TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் March 2024: விடையுடன் கூடிய வினாக்கள்

15 வினாக்கள் 100 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள் வினாத்தாள் குறியீடு 7711
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

March 2024 பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வின் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.

விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்

ஆன்லைன் தேர்வு எழுது → 📄 முழு வினாத்தாள் + PDF
Q1
'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'
- இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே :
  • A. பாடிய ; கேட்டவர்
  • B. பாடல் ; பாடிய
  • C. கேட்டவர் ; பாடிய
  • D. பாடல் ; கேட்டவர்சரி
விளக்கம். 'பாடல்' என்பது தொழிலைக் குறிக்கும் தொழிற்பெயர்; 'கேட்டவர்' என்பது வினை செய்தவரைக் குறிக்கும் வினையாலணையும் பெயர்.
பாடம்: அமுதஊற்று
Q2
'மலர்க்கை' - தொகையின் வகையைத் தேர்க.
  • A. பண்புத் தொகை
  • B. உவமைத் தொகைசரி
  • C. அன்மொழித் தொகை
  • D. உம்மைத் தொகை
விளக்கம். மலர்க்கை = மலர் போன்ற கை; 'போன்ற' என்ற உவம உருபு மறைந்து வந்ததால் உவமைத் தொகை.
Q3
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?
  • A. வானத்தையும் பாட்டையும்
  • B. வானத்தையும் புகழையும்
  • C. வானத்தையும் பூமியையும்
  • D. வானத்தையும் பேரொலியையும்சரி
விளக்கம். பரிபாடலில் 'விசும்பு' என்பது வானம்; 'இசை' என்பது ஓசை, அதாவது பேரொலி.
Q4
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.
- இக்குறட்பாவில் இடம்பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க.
  • A. தாளாண்மை - தகைமைக்கண்
  • B. தாளாண்மை - வேளாண்மைசரி
  • C. தகைமைக்கண் - தங்கிற்றே
  • D. வேளாண்மை - செருக்கு
விளக்கம். அடிதோறும் முதல் எழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை; தாளாண்மை, வேளாண்மை இரண்டிலும் 'ளா' ஒன்றி வருகிறது.
Q5
"இங்கு நகரப் பேருந்து நிற்குமா ?" என்று வழிப்போக்கர் கேட்டது ________ வினா.
"அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது ________ விடை.
  • A. ஐய வினா, வினா எதிர்வினாதல்
  • B. அறி வினா, மறை விடை
  • C. அறியா வினா, சுட்டு விடைசரி
  • D. கொளல் வினா, இனமொழி விடை
விளக்கம். தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளக் கேட்டதால் அறியா வினா; 'அதோ, அங்கே' எனச் சுட்டிக் கூறியதால் சுட்டு விடை.
பாடம்: மணற்கேணி
Q6
'குழந்தை வந்தது' என்ற எழுவாய்த் தொடரின் விளித் தொடரைத் தேர்க.
  • A. குழந்தையுடன் வா
  • B. வந்த குழந்தை
  • C. குழந்தையே வா!சரி
  • D. குழந்தை வந்தது
விளக்கம். விளியோடு வினை தொடர்வது விளித்தொடர்; 'குழந்தையே' என்ற விளியுடன் 'வா' தொடர்வதால் 'குழந்தையே வா!' விளித்தொடர்.
Q7
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்களைத் தேர்க.
  • A. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  • B. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  • C. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்சரி
  • D. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
விளக்கம். குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை) குறிஞ்சிக்கும், ஆறு பெரும்பொழுதுகளையும் கொண்ட மருதம், நெய்தல் நிலங்களுக்கும் உரிய பெரும்பொழுது.
Q8
மேன்மை தரும் அறம் என்பது :
  • A. கைமாறு கருதாமல் அறம் செய்வதுசரி
  • B. மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
  • C. புகழ்கருதி அறம் செய்வது
  • D. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
விளக்கம். சங்க இலக்கியத்தில் அறம் பாடத்தின்படி, கைமாறு கருதாமல் செய்யும் அறமே மேன்மை தரும்.
பாடம்: பெருவழி
Q9
காசிக் காண்டம் என்பது :
  • A. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
  • B. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
  • C. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்சரி
  • D. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
விளக்கம். அதிவீரராம பாண்டியர் இயற்றிய காசிக்காண்டம் காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்.
Q10
'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.
  • A. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.சரி
  • B. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  • C. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  • D. சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
விளக்கம். மதுரையில் சங்கம் வைத்த காலத்திலேயே மாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதை இச்செப்பேடு உணர்த்துகிறது (மொழிபெயர்ப்புக் கல்வி).
பாடம்: மணற்கேணி
Q11
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு :
  • A. சிங்கப்பூர்
  • B. மலேசியாசரி
  • C. இந்தியா
  • D. இலங்கை
விளக்கம். முதல் உலகத் தமிழ் மாநாடு 1966இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.
Q12
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
  • A. சிலப்பதிகாரம்
  • B. காசிக்காண்டம்
  • C. நற்றிணை
  • D. முல்லைப்பாட்டுசரி
விளக்கம். இவ்வடிகள் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டின் தொடக்க அடிகள்.
Q13
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
'நனந்தலை உலகம்' என்பதன் சரியான பொருளைத் தேர்க.
  • A. சிறிய உலகம்
  • B. குளிர்ந்த உலகம்
  • C. அகன்ற உலகம்சரி
  • D. வெப்பமான உலகம்
விளக்கம். நனந்தலை என்பது அகன்ற இடம்; நனந்தலை உலகம் = அகன்ற உலகம்.
Q14
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
'தடக்கை' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
  • A. உரிச்சொல் தொடர்சரி
  • B. பண்புத் தொகை
  • C. வினைத் தொகை
  • D. வேற்றுமைத் தொடர்
விளக்கம். 'தட' என்பது பெருமையைக் குறிக்கும் உரிச்சொல்; தட + கை = தடக்கை, உரிச்சொல் தொடர்.
Q15
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி"
பாடலின் ஆசிரியரைத் தேர்க.
  • A. தமிழழகனார்
  • B. நப்பூதனார்சரி
  • C. கீரந்தையார்
  • D. இளங்கோவடிகள்
விளக்கம். முல்லைப்பாட்டை இயற்றியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்.
ஆன்லைன் தேர்வு எழுது → அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

இந்த வினாத்தாள் பற்றி

இவை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய March 2024 பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வின் பகுதி I ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு வினாக்கள். விடைகளும் விளக்கங்களும் மீள்பார்வைக்காக TN Online Test ஆல் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவும் அது இடம்பெற்ற பாடநூல் அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தின் குறிப்புகள் மற்றும் வினாக்களுக்குத் திரும்பிச் செல்லலாம்.

பிற ஆண்டுகள்

2026 · March 2026 2025 · March 2025 2023 · April 2023