TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் March 2026

வினாத்தாள் குறியீடு 9226 100 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

March 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

சமூக அறிவியல் / Social ScienceMarch 2026 · March 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனக் கூறியவர் யார் ?
(அ) லெனின்
(ஆ) மார்க்ஸ்
(இ) சன் யாட் சென்
(ஈ) மா சே துங்
Who said "Imperialism is the highest stage of Capitalism" ?
(a) Lenin
(b) Marx
(c) Sun Yat-Sen
(d) Mao Tse Tung
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Lenin · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
யாருடைய ஆக்கிரமிப்பின் போது மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று ?
(அ) ஹெர்னன் கோர்ட்ஸ்
(ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ
(இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
(ஈ) முதலாம் பெட்ரோ
With whose conquest did the Mexican Civilization collapse ?
(a) Hernan Cortes
(b) Francisco Pizarro
(c) Toussaint Louverture
(d) Pedro I
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Hernan Cortes · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது ?
(அ) 1979
(ஆ) 1989
(இ) 1990
(ஈ) 1991
When was the Warsaw Pact dissolved ?
(a) 1979
(b) 1989
(c) 1990
(d) 1991
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 1991 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
"சத்யார்த்தபிரகாஷ்" எனும் நூலின் ஆசிரியர் யார் ?
(அ) தயானந்த சரஸ்வதி
(ஆ) அயோத்தி தாசர்
(இ) அன்னிபெசன்ட்
(ஈ) நாராயண குரு
Who was the author of the book Satyarthaprakash ?
(a) Dayananda Saraswathi
(b) Iyothee Thassar
(c) Annie Besant
(d) Narayana Guru
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Dayananda Saraswathi · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார் ?
(அ) தாதாபாய் நௌரோஜி
(ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
(இ) பிபின் சந்திர பால்
(ஈ) ரொமேஷ் சந்திரா
Find out the Militant Nationalist from the following :
(a) Dadabhai Naoroji
(b) Justice Govind Ranade
(c) Bipin Chandra Pal
(d) Romesh Chandra
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Bipin Chandra Pal · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ________.
(அ) தமிழ்நாடு
(ஆ) கேரளா
(இ) பஞ்சாப்
(ஈ) மத்தியப் பிரதேசம்
Western disturbances cause rainfall in ________.
(a) Tamil Nadu
(b) Kerala
(c) Punjab
(d) Madhya Pradesh
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Punjab · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
ஆறுகளின் மூலம் உருவாகும் மண் :
(அ) செம்மண்
(ஆ) கரிசல் மண்
(இ) பாலை மண்
(ஈ) வண்டல் மண்
The soil formed by the rivers are :
(a) Red soil
(b) Black soil
(c) Desert soil
(d) Alluvial soil
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Alluvial soil · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் :
(அ) உயிரி சக்தி
(ஆ) சூரியன்
(இ) நிலக்கரி
(ஈ) எண்ணெய்
The most abundant source of energy is :
(a) Biomass
(b) Sun
(c) Coal
(d) Oil
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Sun · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் :
(அ) சிமெண்ட்
(ஆ) ஆபரணங்கள்
(இ) தேயிலை
(ஈ) பெட்ரோலியம்
The major import item of India is :
(a) Cement
(b) Jewels
(c) Tea
(d) Petroleum
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Petroleum · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை :
(அ) 3 மற்றும் 15
(ஆ) 4 மற்றும் 16
(இ) 3 மற்றும் 16
(ஈ) 4 மற்றும் 15
Number of major and minor ports in Tamil Nadu are :
(a) 3 and 15
(b) 4 and 16
(c) 3 and 16
(d) 4 and 15
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 3 and 15 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
மாநில ஆளுநரை நியமிப்பவர் :
(அ) பிரதமர்
(ஆ) முதலமைச்சர்
(இ) குடியரசுத் தலைவர்
(ஈ) தலைமை நீதிபதி
The Governor of the State is appointed by the :
(a) Prime Minister
(b) Chief Minister
(c) President
(d) Chief Justice
விடையைக் காட்டு ▾ (இ) / (c) President · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன ?
(அ) ஐந்து
(ஆ) நான்கு
(இ) மூன்று
(ஈ) இரண்டு
How many Indian States have their boundary with Nepal ?
(a) Five
(b) Four
(c) Three
(d) Two
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Five · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
முதன்மைத் துறை இதனை உள்ளடக்கியது :
(அ) வேளாண்மை
(ஆ) தானியங்கிகள்
(இ) வர்த்தகம்
(ஈ) வங்கி
Primary sector consists of :
(a) Agriculture
(b) Automobiles
(c) Trade
(d) Banking
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Agriculture · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
1632 -இல் ஆங்கிலேயர்களுக்கு "கோல்டன் ஃபயர்மேன்" வழங்கியவர் யார் ?
(அ) ஜஹாங்கீர்
(ஆ) கோல்கொண்டா சுல்தான்
(இ) அக்பர்
(ஈ) ஔரங்கசீப்
Who granted the English "Golden Fireman" in 1632 ?
(a) Jahangir
(b) Sultan of Golconda
(c) Akbar
(d) Aurangazeb
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Sultan of Golconda · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any ten questions. Question No. 28 is compulsory.
15.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை ?
What were the three militant forms of Nationalism in Europe ?
2 marks
16.
முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை ?
What was the result of Mussolini's March on Rome ?
2 marks
17.
திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக.
Highlight the essence of the Tiruchirappalli Proclamation of 1801.
2 marks
18.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
Summarise the essence of Lucknow Pact.
2 marks
19.
திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
Write a note on the Tirunelveli Uprising.
2 marks
20.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
State the neighbouring countries of India.
2 marks
21.
"ஜெட் காற்றோட்டங்கள்" என்றால் என்ன ?
What are 'Jet Streams' ?
2 marks
22.
இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
Mention the plantation crops of India.
2 marks
23.
பேரிடர் அபாய நேர்வு குறைப்பு - வரையறுக்கவும்.
Define Disaster Risk Reduction.
2 marks
24.
கோயம்புத்தூர் ஏன் தென்னிந்தியாவின் "மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது ?
Why is Coimbatore called the "Manchester" of South India ?
2 marks
25.
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன ?
What do you understand by the "Appellate Jurisdiction" of the High Court ?
2 marks
26.
சார்க் (SAARC) உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
List out the Member Countries of SAARC.
2 marks
27.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன ?
What are the effects of Green Revolution ?
2 marks
28.
சிப்காட் (SIPCOT) - சிறு குறிப்பு வரைக.
Write a short note on SIPCOT.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும். (மாற்றுத் திறனாளி மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் நிகழ்வுகளையும் இடங்களையும் குறிப்பிட்டு காட்டுவதற்கு பதிலாக அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் மட்டுமே எழுத வேண்டும்.)
Note : Answer any ten questions. Question No. 42 is compulsory. (Instead of marking, differently abled candidates have to write only short notes for the questions related to Time-line chart and Map.)
29.

கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. படை நீக்கம் செய்யப்பட்ட ________ பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
  2. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ________ ஆவார்.
  3. கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் ________ ஆகும்.
  4. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக ________ தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  5. திருப்பூர் ________ தொழிலுக்குப் பெயர்பெற்றது.

Fill in the blanks :

  1. Hitler attacked ________ which was a demilitarised zone.
  2. The First Woman Legislator in India was ________.
  3. ________ is the highest peak in the Southern most part of the Eastern Ghats.
  4. ________ was elected as the temporary President of the Constituent Assembly.
  5. Tiruppur is known for ________ industry.
5 marks
30.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதிக்கவும்.
Discuss the main cause of the First World War.
5 marks
31.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்க.
Assess the structure and activities of the UNO.
5 marks
32.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
Discuss the response to Swadeshi Movement in Tamil Nadu.
5 marks
33.

(அ) வேறுபடுத்துக.

  1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
  2. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

(ஆ) காரணம் கூறுக.
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகின்றன.

(a) Distinguish between :

  1. Western Ghats and Eastern Ghats.
  2. Rabi and Kharif crop seasons.

(b) Give Reason : Eastern Ghats are not a continuous range.

5 marks
34.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
Give a detailed account on the basin of The Ganga.
5 marks
35.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
Describe the Forests of India.
5 marks
36.
தமிழ்நாட்டின் கனிம பரவலை விளக்குக.
Explain the mineral distribution in Tamil Nadu.
5 marks
37.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
Mention the Fundamental Rights.
5 marks
38.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
Critically examine the Powers and Functions of the Parliament.
5 marks
39.
GDP கணக்கிடும் முறைகள் யாவை ? அவற்றை விளக்கவும்.
What are the methods of calculating Gross Domestic Product and explain it.
5 marks
40.
GST -யின் அமைப்பை எழுதுக.
Write the structure of GST.
5 marks
41.

கீழ்க்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.

1930 முதல் 1950 வரையிலான ஆண்டுகட்குட்பட்ட முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

Draw a Timeline for the following.

Write any five important historical events between 1930 and 1950.

5 marks
42.

உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்.

  1. மொராக்கோ
  2. ஜெர்மனி
  3. ரஷ்யா
  4. ஹிரோஷிமா
  5. சான் பிரான்சிஸ்கோ

Mark the following places on the World Map.

  1. Morocco
  2. Germany
  3. Russia
  4. Hiroshima
  5. San Francisco
5 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். (மாற்றுத்திறனாளி மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.)
Note : Answer the following questions. (Differently abled candidates have to write only notes for the questions related to Map.)
43.
(அ)காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராய்க.
(a)Examine the factors that led to the transformation of Gandhi into a Mass Leader.
அல்லது / OR
(ஆ)தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
(b)Write an essay on the foundation and development of Tamil Renaissance.
8 marks
44.
(அ)

கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. கிழக்கு தொடர்ச்சி மலை
  2. மாளவ பீடபூமி
  3. கோதாவரி ஆறு
  4. மலைக் காடுகள்
  5. அகஸ்திய மலை உயிர்க்கோளப் பெட்டகம்
  6. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  7. தேயிலை விளையும் பகுதி (ஏதேனும் ஒன்று)
  8. எவரெஸ்ட் சிகரம்
(a)

Mark the following places on the given outline map of India.

  1. Eastern Ghats
  2. Malwa Plateau
  3. River Godavari
  4. Mountain Forests
  5. Agasthiyamalai biosphere reserve
  6. Andaman and Nicobar Islands
  7. Tea growing area (mark any one)
  8. Mt. Everest
அல்லது / OR
(ஆ)

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்காணும் இடங்களைக் குறிக்கவும்.

  1. பாக் நீர்சந்தி
  2. வைகை ஆறு
  3. சென்னை
  4. முதுமலை வனவிலங்கு சரணாலயம்
  5. நெல் விளையும் பகுதி (ஏதேனும் ஒன்று)
  6. மணிமுத்தாறு அணை
  7. கன்னியாகுமரி
  8. காகித தொழிலகங்கள் (ஏதேனும் ஒன்று)
(b)

Mark the following places on the given outline map of Tamil Nadu.

  1. Palk Strait
  2. River Vaigai
  3. Chennai
  4. Mudumalai Wildlife Sanctuary
  5. Paddy growing area (mark any one)
  6. Manimutharu Dam
  7. Kanyakumari
  8. Paper industry (mark any one)
8 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து சமூக அறிவியல் வினாத்தாள்கள்