TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு இயற்பியல்: முந்தைய ஆண்டு கலப்புத் தேர்வு

அனைத்து 7 வினாத்தாள்களின் (2020–2026) வினாக்களும் ஒரே தேர்வில். ஒவ்வொரு வினாவிலும் அது இடம்பெற்ற வினாத்தாள் காட்டப்படுவதால், எந்த ஆண்டில் என்ன கேட்கப்பட்டது என்பதையும் அறியலாம்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
மீதமுள்ள நேரம்00:00
Q1 மார்ச் 2026
\(q_1\) மற்றும் \(q_2\) ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன எனில், அவற்றிற்கு இடையேயான விசை :
Q2 மார்ச் 2026
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பை கொண்டுள்ளன. \(R_A = 3R_B\) எனில், A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன ?
Q3 மார்ச் 2026
q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று \(\omega\) என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத் திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன ?
Q4 மார்ச் 2026
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A -லிருந்து \(-\)2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் :
Q5 மார்ச் 2026
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்கப் பயன்படுகிறது ?
Q6 மார்ச் 2026
திசையொப்பு பண்பினைப் பெற்ற (Isotropic) ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது ?
Q7 மார்ச் 2026
யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும், திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும் ? (தொலைவு D)
Q8 மார்ச் 2026
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான் உமிழப்படுவது ________ உமிழ்வு எனப்படும்.
Q9 மார்ச் 2026
\({}^{7}_{3}Li\) அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில், \({}^{7}_{3}Li\) அணுக்கருவின் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல் :
Q10 மார்ச் 2026
சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
Q11 மார்ச் 2026
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள் :
Q12 மார்ச் 2026
\(\vec{p}_m=(-0.5\hat{i}+0.4\hat{j})\) \(Am^2\) என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec{B}=2\hat{j}\) T என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு :
Q13 மார்ச் 2026
பின்வருவனவற்றுள் சம மின்னழுத்தப் பரப்பை பொருத்து சரியான கூற்று/கூற்றுகள் எவை ?
Q14 மார்ச் 2026
கால்சைட் படிகத்தினுள், ஒளியியல் அச்சில் அசாதாரணக் கதிருக்கும், சாதாரணக் கதிருக்கும் இடையே உள்ள திசைவேகங்களின் விகிதம் :
Q15 மார்ச் 2026
ஒரு விண்ணலைக் கம்பியின் நெடுக்கம் 64 கி.மீ. எனில், விண்ணலைக் கம்பியின் உயரம் (புவியின் ஆரம் 6400 கி.மீ.) :
Q16 மார்ச் 2025
கீழ்க்காணும் லாஜிக் கேட்டுகளின் சேர்க்கையில், உள்ளீடுகள் A, B, C கொண்டு வெளியீடு Y-க்கான பூலியன் சமன்பாடு எழுதுக.
லாஜிக் சுற்று: NOT கேட் வழியாக A-யும் B-யும் NOR கேட்டிற்கு; அதன் வெளியீடும் C-யும் NAND கேட்டிற்குச் சென்று Y தருகின்றன
Q17 மார்ச் 2025
500 \(Am^{-1}\) காந்தமாக்கு செறிவு கொண்ட பொருளினை 1000 \(Am^{-1}\) மதிப்புடைய காந்தமாக்கு புலத்தில் வைக்கும்போது அப்பொருளின் காந்த ஏற்புத்திறன் மதிப்பு யாது ?
Q18 மார்ச் 2025
ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச் சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6 A எனில், துணைச் சுருளின் மின்னோட்டமானது :
Q19 மார்ச் 2025
ஜூலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H -ஐ y அச்சிலும் \(I^2\) -ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு :
Q20 மார்ச் 2025
\(\frac{1}{\mu_0\varepsilon_0}\) -ன் பரிமாணம் :
Q21 மார்ச் 2025
‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின் பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை :
Q22 மார்ச் 2025
\(2\times10^5\ NC^{-1}\) மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைவு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது செயல்படும் திருப்பு விசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின் துகளின் மின்னூட்ட மதிப்பு :
Q23 மார்ச் 2025
காற்றிலிருந்து ஒளிவிலகல் எண் 2 கொண்ட கண்ணாடிப் பட்டகத்தின் மீது ஒளி விழுகிறது எனில், சாத்தியமான பெரும விலகுகோணத்தின் மதிப்பு என்ன ?
