TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வணிகவியல் வினாத்தாள் துணைத் தேர்வு ஜூன் 2024

வினாத்தாள் குறியீடு 7952 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு ஜூன் 2024 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

வணிகவியல் / Commerceதுணைத் தேர்வு ஜூன் 2024 · Supplementary June 2024

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ________ என்பர்.
(அ) ஒழுங்கு
(ஆ) பயன்பாடு
(இ) வேலைப் பகிர்வு
(ஈ) சமத்துவம்
Dividing the work into small tasks is known as :
(a) Discipline
(b) Utility
(c) Division of work
(d) Equity
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Division of work · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
________ -ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
(அ) செயலூக்கமளித்தல்
(ஆ) கட்டுப்படுத்துதல்
(இ) திட்டமிடுதல்
(ஈ) பணியமர்த்துதல்
The goals are achieved with the help of ________.
(a) Motivation
(b) Controlling
(c) Planning
(d) Staffing
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Motivation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
(அ) இரண்டாம் நிலைச் சந்தை
(ஆ) பணச் சந்தை
(இ) புதிய வெளியீடுகளுக்கான சந்தை
(ஈ) மறைமுக சந்தை
Primary Market is also called as :
(a) Secondary Market
(b) Money Market
(c) New Issue Market
(d) Indirect Market
விடையைக் காட்டு ▾ (இ) / (c) New Issue Market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
விளம்பரம் என்பது ஒரு ________ ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) அக வளங்கள்
(ஆ) புற வளங்கள்
(இ) முகவர்
(ஈ) புறத்திறனீட்டல்
Advertisement is a ________ source of recruitment.
(a) Internal
(b) External
(c) Agent
(d) Outsourcing
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) External · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ________ ஆகிறார்கள்.
(அ) வங்கியாளர்
(ஆ) பங்குதாரர்கள்
(இ) முகவர்
(ஈ) பொறுப்பாண்மையாளர்கள்
The status of Directors who regulate money of the company :
(a) Banker
(b) Shareholders
(c) Agent
(d) Trustees
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Trustees · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
(அ) சட்ட முறை
(ஆ) ஆண்டுப் பொது
(இ) சிறப்பு
(ஈ) வகுப்பு பொது
________ meeting will be held only once in the life time of the Company.
(a) Statutory
(b) Annual General
(c) Extraordinary
(d) Class General
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Statutory · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
நம்பிக்கையுள்ள ஊக வணிகர் என்பவர் :
(அ) காளை
(ஆ) கரடி
(இ) கலைமான்
(ஈ) முடவாத்து
An optimistic speculator is :
(a) Bull
(b) Bear
(c) Stag
(d) Lame duck
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Bull · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ________.
(அ) 1988
(ஆ) 1992
(இ) 1995
(ஈ) 1998
Securities and Exchange Board of India was first established in the year ________.
(a) 1988
(b) 1992
(c) 1995
(d) 1998
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 1988 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது ?
(அ) இடர்தாங்கி
(ஆ) புதுமை படைப்பவர்
(இ) ஊழியர்
(ஈ) அமைப்பாளர்
Entrepreneur is not classified as :
(a) Risk Bearer
(b) Innovator
(c) Employee
(d) Organizer
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Employee · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் :
(அ) 01.01.1986
(ஆ) 01.04.1986
(இ) 15.04.1987
(ஈ) 15.04.1990
The Consumer Protection Act came into force with effect from :
(a) 01.01.1986
(b) 01.04.1986
(c) 15.04.1987
(d) 15.04.1990
விடையைக் காட்டு ▾ (இ) / (c) 15.04.1987 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ________.
(அ) அதிகமான இலாபம்
(ஆ) குறைவான இலாபம்
(இ) நுகர்வோர் திருப்தி
(ஈ) சமுதாயத்திற்கு சேவை
The final aim of Modern Marketing is ________.
(a) Maximum Profit
(b) Minimum Profit
(c) Consumer Satisfaction
(d) Service to the Society
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Consumer Satisfaction · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
கூட்டுப்பங்கு நிறும தொழில் முனைவோரின் வேறு பெயர் :
(அ) அகத் தொழில் முனைவோர்
(ஆ) தோற்றுவிப்பாளர்
(இ) மேலாளர்
(ஈ) பங்குதாரர்
Corporate Entrepreneur is also called as __________.
