TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் மார்ச் 2026

வினாத்தாள் குறியீடு 9057 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2026 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

கணக்குப்பதிவியல் / Accountancyமார்ச் 2026 · March 2026

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
F11 எனும் பயன்பாடு :
(அ) கணக்கியல் சான்றாவணங்கள்
(ஆ) நிறுவன கட்டமைப்பு
(இ) நிறுவனப் பண்புகூறுகள்
(ஈ) இவைகளில் எதுவும் இல்லை
Function key F11 is used for :
(a) Accounting vouchers
(b) Company configuration
(c) Company features
(d) None of these
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Company features · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) பங்கு முதல் கணக்கு
(ஆ) பத்திர முனைமக் கணக்கு
(இ) பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
(ஈ) அழைப்பு முன்பணக் கணக்கு
The amount received over and above the par value is credited to :
(a) Share capital account
(b) Securities premium account
(c) Forfeited shares account
(d) Calls in advance account
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Securities premium account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது :
(அ) சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
(ஆ) நிறுமம்
(இ) பன்னாட்டு நிறுவனங்கள்
(ஈ) அரசு
Incomplete records are generally maintained by :
(a) Small sized Sole trader business
(b) A Company
(c) Multinational enterprises
(d) Government
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Small sized Sole trader business · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது :
(அ) நட்டம்
(ஆ) செலவு
(இ) ஆதாயம்
(ஈ) இவற்றுள் எதுவுமில்லை
On Revaluation, the increase in the value of assets leads to :
(a) Loss
(b) Expense
(c) Gain
(d) None of these
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Gain · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :
(அ) நிலைச் சொத்துகள்
(ஆ) நடப்புப் பொறுப்புகள்
(இ) நீண்டகாலச் சொத்துகள்
(ஈ) நடைமுறை முதல்
The term "fund" refers to :
(a) Fixed Assets
(b) Current Liabilities
(c) Non-current Assets
(d) Working Capital
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Working Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
பின்வருவனவற்றில் எது இலாப நட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும் ?
(அ) கூட்டாளியின் ஊதியம்
(ஆ) அலுவலகச் செலவுகள்
(இ) வங்கிக்கடன் மீதான வட்டி
(ஈ) பணியாளர் ஊதியம்
Which of the following is shown in Profit and Loss appropriation account ?
(a) Partner's salary
(b) Office expenses
(c) Interest on bank loan
(d) Salary of staff
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Partner's salary · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
உயில்கொடை ஒரு :
(அ) வருவாயின வரவு
(ஆ) வருவாயினச் செலவு
(இ) முதலின வரவு
(ஈ) முதலினச் செலவு
Legacy is a :
(a) Revenue receipt
(b) Revenue expenditure
(c) Capital receipt
(d) Capital expenditure
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Capital receipt · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது :
(அ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(ஆ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
(இ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
(ஈ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
On retirement of a partner, general reserve is transferred to the :
(a) Capital account of the continuing partners
(b) Capital account of all the partners
(c) Memorandum Revaluation account
(d) Revaluation account
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Capital account of all the partners · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
கூலிக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும் ?
(அ) மறைமுக வருமானங்கள்
(ஆ) நேரடி வருமானங்கள்
(இ) மறைமுக செலவினங்கள்
(ஈ) நேரடி செலவினங்கள்
Wages account comes under which of the following heads ?
(a) Indirect incomes
(b) Direct incomes
(c) Indirect expenses
(d) Direct expenses
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Direct expenses · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது :
(அ) கடன் மீது வட்டி
(ஆ) சம்பளம்
(இ) முதல் மீது வட்டி
(ஈ) கழிவு
In the absence of an agreement, partners are entitled to :
(a) Interest on loan
(b) Salary
(c) Interest on capital
(d) Commission
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Interest on loan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது :
