TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் துணைத் தேர்வு ஜூன் 2024

வினாத்தாள் குறியீடு 7957 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு ஜூன் 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

கணக்குப்பதிவியல் / Accountancyதுணைத் தேர்வு ஜூன் 2024 · Supplementary June 2024

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கூட்டாளி சேர்ப்பின் போது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும்போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படும் முதல் கணக்கு :
(அ) பழைய கூட்டாளிகள்
(ஆ) புதிய கூட்டாளி
(இ) அனைத்து கூட்டாளிகள்
(ஈ) தியாகம் செய்த கூட்டாளிகள்
On admission of a partner the Profit or Loss on revaluation of assets and liabilities is transferred to the capital account of :
(a) the old partners
(b) the new partner
(c) all the partners
(d) the sacrificing partners
விடையைக் காட்டு ▾ (அ) / (a) the old partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும் போது வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) விற்பனையாளர் க/கு
(ஆ) பற்பல சொத்துகள் க/கு
(இ) பங்கு முதல் க/கு
(ஈ) வங்கி க/கு
When shares are issued for purchase of assets, the amount should be credited to __________.
(a) Vendor's A/c
(b) Sundry assets A/c
(c) Share Capital A/c
(d) Bank A/c
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Share Capital A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினைக் கணிதவியல் முறையில் கூறுவது :
(அ) முடிவு
(ஆ) விகிதம்
(இ) மாதிரி
(ஈ) தீர்மானம்
The Mathematical expression that provides a measure of the relationship between two figures is called :
(a) Conclusion
(b) Ratio
(c) Model
(d) Decision
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
நிலை அறிக்கை ஒரு :
(அ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
(ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
(இ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
(ஈ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
Statement of affairs is a :
(a) Statement of income and expenditure
(b) Statement of assets and liabilities
(c) Summary of cash transactions
(d) Summary of credit transactions
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Statement of assets and liabilities · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும் ?
(அ) அலுவலகச் செலவுகள்
(ஆ) பணியாளர் ஊதியம்
(இ) கூட்டாளியின் ஊதியம்
(ஈ) வங்கிக்கடன் மீதான வட்டி
Which of the following is shown in Profit and Loss appropriation account ?
(a) Office expenses
(b) Salary of staff
(c) Partner's salary
(d) Interest on bank loan
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Partner's salary · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு :
(அ) பெயரளவுக் கணக்கு
(ஆ) சொத்து கணக்கு
(இ) ஆள்சார் கணக்கு
(ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
Income and Expenditure account is a :
(a) Nominal account
(b) Real account
(c) Personal account
(d) Representative personal account
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Nominal account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது ?
(அ) உயர் இலாபம் = மொத்த இலாபம்/ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம்/ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் − சாதாரண இலாபம்
(ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகள்
Which of the following is true ?
(a) Super Profit = Total Profit/Number of years
(b) Super Profit = Weighted Profit/Number of years
(c) Super Profit = Average Profit − Normal Profit
(d) Super Profit = Average Profit × Years of Purchase
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Super Profit = Average Profit − Normal Profit · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
கூட்டாளி விலகலின்போது பொதுக்காப்பு மாற்றப்படுவது :
(அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
(இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஈ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
On retirement of a partner, general reserve is transferred to the :
(a) Capital account of all the partners
(b) Revaluation account
(c) Capital account of the continuing partners
(d) Memorandum revaluation account
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Capital account of all the partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய __________ தகவல்களை வழங்குகிறது.
(அ) ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
(ஆ) ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
(இ) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
(ஈ) குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய
Balance sheet provides information about the financial position of a business concern :
(a) Over a period of time
(b) As on a particular date
(c) For a period of time
(d) For the accounting period
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) As on a particular date · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
F11 எனும் பயன்பாடு :
(அ) நிறுவனப் பண்புகூறுகள்
(ஆ) கணக்கியல் சான்றாவணங்கள்
(இ) நிறுவன கட்டமைப்பு
(ஈ) கணக்கு தகவல்
Function Key F11 is used for :
(a) Company features
(b) Accounting vouchers
(c) Company configuration
(d) Account information
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Company features · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்பு கணக்கின் இருப்பு மாற்றப்படுவது :
(அ) பொதுக் காப்பு க/கு
(ஆ) முதலினக் காப்பு க/கு
(இ) பத்திர முனைமக் க/கு
(ஈ) உபரி க/கு
After the forfeited shares are reissued, the balance in the forfeited shares account should be transferred to :
(a) General Reserve a/c
(b) Capital Reserve a/c
(c) Securities Premium a/c
(d) Surplus a/c
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Capital Reserve a/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் :
(அ) உரிமையாளர் விகிதம்
(ஆ) முதல் உந்துதிறன் விகிதம்
(இ) புற அக பொறுப்பு விகிதம்
(ஈ) நடப்பு விகிதம்
