TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் மார்ச் 2020

வினாத்தாள் குறியீடு 3307 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2020 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

கணக்குப்பதிவியல் / Accountancyமார்ச் 2020 · March 2020

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
நிலையறிக்கை பொதுவாக வியாபாரத்தின் __________ கண்டறிய தயாரிக்கப்படுகிறது.
(அ) இலாபம் அல்லது நட்டம்
(ஆ) நிதிநிலை
(இ) முதல்
(ஈ) கணக்கீட்டு சரித்தன்மை
Statement of affairs is generally prepared to find out the __________ of the business.
(a) Profit or loss
(b) Financial position
(c) Capital
(d) Arithmetical accuracy
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு :
(அ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
(ஆ) சொத்துக் கணக்கு
(இ) பெயரளவு கணக்கு
(ஈ) ஆள்சார் கணக்கு
Income and Expenditure account is a :
(a) Representative Personal Account
(b) Real Account
(c) Nominal Account
(d) Personal Account
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Nominal Account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
இறுதிமுதல் + எடுப்புகள் − கூடுதல் முதல் = __________.
(அ) சரிக்கட்டப்பட்ட தொடக்க முதல்
(ஆ) தொடக்க முதல்
(இ) இலாபம் அல்லது நட்டம்
(ஈ) சரிக்கட்டப்பட்ட இறுதி முதல்
Closing Capital + Drawings − Additional Capital = __________.
(a) Adjusted Opening Capital
(b) Opening Capital
(c) Profit or Loss
(d) Adjusted Closing Capital
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Adjusted Closing Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ₹ 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ₹ 200. முன் கூட்டிப் பெற்ற சந்தா ₹ 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கண்டறியவும்.
(அ) ₹ 49,800
(ஆ) ₹ 50,000
(இ) ₹ 50,200
(ஈ) ₹ 49,900
There are 500 members in a club each paying ₹ 100 as annual subscription. Subscription due but not received for the current year is ₹ 200. Subscription received in advance is ₹ 300. Find out the amount of subscription to be shown in the income and expenditure account.
(a) ₹ 49,800
(b) ₹ 50,000
(c) ₹ 50,200
(d) ₹ 49,900
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) ₹ 50,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
கூட்டாளிகளிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது முதல் மீது வட்டி :
(அ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
(ஆ) வழங்கப்படுவதில்லை
(இ) வங்கி வீதத்தில் வழங்கப்படும்
(ஈ) ஆண்டுக்கு 5% வழங்கப்படும்
In the absence of an agreement among the partners, interest on capital is :
(a) Allowed @ 6% per annum
(b) Not allowed
(c) Allowed at bank rate
(d) Allowed @ 5% per annum
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Not allowed · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுக்கவும் :
(அ) நிலை முதல் முறை
(ஆ) சராசரி இலாப முறை
(இ) உயர் இலாப முறை
(ஈ) மூலதனமாக்கல் முறை
Select the odd one out :
(a) Fixed capital method
(b) Average profit method
(c) Super profit method
(d) Capitalisation method
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Fixed capital method · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
நிலை முதல் முறையில் கூட்டாளிகளுக்குரிய ஊதியம், கழிவு, முதல் மீது வட்டி போன்றவை வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) எடுப்புக் கணக்கு
(ஆ) முதல் கணக்கு
(இ) நடப்புக் கணக்கு
(ஈ) கடன் கணக்கு
Under fixed capital method, partners' salary, commission and interest on capital will be credited in :
(a) Drawings Account
(b) Capital Account
(c) Current Account
(d) Loan Account
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Current Account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
கூட்டாளியின் புதிய இலாபப் பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது :
(அ) கரைப்பு விகிதம்
(ஆ) முதல் விகிதம்
(இ) தியாக விகிதம்
(ஈ) ஆதாய விகிதம்
If the old profit sharing ratio is more than the new profit sharing ratio of a partner, the difference is called :
(a) Solvency ratio
(b) Capital ratio
(c) Sacrificing ratio
(d) Gaining ratio
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Sacrificing ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
சொத்துக்களை வாங்க பங்குகள் வெளியிடும் போது, வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) வங்கிக் கணக்கு
(ஆ) விற்பனையாளர் கணக்கு
(இ) பற்பல சொத்துக்கள் கணக்கு
(ஈ) பங்கு முதல் கணக்கு
When shares are issued for purchase of assets, the amount should be credited to :
(a) Bank Account
(b) Vendors Account
(c) Sundry Assets Account
(d) Share Capital Account
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Share Capital Account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
நிறுமக் கலைப்பின் போது மட்டுமே அழைக்கப்படக்கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும் :
(அ) காப்பு முதல்
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(இ) அழைக்கப்பட்ட முதல்
(ஈ) முதலினக் காப்பு
That part of share capital which can be called up only on the winding up of a company is called :
(a) Reserve capital
(b) Authorised capital
(c) Called up capital
(d) Capital reserve
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Reserve capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019 ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 -ல் இலாபம் ₹ 36,000 என்ற அடிப்படையில் 2019 -ம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X -ன் பங்கினைக் கண்டறியவும்.
(அ) ₹ 36,000
(ஆ) ₹ 1,000
(இ) ₹ 3,000
(ஈ) ₹ 12,000
X, Y and Z were partners sharing profits and losses equally. X died on 1st April 2019. Find out the share of X in the profit of 2019 based on the profit of 2018 which showed ₹ 36,000.
(a) ₹ 36,000
(b) ₹ 1,000
(c) ₹ 3,000
(d) ₹ 12,000
விடையைக் காட்டு ▾ (இ) / (c) ₹ 3,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது :
(அ) நீண்ட கால தகவல்கள்
(ஆ) பணம் சாரா தகவல்கள்
(இ) கடந்த கால தகவல்கள்
(ஈ) குறுகிய கால தகவல்கள்
The financial statements do not exhibit :
(a) Long-term data
(b) Non-monetary data
(c) Past data
(d) Short-term data
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Non-monetary data · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
சரியான குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுக்கவும் :
(1) குறை ஒப்பம் — (i) முன் கூட்டி செலுத்திய அழைப்புப் பணம்
(2) மிகை ஒப்பம் — (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது
(3) அழைப்பு நிலுவை — (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது
(4) அழைப்பு முன்பணம் — (iv) செலுத்தப் பெறாத அழைப்புப் பணம்