(அ) மாதிரி
(ஆ) முடிவு
(இ) தீர்மானம்
(ஈ) விகிதம்
The mathematical expression that provides a measure of the relationship between two figures is called :
(a) Model
(b) Conclusion
(c) Decision
(d) Ratio
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது :
(அ) தியாக விகிதம்
(ஆ) ஆதாய விகிதம்
(இ) முதல் விகிதம்
(ஈ) இவற்றுள் எதுவுமில்லை
If the old profit sharing ratio is more than the new profit sharing ratio of a partner, the difference is called :
(a) Sacrificing ratio
(b) Gaining ratio
(c) Capital ratio
(d) None of these
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Sacrificing ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
புற அக பொறுப்புகள் அளவிடுவது :
(அ) இலாபம் ஈட்டும் திறன்
(ஆ) குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(இ) செயல்திறன்
(ஈ) நீண்ட காலக் கடன் தீர்க்கும் திறன்
Debt Equity Ratio is a measure of :
(a) Profitability
(b) Short term solvency
(c) Efficiency
(d) Long term solvency
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Long term solvency · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ₹ 1,00,000-லிருந்து ₹ 1,25,000-க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது ?
(அ) −120%
(ஆ) +25%
(இ) −25%
(ஈ) +120%
A Limited company's sales has increased from ₹ 1,00,000 to ₹ 1,25,000. How does this appear in comparative income statement ?
(a) −120%
(b) +25%
(c) −25%
(d) +120%
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) +25% · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
₹ 8 செலுத்தப்பட்ட, ₹ 10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறு வெளியீட்டு விலை :
(அ) பங்கொன்று ₹ 5
(ஆ) பங்கொன்று ₹ 10
(இ) பங்கொன்று ₹ 2
(ஈ) பங்கொன்று ₹ 8
If a share of ₹ 10 on which ₹ 8 has been paid up is forfeited, Minimum reissue price is :
(a) ₹ 5 per share
(b) ₹ 10 per share
(c) ₹ 2 per share
(d) ₹ 8 per share
விடையைக் காட்டு ▾ (இ) / (c) ₹ 2 per share · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹ 1,00,000; சொத்துகள் ₹ 1,50,000 மற்றும் பொறுப்புகள் ₹ 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு :
(அ) ₹ 1,00,000
(ஆ) ₹ 40,000
(இ) ₹ 30,000
(ஈ) ₹ 70,000
The total capitalised value of a business is ₹ 1,00,000; Assets are ₹ 1,50,000 and Liabilities are ₹ 80,000. The value of Goodwill as per the capitalisation method will be :
(a) ₹ 1,00,000
(b) ₹ 40,000
(c) ₹ 30,000
(d) ₹ 70,000
விடையைக் காட்டு ▾ (இ) / (c) ₹ 30,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு :
(அ) ஆள்சார் கணக்கு
(ஆ) பெயரளவு கணக்கு
(இ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
(ஈ) சொத்து கணக்கு
Receipts and Payments account is a :
(a) Personal A/c
(b) Nominal A/c
(c) Representative Personal A/c
(d) Real A/c
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Real A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
சராசரி இலாபம் ₹ 45,000 மற்றும் சாதாரண இலாபம் ₹ 35,000 ஆக இருக்கும் போது உயர் இலாபம் :
(அ) ₹ 10,000
(ஆ) ₹ 25,000
(இ) ₹ 15,000
(ஈ) ₹ 5,000
When the average profit is ₹ 45,000 and the normal profit is ₹ 35,000 super profit is :
(a) ₹ 10,000
(b) ₹ 25,000
(c) ₹ 15,000
(d) ₹ 5,000
விடையைக் காட்டு ▾ (அ) / (a) ₹ 10,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
கூட்டாளி ஒருவர் ஜூன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது.
(அ) கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்
(ஆ) நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்
(இ) கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்
(ஈ) முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்
A partner retires from the partnership firm on 30th June. He is liable for all the acts of the firm up to the :
(a) Date of his retirement
(b) End of the current accounting period
(c) Date of his final settlement
(d) End of the previous accounting period
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Date of his retirement · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
உரிமையாளரின் சொத்துகள் ₹ 90,000 மற்றும் பொறுப்புகள் ₹ 26,000 எனில் அவருடைய முதல்தொகை :
(அ) ₹ 21,000
(ஆ) ₹ 85,000
(இ) ₹ 64,000
(ஈ) ₹ 1,06,000
What is the amount of Capital of the Proprietor, if his Assets are ₹ 90,000 and Liabilities are ₹ 26,000 ?
(a) ₹ 21,000
(b) ₹ 85,000
(c) ₹ 64,000
(d) ₹ 1,06,000
விடையைக் காட்டு ▾ (இ) / (c) ₹ 64,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.
நிலை அறிக்கை என்றால் என்ன ?
What is a statement of affairs ?
2 marks
22.

