TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள் April 2023

வினாத்தாள் குறியீடு 6811 100 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

April 2023 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

தமிழ் / தமிழ்April 2023 · April 2023

பகுதி – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள்.
- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.
(அ) இலையும் சருகும்
(ஆ) தோகையும் சண்டும்
(இ) தாளும் ஓலையும்
(ஈ) சருகும் சண்டும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
(அ) அங்கு வறுமை இல்லாததால்
(ஆ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
(இ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(ஈ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) உழவு, மண், ஏர், மாடு
(ஆ) மண், மாடு, ஏர், உழவு
(இ) உழவு, ஏர், மண், மாடு
(ஈ) ஏர், உழவு, மாடு, மண்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
"பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க" என்று ________ வேண்டினார்.
(அ) கருணையன், எலிசபெத்துக்காக
(ஆ) எலிசபெத், தமக்காக
(இ) கருணையன், பூக்களுக்காக
(ஈ) எலிசபெத், பூமிக்காக
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ________.
(அ) துலா
(ஆ) சீலா
(இ) குலா
(ஈ) இலா
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
அருந்துணை என்பதைப் பிரித்தால் ________.
(அ) அருமை + துணை
(ஆ) அரு + துணை
(இ) அருமை + இணை
(ஈ) அரு + இணை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
தேர்ப்பாகன் - இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.
(அ) வினைத்தொகை
(ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(இ) பண்புத்தொகை
(ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர்.
(அ) உதியன் ; சேரலாதன்
(ஆ) அதியன் ; பெருஞ்சாத்தன்
(இ) பேகன் ; கிள்ளிவளவன்
(ஈ) நெடுஞ்செழியன் ; திருமுடிக்காரி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
"நாற்றிசையும் செல்லாத நாடில்லை"
"ஐந்துசால்பு ஊன்றிய தூண்"
- இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.
(அ) நான்கு, ஐந்து - ௪, ௫
(ஆ) மூன்று, நான்கு - ௩, ௪
(இ) ஐந்து, ஏழு - ௫, ௭
(ஈ) நான்கு, ஆறு - ௪, ௬
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்" - பாரதியார்
- இப்பாடலடியில் இடம்பெற்றுள்ள வழுவமைதி.
(அ) திணை வழுவமைதி
(ஆ) பால் வழுவமைதி
(இ) மரபு வழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
பாடி மகிழ்ந்தனர் - எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) பெயரெச்சத்தொடர்
(ஆ) வினையெச்சத்தொடர்
(இ) வேற்றுமைத்தொடர்
(ஈ) விளித்தொடர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது ?
(அ) நீதிவெண்பா
(ஆ) புறநானூறு
(இ) மணிமேகலை
(ஈ) சிலப்பதிகாரம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
(அ) பகர்வனர் ; பட்டினும்
(ஆ) பட்டினும் ; கட்டினும்
(இ) கட்டும் ; தூசும்
(ஈ) பட்டினும் ; மயிரினும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
காருகர் - பொருள் தருக.
(அ) உழவர்
(ஆ) நெசவாளர்
(இ) பொற்கொல்லர்
(ஈ) காவலர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் :
(அ) பூக்களும் ; சந்தனமும்
(ஆ) பூக்களும் ; அகிலும்
(இ) அகிலும் ; சந்தனமும்
(ஈ) பட்டும் ; சந்தனமும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾ (இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II

பிரிவு – 1 (வினா 16–21): எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21-வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 4×2=8

பிரிவு – 2 (வினா 22–28): எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10

16.
தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடிய சிறுகூலங்களின் பெயர்களை எழுதுக.
2 marks
17.
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
(அ) கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.
(ஆ) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
2 marks
18.
குறிப்பு வரைக – ‘சதாவதானம்’.
2 marks
19.
மெய்க்கீர்த்திப் பாடுவதன் நோக்கம் யாது ?
2 marks
20.
குறிப்பு வரைக – “அவையம்”.
2 marks
21.
‘செயற்கை’ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
2 marks
22.
கீழ்க்காணும் ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
(அ) உதகமண்டலம்   (ஆ) திருநெல்வேலி
(இ) சைதாப்பேட்டை   (ஈ) கும்பகோணம்
2 marks
23.
பழமொழிகளை நிறைவு செய்க.
(அ) ஒரு பானை ________.
(ஆ) அளவுக்கு ________.
2 marks
24.
பகுபத உறுப்பிலக்கணம் தருக – “ஒலித்து”.
2 marks
25.
கலைச்சொற்கள் தருக.
(அ) Patent   (ஆ) Storm

