TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வரலாறு வினாத்தாள் மார்ச் 2023

வினாத்தாள் குறியீடு 6642 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2023 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

வரலாறு / Historyமார்ச் 2023 · March 2023

பகுதி - I / PART - I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு :
(அ) 1930
(ஆ) 1920
(இ) 1935
(ஈ) 1925
Communist Party of India was formed in the year :
(a) 1930
(b) 1920
(c) 1935
(d) 1925
1 mark
2.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது ?
(அ) திலகர்
(ஆ) மகாத்மா காந்தியடிகள்
(இ) பி.பி. வாடியா
(ஈ) மதன்மோகன் மாளவியா
Who founded the Banaras Hindu University ?
(a) Tilak
(b) Mahatma Gandhi
(c) B.P. Wadia
(d) Madan Mohan Malaviya
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Madan Mohan Malaviya · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
"How India Wrought for Freedom" என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
(அ) லாலா லஜபதி ராய்
(ஆ) அன்னிபெசன்ட்
(இ) C.R. தாஸ்
(ஈ) திலகர்
The author of the Book "How India Wrought for Freedom" was __________.
(a) Lala Lajpat Rai
(b) Annie Besant
(c) C.R. Das
(d) Tilak
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Annie Besant · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
கூற்று : இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன. காரணம் : அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
(இ) கூற்று தவறு, காரணம் சரி.
(ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
Assertion (A) : The methods of warfare changed during the Second World War. Reason (R) : Trench warfare had given way to aerial bombing.
(a) (A) is correct but (R) is wrong.
(b) Both (A) and (R) are correct, (R) explains (A).
(c) (A) is wrong but (R) is correct.
(d) Both (A) and (R) are correct, (R) does not explain (A).
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Both (A) and (R) are correct, (R) explains (A). · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது ?
(அ) ஃபெரோஸ்ஷா மேத்தா
(ஆ) அரவிந்த கோஷ்
(இ) லாலா லஜபதி ராய்
(ஈ) தாதாபாய் நௌரோஜி
Whose name was proposed as President by the Militant Nationalists for the Surat session of the Congress ?
(a) Pherozeshah Mehta
(b) Aurobindo Ghose
(c) Lala Lajpat Rai
(d) Dadabhai Naoroji
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Lala Lajpat Rai · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் :
(அ) A.O. ஹியூம்
(ஆ) சுபாஷ் சந்திர போஸ்
(இ) பால கங்காதர திலகர்
(ஈ) காந்தியடிகள்
The Indian National Congress was founded by :
(a) A.O. Hume
(b) Subash Chandra Bose
(c) Bala Gangadhar Tilak
(d) Gandhi
விடையைக் காட்டு ▾ (அ) / (a) A.O. Hume · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
கிரிப்ஸ் தூதுக்குழு __________ ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்தது.
(அ) மௌண்ட்பேட்டன் பிரபு
(ஆ) வேவல் பிரபு
(இ) இர்வின் பிரபு
(ஈ) லின்லித்கோ பிரபு
The Cripps Mission visited India during the regime of :
(a) Lord Mountbatten
(b) Lord Wavell
(c) Lord Irwin
(d) Lord Linlithgow
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Lord Linlithgow · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை : (i) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல் (ii) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல் (iii) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல் (iv) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
(அ) (i) மற்றும் (iv)
(ஆ) (i) மற்றும் (ii)
(இ) (iii) மற்றும் (iv)
(ஈ) (ii) மற்றும் (iii)
Non-Cooperation Movement included : (i) boycott of government schools and colleges (ii) return of government conferred titles (iii) protest observing fasts (iv) conducting underground movements against the Government
(a) (i) and (iv)
(b) (i) and (ii)
(c) (iii) and (iv)
(d) (ii) and (iii)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) (i) and (ii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
ஐ.நா. சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை __________ -ஐ சேர்ந்தவராவார்.
(அ) சிங்கப்பூர்
(ஆ) பர்மா
(இ) நார்வே
(ஈ) ஜப்பான்
Trygve Lie, the first Secretary General of the UNO, belonged to __________.
(a) Singapore
(b) Burma
(c) Norway
(d) Japan
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Norway · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
1923 –இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன ?
(அ) சுதந்திரா கட்சி
(ஆ) சுயராஜ்ய கட்சி
(இ) கம்யூனிஸ்ட் கட்சி
(ஈ) கதார் கட்சி
What was the name of the party formed by Motilal Nehru and C.R. Das in 1923 ?
(a) Swatantra Party
(b) Swaraj Party
(c) Communist Party
(d) Ghadar Party
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Swaraj Party · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது ?
(அ) புவியியல் கண்டுபிடிப்பு
(ஆ) மறுமலர்ச்சி
(இ) வர்த்தகப் புரட்சி
(ஈ) சமயச் சீர்திருத்தம்
Which one of the following had relegated religion to a subordinate place ?
(a) Geographical Discovery
(b) Renaissance
(c) Commercial Revolution
(d) Religious Reformation
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Renaissance · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும். (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு (ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
(அ) (iii), (ii), (i)
(ஆ) (ii), (i), (iii)
(இ) (ii), (iii), (i)
(ஈ) (i), (ii), (iii)
Arrange the following in chronological order. (i) Attlee's announcement on India's Independence (ii) Interim Government under the leadership of Nehru (iii) Lord Mountbatten Plan
(a) (iii), (ii), (i)
(b) (ii), (i), (iii)
(c) (ii), (iii), (i)
(d) (i), (ii), (iii)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) (ii), (i), (iii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
__________ க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
(அ) இரண்டாம் ஆங்கிலோ - சீனப் போர்
(ஆ) ரஷ்ய - ஜப்பானிய போர்
(இ) சீன - ஜப்பானிய போர்
(ஈ) இரண்டாம் அபினி போர்
Shimonoseki Treaty was signed after the __________.
(a) Second Anglo-Chinese War
(b) Russo-Japanese War
(c) Sino-Japanese War
(d) Second Opium War
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Sino-Japanese War · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது ?
(அ) 100
(ஆ) 200
(இ) 75
(ஈ) 150
Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) provided __________ days work for an individual.
(a) 100
(b) 200
(c) 75
(d) 150
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 100 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார் ?
(அ) 1917
(ஆ) 1915
(இ) 1918
(ஈ) 1916
When did Gandhi return to India from South Africa ?
(a) 1917
(b) 1915
(c) 1918
(d) 1916
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1915 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
ஜெர்மானிய ஒருங்கிணைவை அடைவதற்கு 'இரத்தமும், இரும்பும்' என்ற கொள்கையை கையாண்டவர் __________.
(அ) அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல்
(ஆ) க்யூசப் கரிபால்டி
(இ) மூன்றாம் நெப்போலியன்
(ஈ) ஆட்டோ வான் பிஸ்மார்க்
__________ adopted a 'Blood and Iron' Policy to achieve the unification of Germany.
(a) King Victor Emmanuel II
(b) Giuseppe Garibaldi
(c) Napoleon III
(d) Otto von Bismarck
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Otto von Bismarck · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
"இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி" என அழைக்கப்படுபவர் யார் ?
(அ) லால் பகதூர் சாஸ்திரி
(ஆ) இராஜாஜி
(இ) வல்லபாய் படேல்
(ஈ) ஜவஹர்லால் நேரு
Who was called the "Prime Architect of India's Foreign Policy" ?
(a) Lal Bahadur Shastri
(b) Rajaji
(c) Vallabhbhai Patel
(d) Jawaharlal Nehru
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Jawaharlal Nehru · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
இந்திய தேசிய இராணுவப்படை மீதான விசாரணை நடைபெற்ற இடம் :
(அ) வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா
(ஆ) செங்கோட்டை, புதுடெல்லி
(இ) சிங்கப்பூர்
(ஈ) பினாங்
The Indian National Army Trials took place in :
(a) Viceregal Lodge, Simla
(b) Red Fort, New Delhi
(c) Singapore
(d) Penang
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Red Fort, New Delhi · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
1937 -இல் நடைபெற்ற தேர்தலில் __________ காங்கிரஸ் வெற்றி பெற்றது.
(அ) 5 மாகாணங்களில்
(ஆ) 12 மாகாணங்களில்
(இ) 8 மாகாணங்களில்
(ஈ) 7 மாகாணங்களில்
In the 1937 elections, Congress won in :
(a) 5 Provinces
(b) 12 Provinces
(c) 8 Provinces
(d) 7 Provinces
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 7 Provinces · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
பிரெஞ்சுப் புரட்சியின் காலம் __________.
(அ) 1756 - 1763
(ஆ) 1775 - 1783
(இ) 1689 - 1755
(ஈ) 1789 - 1795
The period of the French Revolution is :
(a) 1756 - 1763
(b) 1775 - 1783
(c) 1689 - 1755
(d) 1789 - 1795
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) 1789 - 1795 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி - II / PART - II