ஒரு மன்றத்திற்கு தொடர்புடைய பின்வரும் விவரங்களிலிருந்து 2018 -ஆம் ஆண்டில் சந்தா மூலம் பெறும் வருவாயைக் கணக்கிடவும்.

விவரம்1.1.2018
₹
31.12.2018
₹
சந்தா பெற வேண்டியது3,0005,000
முன்கூட்டிப் பெற்ற சந்தா4,0007,000

2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது : ₹ 45,000.

Compute income from subscription for the year 2018 from the following particulars relating to a club.

Particulars1.1.2018
₹
31.12.2018
₹
Outstanding subscription3,0005,000
Subscription received in advance4,0007,000

Subscription received during the year 2018 : ₹ 45,000.

2 marks
23.
நிலைமுதல் முறை என்றால் என்ன ?
What is meant by fixed capital method ?
2 marks
24.
உயர் இலாபம் என்றால் என்ன ?
What is Super profit ?
2 marks
25.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் என்றால் என்ன ?
What is meant by Revaluation of assets and liabilities ?
2 marks
26.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ‘A’ கூட்டாண்மையை விட்டு விலகினார். அவருடைய விலகலின் போது நிறுவனத்தின் கணக்கேடுகள் ₹ 1,00,000 காப்பு நிதியினைக் காட்டியது. காப்பு நிதியினை மாற்றுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினை தரவும்.
A, B and C are partners sharing profits and losses in the ratio of 5 : 3 : 2. On 31.3.2019, ‘A’ retired. On the date of retirement, the books of the firm showed a reserve fund of ₹ 1,00,000. Pass journal entry to transfer the reserve fund.
2 marks
27.
பங்குகள் ஏன் ஒறுப்பிழப்பு செய்யப்படுகின்றன ?
Why are the shares forfeited ?
2 marks
28.

அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்2015-16
₹
2016-17
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்50,00060,000
இதர வருமானம்10,00030,000
செலவுகள்40,00050,000

From the following particulars, prepare comparative income statement of Arul Ltd.

Particulars2015-16
₹
2016-17
₹
Revenue from operations50,00060,000
Other income10,00030,000
Expenses40,00050,000
2 marks
29.
விரைவு விகிதம் என்றால் என்ன ?
What is quick ratio ?
2 marks
30.
Tally.ERP 9 -ல் இருப்பாய்வை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.
Explain how to view Trial balance in Tally.ERP 9.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.

2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு :

விவரம்₹விவரம்₹
பற்பல கடனீந்தோர்6,00,000செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு1,20,000
அறைகலன்80,000கைரொக்கம்20,000
நிலம் மற்றும் கட்டடம்3,00,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு60,000
பற்பல கடனாளிகள்3,20,000சரக்கிருப்பு2,20,000

2019, மார்ச் 31 -ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.

Following are the balances in the books of Thomas as on 31st March 2019.

Particulars₹Particulars₹
Sundry creditors6,00,000Bills payable1,20,000
Furniture80,000Cash in hand20,000
Land and building3,00,000Bills Receivable60,000
Sundry debtors3,20,000Stock2,20,000

Prepare a Statement of affairs as on 31st March 2019 and calculate capital as at that date.

3 marks
32.

பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2018 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் செலுத்தல்கள் கணக்கு

பவ
பெறுதல்கள்₹₹செலுத்தல்கள்₹
சந்தா
2016-201710,000
2017-201850,000
2018-20195,00065,000

மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ₹ 400 செலுத்துகின்றனர். 2016-2017 ஆம் ஆண்டில் இன்னும் பெற வேண்டிய சந்தா ₹ 2,000.

