TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பயிர் பெருக்கம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 34 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கூற்று: மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப்பொருட்களைத் தருகின்றன.
காரணம்: மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன.
Q2
வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று _______.
Q3
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
Q4
வரிசை I-ஐ வரிசை II-உடன் பொருத்துக.
வரிசை I: i) வில்லியம் S. காட், ii) ஷல், iii) காட்டன் மேதர், iv) முல்லர் மற்றும் ஸ்டேட்லர்
வரிசை II: I) கலப்பின வீரியம், II) சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம், III) பசுமைப் புரட்சி, IV) இயற்கை கலப்பினமாதல்
Q5
பயிர் பெருக்கத்தில் வேகமான முறை
Q6
தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை
Q7
பயிர் பெருக்கத்தின் மூலம் ஒரே மாதிரியான மரபணு வகையம் கொண்ட தாவரங்களைப் பெறும் முறை
Q8
வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது
Q9
குட்டை மரபணு உடைய கோதுமை
Q10
ஒரே இரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q11
ஜெயா மற்றும் ரத்னா கீழ்க்கண்ட எந்த அரைக்குட்டை இரகத்திலிருந்து பெறப்பட்டன?
Q12
கீழ்க்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன?
Q13
வரிசை I (பயிர்) - ஐ வரிசை II (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
வரிசை I: I) காராமணி, II) கோதுமை, III) மிளகாய், IV) பிராசிகா
வரிசை II: i) ஹிம்கிரி, ii) பூசா கோமல், iii) பூசா சடபஹர், iv) பூசா சுவர்னிம்
Q14
பயிரிடப்படும் கோதுமையின் தரத்தை அதிகப்படுத்துவதற்காக அட்லஸ் 66 என்ற கோதுமை இரகம் கொடுநராகப் பயன்படுத்தப்பட்டது. இதிலுள்ள சத்து
Q15
கீழ்க்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது?
Q16
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?
Q17
பட்டியல் I (உயிரி உரம்) - ஐப் பட்டியல் II (உயிரினம்) உடன் பொருத்துக.
பட்டியல் I: i) தனிவாழ் உயிரி N2, ii) கூட்டுயிரி N2, iii) P கரைக்கும் திறனுடையது, iv) P இடம் மாற்றும் திறனுடையது
பட்டியல் II: அ) Aspergillus, ஆ) Amanita, இ) Anabaena azollae, ஈ) Azotobacter
Q18
மிகத் தொன்மையான வேளாண்மைக்கான பதிவை தொல்லியல் தரவுகள் எந்த நதிப்படுகைகளுக்கு இடையிலுள்ள செழுமை பிறைப் பகுதியில் காட்டுகின்றன?
Q19
வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படுவதால் தாவரச் சிற்றினங்களில் ஏற்படும் மாற்றம் அல்லாதது எது?
Q20
இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்களை அவர்களின் பங்களிப்புடன் பொருத்துக.
i) எம்.எஸ். சுவாமிநாதன், ii) டி.எஸ். வெங்கடராமன், iii) என்.ஜி.பி. ராவ், iv) சி.டி. படேல்
A) சிறந்த கரும்பு பெருக்கவியலாளர், B) உலகின் முதல் கலப்பினப் பருத்தி, C) சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி, D) உலகின் முதல் கலப்பினச் சோளம் (CSH-1)
Q21
நெல் சாகுபடி நிலங்களில் உயிரி உரமாகப் பயன்படும் மிதக்கும் நீர்வாழ் பெரணியான அசோலா எதனுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது?
Q22
கடற்பாசி திரவ உரம் (SLF) பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1) இது பெரு மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மட்டுமின்றி சைட்டோகைனின், ஜிப்ரலின் மற்றும் ஆக்சினையும் கொண்டுள்ளது.