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வாள், பொன், பூ
2 marks
26.
அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்.
2 marks
27.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
(அ) மனக்கோட்டை   (ஆ) கண்ணும் கருத்தும்
2 marks
28.
குறள்வெண்பாவின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
2 marks

பகுதி – III

பிரிவு – 1 (வினா 29–31): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6

பிரிவு – 2 (வினா 32–34): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 34-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 2×3=6

பிரிவு – 3 (வினா 35–37): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6

29.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதைப் பற்றி எழுதுக.
3 marks
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
“போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
(அ) எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது ?
(ஆ) பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
(இ) யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது ?
3 marks
31.
சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வதுபோல் ஓர் உரையாடல் எழுதுக.
3 marks
32.
“சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது”
– இடஞ்சுட்டிப் பொருள் தருக.
3 marks
33.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக.
3 marks
34.
(அ)அடிபிறழாமல் எழுதுக.
“அருளைப் பெருக்கி” – எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்.
அல்லது / OR
(ஆ)அடிபிறழாமல் எழுதுக.
“மாற்றம்” எனத்தொடங்கி “சாலை” என முடியும் காலக்கணிதப் பாடல்.
3 marks
35.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த
பூங்கொடி வரும் வழியில் ஆடு
மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர்
நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள்
சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
– இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
3 marks
36.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
– குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
3 marks
37.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
– இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
3 marks

பகுதி – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5×5=25
38.
(அ)முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதை குறள்வழி விளக்குக.
5 marks
39.
(அ)பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்கு பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
அல்லது / OR
(ஆ)மருந்தகம் ஒன்றிலிருந்து உங்கள் தாத்தா வாங்கி வந்த மருந்தின் பயன்பாட்டுத் தேதி முடிவடைந்ததை அறிந்த நீங்கள், அந்த மருந்தகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை ஆய்வாளர் அவர்களுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதுக.
5 marks
40.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
5 marks
41.
அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினர் ஆக வேண்டினான். அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15 காந்தி தெரு, குமாரபாளையம் நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
5 marks
42.
(அ)பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்துகொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக.
அல்லது / OR
(ஆ)மொழி பெயர்க்கவும் :
Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் போது நான் கோடை எனப்படுகிறேன். மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடைக் காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக் காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
(i) மேற்கிலிருந்து வீசும் காற்று யாது ?
(ii) ஊதைக் காற்று என்று அழைப்பதேன் ?
(iii) மேற்கு என்பதன் மற்றொரு பெயர் என்ன ?
(iv) வாடை என்பது எத்திசையைக் குறிக்கிறது ?
(v) இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினை தருக.
5 marks

பகுதி – V

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3×8=24
43.
(அ)உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
8 marks
44.
(அ)‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’
என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்.
அல்லது / OR
(ஆ)‘புயலிலே ஒரு தோணி’ கதைப்பகுதியில் இடம்பெறும் கடற்பயண நிகழ்வுகளை விவரித்து எழுதுக.
8 marks
45.
(அ)உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
குறிப்புகள் : முன்னுரை – அரசுப் பொருட்காட்சி அமைவிடம் – பல்வித அரங்குகள் – நடைபெற்ற நிகழ்ச்சிகள் – அடைந்த உணர்வுகளும் நன்மைகளும் – முடிவுரை.
அல்லது / OR
(ஆ)குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை – கொரோனா பெருந்தொற்று – தடுப்பு நடவடிக்கைகள் – விழிப்புணர்வுச் செயல்பாடுகள் – நமது கடமைகள் – முடிவுரை.
8 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து தமிழ் வினாத்தாள்கள்