How will the following items appear in the Final accounts of a Club for the year ending 31st March 2018 ?

Receipts and payments Account for the year ended 31st March 2018.

Dr.Cr.
Receipts₹₹Payments₹
To subscription
2016-201710,000
2017-201850,000
2018-20195,00065,000

There are 200 members in the Club each paying an annual subscription of ₹ 400 per annum. Subscription still outstanding for the year 2016-2017 is ₹ 2,000.

3 marks
33.

சுமதி என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ₹ 5,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்,

  1. ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
  2. ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்

Sumathi is a partner in a firm. She withdraws ₹ 5,000 p.m. regularly. Interest on Drawings is charged @ 4% p.a. Calculate the interest on Drawings using average period, if she draws

  1. at the beginning of every month
  2. in the middle of every month
3 marks
34.

பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத்தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. சராசரி இலாபம் ₹ 24,000
  2. சாதாரண இலாபம் ₹ 14,000
  3. சாதாரண இலாப விகிதம் 15%
  4. நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5

5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ₹ 1 -ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ₹ 3.352.

From the following information, calculate the value of Goodwill under Annuity method.

  1. Average profit ₹ 24,000
  2. Normal profit ₹ 14,000
  3. Normal rate of return 15%
  4. Years of purchase of goodwill : 5

Present value of ₹ 1 for 5 years at 15% per annum as per the Annuity table is ₹ 3.352.

3 marks
35.
கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை ?
What are the adjustments required at the time of admission of a partner ?
3 marks
36.

கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018 டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ₹ 1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  1. விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது.
  2. விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்பட வில்லை.
  3. ₹ 1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது.

Kavin, Madhan and Ranjith are partners sharing profits and losses in the ratio of 4 : 3 : 3 respectively. Kavin retires from the firm on 31st December, 2018. On the date of retirement, his capital account shows a credit balance of ₹ 1,50,000. Pass journal entries if

  1. The amount due is paid off immediately by cheque.
  2. The amount due is not paid immediately.
  3. ₹ 1,00,000 is paid by cheque and the balance in future.
3 marks
37.
அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.
Write a brief note on calls in advance.
3 marks
38.
ஒப்பீட்டு அறிக்கை தயாரிப்பில் உள்ள படிநிலைகளை விளக்கவும்.
Explain the steps involved in preparing comparative statement.
3 marks
39.

பின்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்துதிறன் விகிதத்தைக் கணக்கிடவும்.

2018 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலை குறிப்பு (வருவிய)

விவரம்தொகை
₹
I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்
நேர்மைப்பங்கு முதல்4,00,000
5% முன்னுரிமைப்பங்கு முதல்1,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி
பொதுக்காப்பு2,50,000
மிகுதி1,50,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்
நீண்டகாலக் கடன்கள் (6% கடனீட்டுப் பத்திரங்கள்)3,00,000
3. நடப்புப் பொறுப்புகள்
கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்1,20,000
வரி ஒதுக்கு30,000
மொத்தம்13,50,000

From the following information calculate capital gearing ratio :

Balance sheet (Extract) as on 31.03.2018

ParticularsAmount
₹
I EQUITY AND LIABILITIES
1. Shareholders' funds
(a) Share capital
Equity share capital4,00,000
5% Preference share capital1,00,000
(b) Reserves and Surplus
General Reserve2,50,000
Surplus1,50,000
2. Non-current Liabilities
Long-term borrowings (6% Debentures)3,00,000
3. Current Liabilities
Trade Payables1,20,000
Provision for tax30,000
Total13,50,000
3 marks
40.
எதிர்ப்பதிவு சான்றாவணம் என்றால் என்ன ? அதனை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை எழுதவும்.
What is meant by Contra Voucher ? Write the procedure to record the Contra Voucher.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

அம்பிகா தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்31.3.2017
₹
31.3.2018
₹
வங்கி ரொக்கம்5,000 (ப)60,000 (வ)
கை ரொக்கம்3,0004,500
சரக்கிருப்பு35,00045,000
பற்பல கடனாளிகள்1,00,00090,000
பொறி மற்றும் இயந்திரம்80,00080,000
நிலம் மற்றும் கட்டடங்கள்1,40,0001,40,000
பற்பல கடனீந்தோர்1,70,0001,30,000

அம்பிகா தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கீடு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.