Proportion of shareholders' funds to total assets is called :
(a) Proprietary ratio
(b) Capital gearing ratio
(c) Debt equity ratio
(d) Current ratio
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Proprietary ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் :
(அ) நட்டம்
(ஆ) ரொக்கம்
(இ) முதல்
(ஈ) இலாபம்
The excess of Assets over Liabilities is :
(a) Loss
(b) Cash
(c) Capital
(d) Profit
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி :
(அ) வழங்கப்படுவதில்லை
(ஆ) வங்கி வீதத்தில் வழங்கப்படும்
(இ) ஆண்டுக்கு 5% வழங்கப்படும்
(ஈ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
In the absence of an agreement among the partners, interest on Capital is :
(a) Not allowed
(b) Allowed at bank rate
(c) Allowed @ 5% per annum
(d) Allowed @ 6% per annum
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Not allowed · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
கூட்டாளி சேர்ப்பின்போது புதிய கூட்டாளி நற்பெயருக்காக கொண்டு வரும் தொகை, வரவு வைக்கப்பட வேண்டிய முதல் கணக்கு :
(அ) அனைத்து கூட்டாளிகள்
(ஆ) பழைய கூட்டாளிகள்
(இ) புதிய கூட்டாளி
(ஈ) தியாகம் செய்த கூட்டாளிகள்
At the time of admission of a partner, the goodwill brought by the new partner may be credited to the Capital accounts of :
(a) all the partners
(b) the old partners
(c) the new partner
(d) the sacrificing partners
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) the sacrificing partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு :
(அ) வங்கி க/கு
(ஆ) விலகும் கூட்டாளியின் முதல் க/கு
(இ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு
(ஈ) பிற கூட்டாளிகளின் முதல் க/கு
If the final amount due to a retiring partner is not paid immediately, it is transferred to :
(a) Bank A/c
(b) Retiring Partner's Capital A/c
(c) Retiring Partner's Loan A/c
(d) Other Partners' Capital A/c
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Retiring Partner's Loan A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :
(அ) நடப்புப் பொறுப்புகள்
(ஆ) நடைமுறை முதல்
(இ) நிலைச் சொத்துகள்
(ஈ) நீண்டகாலச் சொத்துகள்
The term 'fund' refers to :
(a) Current liabilities
(b) Working capital
(c) Fixed assets
(d) Non-current assets
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Working capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது :
(அ) வழக்கமான கணக்கியல் அறிக்கை
(ஆ) குறிப்பிட்ட நோக்க அறிக்கை
(இ) இருப்பாய்வு
(ஈ) இருப்புநிலைக் குறிப்பு
Accounting report prepared according to the requirements of the user is :
(a) Routine accounting report
(b) Special purpose report
(c) Trial balance
(d) Balance sheet
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Special purpose report · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை :
(அ) வருவாயின வரவு
(ஆ) முதலின வரவு
(இ) வருவாயினச் செலவு
(ஈ) முதலினச் செலவு
Donations received for a specific purpose is :
(a) Revenue receipt
(b) Capital receipt
(c) Revenue expenditure
(d) Capital expenditure
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Capital receipt · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹ 1,00,000; சொத்துகள் ₹ 1,50,000 மற்றும் பொறுப்புகள் ₹ 80,000. மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பு :
(அ) ₹ 40,000
(ஆ) ₹ 70,000
(இ) ₹ 1,00,000
(ஈ) ₹ 30,000
The total capitalised value of a business is ₹ 1,00,000; assets are ₹ 1,50,000 and liabilities are ₹ 80,000; the value of goodwill as per the capitalisation method will be :
(a) ₹ 40,000
(b) ₹ 70,000
(c) ₹ 1,00,000
(d) ₹ 30,000
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) ₹ 30,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.
State the accounts generally maintained by small sized sole trader when double entry accounting system is not followed.
2 marks
22.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.
List the tools of financial statement analysis.
2 marks
23.
அருள் மற்றும் அனிதா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 4 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 31.03.2018 அன்று புதிய கூட்டாளியாக அஜய் என்பவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். சேர்க்கையின்போது, நிறுவன ஏடுகளில் பொதுக்காப்பு ₹ 42,000 எனக் காட்டியது. பொதுக்காப்பினை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
Arul and Anitha are partners sharing profit and losses in the ratio of 4 : 3. On 31.03.2018, Ajay was admitted as a partner. On the date of admission, the book of the firm showed a general reserve of ₹ 42,000. Pass the journal entry to distribute the general reserve.
2 marks
24.
இலாப நோக்கமற்ற அமைப்பின் பொருள் தரவும்.
State the meaning of not-for-profit Organisation.
2 marks
25.
வாங்கப்பட்ட நற்பெயர் என்றால் என்ன ?
What is acquired goodwill ?
2 marks
26.
ஜெயராமன் என்ற கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ₹ 10,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும். 2018 டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
Jayaraman is a partner who withdrew ₹ 10,000 regularly in the middle of every month. Interest is charged on the drawings at 6% per annum. Calculate interest on drawings for the year ended 31st December, 2018.
2 marks
27.
மிகை ஒப்பம் என்றால் என்ன ?
What is Over-Subscription ?
2 marks
28.
கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ?
What are accounting reports ?
2 marks
29.
ரோஸி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று, ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம் ₹ 45,000 பகிர்ந்துதரா நட்டங்கள் இருப்பைக் காட்டியது. பகிர்ந்துதரா நட்டத்தை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
Rosi, Rathi and Rani are partners of a firm sharing profits and losses equally. Rathi retired from the partnership on 1.1.2018. On that date, their balance sheet showed accumulated loss of ₹ 45,000 on the asset side of the balance sheet. Give the journal entry to distribute the accumulated loss.
2 marks
30.

கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.

மொத்த நடப்புப் பொறுப்புகள் ₹ 2,40,000;
மொத்த நடப்புச் சொத்துகள் ₹ 4,50,000;
சரக்கிருப்பு ₹ 70,000;
முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் ₹ 20,000.

Calculate quick ratio from the following information.

Total current liabilities ₹ 2,40,000;
Total current assets ₹ 4,50,000;
Inventories ₹ 70,000;
Prepaid expenses ₹ 20,000.

2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
What are the differences between Sacrificing ratio and Gaining ratio ?
3 marks
32.

அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்2015 - 16
₹
2016 - 17
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்50,00060,000
இதர வருமானம்10,00030,000
செலவுகள்40,00050,000

From the following particulars, prepare comparative Income Statement of Arul Ltd.

Particulars2015 - 16
₹
2016 - 17
₹
Revenue from operations50,00060,000
Other income10,00030,000
Expenses40,00050,000
3 marks
33.

பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கணக்கிடுக.

விவரம்₹
2018, ஏப்ரல் 1 அன்று முதல்40,000
2019, மார்ச் 31 அன்று முதல்50,000
அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல்7,000
அவ்வாண்டில் இலாபம்8,000
அவ்வாண்டில் எடுப்புகள்?

From the following details, calculate the missing figure.

