TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இனப்பெருக்க நலன்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 33 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
HIV, ஹிபாடிடிஸ் B, வெட்டை நோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
Q2
கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரியாவால் மட்டுமே ஏற்படும் பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.
Q3
கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Q4
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
Q5
கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனத்தின் செயல்பாட்டைச் சரியாகக் கூறவில்லை?
Q6
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதைத் தேர்வு செய்க.
கூற்று 1: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள், கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கப் பாதையில் கருப்பைவாயினைக் கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
கூற்று 2: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
Q7
வரிசை I மற்றும் வரிசை II ஐப் பொருத்தி சரியான விடைத் தொகுப்பைத் தெரிவு செய்யவும்.
A. தாமிரம் வெளிவிடும் IUD - (i) LNG-20
B. ஹார்மோன் வெளிவிடும் IUD - (ii) லிப்பஸ் வளைய IUD
C. மருந்தில்லா IUD - (iii) சாஹெலி
D. மாத்திரைகள் - (iv) Multiload-375
Q8
கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று எது?
Q9
தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT, கருக்குழல் தடை ஆகிய பதங்களைக் கொண்டு பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளின் கிளைத்த மரத்தை நிரப்புக.
இயற்கை முறைகள்: கால இடைவெளி முறை, B, விலகல் முறை
A: கருத்தடை உறைகள், மறைப்புத் திரைகள், மூடிகள்
வாய்வழி கருத்தடை முறைகள்: மாத்திரைகள்
அறுவை சிகிச்சை முறைகள்: விந்துகுழல் தடை, C
உள் கருப்பைச் சாதனங்கள்: D
Q10
குடும்ப நலத் திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்திய சில நாடுகளில் ஒன்றான இந்தியா, எந்த ஆண்டு முதல் இத்திட்டத்தை நடத்தி வருகிறது?
Q11
இந்திய அரசின் RMNCH+A அணுகுமுறை எதற்கான ஒருங்கிணைந்த ஆரோக்கிய அணுகுமுறை?
Q12
பனிக்குடத் துளைப்பு (ஆம்னியோசென்டெசிஸ்) பொதுவாக கருவுற்ற பெண்களில் எந்தக் காலத்தில் செய்யப்படுகிறது?
Q13
குழந்தை பிறப்புக்கு முன் பாலினத்தைக் கண்டறிவதையும் அதன் அடிப்படையில் கருக்கலைப்பதையும் தடை செய்யும் PCPNDT சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Q14
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவைக் கருக்கலைப்பு செய்வது பெண்கருக்கொலை எனப்படும்.
2. பிறந்த பின் பச்சிளம் பெண் குழந்தைகளைக் கொல்வது பெண்சிசுக்கொலை எனப்படும்.
3. இந்தியாவில் குழந்தைகளின் பாலின விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 1000 ஆண்களுக்கு 919 இலிருந்து 927 பெண்களாக உயர்ந்துள்ளது.
Q15
சீரியக்க முறை / கால இடைவெளி முறை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Q16
கூற்று (A): தாய் பாலூட்டுவதால் இயல்பான அண்டசெல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ஆறு மாதங்கள் வரை தாமதமாகலாம்.
காரணம் (R): குழந்தைகள் பால் உறிஞ்சுவதால் பிட்யூட்டரி தூண்டப்பட்டு புரோலாக்டின் அதிகரிக்கிறது; அதிக புரோலாக்டின் GnRH மற்றும் கொனடோட்ரோபின் உற்பத்தியைத் தடுக்கலாம்.
Q17
லக்னோவிலுள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI) தயாரித்த சாஹெலி (Saheli) கருத்தடை மாத்திரையில் உள்ளது
Q18
கீழ்க்கண்டவற்றுள் ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் எது?
Q19
உள் கருப்பை சாதனங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தாமிரம் வெளிவிடும் சாதனங்கள் கருப்பையினுள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
2. ஹார்மோன் வெளிவிடும் சாதனங்கள் கருப்பைவாய் கோழைப்பொருளின் பிசுபிசுப்புத் தன்மையை உயர்த்தி விந்து செல்கள் நுழைவதைத் தடுக்கின்றன.
3. லிப்பஸ் வளையம் தாமிரம் வெளிவிடும் T வடிவ சாதனம் ஆகும்.
