பகுதி – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1.
'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'
- இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே :
- இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே :
(அ) பாடிய ; கேட்டவர்
(ஆ) பாடல் ; பாடிய
(இ) கேட்டவர் ; பாடிய
(ஈ) பாடல் ; கேட்டவர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
'மலர்க்கை' - தொகையின் வகையைத் தேர்க.
(அ) பண்புத் தொகை
(ஆ) உவமைத் தொகை
(இ) அன்மொழித் தொகை
(ஈ) உம்மைத் தொகை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?
(அ) வானத்தையும் பாட்டையும்
(ஆ) வானத்தையும் புகழையும்
(இ) வானத்தையும் பூமியையும்
(ஈ) வானத்தையும் பேரொலியையும்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.
- இக்குறட்பாவில் இடம்பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க.
வேளாண்மை என்னும் செருக்கு.
- இக்குறட்பாவில் இடம்பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க.
(அ) தாளாண்மை - தகைமைக்கண்
(ஆ) தாளாண்மை - வேளாண்மை
(இ) தகைமைக்கண் - தங்கிற்றே
(ஈ) வேளாண்மை - செருக்கு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
"இங்கு நகரப் பேருந்து நிற்குமா ?" என்று வழிப்போக்கர் கேட்டது ________ வினா.
"அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது ________ விடை.
"அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது ________ விடை.
(அ) ஐய வினா, வினா எதிர்வினாதல்
(ஆ) அறி வினா, மறை விடை
(இ) அறியா வினா, சுட்டு விடை
(ஈ) கொளல் வினா, இனமொழி விடை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
'குழந்தை வந்தது' என்ற எழுவாய்த் தொடரின் விளித் தொடரைத் தேர்க.
(அ) குழந்தையுடன் வா
(ஆ) வந்த குழந்தை
(இ) குழந்தையே வா!
(ஈ) குழந்தை வந்தது
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்களைத் தேர்க.
(அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
(ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
(இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
(ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
மேன்மை தரும் அறம் என்பது :
(அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
(ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
(இ) புகழ்கருதி அறம் செய்வது
(ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
காசிக் காண்டம் என்பது :
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.
(அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு :
(அ) சிங்கப்பூர்
(ஆ) மலேசியா
(இ) இந்தியா
(ஈ) இலங்கை
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) காசிக்காண்டம்
(இ) நற்றிணை
(ஈ) முல்லைப்பாட்டு
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
'நனந்தலை உலகம்' என்பதன் சரியான பொருளைத் தேர்க.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
'நனந்தலை உலகம்' என்பதன் சரியான பொருளைத் தேர்க.
(அ) சிறிய உலகம்
(ஆ) குளிர்ந்த உலகம்
(இ) அகன்ற உலகம்
(ஈ) வெப்பமான உலகம்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(இ) / (c) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
'தடக்கை' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
'தடக்கை' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
(அ) உரிச்சொல் தொடர்
(ஆ) பண்புத் தொகை
(இ) வினைத் தொகை
(ஈ) வேற்றுமைத் தொடர்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(அ) / (a) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
பாடலின் ஆசிரியரைத் தேர்க.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
பாடலின் ஆசிரியரைத் தேர்க.
(அ) தமிழழகனார்
(ஆ) நப்பூதனார்
(இ) கீரந்தையார்
(ஈ) இளங்கோவடிகள்
(a)
(b)
(c)
(d)
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
பகுதி – II
பிரிவு – 1 (வினா 16–21): எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21-வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 4×2=8
பிரிவு – 2 (வினா 22–28): எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
16.
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
2 marks
17.
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்.
(அ) அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது.
(ஆ) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி.
(அ) அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது.
(ஆ) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி.
2 marks
18.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
2 marks
19.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார் ? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
2 marks
20.
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக எழுதுக.
2 marks
21.
‘முயற்சி’ – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
2 marks
22.
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
2 marks
23.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்.
(அ) கொடு – கோடு (ஆ) இயற்கை – செயற்கை
(அ) கொடு – கோடு (ஆ) இயற்கை – செயற்கை
2 marks
24.
பகுபத உறுப்பிலக்கணம் தருக.
மயங்கிய
மயங்கிய
2 marks
25.
கலைச்சொற்கள் தருக.
(அ) Biotechnology (ஆ) Myth
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.
குறிப்பு : எதிர்மறையாக மாற்றுக.
(அ) பார்த்த படம் (ஆ) எழுதாக்கவிதை
(அ) Biotechnology (ஆ) Myth
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.
குறிப்பு : எதிர்மறையாக மாற்றுக.
(அ) பார்த்த படம் (ஆ) எழுதாக்கவிதை
2 marks
26.
குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பதைப் போன்று வினாத் தொடர்கள் அமைக்கவும்.
குறிப்புகள் : (1) சுவைக்காத இளநீர் (2) விடுமுறை நாள்
குறிப்புகள் : (1) சுவைக்காத இளநீர் (2) விடுமுறை நாள்
2 marks
27.
“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.
– இதில் உள்ள வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
– இதில் உள்ள வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
2 marks
28.
‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2 marks
பகுதி – III
பிரிவு – 1 (வினா 29–31): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
பிரிவு – 2 (வினா 32–34): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 34-க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 2×3=6
பிரிவு – 3 (வினா 35–37): எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
3 marks
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
(அ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?
(ஆ) பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
(இ) பெய்த மழை – வினைத்தொகையாக மாற்றுக.