Particulars₹
Capital as on 1st April, 201840,000
Capital as on 31st March, 201950,000
Additional Capital introduced during the year7,000
Profit for the year8,000
Drawings during the year?
3 marks
34.

சிறு குறிப்பு வரைக :

(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்பு முதல்

Write a short note on :

(a) Authorised Capital
(b) Reserve Capital

3 marks
35.

பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் ?

2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு

பெறுதல்கள்₹₹செலுத்தல்கள்₹
சந்தா
2017 - 1810,000
2018 - 1950,000
2019 - 205,000
65,000

மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ₹ 400 செலுத்துகின்றனர். 2017-18 -ஆம் ஆண்டிற்கான இன்னும் பெற வேண்டிய சந்தா ₹ 2,000.

How the following items will appear in the Final accounts of a Club for the year ending 31st March 2019 ?

Receipts and Payments Account for the year ended 31st March, 2019

Receipts₹₹Payments₹
To Subscription
2017 - 1810,000
2018 - 1950,000
2019 - 205,000
65,000

There are 200 members in the Club each paying an annual subscription of ₹ 400 per annum. Subscription still outstanding for the year 2017 - 18 is ₹ 2,000.

3 marks
36.
வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ₹ 10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொகை முறையே ₹ 1,10,000 மற்றும் ₹ 1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்.
The credit revenue from operations of Velavan Ltd, amounted to ₹ 10,00,000. Its debtors and bills receivable at the end of the accounting period amounted to ₹ 1,10,000 and ₹ 1,40,000 respectively. Calculate trade receivables turnover ratio and also collection period (in months).
3 marks
37.
Tally.ERP 9 -ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளைக் குறிப்பிடவும்.
Mention the commonly used voucher types in Tally.ERP 9.
3 marks
38.

கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டுஇலாபம்
₹
நிறைகள்
201510,0001
201612,0002
201716,0003
201818,0004

Find out the value of goodwill at three years purchase of weighted average profit of last four years.

YearProfit
₹
Weight
201510,0001
201612,0002
201716,0003
201818,0004
3 marks
39.
பிரகாஷ் மற்றும் சுப்ரியா என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் பிரகாஷ் ₹ 3,00,000 மற்றும் சுப்ரியா ₹ 2,00,000 ஆகும். 2018, ஜூலை 1 அன்று பிரகாஷ் கூடுதல் முதலாக ₹ 60,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுப்ரியா ₹ 30,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.
Prakash and Supria were two partners who share profits and losses in the ratio of 5 : 3. Balance in their capital account on 1st April, 2018 was Prakash ₹ 3,00,000 and Supria ₹ 2,00,000. On 1st July, 2018 Prakash introduced additional capital of ₹ 60,000. Supria introduced additional capital of ₹ 30,000 during the year. Calculate interest on capital at 6% p.a. for the year ending 31st March, 2019.
3 marks
40.
ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \( \frac{1}{8} \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
Hari and Saleem are partners sharing profits and losses in the ratio of 5 : 3. They admit Joel for \( \frac{1}{8} \) share, which he acquires entirely from Hari. Find out the new profit sharing ratio and sacrificing ratio.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்2,50,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது15,000
2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு60,000உள்திருப்பம்50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்7,25,0002019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது1,60,0002019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்2,40,000
வாராக் கடன்30,000ரொக்க விற்பனை3,15,000
(a)

From the following particulars, calculate total sales.

Particulars₹Particulars₹
Debtors on 1st April 20182,50,000Bills receivable dishonoured15,000
Bills receivable on 1st April 201860,000Returns inward50,000
Cash received from debtors7,25,000Bills receivable on 31st March, 201990,000
Cash received for bills receivable1,60,000Sundry debtors on 31st March, 20192,40,000
Bad debts30,000Cash sales3,15,000
அல்லது / OR
(ஆ)

பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் போக்கு சதவீதங்களை கணக்கிடவும்.