Q20
பெண்களுக்கான அறுவை சிகிச்சை முறையான கருக்குழல்தடையில் (Tubectomy) நடைபெறுவது
Q21
மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (MTP) பற்றிய கூற்றுகளைக் கவனி.
1. மத்திய அரசு 1971 ஆம் ஆண்டு கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கியது.
2. கருவளர்ச்சியின் ஆரம்பக்கட்டமான 12 வாரங்களுக்குள் (முதல் மும்மாதம்) கருக்கலைப்பு செய்வது மிகவும் பாதுகாப்பானது.
3. இரண்டாம் மும்மாதத்தில் கருக்கலைப்பு செய்வது முதல் மும்மாதத்தை விட ஆபத்து குறைந்தது.
இவற்றுள் சரியானவை எவை?
Q22
பால்வினை நோயை அதன் நோய்க்காரணியுடன் பொருத்துக.
A. வெட்டைநோய் (கொனோரியா) - (i) Candida albicans
B. கிரந்தி (சிஃபிலிஸ்) - (ii) Treponema pallidum
C. பிறப்புறுப்பு மருக்கள் - (iii) மனித பாப்பிலோமா வைரஸ்
D. கேன்டிடியாஸிஸ் - (iv) Neisseria gonorrhoeae
Q23
நோய்க்காரணியின் வகையின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
Q24
கீழ்க்கண்ட பால்வினைத் தொற்றுகளில் புரோட்டோசோவாவால் ஏற்படுவது எது?
Q25
கருப்பைவாய் புற்றுநோய் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பால்வழிப் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) இதனைத் தோற்றுவிக்கிறது.
2. HPV ஆய்வு மற்றும் பாப் பூச்சு சோதனை (PAP smear) கூட்டுச்சோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம்.
3. 9 முதல் 13 வயதுடைய பெண்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் மூலம் முதல்நிலை தடுப்பு தொடங்குகிறது.
4. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
Q26
அனைத்து பெண்களும் அண்டகங்களுடன் பிறக்கின்றனர். ஆனால் சிலருக்குச் செயல்படும் கருப்பை இருக்காது. இந்நிலையின் பெயர்
Q27
உடல்வெளிக் கருவுறுதல் (IVF) சுழற்சியில், hCG (மனித கோரியானிக் கொனடோட்ரோபின்) ஊசி செலுத்தி எவ்வளவு நேரம் கழித்து மீயொலி வழிகாட்டியுடன் சிறிய அறுவை மூலம் அண்டம் வெளியே கொண்டுவரப்படுகிறது?
Q28
கீழ்க்கண்ட இனப்பெருக்கத் துணை தொழில் நுட்பங்களில் சரியாக விவரிக்கப்பட்டுள்ளது எது?
Q29
அண்ட சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களைச் செலுத்துதல் (ICSI) முறையில் ஒரே ஒரு விந்து செல் முட்டையினுள் செலுத்தப்படுகிறது. இதில் கருவுறுதல் வீதம் சுமார் எவ்வளவு?
Q30
கரு கண்காணிப்புக் கருவி (Foetoscope) மூலம் வளர்கருவின் இதயத் துடிப்பு வீதம் கண்டறியப்படுகிறது. வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு
Q31
பொருத்துக.
A. ஜூலை 11 - (i) உலக எய்ட்ஸ் தினம்
B. டிசம்பர் 1 - (ii) NACO உருவாக்கம்
C. 1992 - (iii) உலக மக்கள் தொகை தினம்
D. 1971 - (iv) இந்தியாவில் MTP சட்டபூர்வமானது
Q32
விந்து செல்கள் இல்லாத விந்து திரவம் குறைந்தபட்சம் இரு முறை வெளிப்பட்டால், மொத்த மக்கள் தொகையில் சுமார் 1% பேரிடம் காணப்படும் இந்நிலையின் பெயர்
Q33
வளர் குழந்தையின் உண்மையான அசைவுகளை நேரடிச் செயல் காட்சிகளாக முப்பரிமாணக் காட்சியுடன் மருத்துவர்கள் அறிய உதவுவது எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இனப்பெருக்க நலன் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இனப்பெருக்க நலன் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிரியல் – விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 மனித நலனில் நுண்ணுயிரிகள் 9 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 10 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 11 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 12 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்