Q24 மார்ச் 2025
t = 0 நேரத்தில் கதிரியக்க தனிமம் ஒன்றிலுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை \(N_0\). அரை ஆயுட்காலத்தில் பாதியளவு காலம் \(\left(t = \frac{1}{2}T_{1/2}\right)\) ஆகும்போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை :
Q25 மார்ச் 2025
500 nm அலைநீளம் உடைய ஒளி 0.5 mm அகலமுடைய துளையின் வழியே செல்லும் போது விளிம்பு விளைவு அடைகிறது. இந்நிகழ்வில் கதிர் ஒளியியலைப் பயன்படுத்தும் தொலைவினைக் காண்க.
Q26 மார்ச் 2025
\(1.0\times10^{-5}\) cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்பு விளைவின் முதல் சிறுமம் 30° எனில், பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் என்ன ?
Q27 மார்ச் 2025
R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது ?
Q28 மார்ச் 2025
ஒளிமின் உமிழ்வு நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும்போது, வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும திசைவேகமானது,
Q29 மார்ச் 2025
ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட :
Q30 மார்ச் 2025
ஒளியின் குறுக்கலைப் பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு :
Q31 மார்ச் 2024
சூரிய மின்கலன் ________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
Q32 மார்ச் 2024
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு \(3\times10^{-6}\) T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன ?
Q33 மார்ச் 2024
ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V -இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில், அதன் திறன் :
Q34 மார்ச் 2024
n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4 V கொண்ட H - மாதிரி அணுவின் அணு எண் :
Q35 மார்ச் 2024
ஒளியின் குறுக்கலைப் பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு :
Q36 மார்ச் 2024
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு :
Q37 மார்ச் 2024
'ℓ' நீளமும் '\(P_m\)' காந்த திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தம் ஒன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டக்காந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத் திறனின் மதிப்பு :
மையத்தில் 60° கோணம் தாங்கும் வில் வடிவில் வளைக்கப்பட்ட சட்டகாந்தம், ஆரம் r
Q38 மார்ச் 2024
திசையொப்பு பண்பினைப் பெற்ற ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் வேகம், பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்துள்ளது ?
Q39 மார்ச் 2024
ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு :
Q40 மார்ச் 2024
\(q_1\) மற்றும் \(q_2\) ஆகிய நேர்மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் 'r' இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன எனில், அவற்றிற்கு இடையேயான விசை :
Q41 மார்ச் 2024
மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத் திறன் :
ABC முக்கோண வடிவில் இணைக்கப்பட்ட மூன்று 4 μF மின்தேக்கிகள்
Q42 மார்ச் 2024
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம் :
Q43 மார்ச் 2024
நிகோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி :
Q44 மார்ச் 2024
ஈர்ப்பு அலைகளை கருத்தியலாக முன்மொழிந்தவர் :
Q45 மார்ச் 2024
அறை வெப்பநிலையில் சிலிக்கானின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி மதிப்பு :
Q46 மார்ச் 2023
\(\lambda_e\) அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் \(\lambda_p\) அலைநீளம் கொண்ட ஃபோட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் (E) பெற்று இருப்பின் அலைநீளங்கள் \(\lambda_e\) மற்றும் \(\lambda_p\) இடையிலான தொடர்பு :
Q47 மார்ச் 2023
இரண்டு போலராய்டுகளின் பரவு அச்சுகள் ஒன்றுக்கொன்று 30° கோணத்தில் சாய்ந்துள்ள நிலையில், I செறிவு கொண்ட தளவிளைவு அற்ற ஒளி முதல் போலராய்டின் மீது விழுகின்றது. இரண்டாவது போலராய்டில் இருந்து வெளியேறும் ஒளியின் செறிவு :
Q48 மார்ச் 2023
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண் மதிப்பு \(3\times10^{-6}\) T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன ?
Q49 மார்ச் 2023
பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1.0 A எனில் மின்தடை P -யின் மதிப்பு என்ன ?
