TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(H_2O_2\) சிதைவடைந்து \(O_2\) -வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48 g \(O_2\) உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம் :
Q2
1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசியம் அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடின் மோல்களின் எண்ணிக்கை ?
Q3
பொதுவாக, ஒட்டா சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு :
Q4
நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து மஞ்சள் நிற எண்ணெய் போன்ற நீர்மத்தைத் தருவது ________.
Q5
போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு :
Q6
மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்மநிலை அமைப்பில் உள்ள துகள்கள் எதிர்மின்முனையை நோக்கி நகருகின்றன. அதே கூழ்மக்கரைசலின் திரிதல் நிகழ்வானது (i) \(K_2SO_4\), (ii) \(Na_3PO_4\), (iii) \(K_4[Fe(CN)_6]\) மற்றும் (iv) NaCl ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றது. அவற்றின் வீழ்படிவாகும் திறன்
Q7
கூற்று : குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளூரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.
காரணம் : குளோரினானது, ஃபுளூரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினை பெற்றுள்ளது.
Q8
ஃபுளூரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளூரைடில் காணப்படும் \(Ca^{2+}\) மற்றும் \(F^-\) அயனிகளின் அணைவு எண்கள் முறையே :
Q9
புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதைக் குறிக்கின்றது ?
Q10
நீரின் அயனிப் பெருக்க மாறிலி \(K_w\) -இன் மதிப்பு 25°C வெப்பநிலையில் \(1.00 \times 10^{-14}\) எனில், 40°C வெப்பநிலையில் அதன் மதிப்பு ________.
Q11
\([Pt(NO_2)(H_2O)(NH_3)_2]Br\) என்ற அணைவில் மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் என்ன ?
Q12
மொத்தமாக 9650 கூலூம்கள் மின்னூட்டத்தை பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை :
Q13
பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம் ?
Q14
\(CH_3Br \xrightarrow{KCN} (A) \xrightarrow{H_3O^+} (B) \xrightarrow{PCl_5} (C)\)
விளைப் பொருள் (C) என்பது :
Q15
சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல் :