(a)

Ambiga does not keep her books under double entry system. Find the Profit or Loss made by her for the year ending 31st March, 2018.

Particulars31.3.2017
₹
31.3.2018
₹
Cash at bank5,000 (Dr)60,000 (Cr)
Cash in hand3,0004,500
Stock of goods35,00045,000
Sundry Debtors1,00,00090,000
Plant and Machinery80,00080,000
Land and Buildings1,40,0001,40,000
Sundry Creditors1,70,0001,30,000

Ambiga had withdrawn ₹ 60,000 for her personal use. She had introduced ₹ 17,000 as capital for expansion of her business. Create a provision of 5% on debtors. Plant and Machinery is to be depreciated at 10%.

அல்லது / OR
(ஆ)கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ? கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் யாவை ?
(b)What is meant by accounting reports ? What are the steps involved in designing accounting reports ?
5 marks
42.
(அ)

கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சென்னை மகாலட்சுமி மகளிர் மன்றத்தின் 2019 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
ரொக்க இருப்பு (1.1.2019)2,000தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது1,500
வங்கி இருப்பு (1.1.2019)3,000சந்தா பெற்றது8,500
பழைய செய்தித்தாள்கள் விற்றது500அறைகலன் வாங்கியது6,000
எழுதுபொருள்கள் வாங்கியது6,000செய்தித்தாள்கள் வாங்கியது700
தணிக்கைக் கட்டணம் செலுத்தியது2,000அறைகலன் மீதான தேய்மானம்900
நுழைவுக் கட்டணம் பெற்றது3,000ரொக்க இருப்பு (31.12.2019)2,500
பல்வகைச் செலவுகள்6,000போக்குவரத்துச் செலவுகள்1,000
உதவித்தொகை அளித்தது2,000அறைகலன் விற்றது4,000
முதலீடுகள் மீதான வட்டி2,000
(a)

From the information given below, prepare Receipts and Payments account of Chennai Mahalakshmi Mahalir Mandram for the year ended 31st December, 2019.

Particulars₹Particulars₹
Cash balance as on 1.1.20192,000Fire insurance premium paid1,500
Bank balance as on 1.1.20193,000Subscription received8,500
Sale of old newspapers500Furniture purchased6,000
Stationery purchased6,000Purchase of newspapers700
Audit fees paid2,000Depreciation on furniture900
Entrance fees received3,000Cash balance as on 31.12.20192,500
Sundry charges6,000Conveyance paid1,000
Scholarships given2,000Sale of furniture4,000
Interest on investments2,000
அல்லது / OR
(ஆ)

வேலு மற்றும் சீனு இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல், முறையே ₹ 40,000 மற்றும் ₹ 20,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.

  1. முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க வேண்டும்.
  2. வேலு மற்றும் சீனு இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ₹ 400 மற்றும் ₹ 600 ஆகும்.
  3. முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ₹ 36,000.

கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 -ஆம் நாளைய இலாப நட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

(b)

Velu and Seenu are partners in a firm sharing profits and losses in the ratio of 4 : 1. On 1st January 2018, their capitals were ₹ 40,000 and ₹ 20,000 respectively. The Partnership Deed specifies the following :

  1. Interest on Capital is to be allowed at 5% per annum.
  2. Interest on Drawings charged to Velu and Seenu are ₹ 400 and ₹ 600 respectively.
  3. The net profit of the firm before considering interest on capital and interest on drawings amounted to ₹ 36,000.

Give necessary journal entries and prepare profit and loss appropriation account for the year ending 31st December 2018. Assume that the capitals are fluctuating.