10 V மின்கலம், 3 ஓம், 2.5 ஓம் மற்றும் P மின்தடை தொடரிணைப்பில் உள்ள மின்சுற்று
Q50 மார்ச் 2023
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு \((47\pm4.7)\ k\Omega\) எனில் அதில் இடம் பெறும் நிறவளையங்களின் வரிசை :
Q51 மார்ச் 2023
ஹைட்ரஜன் அணுவில் இரண்டாவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம் :
Q52 மார்ச் 2023
யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு (D) எவ்வளவு இருக்க வேண்டும் ?
Q53 மார்ச் 2023
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கின்றது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும் ?
Q54 மார்ச் 2023
\(\vec{v} = v\hat{i}\) என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +Y அச்சின் திசையில் இருந்தால் அதன் மாறுதிசை காந்தப்புலம் __________ இருக்கும்.
Q55 மார்ச் 2023
காற்றிலிருந்து ஒளிவிலகல் எண் 2 கொண்ட கண்ணாடிப் பட்டகத்தின் மீது ஒளி விழுகிறது எனில், சாத்தியமான பெரும விலகு கோணத்தின் மதிப்பு :
Q56 மார்ச் 2023
செனார் டையோடின் முதன்மை பயன்பாடு :
Q57 மார்ச் 2023
t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் \(\Phi_B = 15t^2 - 50t + 250\) என உள்ளது. t = 3 s -இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது :
Q58 மார்ச் 2023
டயா காந்தப்பொருளுக்கு எடுத்துக்காட்டு :
Q59 மார்ச் 2023
அறை வெப்பநிலையில் சிலிகானின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளியின் மதிப்பு என்ன ?
Q60 மார்ச் 2023
ரோபோக்களில் தசைக் கம்பிகள் உருவாக்கப் பயன்படும் உலோகக் கலவைகள் :
Q61 மே 2022
கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது ?
Q62 மே 2022
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14 kV மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 kV ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி-ப்ராய் அலை நீளமானது :
Q63 மே 2022
பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது ________ எனப்படும்.
Q64 மே 2022
Q காரணி என்பது ________.
Q65 மே 2022
1 செ.மீ. மற்றும் 3 செ.மீ. ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே \(-1 \times 10^{-2}\) C மற்றும் \(5 \times 10^{-2}\) C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின் கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு :
Q66 மே 2022
பின்வருவனவற்றுள் எது மின் காந்த அலையாகும் ?
Q67 மே 2022
ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடிப் பட்டகம் ஒன்றினுள் காற்றுக் குமிழ் ஒன்று உள்ளது. (செங்குத்து படுகதிர் நிலைக்கு அருகில்) ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது காற்றுக் குமிழ் 5 செ.மீ. ஆழத்திலும் மற்றொரு பக்கம் வழியாக பார்க்கும் போது 3 செ.மீ. ஆழத்திலும் உள்ளது எனில், கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் என்ன ?
Q68 மே 2022
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின் தடை :
Q69 மே 2022
\(l\) நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec{B} = \frac{\beta}{\sqrt{3}}(\hat{i} + \hat{j} + \hat{k})\) T என்ற காந்தபுலத்தில் வைக்கும் போது அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு :
Q70 மே 2022
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ________ உமிழ்வு எனப்படும்.
Q71 மே 2022
ஒரு கம்பியில் 45 வினாடிக்கு 7.5 A மின்னோட்டமானது பராமரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கம்பியில் உள்ள மின்னூட்டத்தின் மதிப்பு :
Q72 மே 2022
கேதோடு கதிர்களின் மின்னூட்டம் :
Q73 மே 2022
ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறு திறன் :
Q74 மே 2022
ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் \(V = V_0 \ln\left(\frac{r}{r_0}\right)\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு \(r_0\) ஒரு மாறிலி. மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால், முதன்மை குவாண்டம் எண் n-ஐப் பொறுத்து n-வது சுற்றுபாதை \(r_n\)-இன் மாறுபாட்டின் தன்மை :
Q75 மே 2022
ஒளியின் குறுக்கலை பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு :
Q76 துணைத் தேர்வு 2021
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?