31.
நீங்கள் அறிந்த நிகழ்கலைக் கலைஞர் ஒருவரைப் பற்றியும் அவரது கலைத்திறன் பற்றியும் எழுதுக.
3 marks
32.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார் ?
3 marks
33.
நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக.
3 marks
34.
(அ)அடிபிறழாமல் எழுதுக.
“தென்னன் மகளே” – எனத் தொடங்கி “முடிதாழ வாழ்த்துவமே” – என முடியும் அன்னை மொழியே பாடல்.
“தென்னன் மகளே” – எனத் தொடங்கி “முடிதாழ வாழ்த்துவமே” – என முடியும் அன்னை மொழியே பாடல்.
அல்லது / OR
(ஆ)அடிபிறழாமல் எழுதுக.
“வாளால் அறுத்துச் சுடினும்” – எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்.
“வாளால் அறுத்துச் சுடினும்” – எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்.
3 marks
35.
‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும்’.
– இக்கூற்றில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.
– இக்கூற்றில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.
3 marks
36.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
– இத்திருக்குறளில் பயின்று வரும் அணியைக் குறிப்பிட்டு விளக்குக.
பொருளல்ல தில்லை பொருள்.
– இத்திருக்குறளில் பயின்று வரும் அணியைக் குறிப்பிட்டு விளக்குக.
3 marks
37.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
– இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
கல்லார் அறிவிலா தார்.
– இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
3 marks
பகுதி – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5×5=25
38.
(அ)தமிழர் மருத்துவ முறைக்கும், நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து விவரித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்ற வள்ளுவரின் கூற்றினை விளக்கி, உங்கள் கருத்தை எழுதுக.
5 marks
39.
(அ)புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் உங்கள் தம்பிக்கு, அதனை முறையாகப் பயன்படுத்தும் வழிமுறைகளை விளக்கி, அறிவுரைகள் கூறிக் கடிதம் ஒன்று எழுதுக.
அல்லது / OR
(ஆ)நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
5 marks
40.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

5 marks
41.
தமிழ்வேந்தன் என்பவரின் மகள் வான்மலர் அரசு உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம், கடலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை வான்மலராகக் கருதி, கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
5 marks
42.
(அ)மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் அட்டவணைப்படுத்துக.
அல்லது / OR
(ஆ)மொழிபெயர்க்கவும்.
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். உண்பவரின் மனமறிந்து உணவு வகைகளைப் பரிமாறுவர்.
(i) தமிழர் பண்பாட்டில் எதற்கு தனித்த இடமுண்டு ?
(ii) யாருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது ?
(iii) நம் மக்கள் வாழை இலையின் எந்தப் பயன்களை அறிந்திருந்தனர் ?
(iv) உண்பவரின் எந்த நிலையை அறிந்து உணவு பரிமாறுவர் ?
(v) இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினைத் தருக.

பகுதி – V
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3×8=24
43.
(அ)ஒரு குழந்தையைத் தூக்கவும், கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா ? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா ? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ என்ற தலைப்பில் விவரித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)எவரேனும் ஓர் அறிஞர்/சான்றோர்/புகழ்பெற்ற சாதனையாளர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன்வரலாறாக மாற்றி எழுதுக.
8 marks
44.
(அ)அழகிரி சாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.
அல்லது / OR
(ஆ)இராமானுசர் நாடகம் வெளிப்படுத்தும் மனிதநேயத்தினைச் சுவைபட விளக்கி எழுதுக.
8 marks
45.
(அ)பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
குறிப்பு :
நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்.
குறிப்பு :
நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்.
அல்லது / OR
(ஆ)குறிப்புகளைப் பயன்படுத்தி, ‘சாலைப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்புகள் :
முன்னுரை – சாலை விதிகளை அறிவோம் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளுக்கான காரணங்கள் – தேவையான விழிப்புணர்வு – நம் கடமை – முடிவுரை.
குறிப்புகள் :
முன்னுரை – சாலை விதிகளை அறிவோம் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளுக்கான காரணங்கள் – தேவையான விழிப்புணர்வு – நம் கடமை – முடிவுரை.
8 marks