TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு இயற்பியல் மார்ச் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2024 வினாத்தாளின் 15 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
சூரிய மின்கலன் ________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
Q2
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு \(3\times10^{-6}\) T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன ?
Q3
ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V -இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில், அதன் திறன் :
Q4
n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4 V கொண்ட H - மாதிரி அணுவின் அணு எண் :
Q5
ஒளியின் குறுக்கலைப் பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு :
Q6
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு :
Q7
'ℓ' நீளமும் '\(P_m\)' காந்த திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தம் ஒன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டக்காந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத் திறனின் மதிப்பு :
மையத்தில் 60° கோணம் தாங்கும் வில் வடிவில் வளைக்கப்பட்ட சட்டகாந்தம், ஆரம் r
Q8
திசையொப்பு பண்பினைப் பெற்ற ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது ?
Q9
ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு :
Q10
\(q_1\) மற்றும் \(q_2\) ஆகிய நேர்மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் 'r' இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன எனில், அவற்றிற்கு இடையேயான விசை :
Q11
மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத் திறன் :
ABC முக்கோண வடிவில் இணைக்கப்பட்ட மூன்று 4 μF மின்தேக்கிகள்
Q12
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம் :
Q13
நிகோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி :
Q14
ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர் :
Q15
அறை வெப்பநிலையில் சிலிக்கானின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி மதிப்பு :