2) பெரும்பாலான கடற்பாசி உரங்கள் 150 மீட்டர் உயரம் வளரும் கெல்ப் எனப்படும் பழுப்பு கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
3) கடற்பாசியிலுள்ள ஆல்ஜினேட்டுகள் மண்ணிலுள்ள உலோகங்களுடன் வினைபுரிந்து நீண்ட பாலிமர்களை உருவாக்குகின்றன.
4) கடற்பாசியில் பத்துக்கும் குறைவான கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
மேற்கண்டவற்றில் சரியான கூற்றுகள் எவை?
Q23
கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர்டைன் நோயை ஏற்படுத்துவதோடு, தக்காளியின் நாற்றுமடிதல் நோயையும் கட்டுப்படுத்தும் பூச்சி நோயுயிரி பூஞ்சை எது?
Q24
தழை உரப் பயிர்களைப் பொறுத்து பொருந்தாததைத் தேர்ந்தெடு.
Q25
அறிமுகப்படுத்தப்படும் இரகமானது தேர்ந்தெடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு மேம்பட்ட இரகத்தைத் தனித்துப் பிரித்து, உள்ளூர் இரகத்துடன் கலப்பு செய்து சில பண்புகளை மாற்றுவது
Q26
பிராசிகா (கடுகு சிற்றின வகை) பயிரின் பூசா கவுரவ் இரகம் எந்தப் பூச்சியை எதிர்க்கும் திறன் கொண்டது?
Q27
கூற்று (A): தூயவரிசைத் தேர்வு மூலம் பெறப்படும் இரகங்கள் குறைந்த தகவமைப்பும், சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப நிலைக்கும் தன்மை குறைவாகவும் கொண்டவை.
காரணம் (R): தூயவரிசைத் தேர்வில் புதிய மரபணுவகையங்கள் உருவாவதில்லை.
Q28
Gossypium hirsutum x Gossypium arboreum கலப்பின் மூலம் பெறப்பட்ட தேவிராஜ் பருத்தி இரகம் எதற்கு எடுத்துக்காட்டு?
Q29
உடல வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும், விளைச்சலிலும் தகவமைப்பிலும் மேம்படாமலும், மலட்டுத்தன்மையுடனோ குறைந்த வளத்துடனோ காணப்படும் சந்ததி வெளிப்படுத்துவது
Q30
சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் பற்றிய கூற்றுகளைக் கவனி.
1) முல்லர் மற்றும் ஸ்டேட்லர் (1927-1928) சடுதிமாற்றப் பயிர் பெருக்கம் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.
2) விதையிலாப் பயிர்களை மேம்படுத்துவதற்கான ஒரே வழிமுறை இதுவாகும்.
3) அடோமிடா 2 உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட அரிசி இரகம்.
4) இந்தியாவின் முதல் காமா தோட்டம் 1959-ல் வேளாண் ஆய்வு நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
மேற்கண்டவற்றில் சரியான கூற்றுகள் எவை?
Q31
மனிதனால் உருவாக்கப்பட்ட அயல்பன்மடியத் தானியமான ட்ரிட்டிகேல் எந்த இரு சிற்றினங்களின் குரோமோசோம் தொகுதிகளைப் பெருக்கமடையச் செய்து பெறப்பட்டது?
Q32
புதிய பயிர் பெருக்கத் தொழில்நுட்ப முறைகளில் (NBT), ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது
Q33
ஒரு பயிரின் மரபணுக்களிலுள்ள பல்வேறு அல்லீல்களின் மொத்தத் தொகுப்பு எனப்படுவது
Q34
கலப்பின வீரியத்தை மேம்படுத்த உடல வழி இனப்பெருக்கம் சிறந்ததாகக் கருதப்படுவது ஏன்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்17 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்17 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

பயிர் பெருக்கம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் பயிர் பெருக்கம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிரியல் – தாவரவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் 2 பாரம்பரிய மரபியல் 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 4 உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் 5 தாவரத் திசு வளர்ப்பு 6 சூழ்நிலையியல் கோட்பாடுகள் 7 சூழல்மண்டலம் 8 சுற்றுச்சூழல் பிரச்சினைகள் 10 பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்