5 marks
43.
(அ)

பின்வரும் தகவல்களிலிருந்து அமுதா மற்றும் அமுதினி என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

விவரம்அமுதா
₹
அமுதினி
₹
2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு)5,00,0004,00,000
2018 ஆம் ஆண்டில் எடுப்புகள்70,00040,000
எடுப்புகள் மீது வட்டி2,0001,000
2018 -ல் இலாபப் பங்கு52,00040,000
முதல் மீது வட்டி30,00024,000
ஊதியம்45,000-
கழிவு-21,000
(a)

From the following information, prepare capital accounts of partners Amutha and Amuthini, when their capitals are fluctuating.

ParticularsAmutha
₹
Amuthini
₹
Capital on 1st January 2018 [Cr. balance]5,00,0004,00,000
Drawings during 201870,00040,000
Interest on Drawings2,0001,000
Share of Profit for 201852,00040,000
Interest on Capital30,00024,000
Salary45,000Nil
CommissionNil21,000
அல்லது / OR
(ஆ)

மணி மற்றும் மாதேஷ் எனும் கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹₹
முதல் கணக்குகள் :இயந்திரம்30,000
மணி40,000அறைகலன்10,000
மாதேஷ்30,00070,000சரக்கிருப்பு10,000
பற்பல கடனீந்தோர்30,000கடனாளிகள்21,000
கழிக்க : வாரா ஐயக்கடன் ஒதுக்கு1,00020,000
வங்கி30,000
1,00,0001,00,000

1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு மது என்பவரை கூட்டாண்மையில் சேர்த்தனர்.

  1. மது ₹ 10,000 முதல் கொண்டு வருவது
  2. இயந்திரம் ₹ 24,000 என மதிப்பிடப்பட்டது
  3. அறைகலனின் மதிப்பில் ₹ 3,000 குறைப்பது
  4. வாரா ஐயக்கடன் ஒதுக்கை ₹ 3,000 என அதிகரிப்பது
  5. ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ₹ 1,000 பதிவு செய்தல்.

கூட்டாளி சேர்க்கைக்கு பின் மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

(b)

Mani and Madhesh are partners in a firm sharing Profits and Losses in the ratio of 3 : 2. Their Balance Sheet as on 31st March, 2017 is as follows :

Liabilities₹₹Assets₹₹
Capital accounts :Machinery30,000
Mani40,000Furniture10,000
Madhesh30,00070,000Stock10,000
Sundry Creditors30,000Debtors21,000
Less : Provision for Doubtful debts1,00020,000
Bank30,000
1,00,0001,00,000

Madhu is admitted on 1.4.2017 subject to the following conditions :

  1. He has to bring a Capital of ₹ 10,000
  2. Machinery is valued at ₹ 24,000
  3. Furniture to be depreciated by ₹ 3,000
  4. Provision for Doubtful debts should be increased to ₹ 3,000
  5. Unrecorded trade receivables of ₹ 1,000 would be brought into books now.

Prepare Revaluation Account and Capital Account of partners after admission.

5 marks
44.
(அ)

பிரியா நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 4 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 -ன் இலாபங்கள் முறையே ₹ 1,75,000, ₹ 1,50,000 மற்றும் ₹ 2,00,000.
  2. 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 45,000 சேர்ந்துள்ளது.
  3. 2017 ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 30,000 அதிகமாக மதிப்பிடப் பட்டது.
(a)

From the following information relating to Priya Enterprises, calculate the value of Goodwill on the basis of 4 years purchase of the average profits of 3 years.

  1. Profit for the years ending 31st December 2016, 2017 and 2018 were ₹ 1,75,000, ₹ 1,50,000 and ₹ 2,00,000 respectively.
  2. A non-recurring income of ₹ 45,000 is included in the profit of the year 2016.
  3. The closing stock of the year 2017 was over-valued by ₹ 30,000.
அல்லது / OR
(ஆ)

2018 மார்ச் 31 ஆம் நாளைய ரோஜா மற்றும் ராஜாவின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள் :கட்டடம்50,000
ரோஜா50,000சரக்கிருப்பு8,000
ராஜா30,00080,000பற்பல கடனாளிகள்60,000
பொதுக் காப்பு40,000வங்கி ரொக்கம்32,000
தொழிலாளர் ஈட்டு நிதி10,000
பற்பல கடனீந்தோர்20,000
1,50,0001,50,000

ரோஜா, ராஜா இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் கல்பனாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரோஜாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.

பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன :

  1. கல்பனா ₹ 20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ₹ 4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
  2. கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
  3. சரக்கிருப்பு ₹ 6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
  4. வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.

கூட்டாளி சேர்க்கைக்கு பின் மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கை தயார் செய்யவும்.

(b)

The Balance Sheet of Roja and Raja on 31st March, 2018 is as follows :

Liabilities₹₹Assets₹
Capital accounts :Buildings50,000
Roja50,000Stock8,000
Raja30,00080,000Sundry Debtors60,000
General Reserve40,000Cash at Bank32,000
Workmen compensation fund10,000
Sundry Creditors20,000
1,50,0001,50,000

They share the Profits and Losses in the ratio of 3 : 1. They agreed to admit Kalpana into the Partnership firm for 1/4 share of profit which she gets entirely from Roja.

Following are the conditions :

  1. Kalpana has to bring ₹ 20,000 as Capital. Her share of Goodwill is valued at ₹ 4,000. She could not bring cash towards goodwill.
  2. Depreciate buildings by 10%.
  3. Stock to be revalued at ₹ 6,000.
  4. Create provision for Doubtful debts at 5% on debtors.

Prepare Revaluation Account and Capital Account after admission.

5 marks
45.
(அ)

விவேக், விஷால் மற்றும் விமல் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹₹
முதல் கணக்குகள் :அறைகலன்60,000
விவேக்60,000இயந்திரம்1,20,000
விஷால்70,000பற்பல கடனாளிகள்33,000
விமல்70,0002,00,000கழிக்க : ஐயக்கடன் ஒதுக்கு3,00030,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு80,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு50,000
வங்கி ரொக்கம்20,000
2,80,0002,80,000

விமல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019 மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

  1. இயந்திரம் ₹ 1,50,000 என மதிப்பிடப்பட்டது.
  2. அறைகலன் மதிப்பில் ₹ 10,000 குறைக்கப்பட்டது.
  3. ஐயக்கடன் ஒதுக்கு ₹ 5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
  4. ஏடுகளில் பதியப்பெறாத முதலீடுகள் ₹ 30,000 தற்போது பதியப்பட வேண்டும்.

தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்.

(a)

Vivek, Vishal, and Vimal are partners in a firm sharing Profits and Losses equally. Their Balance Sheet as on 31st March, 2018 is as follows :

Liabilities₹₹Assets₹₹
Capital accountsFurniture60,000
Vivek60,000Machinery1,20,000
Vishal70,000Sundry debtors33,000
Vimal70,0002,00,000Less : Provision for doubtful debts3,00030,000
Bills Payable80,000Bills Receivable50,000
Cash at Bank20,000
2,80,0002,80,000

Vimal retired on 31st March, 2019 subject to the following conditions :

  1. Machinery is valued at ₹ 1,50,000.
  2. Value of furniture brought down by ₹ 10,000.
  3. Provision for Doubtful debts should be increased to ₹ 5,000.
  4. Investment of ₹ 30,000 not recorded in the books is to be recorded now.

Pass necessary journal entries and prepare Revaluation account.

அல்லது / OR
(ஆ)பூர்ணிமா வரையறு நிறுமம் 1,00,000 சாதாரணப் பங்குகளை, பங்கொன்று ₹ 10 வீதம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ₹ 2, ஒதுக்கீட்டின் போது ₹ 4, முதலாவது அழைப்பின் போது ₹ 2 மற்றும் இரண்டாவது அழைப்பின் போது ₹ 2, செலுத்தப்பட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன மற்றும் அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
(b)Poornima Ltd. issued 1,00,000 ordinary shares of ₹ 10 each, payable at ₹ 2 on application, ₹ 4 on allotment, ₹ 2 on First call and ₹ 2 on Final call. All the shares are subscribed and amount was duly received. Pass journal entries.
5 marks
46.
(அ)

பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்.

