம். இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969இல் மகாராஷ்டிரத்தின் தாராப்பூரில் நிறுவப்பட்டது.
Q9
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு ________
- A. வரைபடவியல்
- B. மக்களியல்சரி
- C. மானுடவியல்
- D. கல்வெட்டியல்
விளக்கம். மக்கள் தொகையின் அளவு, அமைப்பு, பரவல் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு மக்களியல் ஆகும்.
Q10
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப்பயிர் :
- A. பருப்பு வகைகள்
- B. சிறுதானியங்கள்சரி
- C. எண்ணெய் வித்துக்கள்
- D. நெல்
விளக்கம். நெல் தமிழக மக்களின் முதன்மை உணவு; சிறுதானியங்கள் இரண்டாவது முக்கிய உணவுப்பயிர்.
Q11
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்ட மன்றத்தைப் பெற்றிருக்கவில்லை ?
- A. ஆந்திரப் பிரதேசம்
- B. தெலுங்கானா
- C. தமிழ்நாடுசரி
- D. உத்திரப் பிரதேசம்
விளக்கம். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை மட்டுமே உள்ளது; ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசத்தில் சட்ட மேலவையும் உள்ளது.
Q12
ஒபெக் (OPEC) என்பது :
- A. சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
- B. ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
- C. எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்புசரி
- D. ஒரு சர்வதேச நிறுவனம்
விளக்கம். OPEC என்பது பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு ஆகும்.
Q13
________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது. இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
- A. செலவு முறை
- B. மதிப்பு கூட்டு முறைசரி
- C. வருமான முறை
- D. நாட்டு வருமானம்
விளக்கம். மதிப்பு கூட்டு முறையில் உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் கூட்டப்பட்ட மதிப்பைச் சேர்த்து இறுதிப் பண்டத்தின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
Q14
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது ?
- A. 1984
- B. 1976
- C. 1950
- D. 1994சரி
விளக்கம். காட் உருகுவே சுற்றின் டங்கல் திட்டத்தில் இந்தியா 1994இல் கையெழுத்திட்டது.
இந்த வினாத்தாள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய March 2025 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வின் பகுதி I ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு வினாக்கள். விடைகளும் விளக்கங்களும் மீள்பார்வைக்காக TN Online Test ஆல் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவும் அது இடம்பெற்ற பாடநூல் அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தின் குறிப்புகள் மற்றும் வினாக்களுக்குத் திரும்பிச் செல்லலாம்.