(அ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
(ஆ) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
(இ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(ஈ) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i)
Match the following :
(1) Under subscription — (i) Amount prepaid for calls
(2) Over subscription — (ii) Subscription above the offered shares
(3) Calls in arrear — (iii) Subscription below the offered shares
(4) Calls in advance — (iv) Amount unpaid on calls
(a) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
(b) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
(c) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
(d) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
ஓராண்டிற்குள் அல்லது ஒரு இயக்கச் சுழற்சியின் காலத்திற்குள் ரொக்கமாக மாற்றப்பட வேண்டிய சொத்துக்கள் __________.
(அ) புலனாகும் சொத்துக்கள்
(ஆ) நிலைச் சொத்துக்கள்
(இ) நடப்புச் சொத்துக்கள்
(ஈ) புலனாகா சொத்துக்கள்
Assets that can be converted into cash within a year or within the period of an operating cycle is __________.
(a) Tangible assets
(b) Fixed assets
(c) Current assets
(d) Intangible assets
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Current assets · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
பொருத்துக :
(1) நடப்பு விகிதம் — (i) நீர்மைத் தன்மை
(2) நிகர லாப விகிதம் — (ii) செயல்திறன்
(3) புற அகப் பொறுப்புகள் விகிதம் — (iii) நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(4) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் — (iv) இலாபத் தன்மை
(அ) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
(ஆ) (1) - (i), (2) - (iv), (3) - (iii), (4) - (ii)
(இ) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i)
(ஈ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
Match the following :
(1) Current ratio — (i) Liquidity
(2) Net profit ratio — (ii) Efficiency
(3) Debt-equity ratio — (iii) Long-term solvency
(4) Inventory turnover ratio — (iv) Profitability
(a) (1) - (i), (2) - (ii), (3) - (iii), (4) - (iv)
(b) (1) - (i), (2) - (iv), (3) - (iii), (4) - (ii)
(c) (1) - (iii), (2) - (ii), (3) - (iv), (4) - (i)
(d) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) (1) - (i), (2) - (iv), (3) - (iii), (4) - (ii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
அறைகலன் கடனுக்கு வாங்கியது Tally -ல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும் ?
(அ) செலுத்தல்கள் சான்றாவணம்
(ஆ) பெறுதல்கள் சான்றாவணம்
(இ) உரிய குறிப்பேடு சான்றாவணம்
(ஈ) கொள்முதல் சான்றாவணம்
In which type of voucher, credit purchase of furniture is recorded in Tally ?
(a) Payment Voucher
(b) Receipt Voucher
(c) Journal Voucher
(d) Purchase Voucher
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Journal Voucher · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
பொருந்தாத இணையினை அடையாளம் காணவும் :
(அ) ஆண்டுத் தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் × ஆண்டுத் தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
(ஆ) சராசரி இலாப முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் × கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஈ) கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
Identify the incorrect pair :
(a) Goodwill under annuity method = Average profit × Present value annuity factor
(b) Goodwill under average profit method = Average profit × Number of years of purchase
(c) Goodwill under super profit method = Super profit × Number of years of purchase
(d) Goodwill under weighted average profit method = Weighted average profit × Number of years of purchase
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Goodwill under annuity method = Average profit × Present value annuity factor · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
Tally -ன் நுழைவாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத் தேர்வு பயன்படும் ?
(அ) Gateway of Tally → Display → Trial Balance
(ஆ) Gateway of Tally → Reports → Trial Balance
(இ) Gateway of Tally → Trial Balance
(ஈ) Gateway of Tally → Reports → Display → Trial Balance
Which of the following options is used to view Trial Balance from Gateway of Tally ?
(a) Gateway of Tally → Display → Trial Balance
(b) Gateway of Tally → Reports → Trial Balance
(c) Gateway of Tally → Trial Balance
(d) Gateway of Tally → Reports → Display → Trial Balance
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Gateway of Tally → Reports → Display → Trial Balance · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின் போது பகிர்ந்து தராத இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது :
(அ) தியாக விகிதம்
(ஆ) புதிய இலாபப் பகிர்வு விகிதம்
(இ) ஆதாய விகிதம்
(ஈ) பழைய இலாபப் பகிர்வு விகிதம்
On retirement of a partner from a partnership firm, accumulated profits and losses are distributed to the partners in the :
(a) Sacrificing ratio
(b) New profit sharing ratio
(c) Gaining ratio
(d) Old profit sharing ratio
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Old profit sharing ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ₹ 80,000. இரண்டாம் ஆண்டின் செலவுகள் ₹ 88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன ?
(அ) 11%
(ஆ) 10%
(இ) 110%
(ஈ) 90%
Expenses for a business for the first year were ₹ 80,000. In the second year, it was increased to ₹ 88,000. What is the trend percentage in the second year ?
(a) 11%
(b) 10%
(c) 110%
(d) 90%
விடையைக் காட்டு ▾ (இ) / (c) 110% · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
சிறிய அளவிலான, தனியாள் வணிகம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்குப் பொருந்தக் கூடிய கணக்குப் பதிவு முறை எது ? விளக்குக.
Which accounting system may be suitable for small sized sole traders and partnership firms ? Explain.
2 marks
22.
இலாப நோக்கற்ற அமைப்பின் வருவாயின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
Give four examples for revenue receipts of Not-for-Profit organisation.
2 marks
23.
மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ₹ 30,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு, மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
Mani is a partner, who withdrew ₹ 30,000 on 1st September, 2018. Interest on drawings is charged at 6% per annum. Calculate interest on drawings on 31st December, 2018 and show the journal entries by assuming that fluctuating capital method is followed.
2 marks
24.
தன்னுருவாக்க நற்பெயர் என்றால் என்ன ?
What is self-generated Goodwill ?
2 marks
25.

பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்.

2016 : ₹ 8,000   2017 : ₹ 10,000   2018 : ₹ 9,000

Compute average profit from the following information.

2016 : ₹ 8,000   2017 : ₹ 10,000   2018 : ₹ 9,000

2 marks
26.
அன்பு மற்றும் இராஜு என்ற இரு கூட்டாளிகள் 3 : 2 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து வந்தனர். அக்ஷய் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். அன்பு, இராஜு மற்றும் அக்ஷய் அவர்களின் புதிய இலாபப் பங்கு 5 : 3 : 2. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
Anbu and Raju are partners, sharing profits in the ratio of 3 : 2. Akshai is admitted as a partner. The new profit sharing ratio among Anbu, Raju and Akshai is 5 : 3 : 2. Find out the sacrificing ratio.
2 marks
27.

பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

(i)சராசரி இலாபம்₹ 14,000
(ii)சாதாரண இலாபம்₹ 4,000
(iii)சாதாரண இலாப விகிதம்15%
(iv)நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள்5

5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ₹ 1 -ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு 3.352.

From the following information, calculate the value of goodwill under annuity method :

(i)Average profit₹ 14,000
(ii)Normal profit₹ 4,000
(iii)Normal rate of return15%
(iv)Years of purchase of goodwill5

Present value of ₹ 1 for 5 years at 15% per annum as per the annuity table is 3.352.