விவரம்₹ இலட்சங்களில்
வருடம் 1வருடம் 2வருடம் 3
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
பங்குதாரர் நிதி250275300
நீண்ட காலப் பொறுப்புகள்100125100
நடப்புப் பொறுப்புகள்504080
மொத்தம்400440480
II. சொத்துகள்
நிலைச் சொத்துகள்300360390
நடப்புச் சொத்துகள்1008090
மொத்தம்400440480
(a)

Calculate trend percentages for the following particulars of Palai Ltd.

Particulars₹ in lakhs
Year 1Year 2Year 3
I. Equity and Liabilities
Shareholders' fund250275300
Non-current Liabilities100125100
Current Liabilities504080
Total400440480
II. Assets :
Non-current Assets300360390
Current Assets1008090
Total400440480
அல்லது / OR
(ஆ)

சுஜாதா நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து

  1. மொத்த இலாப விகிதம்
  2. நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.

சுஜாதா நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை

விவரம்தொகை
₹
I. விற்பனை மூலம் பெற்ற வருவாய்5,00,000
II. இதர வருமானம் :
முதலீடு மூலம் வருவாய்
40,000
III. மொத்த வருவாய் (I + II)5,40,000
IV. செலவுகள் :
கொள்முதல் செய்த சரக்குகள்1,80,000
சரக்கிருப்பு மாற்றம்20,000
பணியாளர் நலன்களுக்கான செலவுகள்30,000
இதர செலவுகள்1,10,000
வரி ஒதுக்கு50,000
மொத்த செலவுகள்3,90,000
V. அவ்வாண்டிற்கான இலாபம்1,50,000
(b)

From the following statement of Profit and Loss of Sujatha Ltd. Calculate.

(i) Gross profit ratio   (ii) Net profit ratio

Statement of Profit and Loss.

ParticularsAmount
₹
I. Revenue from operations5,00,000
II. Other income
Income from investment
40,000
III. Total revenues (I + II)5,40,000
IV. Expenses :
Purchase of stock in trade1,80,000
Changes in inventories20,000
Employee benefits expense30,000
Other expenses1,10,000
Provision for tax50,000
Total expenses3,90,000
V. Profit for the year1,50,000
5 marks
47.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்2,50,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது15,000
2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு60,000உள் திருப்பம்50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்7,25,0002019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது1,60,0002019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்2,40,000
வாராக்கடன்30,000ரொக்க விற்பனை3,15,000
(a)

From the following particulars, calculate Total Sales.

Particulars₹Particulars₹
Debtors on 1st April, 20182,50,000Bills Receivable dishonoured15,000
Bills Receivable on 1st April, 201860,000Returns inward50,000
Cash received from Debtors7,25,000Bills Receivable on 31st March, 201990,000
Cash received for bills Receivable1,60,000Sundry debtors on 31st March, 20192,40,000
Bad debts30,000Cash sales3,15,000
அல்லது / OR
(ஆ)அன்பு நிறுமம் பங்கொன்று ₹ 10 முகமதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை வெளியிட்டது. பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் மீது ₹ 3, ஒதுக்கீட்டின் மீது ₹ 3, முதல் அழைப்பின் மீது ₹ 2 மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ₹ 2 செலுத்த வேண்டி இருந்தது. சுப்பு என்பவர் 100 பங்குகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினைக் கட்ட தவறினார். எஞ்சிய தொகைகள் அனைத்தும் பெறப்பட்டன. சுப்புவின் பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன மற்றும் அவைகள் ஹேமா என்பவருக்கு பங்கு ஒன்று ₹ 7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
(b)Anbu Ltd. issued 10,000 Equity shares of ₹ 10 each at par payable on Application ₹ 3 per share, on Allotment ₹ 3 per share, on First call ₹ 2 per share and on Second and Final call ₹ 2 per share. The issue was fully subscribed and all the amounts were duly received with the exception of 100 shares held by Subbu, who failed to pay the Second and Final call. His shares were forfeited and reissued to Hema at ₹ 7 per share. Journalise the above transactions.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து கணக்குப்பதிவியல் வினாத்தாள்கள்