விவரம்₹ (ஆயிரத்தில்)
2015 - 162016 - 172017 - 18
விற்பனை மூலம் பெற்ற வருவாய்100125150
இதர வருமானம்202530
செலவுகள்10012080
வருமான வரி30%30%30%
(b)

From the following particulars, calculate the Trend percentages of Kavitha Ltd.

Particulars₹ (in thousands)
2015 - 162016 - 172017 - 18
Revenue from operations100125150
Other income202530
Expenses10012080
Income tax30%30%30%
5 marks
42.
(அ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. சராசரி இலாபம் ₹ 14,000
  2. சாதாரண இலாபம் ₹ 4,000
  3. சாதாரண இலாப விகிதம் 15%
  4. நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5

5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ₹ 1 -ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ₹ 3.352

(a)

From the following information, calculate the value of goodwill under annuity method.

  1. Average Profit ₹ 14,000
  2. Normal Profit ₹ 4,000
  3. Normal rate of return 15%
  4. Years of Purchase of goodwill 5

Present value of ₹ 1 for 5 years at 15% per annum as per the annuity table is 3.352.

அல்லது / OR
(ஆ)

சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.

  1. கட்டடம் மதிப்பினை ₹ 40,000 உயர்த்த வேண்டும்.
  2. கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ₹ 10,000 மதிப்புள்ள முதலீடுகளைக் கணக்கில் கொண்டுவர வேண்டும்.
  3. இயந்திரம் மதிப்பு ₹ 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ₹ 12,000 குறைக்க வேண்டும்.
  4. பற்பல கடனீந்தோரில் ₹ 16,000 போக்கெழுத வேண்டும்.

குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

(b)

Seenu and Siva are partners sharing profits and losses in the ratio of 5 : 3. In the view of Subbu's admission, they decided

  1. To increase the value of building by ₹ 40,000.
  2. To bring into record investments at ₹ 10,000, which have not so far been brought into account.
  3. To decrease the value of machinery by ₹ 14,000 and furniture by ₹ 12,000.
  4. To write off Sundry Creditors by ₹ 16,000.

Pass journal entries and prepare Revaluation account.

5 marks
43.
(அ)

மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
தொடக்க ரொக்க இருப்பு15,000காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது12,000
தொடக்க வங்கி இருப்பு25,000மன்ற ஆண்டு விழாச் செலவுகள்15,000
நன்கொடைகள் பெற்றது48,000ஒளியூட்டுச் செலவுகள்16,500
பழைய உபகரணங்கள் விற்றது26,000பொழுதுபோக்குச் செலவுகள்13,500
சிற்றுண்டிச் செலவுகள்13,000பில்லியர்ட்ஸ் மேசை வாங்கியது5,000
மன்ற ஆண்டு விழா வசூல்18,000அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள்3,000
டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள்7,000முதலீடுகள் விற்றது12,000
அறக்கொடை நாடகக்காட்சி வசூல்4,000இறுதி ரொக்க இருப்பு12,000
வாடகைச் செலுத்தியது1,000
(a)

Mayiladuthurai Recreation Club gives you the following details. Prepare Receipts and Payments account for the year ended 31st March, 2019.

Particulars₹Particulars₹
Opening cash balance15,000Salary of watchman12,000
Opening bank balance25,000Club annual day expenses15,000
Donations received48,000Lighting charges16,500
Sale of old equipment26,000Entertainment expenses13,500
Refreshment charges13,000Billiards table purchased5,000
Club annual day collections18,000Expenses of charity show3,000
Construction of tennis court7,000Sale of investments12,000
Receipts from charity show4,000Closing cash balance12,000
Rent Paid1,000
அல்லது / OR
(ஆ)

தினேஷ் மற்றும் சுகுமார் 2018, ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ₹ 1,50,000 மற்றும் சுகுமார் ₹ 1,20,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.

  1. தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
  2. கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும்.
  3. எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ₹ 3,600 மற்றும் சுகுமார் ₹ 2,200.
  4. தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ₹ 60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
  5. சுகுமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ₹ 80,000.

2018, டிசம்பர் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ₹ 2,20,000.

இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.