2 marks
28.
சாரா நிறுமம் பங்கொன்று ₹ 10 வீதம் 10,000 நேர்மைப் பங்குகளை ₹ 2 முனைமத்தில், விண்ணப்பத்தின் போது முழுத்தொகையும் செலுத்தும் வகையில் வெளியிட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
Sara Company issues 10,000 equity shares of ₹ 10 at a premium of ₹ 2 each payable fully on application. Pass journal entries.
2 marks
29.
Tally.ERP 9 -ல் ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறுக.
State any five accounting reports in Tally.ERP 9.
2 marks
30.
நீர்மைத் தன்மை என்பது என்ன ? நீர்மைத் தன்மை விகிதங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
What is liquidity ? What are the types of liquidity ratios ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.

பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும் :

விவரம்₹
2018 டிசம்பர் 31 அன்று முதல்35,000
2018 ஜனவரி 1 அன்று முதல்27,500
உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது?
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்2,500
அவ்வாண்டின் இலாபம்10,000

From the following details, calculate the missing figure :

Particulars₹
Capital as on 31st December 201835,000
Capital as on 1st January 201827,500
Goods taken for the personal use of the proprietor?
Additional Capital introduced during the year2,500
Profit for the year10,000
3 marks
32.

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும் :

₹
2018 ஜனவரி 1 அன்று பற்பல கடனீந்தோர்30,000
கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது1,20,000
கொள்முதல் திருப்பம்15,000
ரொக்கக் கொள்முதல்2,25,000
31.12.2018 அன்று கடனீந்தோர்25,000

From the following particulars, calculate total purchases :

₹
Sundry creditors on 1st January 201830,000
Paid cash to creditors1,20,000
Purchases returns15,000
Cash purchases2,25,000
Creditors on 31st December 201825,000
3 marks
33.

சேலம் விளையாட்டு மன்றத்தின் 2019 ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
விளையாட்டு உபகரணங்கள்30,000பரிசு நிதி10,000
கணிப்பொறி25,000பரிசு நிதி முதலீடுகள்10,000
2018 - 2019 -ஆம் ஆண்டில் சந்தா பெற வேண்டியது5,000கை ரொக்கம்7,000
2019 - 2020 -ஆம் ஆண்டிற்காக முன்கூட்டிப் பெற்ற சந்தா8,000வங்கி ரொக்கம்21,000

Compute Capital Fund of Salem Sports Club as on 1.4.2019.

Particulars₹Particulars₹
Sports equipment30,000Prize fund10,000
Computer25,000Prize Fund Investments10,000
Subscription outstanding for 2018-195,000Cash in Hand7,000
Subscription received in advance for 2019-208,000Cash at Bank21,000
3 marks
34.
நிலை முதல் முறைக்கும், மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
State the differences between fixed capital method and fluctuating capital method.
3 marks
35.

ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர லாபங்கள் பின்வருமாறு :

2016 : ₹ 20,000,  2017 : ₹ 17,000, 2018 : ₹ 23,000.

மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும், நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% எனக் கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

A partnership firm earned net profits during the last three years as follows :

2016 : ₹ 20,000,  2017 : ₹ 17,000 and 2018 : ₹ 23,000.

The capital investment of the firm throughout the above mentioned period has been ₹ 80,000. Having regard to the risk involved, 15% is considered to be a fair return on capital employed in the business. Calculate the value of goodwill on the basis of 2 years purchase of super profit.

3 marks
36.

சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும் போது, அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.

  1. கட்டிடம் மதிப்பினை ₹ 70,000 ஆக உயர்த்த வேண்டும்.
  2. கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 20,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டு வர வேண்டும்.
  3. இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
  4. பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In view of Subbu's admission, they decided :

  1. To increase the value of building by ₹ 70,000.
  2. To bring into record investments at ₹ 20,000, which have not so far been brought into account.
  3. To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
  4. To write off sundry creditors by ₹ 16,000.

Prepare Revaluation account.

3 marks
37.

பின்வரும் விவரங்களிலிருந்து மேரி வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

விவரம்2015-162016-17
₹₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்4,00,0005,00,000
இயக்கச் செலவுகள்2,00,0001,80,000
வருமான வரி (வரிக்கு முன் இலாபத்தில் சதவீதம்)20%50%

From the following particulars, prepare comparative income statement of Mary Co. Ltd.