குறிப்பு : ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.
தொடக்க கால முக்கிய இந்திய தேசியவாதிகளைக் கண்டறிக.
Identify the prominent early Indian Nationalists.
2 marks
22.
மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார் ?
How did Mahadev Govind Ranade explain the idea of Swadeshi ?
2 marks
23.
பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை குறித்து எழுதுக.
Write about Bahishkrit Hitakarini Sabha.
2 marks
24.
“இரண்டாவது லாகூர் சதி” என்றறியப்படும் நிகழ்வு யாது ?
Which incident was known as the “Second Lahore Conspiracy Case” ?
2 marks
25.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக.
State the main features of August Offer.
2 marks
26.
ஜே வி பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன ?
What was the essence of the JVP Committee’s recommendations ?
2 marks
27.
நாடு விடுதலை அடைந்தபோது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.
Give an account of the conditions of the Indian Economy at the time of Independence.
2 marks
28.
இத்தாலியை, “வெறும் பூகோள வெளிப்பாடே” என மெட்டர்னிக் ஏன் கூறினார் ?
Why was Italy described as “a mere geographical expression” by Metternich ?
2 marks
29.
ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுக.
Point out the importance of Battle of Jutland.
2 marks
30.
ஹிட்லர் பற்றி எழுதுக.
Write about Hitler.
2 marks