(b)

Dinesh and Sugumar entered into a partnership agreement on 1st January 2018, Dinesh contributing ₹ 1,50,000 and Sugumar ₹ 1,20,000 as Capital. The agreement provided that :

  1. Profit and losses to be shared in the ratio 2 : 1 as between Dinesh and Sugumar.
  2. Partners to be entitled to interest on Capital @ 4% p.a.
  3. Interest on Drawings to be charged Dinesh : ₹ 3,600 and Sugumar : ₹ 2,200.
  4. Dinesh to receive a Salary of ₹ 60,000 for the year, and
  5. Sugumar to receive a Commission of ₹ 80,000.

During the year ended on 31st December 2018, the firm made a profit of ₹ 2,20,000 before adjustment of Interest, Salary and Commission.

Prepare the Profit and Loss appropriation account.

5 marks
44.
(அ)

ஜனனி, ஜானகி மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3 : 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ₹ 1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  1. செலுத்த வேண்டிய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
  2. செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
  3. உடனடியாக ₹ 75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது. மீதித் தொகை எதிர்காலத்தில் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
(a)

Janani, Janaki and Jamuna are partners sharing their Profits and Losses in the ratio of 3 : 3 : 1 respectively. Janaki died on 31st December 2017. Final amount due to her showed a credit balance of ₹ 1,40,000. Pass Journal entries if,

  1. The amount due is paid off immediately by cheque.
  2. The amount due is not paid off immediately.
  3. ₹ 75,000 is paid off immediately by cheque and the balance in future.
அல்லது / OR
(ஆ)கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 -ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து குறிப்பு தரவும்.
(b)Write a note on the applications of the provisions of the Indian Partnership Act, 1932 in the absence of partnership deed.
5 marks
45.
(அ)

ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்31.03.2018
₹
31.03.2019
₹
வங்கி ரொக்கம்5,000 (ப)60,000 (வ)
கை ரொக்கம்3,0004,500
சரக்கிருப்பு35,00045,000
பற்பல கடனாளிகள்1,00,00090,000
பொறி மற்றும் இயந்திரம்80,00080,000
நிலம் மற்றும் கட்டடங்கள்1,40,0001,40,000
பற்பல கடனீந்தோர்1,70,0001,30,000

ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.

(a)

Ananth does not keep his books under double entry system. Find the profit or loss made by him for the year ending 31st March, 2019.

Particulars31.03.2018
₹
31.03.2019
₹
Cash at Bank5,000 (Dr.)60,000 (Cr.)
Cash in hand3,0004,500
Stock of goods35,00045,000
Sundry Debtors1,00,00090,000
Plant and Machinery80,00080,000
Land and Buildings1,40,0001,40,000
Sundry Creditors1,70,0001,30,000

Ananth had withdrawn ₹ 60,000 for his personal use. He had introduced ₹ 17,000 as Capital for expansion of his business. Create a provision of 5% on debtors. Plant and Machinery is to be depreciated at 10%.

அல்லது / OR
(ஆ)

பாரத் நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்தவேண்டிய விவரங்கள் பின்வருமாறு :

விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ₹ 5
ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ₹ 3
முதலாம் மற்றும் இறுதி அழைப்பின்போது பங்கொன்றிற்கு ₹ 2

1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத்தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது.

மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(b)

Bharath Ltd. issued 1,00,000 equity shares of ₹ 10 each to the public at par. The details of the amount payable on the shares are as follows :

On application ₹ 5 per share
On allotment ₹ 3 per share
On first and final call ₹ 2 per share

Application money was received for 1,20,000 shares. Excess application money was refunded immediately. Pass journal entries to record the above.

5 marks
46.
(அ)

சாம் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

விவரம்2015 - 20162016 - 2017
₹₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்4,00,0005,00,000
இதர வருமானம்80,00050,000
செலவுகள்2,40,0002,50,000
வருமான வரி30%30%
(a)

Prepare common - size income statement for the following particulars of Sam Ltd.