Particulars2015-162016-17
₹₹
Revenue from operations4,00,0005,00,000
Operating expenses2,00,0001,80,000
Income tax (profit before tax in percentage)20%50%
3 marks
38.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹ 2,50,000. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 2,10,000 மற்றும் கொள்முதல் ₹ 1,80,000.

Calculate Gross Profit Ratio from the following :

Revenue from operations ₹ 2,50,000, cost of revenue from operations ₹ 2,10,000 and purchases ₹ 1,80,000.

3 marks
39.
Tally.ERP 9 -ல், முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை ?
What are the pre-defined ledgers available in Tally.ERP 9 ?
3 marks
40.
அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்குமுதல் ₹ 5,00,000. அதில் 40,000 பங்குகளை ₹ 10 வீதம் பின்வருமாறு செலுத்தத்தக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ₹ 3, ஒதுக்கீட்டின் மீது ₹ 5, முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ₹ 2. வெளியிட்ட பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன. ஆனால் ஒரு பங்குதாரர், தான் வைத்துள்ள 1000 பங்குகளுக்கான முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகைகளை ஒதுக்கீட்டின் போதே செலுத்தி விட்டார். ஒதுக்கீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

Aruna Mills Ltd. with a registered capital of ₹ 5,00,000 in equity shares of ₹ 10 each, issued 40,000 of such shares payable as follows :

₹ 3 per share on application, ₹ 5 per share on allotment and ₹ 2 per share on first and final call. The issue was duly subscribed. All the money payable was duly received. But one share holder holding 1000 shares paid the first and final call money on allotment itself.

Give journal entries for allotment.

3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப் பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019 மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்31.3.201831.3.2019
₹₹
வங்கி ரொக்கம்5,000 (ப)60,000 (வ)
கை ரொக்கம்3,0004,500
சரக்கிருப்பு35,00045,000
பற்பல கடனாளிகள்1,00,00090,000
பொறி மற்றும் இயந்திரம்80,00080,000
நிலம் மற்றும் கட்டிடம்1,40,0001,40,000
பற்பல கடனீந்தோர்1,70,0001,30,000

ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.

(a)

Ananth does not keep his books under double entry system. Find the profit or loss made by him for the year ending 31st March 2019.

Particulars31.3.201831.3.2019
₹₹
Cash at Bank5,000 (Dr)60,000 (Cr)
Cash in Hand3,0004,500
Stock of Goods35,00045,000
Sundry Debtors1,00,00090,000
Plant and Machinery80,00080,000
Land and Building1,40,0001,40,000
Sundry Creditors1,70,0001,30,000

Ananth had withdrawn ₹ 60,000 for his personal use. He had introduced ₹ 17,000 as capital for expansion of his business. Create a provision of 5% on Debtors. Plant and Machinery is to be depreciated at 10%.

அல்லது / OR
(ஆ)

சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
தொடக்க ரொக்க இருப்பு (1.4.2017)10,000சந்தா பெற்றது
தொடக்க வங்கியிருப்பு (1.4.2017)15,0002016 - 174,500
வட்டி செலுத்தியது5,0002017 - 1865,000
தொலைபேசி செலவுகள்7,0002018 - 195,00074,500
மைதானம் பராமரித்தது22,500தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்12,500
ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது5,500தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்15,000
மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது13,000இறுதி ரொக்க இருப்பு (31.3.2018)5,000
(b)

From the following particulars of Chennai Sports Club, prepare Receipts and Payments account for the year ended 31st March 2018.

Particulars₹Particulars₹
Opening cash balance as on 1.4.201710,000Subscriptions received
Opening bank balance as on 1.4.201715,0002016 - 174,500
Interest paid5,0002017 - 1865,000
Telephone expenses7,0002018 - 195,00074,500
Upkeep of grounds22,500Tournament expenses12,500
Life membership fees received5,500Tournament fund receipts15,000
Bats and balls purchased13,000Closing balance of cash (31.3.2018)5,000
5 marks
42.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும் :

விவரம்₹
2017 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்1,50,000
2017 ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு40,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்3,90,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்குரிய ரொக்கம் பெற்றது90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது10,000
விற்பனைத் திருப்பம்40,000
2018 மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு30,000
2018 மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்1,30,000
ரொக்க விற்பனை2,00,000
(a)

From the following particulars, calculate total sales.