(a) Intrapreneur
(b) Promoter
(c) Manager
(d) Shareholder
1 mark
13.
பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது :
(அ) உடனடிச் சந்தை
(ஆ) உள்ளூர் சந்தை
(இ) பத்திரச் சந்தை
(ஈ) தேசிய சந்தை
Stock Exchange Market is also called ________.
(a) Spot Market
(b) Local Market
(c) Security Market
(d) National Market
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Security Market · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ________ ஆகும்.
(அ) தாராளமயமாக்கல்
(ஆ) தனியார்மயமாக்கல்
(இ) உலகமயமாக்கல்
(ஈ) பொது நிறுவனம்
________ means permitting the Private sector to set-up industries which were previously reserved for Public sector.
(a) Liberalisation
(b) Privatisation
(c) Globalisation
(d) Public Enterprise
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Privatisation · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ________.
(அ) ஊக்கப் பங்குகள்
(ஆ) சாதாரணப் பங்குகள்
(இ) உரிமைப் பங்குகள்
(ஈ) முன்னுரிமைப் பங்குகள்
The shares which are offered to the existing shareholders, free of cost is known as ________.
(a) Bonus Shares
(b) Equity Shares
(c) Right Shares
(d) Preference Shares
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Bonus Shares · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
________ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடக்கியது.
(அ) வங்கியர்
(ஆ) அரசு
(இ) கடன் அளிக்கும் நிறுவனங்கள்
(ஈ) தொழில் முனைவோர்
________ has to include the mechanism for managing the venture in the Project Report.
(a) Banker
(b) Government
(c) Lending Institutions
(d) Entrepreneur
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Entrepreneur · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
________ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
(அ) பயிற்சி
(ஆ) வேலை பகுப்பாய்வு
(இ) தேர்வு
(ஈ) ஆட்சேர்ப்பு
________ is useful to prevent skill obsolescence of employees.
(a) Training
(b) Job analysis
(c) Selection
(d) Recruitment
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Training · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
புதிய பொருளாதாரக் கொள்கை ________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
(அ) 1980
(ஆ) 1991
(இ) 2013
(ஈ) 2015
New Economic Policy was introduced in the year :
(a) 1980
(b) 1991
(c) 2013
(d) 2015
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1991 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
ஒரு தனியார் நிறுமத்தில் குறைந்தது ________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
(அ) ஏழு
(ஆ) ஐந்து
(இ) மூன்று
(ஈ) இரண்டு
A private company shall have a minimum of ________ directors.
(a) Seven
(b) Five
(c) Three
(d) Two
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Two · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ________.
(அ) மகாத்மா காந்தி
(ஆ) ஜான் எப். கென்னடி
(இ) ரால்ப் நேடர்
(ஈ) ஜவஹர்லால் நேரு
________ is the Father of Consumer Movement.
(a) Mahatma Gandhi
(b) John F. Kennedy
(c) Ralph Nader
(d) Jawaharlal Nehru
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Ralph Nader · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் வினா எண் 30 –க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
அதிகாரம் என்பதன் பொருள் தருக.
State the meaning of Authority.
2 marks
22.
உடனடிச் சந்தை என்றால் என்ன ?
What is Spot market ?
2 marks
23.
தரப்படுத்துதல் என்றால் என்ன ?
What is meant by Grading ?
2 marks
24.
நுண்ணறிவுத் திறன் சோதனை என்றால் என்ன ?
What is Intelligence test ?
2 marks
25.
செபியின் ஏதேனும் இரண்டு நோக்கங்களை எழுதுக.
Write any two objectives of SEBI.
2 marks
26.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Give two examples of adulteration.
2 marks
27.
வருநிகழ்வுசார் சரக்கு என்றால் என்ன ?
What is Contingent Goods ?
2 marks
28.
உலகமயமாக்கலின் ஏதேனும் இரண்டு நன்மைகளை எழுதுக.
Give any two advantages of Globalisation.
2 marks
29.
நிறுமம் உருவாக்கத்தில் உள்ள நான்கு நிலைகள் யாவை ?