Particulars2015 - 20162016 - 2017
₹₹
Revenue from operations4,00,0005,00,000
Other income80,00050,000
Expenses2,40,0002,50,000
Income tax30%30%
அல்லது / OR
(ஆ)

ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.

  1. புற அக பொறுப்புகள் விகிதம்
  2. உரிமையாளர் விகிதம்
  3. முதல் உந்து திறன் விகிதம்

ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 -ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு.

விவரம்தொகை
₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்
நேர்மைப் பங்குமுதல்2,50,000
6% முன்னுரிமைப் பங்குமுதல்2,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி1,50,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்
நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்)3,00,000
3. நடப்புப் பொறுப்புகள்
(அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள்2,00,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்1,00,000
மொத்தம்12,00,000
II. சொத்துகள்
1. நீண்டகாலச் சொத்துகள்
நிலைச் சொத்துகள்8,00,000
2. நடப்புச் சொத்துகள்
(அ) சரக்கிருப்பு1,20,000
(ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்2,65,000
(இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள்10,000
(ஈ) இதர நடப்புச் சொத்துகள்
முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
5,000
மொத்தம்12,00,000
(b)

From the following balance sheet of James Ltd. as on 31.03.2019, calculate

  1. Debt-equity ratio
  2. Proprietary ratio
  3. Capital gearing ratio.

Balance sheet of James Ltd. as on 31.03.2019

ParticularsAmount
₹
I. EQUITY AND LIABILITIES
1. Shareholders' funds
(a) Share Capital
Equity Share Capital2,50,000
6% Preference Share Capital2,00,000
(b) Reserves and Surplus1,50,000
2. Non-current liabilities
Long-term borrowings (8% Debentures)3,00,000
3. Current liabilities
(a) Short-term borrowings from banks2,00,000
(b) Trade Payables1,00,000
Total12,00,000
II. ASSETS
1. Non-current assets
Fixed Assets8,00,000
2. Current assets
(a) Inventories1,20,000
(b) Trade receivables2,65,000
(c) Cash and Cash equivalents10,000
(d) Other current assets
Expenses Paid in advance
5,000
Total12,00,000
5 marks
47.
(அ)

கீழ்க்காணும் தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

பெறுதல்கள்₹செலுத்தல்கள்₹
தொடக்க இருப்பு
கைரொக்கம்
14,000சம்பளம்20,000
வாடகை24,000
வட்டிப் பெற்றது5,000பயணச் செலவுகள்2,000
சந்தா55,000அச்சு மற்றும் எழுதுபொருள்6,000
உயில்கொடை48,000முதலீடுகள் செய்தது50,000
நுழைவுக் கட்டணம்7,000விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது33,000
அறைகலன் விற்றது
(ஏட்டு மதிப்பு ₹ 17,000)
16,000இருப்பு கீ/இ
கைரொக்கம்
10,000
1,45,0001,45,000
(a)

From the following Receipts and Payments account of Tenkasi Thiruvalluvar Manram, prepare Income and Expenditure account for the year ended 31st March, 2019.

Receipts₹Payments₹
To Balance b/d
Cash in hand
14,000By Salaries20,000
By Rent24,000
To Interest received5,000By Travelling expenses2,000
To Subscription55,000By Printing and Stationery6,000
To Legacies48,000By Investments made50,000
To Entrance Fees7,000By Sports equipment purchased33,000
To Sale of furniture
(Book value : ₹ 17,000)
16,000By Balance c/d
Cash in hand
10,000
1,45,0001,45,000
அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ₹ 5,00,000
  2. நிறுவனத்தின் பொறுப்புகள் ₹ 2,00,000
  3. இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
  4. நிறுவனத்தின் சராசரி இலாபம் ₹ 60,000
(b)

From the following details, calculate the value of goodwill at 2 years purchase of Super profit.

  1. Total assets of the firm ₹ 5,00,000.
  2. The liabilities of the firm are ₹ 2,00,000.
  3. Normal rate of return in this class of business is 12.5%.
  4. Average profit of the firm is ₹ 60,000.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து கணக்குப்பதிவியல் வினாத்தாள்கள்