Particulars₹
Debtors on 1st April 20171,50,000
Bills receivable on 1st April 201740,000
Cash received from Debtors3,90,000
Cash received for bills receivable90,000
Bills receivable dishonoured10,000
Sales return40,000
Bills receivable on 31st March 201830,000
Sundry Debtors on 31st March 20181,30,000
Cash sales2,00,000
அல்லது / OR
(ஆ)

இலக்குமி நிறுமத்தின் 2019, மார்ச் 31 -ம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

விவரம்₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
  1. பங்குதாரர் நிதி
    நேர்மைப் பங்கு முதல்4,00,000
  2. நீண்டகாலப் பொறுப்புகள்
    நீண்டகாலக் கடன்கள்2,00,000
  3. நடப்புப் பொறுப்புகள்
    (அ) குறுகிய காலக் கடன்கள்50,000
    (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவை3,10,000
    (இ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபட
        வேண்டிய செலவுகள்
15,000
    (ஈ) குறுகிய கால ஒதுக்குகள்25,000
மொத்தம்10,00,000
II. சொத்துக்கள்
  1. நீண்ட காலச் சொத்துக்கள்
    (அ) நிலைச் சொத்துக்கள்
        புலனாகும் சொத்துக்கள்
4,00,000
  2. நடப்புச் சொத்துக்கள்
    (அ) சரக்கிருப்பு1,60,000
    (ஆ) வணிகக் கடனாளிகள்3,20,000
    (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்80,000
    (ஈ) இதர நடப்புச் சொத்துக்கள்
        முன் கூட்டிச் செலுத்திய செலவுகள்
40,000
மொத்தம்10,00,000

(i) நடப்பு விகிதம் (ii) விரைவு விகிதம் கணக்கிடவும்.

(b)

Following is the balance sheet of Lakshmi Ltd. as on 31st March 2019 :

Particulars₹
I. Equity and Liabilities
  1. Shareholder's funds
    Equity share capital4,00,000
  2. Non-current liabilities
    Long-term borrowings2,00,000
  3. Current liabilities
    (a) Short-term borrowings50,000
    (b) Trade payables3,10,000
    (c) Other current liabilities
        Expenses payable
15,000
    (d) Short-term provisions25,000
Total10,00,000
II. Assets
  1. Non-current assets
    (a) Fixed assets
        Tangible assets
4,00,000
  2. Current assets
    (a) Inventories1,60,000
    (b) Trade debtors3,20,000
    (c) Cash and cash equivalents80,000
    (d) Other current assets
        Prepaid expenses
40,000
Total10,00,000

Calculate : (i) Current ratio (ii) Quick ratio

5 marks
43.
(அ)

டில்லி இலக்கிய மன்றத்தின் 2019 மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு பின்வருமாறு :

டில்லி இலக்கிய மன்றம்
2019 மார்ச் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு

பெறுதல்கள்₹செலுத்தல்கள்₹
இருப்பு கீ/கொ
    கை ரொக்கம்
3,200வாடகையும் வீதமும்21,000
நுழைவுக் கட்டணம்2,300விரிவுரை கட்டணம்4,500
சந்தா46,000பல்வகைச் செலவுகள்7,200
ஆயுள் உறுப்பினர் கட்டணம்2,500நிலை வைப்பு40,000
நிலை வைப்பின் மீதான
    வட்டி பெற்றது
500இருப்பு கீ/இ
    கை ரொக்கம்
4,300
அறைகலன் விற்றது (1.4.2018)
    (ஏட்டு மதிப்பு ₹ 25,000)
22,500
77,00077,000

கூடுதல் தகவல்கள் :

  1. 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ₹ 63,200.
  2. ஆண்டுத் தொடக்கத்தில் மன்றத்தில் இருந்த நூல்களின் மதிப்பு ₹ 20,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 40,000.
  3. நடப்பாண்டில் முன் கூட்டிப் பெற்ற சந்தா ₹ 1,000.

சங்கத்தின் 2019, மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

(a)

The following is the summary of cash transactions of Delhi Literary Club for the year ending 31st March 2019.

Delhi Literary Club
Receipts and Payments Account for the year ending 31st March 2019

Receipts₹Payments₹
To Balance b/d
    Cash in hand
3,200By Rent and Rates21,000
To Entrance fees2,300By Lecture fees4,500
To Subscriptions46,000By Sundry Expenses7,200
To Life membership fees2,500By Fixed Deposit40,000
To Interest received
    on Fixed Deposit
500By Balance c/d
    Cash in hand
4,300
To Sale of furniture (1.4.2018)
    (Book value ₹ 25,000)
22,500
77,00077,000

Additional Information :

  1. Capital Fund as on 1st April 2018, was ₹ 63,200.
  2. At the beginning of the year, the club possessed books worth ₹ 20,000 and furniture worth ₹ 40,000.
  3. Subscription received in advance during the current year amounted to ₹ 1,000.

