TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு தமிழ் March 2025: விடையுடன் கூடிய வினாக்கள்

15 வினாக்கள் 100 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள் வினாத்தாள் குறியீடு 8501
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

March 2025 பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வின் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.

விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்

ஆன்லைன் தேர்வு எழுது → 📄 முழு வினாத்தாள் + PDF
Q1
'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'.
- இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை ________.
  • A. நிலத்திற்கேற்ற விருந்து
  • B. இன்மையிலும் விருந்துசரி
  • C. அல்லிலும் விருந்து
  • D. உற்றாரின் விருந்து
விளக்கம். கையில் பொருள் இல்லாத நிலையிலும் யாழை அடகு வைத்து விருந்தளித்தது இன்மையிலும் விருந்து போற்றிய நிலை.
Q2
தொடர்களை முழுமை செய்வதற்குப் பொருத்தமான தொழிற்பெயர்களைத் தெரிவு செய்க.
பொதுவாழ்வில் ________ கூடாது. ________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.
  • A. புதையல், புதைத்தல்
  • B. சுட்டல், சுடுதல்
  • C. நடித்தல், நடிப்புசரி
  • D. காணுதல், காட்சி
விளக்கம். பொதுவாழ்வில் நடித்தல் கூடாது; நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது என்பதே பொருள் பொருந்திய தொடர்கள்.
பாடம்: அமுதஊற்று
Q3
வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி.
  • A. உவமை
  • B. தற்குறிப்பேற்றம்
  • C. உருவகம்சரி
  • D. தீவகம்
விளக்கம். வாய்மையையே மழைநீராக உருவகித்துக் கூறுவதால் இது உருவக அணி.
Q4
வெண்பா ________ ஓசை உடையது.
  • A. செப்பல்சரி
  • B. அகவல்
  • C. துள்ளல்
  • D. தூங்கல்
விளக்கம். வெண்பாவுக்குச் செப்பலோசை; ஆசிரியப்பாவுக்கு அகவல், கலிப்பாவுக்குத் துள்ளல், வஞ்சிப்பாவுக்குத் தூங்கல் ஓசை.
பாடம்: பெருவழி
Q5
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ________.
  • A. நாட்டைக் கைப்பற்றல்
  • B. ஆநிரை கவர்தல்
  • C. வலிமையை நிலைநாட்டல்சரி
  • D. கோட்டையை முற்றுகையிடல்
விளக்கம். புறப்பொருள் இலக்கணப்படி, தம் வலிமையை நிலைநாட்ட இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூச் சூடிப் போரிடுவது தும்பைத் திணை.
பாடம்: விதை நெல்
Q6
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள்.
- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது :
  • A. இலையும் சருகும்
  • B. தோகையும் சண்டும்
  • C. தாளும் ஓலையும்
  • D. சருகும் சண்டும்சரி
விளக்கம். காய்ந்த இலை சருகு எனவும், காய்ந்த தோகை சண்டு எனவும் வழங்கப்படும் (பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம்).
பாடம்: அமுதஊற்று
Q7
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ________ வேண்டினார்.
  • A. கருணையன், எலிசபெத்துக்காகசரி
  • B. எலிசபெத், தமக்காக
  • C. கருணையன், பூக்களுக்காக
  • D. எலிசபெத், பூமிக்காக
விளக்கம். தேம்பாவணியில், தாய் எலிசபெத்தின் உடலை அடக்கம் செய்த கருணையன், அவளுக்காக இவ்வாறு வேண்டுகிறான்.
பாடம்: பெருவழி
Q8
'வீசுதென்றல்' - தொகையின் வகையைத் தேர்க.
  • A. வேற்றுமைத்தொகை
  • B. வினைத்தொகைசரி
  • C. பண்புத்தொகை
  • D. உவமைத்தொகை
விளக்கம். வீசிய, வீசுகின்ற, வீசும் தென்றல் என முக்காலத்துக்கும் பொருந்திக் காலம் காட்டும் இடைநிலை மறைந்து வருவதால் வினைத்தொகை.
Q9
பின்வருவனவற்றுள் முறையான தொடர் :
  • A. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
  • B. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
  • C. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.சரி
  • D. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
விளக்கம். 'தனித்த' என்ற பெயரெச்சம் 'இடம்' என்பதைச் சார்ந்து வர வேண்டும்; எனவே 'வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு' என்பதே முறையான தொடர்.
Q10
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது :
  • A. அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
  • B. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்சரி
  • C. அறிவியல் முன்னேற்றம்
  • D. வெளிநாட்டு முதலீடுகள்
விளக்கம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலும் என்று ஜெயகாந்தன் கருதுகிறார்.
Q11
பொருத்தமானதைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
விருந்தும் மருந்தும் ________.
  • A. குப்பையிலே
  • B. உள்ளளவும்
  • C. மூன்று நாள்சரி
  • D. ஒரு சோறு பதம்
விளக்கம். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என்பது பழமொழி; எதுவும் அளவோடு இருக்க வேண்டும் என்பது பொருள்.
Q12
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
  • A. நற்றிணை
  • B. பரிபாடல்சரி
  • C. முல்லைப்பாட்டு
  • D. மலைபடுகடாம்
விளக்கம். உலகம் தோன்றிய முறையை விளக்கும் இவ்வடிகள் எட்டுத்தொகை நூலான பரிபாடலில் இடம்பெற்றுள்ளன.
Q13
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
பாடலில் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.
  • A. உருஅறி - உந்துவளிசரி
  • B. கருவளர் - உருஅறி
  • C. விசும்பில் - கருவளர்
  • D. உருஅறி - கிளர்ந்த
விளக்கம். அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது அடிமோனை; மூன்றாம், நான்காம் அடிகள் 'உ' என்று தொடங்குகின்றன (உருஅறி - உந்துவளி).
Q14
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
'ஊழ் ஊழ்' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
  • A. உரிச்சொல்தொடர்
  • B. பெயரெச்சத்தொடர்
  • C. வினையெச்சத்தொடர்
  • D. அடுக்குத்தொடர்சரி
விளக்கம். ஒரே சொல் பொருள் சிறப்புக்காக இருமுறை அடுக்கி வருவதால் 'ஊழ் ஊழ்' அடுக்குத்தொடர்.
Q15
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
பாடலின் ஆசிரியரைத் தேர்க.
  • A. இளங்கோவடிகள்
  • B. பரஞ்சோதி முனிவர்
  • C. கீரந்தையார்சரி
  • D. பெருங்கௌசிகனார்
விளக்கம். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பரிபாடல் பகுதியை இயற்றியவர் கீரந்தையார்.
ஆன்லைன் தேர்வு எழுது → அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

இந்த வினாத்தாள் பற்றி

இவை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய March 2025 பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வின் பகுதி I ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு வினாக்கள். விடைகளும் விளக்கங்களும் மீள்பார்வைக்காக TN Online Test ஆல் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவும் அது இடம்பெற்ற பாடநூல் அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தின் குறிப்புகள் மற்றும் வினாக்களுக்குத் திரும்பிச் செல்லலாம்.

பிற ஆண்டுகள்

2026 · March 2026 2024 · March 2024 2023 · April 2023