What are the four stages of formation of a company ?
2 marks
30.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார் ?
Who are agricultural entrepreneurs ?
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 –க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
டெய்லரின் அறிவியல்பூர்வ மேலாண்மைக் கோட்பாடுகள் யாவை ?
What are the principles of Scientific Management by Taylor ?
3 marks
32.
கருவூல இரசீதின் வகைகள் யாவை ?
What are the types of treasury bills ?
3 marks
33.
பணிவழி பயிற்சி பற்றி நீவிர் அறிவது யாது ?
What do you mean by On the job training ?
3 marks
34.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன ?
What is meant by Dematerialization ?
3 marks
35.
மின் சந்தையிடுகையின் நன்மைகள் யாவை ?
What are the advantages of E – Marketing ?
3 marks
36.
பங்குச் சந்தையின் குறைபாடுகள் யாவை ? (ஏதேனும் 3)
What are the limitations of Stock Exchange ? (Any 3)
3 marks
37.
தொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் குறிப்பிடுக.
List down the commercial functions of Entrepreneur.
3 marks
38.
வேலைவாய்ப்பு இணையதளங்கள் என்றால் என்ன ?
What is meant by Job Portals ?
3 marks
39.
தொழில்நுட்ப சூழலை விளக்குக.
Explain ‘Technological Environment’.
3 marks
40.
சாதாரண தீர்மானம் தேவைப்படும் ஏதேனும் மூன்று செயல்பாடுகளைத் தருக.
Give any three cases in which an ordinary resolution needs to be passed.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
(a)Explain the various functions of Management. (Any 5)
அல்லது / OR
(ஆ)மனித வளத்தின் சிறப்பியல்புகளை விளக்கவும். (ஏதேனும் 5)
(b)Explain the characteristics of Human Resource. (Any 5)
5 marks
42.
(அ)ஆட்சேர்ப்பு முறையில் உள்ள அக வளங்களை விளக்குக. (ஏதேனும் 5)
(a)Explain the Internal Sources of Recruitment. (Any 5)
அல்லது / OR
(ஆ)எல்பிஜி கொள்கையின் சிறப்பு அம்சங்களை விளக்குக. (ஏதேனும் 5)
(b)What are the highlights of the LPG Policy ? (Any 5)
5 marks
43.
(அ)பல்வேறு வகையான நிதிச் சந்தைகளை விவரிக்கவும். (ஏதேனும் 5)
(a)Enumerate the different types of Financial Markets. (Any 5)
அல்லது / OR
(ஆ)விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைக் கூறி விளக்குக.
(b)State and explain the essential elements of Contract of sale.
5 marks
44.
(அ)பாரம்பரிய சந்தை எவ்வாறு மின் சந்தையிடுகையிலிருந்து வேறுபடுகிறது என்பதை விளக்குக.
(a)Explain in detail how traditional marketing differs from E-Marketing.
அல்லது / OR
(ஆ)மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரிக்கவும். (ஏதேனும் 5)
(b)Explain the challenges faced by women entrepreneurs. (Any 5)
5 marks
45.
(அ)அரசுப் பத்திரங்களின் சிறப்பியல்புகளில் ஏதேனும் ஐந்தினை விவரிக்கவும்.
(a)Explain any five characteristics of Government Securities.
அல்லது / OR
(ஆ)பல வகையான நிறுமக் கூட்டங்களை விளக்குக. (ஏதேனும் 5)
(b)Explain the different types of company meetings. (Any 5)
5 marks
46.
(அ)மேலாண்மையின் அடிப்படைக் கருத்துகளை விவரிக்கவும்.
(a)Explain the basic concepts of Management.
அல்லது / OR
(ஆ)சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி பற்றி விவரிக்கவும்.
(b)Discuss about the Evolution of Marketing.
5 marks
47.
(அ)பங்குகளுக்கும், கடனீட்டு பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. (ஏதேனும் 5)
(a)Write the differences between Shares and Debentures. (Any 5)
அல்லது / OR
(ஆ)நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் ? (ஏதேனும் 5)
(b)How are consumers exploited ? (Any 5)
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து வணிகவியல் வினாத்தாள்கள்