Prepare Income and Expenditure account of the Club for the year ending 31st March, 2019 and the Balance Sheet as on that date.

அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 -க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

விவரம்2015-162016-17
₹₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்2,00,0003,00,000
இதர வருமானம்25,00075,000
செலவுகள்2,50,0001,50,000
வருமான வரி40%40%
(b)

From the following particulars of Siva Ltd., prepare common size income statement for the years ended 31st March 2016 and 31st March 2017.

Particulars2015-162016-17
₹₹
Revenue from operations2,00,0003,00,000
Other income25,00075,000
Expenses2,50,0001,50,000
Income tax40%40%
5 marks
44.
(அ)

தினேஷ் மற்றும் சுகுமார் 2018 ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ₹ 5,00,000 மற்றும் சுகுமார் ₹ 4,00,000 முதலாகக் கொண்டு வந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :

  1. தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
  2. கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% தரப்பட வேண்டும்.
  3. எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ₹ 3,600 மற்றும் சுகுமார் ₹ 2,300.
  4. தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ₹ 62,000 வழங்கப்பட வேண்டும். மற்றும்
  5. சுகுமாருக்கு, அக்கழிவை கழித்த பின் உள்ள நிகர லாபத்தில் 10% கழிவு தரப்பட வேண்டும்.

2018, டிசம்பர் 31 -ம் நாளோடு முடிவடையும் ஆண்டில், வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 1,20,000.

இலாப, நட்ட பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.

(a)

Dinesh and Sugumar entered into partnership agreement on 1st January 2018, Dinesh contributing ₹ 5,00,000 and Sugumar ₹ 4,00,000 as capital.

The agreement provided that :

  1. Profits and losses to be shared in the ratio 2 : 1 as between Dinesh and Sugumar.
  2. Partners to be entitled to interest on capital @ 6% p.a.
  3. Interest on drawings to be charged :
    Dinesh : ₹ 3,600 and Sugumar : ₹ 2,300.
  4. Dinesh to receive a salary of ₹ 62,000 for the year, and
  5. Sugumar is to receive a commission of 10% on the net profit after charging such commission.

During the year ended on 31st December 2018, the firm made a profit of ₹ 1,20,000 before adjustment of interest, salary and commission.

Prepare the profit and loss appropriation account.

அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

விவரம்₹ இலட்சங்களில்
2015 - 162016 - 172017 - 18
விற்பனை மூலம் பெற்ற வருவாய்100120160
இதர வருமானம்202420
செலவுகள்201440
வருமான வரி30%30%30%
(b)

From the following information, calculate trend percentages for Mullai Ltd.

Particulars₹ in lakhs
2015 - 162016 - 172017 - 18
Revenue from operations100120160
Other income202420
Expenses201440
Income tax30%30%30%
5 marks
45.
(அ)

அமல், விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7 : 5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்₹சொத்துக்கள்₹
முதல் கணக்குகள் :கட்டடம்80,000
அமல்70,000அறைகலன்20,000
விமல்50,0001,20,000சரக்கிருப்பு25,000
பற்பல கடனீந்தோர்30,000கடனாளிகள்30,000
இலாப நட்ட க/கு24,000வங்கி19,000
1,74,0001,74,000

1.4.2019 -ல் நிர்மல் புதிய கூட்டாளியாகச் சேருகிறார். அவர் ₹ 30,000 முதலுடன் எதிர்கால இலாபப் பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.

  1. சரக்கிருப்பின் மதிப்பு ₹ 5,000 குறைக்கப்பட வேண்டும்.
  2. வாரா ஐயக்கடன் ஒதுக்கு ₹ 3,000 உருவாக்கப்பட வேண்டும்.
  3. கட்டடம் ₹ 20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.

மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்குப் பின்பான கூட்டாளியின் முதல் கணக்கு தயார் செய்யவும்.

(a)

Amal and Vimal are partners in a firm sharing profits and losses in the ratio of 7 : 5. Their balance sheet as on 31st March, 2019 is as follows :

Liabilities₹Assets₹
Capital accounts :Land80,000
Amal70,000Furniture20,000
Vimal50,0001,20,000Stock25,000
Sundry creditors30,000Debtors30,000
Profit and Loss A/c24,000Bank19,000
1,74,0001,74,000

Nirmal is admitted as a new partner on 1.4.2019 by introducing a capital of ₹ 30,000 for 1/3 share in the future profit subject to the following adjustments :

  1. Stock to be depreciated by ₹ 5,000.
  2. Provision for doubtful debts to be created for ₹ 3,000.
  3. Land to be appreciated by ₹ 20,000.