பகுதி - III / PART - III

குறிப்பு : பின்வரும் வினாக்களில் எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
Point out the role played by Press in creating Nationalist consciousness in British India.
3 marks
32.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்களைப் பற்றி விவாதிக்கவும்.
Discuss the twin objectives of the Home Rule League.
3 marks
33.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
Write a note on the Jallianwala Bagh Massacre.
3 marks
34.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
Discuss the proposals of Sir Strafford Cripps.
3 marks
35.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை ?
What are the hallmarks of our Indian Constitution ?
3 marks
36.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை ?
What were the outcomes of Green Revolution in India ?
3 marks
37.
1492 -இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
Write about the voyage of Columbus in 1492.
3 marks
38.
சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக எழுதுக.
Give a brief account of Suez Canal Crisis.
3 marks
39.
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.
Highlight the important results of the Second World War.
3 marks
40.
அணிசேரா இயக்கம் (NAM) பற்றி எழுதுக.
Write about the Non-Alignment Movement (NAM).
3 marks

பகுதி - IV / PART - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூக-பொருளாதாரக் காரணிகளை ஆய்க.
(a)Examine the socio-economic causes for the rise of Nationalism in British India.
அல்லது / OR
(ஆ)லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
(b)Highlight the important provisions of Lucknow Pact.
5 marks
42.
(அ)இந்திய தேசிய இயக்கத்தில் வ.உ. சிதம்பரத்தின் பங்கினைப் பற்றி எழுதுக.
(a)Write about the role played by V.O. Chidambaram in Indian National Movement.
அல்லது / OR
(ஆ)1919 - 1939 -ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
(b)Write an account of the industrial development in Colonial India during 1919 - 1939.
5 marks
43.
(அ)ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன ?
(a)What were the impacts of ‘Divide and Rule’ Policy of British on Indian Nationalism ?
அல்லது / OR
(ஆ)இந்திய விடுதலைப்போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
(b)Estimate the role of Mahatma Gandhi in the Indian Freedom Struggle.
5 marks
44.
(அ)1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதன் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.
(a)Trace the different stages in the reorganization of Indian States from 1920 to 1956.
அல்லது / OR
(ஆ)இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
(b)Examine the development of Institutions of Scientific Research and Technology after India’s Independence.
5 marks
45.
(அ)பிரெஞ்சு புரட்சிக்கான காரணங்களை விவாதிக்கவும்.
(a)Discuss the causes for the French Revolution.
அல்லது / OR
(ஆ)முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டு எழுதுக.
(b)Make a comparative analysis of Common and Varying features in the First World War and Second World War.
5 marks
46.
(அ)இரண்டாம் உலகப் போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.
(a)The seeds for the Second World War were sowed in the Treaty of Versailles. Discuss with reasons.
அல்லது / OR
(ஆ)

இந்திய தேசிய இயக்கம் நடைபெற்ற கீழ்க்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.

  1. மீரட்
  2. லக்னோ
  3. கான்பூர்
  4. சம்பரான்
  5. பூனா
(b)

Mark the following places where Indian National Movement took place on the outline map of India.

  1. Meerut
  2. Lucknow
  3. Kanpur
  4. Champaran
  5. Poona
5 marks
47.
(அ)போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியை, குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த பங்கு குறித்து விவரிக்கவும்.
(a)Sketch the political career of Boris Yeltsin, focussing on his role in the collapse of Soviet Union.
அல்லது / OR
(ஆ)1900 முதல் 1950 வரையிலான இந்திய தேசிய இயக்கத்தில் ஏதேனும் ஐந்து முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு வரைந்து காட்டுக.
(b)Draw a time-line from 1900 to 1950 and mark any five important events of Indian National Movement.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து வரலாறு வினாத்தாள்கள்