TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் மார்ச் 2024: விடையுடன் கூடிய வினாக்கள்

15 வினாக்கள் 70 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள் வினாத்தாள் குறியீடு 7472
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

மார்ச் 2024 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் பொதுத் தேர்வின் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.

விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்

ஆன்லைன் தேர்வு எழுது →
Q1
ஒரு நெறிமுறையின் மிக மோசமான நிலையைக் குறிக்க பின்வரும் எது பயன்படுகிறது ?
  • A. Big W
  • B. Big A
  • C. Big Oசரி
  • D. Big S
விளக்கம். Big O குறியீடு ஒரு நெறிமுறையின் இயக்க நேரத்தின் மேல் வரம்பைத் தருகிறது; எனவே அது மிக மோசமான நிலையைக் குறிக்கிறது.
Q2
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
  • A. Concrete datatype
  • B. Built-in datatype
  • C. Abstract datatypeசரி
  • D. Derived datatype
விளக்கம். அருவமாக்கப்பட்ட தரவு வகையில் (ADT) செய்யக்கூடிய செயல்பாடுகள் மட்டுமே தெரியும்; அதன் உருவமைப்பு மறைக்கப்பட்டிருக்கும். உருவமைப்பு தெரிந்தது உறுதியான (Concrete) தரவு வகை.
Q3
பைத்தான் ஸ்கிரிப்ட்டை இயக்க எந்த விசையை அழுத்த வேண்டும் ?
  • A. F1
  • B. F5சரி
  • C. F3
  • D. F2
விளக்கம். பைத்தான் IDLE-ல் Run > Run Module அல்லது F5 விசையை அழுத்தி ஸ்கிரிப்ட் இயக்கப்படுகிறது.
Q4
பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது ?
  • A. இடைமுகம்சரி
  • B. இயக்க அமைப்பு
  • C. நிரல் பெயர்ப்பி
  • D. தொகுப்பான்
விளக்கம். இடைமுகம் என்பது ஒரு பொருள் செய்யக்கூடிய செயல்களின் தொகுப்பு ஆகும்; அவற்றைச் செயல்படுத்துவது நடைமுறைப்படுத்தல் (implementation).
பாடம்: செயற்கூறு
Q5
கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில் நுட்பம் :
  • A. அணுகல் கட்டுப்பாடுசரி
  • B. கடவுச் சொல்
  • C. சான்றிதழ்
  • D. அங்கீகாரம்
விளக்கம். கணினி சூழலில் வளங்களை யார் பார்க்கலாம், பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பம் அணுகல் கட்டுப்பாடு ஆகும்.
பாடம்: வரையெல்லை
Q6
பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் செயற்குறி :
  • A. < >
  • B. { }
  • C. ( )
  • D. [ ]சரி
விளக்கம். சதுர அடைப்புக்குறி [ ] துண்டாக்கும் செயற்குறி ஆகும்; எ.கா. s[0:3] ஒரு துணைச் சரத்தைத் தரும்.
Q7
பைத்தானில் பொருளை உருவாக்கும் செயல்முறை ________ என அழைக்கப்படுகிறது.
  • A. மதிப்பிருத்தல்
  • B. ஆக்கி
  • C. சான்றுருவாக்கல்சரி
  • D. அழிப்பி
விளக்கம். ஒரு இனக்குழுவின் பொருளை (சான்றுரு) உருவாக்கும் செயல் சான்றுருவாக்கல் எனப்படும்.
Q8
கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக இயக்குவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
if ________ : print(x, "is a leap year")
  • A. x/4=0
  • B. x%2=0
  • C. x%4=0
  • D. x%4==0சரி
விளக்கம். நிபந்தனையில் ஒப்பீட்டுச் செயற்குறி == பயன்படுத்த வேண்டும்; = மதிப்பிருத்தல் செயற்குறி என்பதால் பிழை ஏற்படும். லீப் ஆண்டு 4-ஆல் வகுபடும், எனவே x%4==0.
Q9
SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது ?
  • A. X
  • B. σசரி
  • C. Ω
  • D. Π
விளக்கம். உறவுமுறை இயற்கணிதத்தில் SELECT செயல் σ (சிக்மா) ஆல் குறிக்கப்படுகிறது; PROJECT க்கு Π, கார்டீசியன் பெருக்கத்திற்கு X.
Q10
If List = [10, 20, 30, 40, 50] எனில்
List [2] = 35 -ன் விடை :
  • A. [10, 20, 35, 40, 50]சரி
  • B. [35, 10, 20, 30, 40, 50]
  • C. [10, 35, 30, 40, 50]
  • D. [10, 20, 30, 40, 50, 35]
விளக்கம். சுட்டெண் 0-லிருந்து தொடங்குவதால் List[2] என்பது 30; அதற்கு 35 இருத்தப்படுவதால் [10, 20, 35, 40, 50] கிடைக்கும்.
Q11
CSV கோப்பானது ________ எனவும் அழைக்கப்படுகிறது.
  • A. String File
  • B. Flat Fileசரி
  • C. Random File
  • D. 3D File
விளக்கம். CSV கோப்பு அட்டவணைத் தரவை எளிய உரைப் பதிவுகளாகச் சேமிப்பதால் அது Flat File எனவும் அழைக்கப்படுகிறது.
Q12
SQL -ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று :
  • A. execute
  • B. cursor
  • C. commit
  • D. selectசரி
விளக்கம். அட்டவணைகளிலிருந்து தரவைப் பெறப் பயன்படும் SELECT கூற்றே SQL-ல் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கூற்று ஆகும்.
Q13
பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு என்ன ?
for x in range (5):
    if x==2:
        continue
    print(x, end=' ')
  • A. 0 1 3 4சரி
  • B. 0 1 2
  • C. 0 1 2 3 4
  • D. 0 1 2 3
விளக்கம். x ஆனது 0 முதல் 4 வரை மதிப்புகளைப் பெறும். x = 2 ஆகும்போது continue ஆனது print-ஐத் தவிர்க்கும்; எனவே வெளியீடு 0 1 3 4.
Q14
________ அனைத்து வளங்களையும் ஒன்றுபட்ட ஒற்றை காட்சி திரையில் காண்பிக்க பயன்படுகிறது.
  • A. பொருள்கள்
  • B. இடைமுகம்
  • C. வரைகலை
  • D. டேஷ் போர்ட்சரி
விளக்கம். டேஷ் போர்ட் பல வரைபடங்கள், அட்டவணைகள் போன்ற வளங்களை ஒன்றிணைத்து ஒற்றைக் காட்சித் திரையாகக் காட்டுகிறது.
Q15
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause :
  • A. GROUP BY
  • B. SORT BY
  • C. SELECT
  • D. ORDER BYசரி
விளக்கம். ORDER BY ஆனது முடிவுகளை ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையில் வரிசைப்படுத்துகிறது; SQL-ல் SORT BY என்ற clause இல்லை.
ஆன்லைன் தேர்வு எழுது → அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

இந்த வினாத்தாள் பற்றி

இவை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய மார்ச் 2024 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் பொதுத் தேர்வின் பகுதி I ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு வினாக்கள். விடைகளும் விளக்கங்களும் மீள்பார்வைக்காக TN Online Test ஆல் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவும் அது இடம்பெற்ற பாடநூல் அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தின் குறிப்புகள் மற்றும் வினாக்களுக்குத் திரும்பிச் செல்லலாம்.

பிற ஆண்டுகள்

2026 · மார்ச் 2026 2025 · மார்ச் 2025 2023 · மார்ச் 2023 2022 · மே 2022 2021 · துணைத் தேர்வு 2021 2020 · மார்ச் 2020