Prepare Revaluation account and Capital accounts of partners after admission.

அல்லது / OR
(ஆ)

பாரத் நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொது மக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு :

விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு₹ 5
ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு₹ 3
முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு₹ 2

1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(b)

Bharath Ltd. issued 1,00,000 equity shares of ₹ 10 each to the public at par. The details of the amount payable on the shares are as follows :

On application₹ 5 per share
On allotment₹ 3 per share
On first and final call₹ 2 per share

Application money was received for 1,20,000 shares. Excess application money was refunded immediately. Pass journal entries to record the above.

5 marks
46.
(அ)

சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 -ம் நாளைய அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹சொத்துக்கள்₹
முதல் கணக்குகள் :அறைகலன்20,000
சார்லஸ்30,000சரக்கிருப்பு40,000
முத்து40,000கடனாளிகள்30,000
சேகர்20,00090,000வங்கி ரொக்கம்33,000
பற்பல கடனீந்தோர்33,000
1,23,0001,23,000

1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

  1. சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்.
  2. வாராக்கடன் மீது ₹ 1,300 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
  3. சார்லஸிற்கு உரிய தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

(a)

Charles, Muthu and Sekar are partners, sharing profits in the ratio of 3 : 4 : 2. Their balance sheet as on 31st December, 2018 is as under :

Liabilities₹Assets₹
Capital accounts :Furniture20,000
Charles30,000Stock40,000
Muthu40,000Debtors30,000
Sekar20,00090,000Cash at bank33,000
Sundry creditors33,000
1,23,0001,23,000

On 1.1.2019, Charles retired from the partnership firm on the following arrangements :

  1. Stock to be appreciated by 10%.
  2. To provide ₹ 1,300 for bad debts.
  3. The final amount due to Charles was paid immediately.

Prepare revaluation account, partner's capital account and the balance sheet of the firm after retirement.

அல்லது / OR
(ஆ)

நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகளிலிருந்து கணக்கிடவும் :

  1. மொத்த இலாப விகிதம்
  2. இயக்க அடக்க விலை விகிதம்
  3. இயக்க இலாப விகிதம்

இலாப நட்ட அறிக்கை

விவரம்₹
I  விற்பனை மூலம் பெற்ற வருவாய்20,000
II  இதர வருமானம் :
    முதலீடு மூலம் வருவாய்
200
III  மொத்த வருவாய் (I + II)20,200
IV  செலவுகள் :
    கொள்முதல் செய்த சரக்குகள்17,000
    சரக்கிருப்பு மாற்றம்(–) 1,000
    நிதிசார் செலவுகள்300
    இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை)2,400
    மொத்த செலவுகள்18,700
V  அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III – IV)1,500
(b)

From the following trading activities of Naveen Ltd., calculate :

  1. Gross Profit Ratio
  2. Operating Cost Ratio
  3. Operating Profit Ratio

Statement of Profit and Loss

Particulars₹
I  Revenue from operations20,000
II  Other income :
    Income from investments
200
III  Total revenues (I + II)20,200
IV  Expenses :
    Purchase of stock-in-trade17,000
    Changes in inventories(–) 1,000
    Finance costs300
    Other expenses (administration and selling)2,400
    Total expenses18,700
V  Profit before tax (III – IV)1,500
5 marks
47.
(அ)நிவேதா வரையறு நிறுமம் ₹ 10 மதிப்பிலான 1000 நேர்மைப் பங்குகளை, அழைப்புத் தொகை பங்கு ஒன்றிற்கு ₹ 4 வீதம் செலுத்தவில்லை என ஒறுப்பிழப்பு செய்தது. இதில் பங்கு ஒன்றிற்கு ₹ 7 வீதம் 800 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(a)Nivetha Ltd. forfeited 1000 equity shares of ₹ 10 each for non payment of call of ₹ 4 per share. Of these, 800 shares were re-issued @ ₹ 7 per share. Pass journal entries for forfeiture and re-issue.
அல்லது / OR
(ஆ)Tally.ERP 9 -ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளைக் குறிப்பிடவும்.
(b)Mention the commonly used voucher types in Tally.ERP 9.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து கணக்குப்பதிவியல் வினாத்தாள்கள்