Q77 துணைத் தேர்வு 2021
மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது?
Q78 துணைத் தேர்வு 2021
ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச் சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச் சுருளில் உள்ள மின்னோட்டம் 6 A எனில், துணைச் சுருளின் மின்னோட்டமானது:
Q79 துணைத் தேர்வு 2021
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எது தவறானது?
Q80 துணைத் தேர்வு 2021
\(^{27}\text{Al}\) அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் \(^{64}\text{Cu}\) அணுக்கரு ஆரம் ஏறக்குறைய, பெர்மியில்:
Q81 துணைத் தேர்வு 2021
மின்பாயத்தின் அலகு:
Q82 துணைத் தேர்வு 2021
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு:
Q83 துணைத் தேர்வு 2021
காந்த நீளத்திற்கும் வடிவியல் நீளத்திற்கும் உள்ள தகவு:
Q84 துணைத் தேர்வு 2021
செனார் டையோடின் முதன்மைப் பயன்பாடு எது?
Q85 துணைத் தேர்வு 2021
காற்றில் ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளம் முறையே \(V_a\) மற்றும் \(\lambda_a\). இதே போன்று தண்ணீரில் \(V_w\) மற்றும் \(\lambda_w\) எனில், தண்ணீரின் ஒளிவிலகல் எண்:
Q86 துணைத் தேர்வு 2021
நலமான கண்ணின் அண்மைப்புள்ளியின் தொலைவு ______ இருக்கும்.
Q87 துணைத் தேர்வு 2021
2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை:
Q88 துணைத் தேர்வு 2021
செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் \((\vec{B})\) உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
Q89 துணைத் தேர்வு 2021
யங் இரட்டைப் பிளவு ஆய்வில் பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இரு மடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு D எவ்வளவு இருக்க வேண்டும்?
Q90 துணைத் தேர்வு 2021
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ______ உமிழ்வு எனப்படும்.
Q91 மார்ச் 2020
30 MHz முதல் 400 GHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது :
Q92 மார்ச் 2020
ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு :
Q93 மார்ச் 2020
வெள்ளை நிற ஒளியினை உமிழ LED -யில் பயன்படுத்தப்படும் பொருள் :
Q94 மார்ச் 2020
m நிறையும் q மின்னூட்டமும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கிவிக்கப்படுகிறது. இந்த முடுக்கிவிக்கப்பட்ட துகளானது செங்குத்தாக செயல்படும் காந்தபுலத்தினுள் வரும் போது அதன் மீது செயல்படும் விசை :
Q95 மார்ச் 2020
மின்தேக்கி ஒன்றின் மின்னேற்றம் செய்யப்பட்ட மின்னோட்டம் 0.2 A எனில் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் :
Q96 மார்ச் 2020
முதன்மை குவாண்டம் எண் (n) ஆனது அதிகரித்தால் போர் அணு மாதிரியில் எலக்ட்ரானின் திசைவேகம் :
Q97 மார்ச் 2020
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் புள்ளி மின்னூட்டம் +q ஆனது மையம் O -ல் உள்ளது. மற்றொரு புள்ளி (−Q) மின்னூட்டத்தை புள்ளி A-லிருந்து புள்ளி B-க்கு கொண்டு வர செய்யப்படும் வேலையின் அளவு :
ஆதி O-வில் +q மின்னூட்டம், y-அச்சில் புள்ளி A (0, a), x-அச்சில் புள்ளி B (a, 0)
Q98 மார்ச் 2020
அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும் ?
Q99 மார்ச் 2020
யங் இரட்டை பிளவு சோதனையில் \(S_1\) மற்றும் \(S_2\) என்ற பிளவுகளிலிருந்து வெளிவரும் ஒளி அலைகள் திரையில் P மற்றும் Q -ஐ அடையும் போது அவற்றின் பாதை வேறுபாடு முறையே 0 மற்றும் \(\frac{\lambda}{4}\) என உள்ள போது P மற்றும் Q -வில் ஒளியின் செறிவுகளின் விகிதம் :
Q100 மார்ச் 2020
தட்டைக் குவிலென்சு ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 செ.மீ. மேலும் அதன் ஒளி விலகல் எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம் :
Q101 மார்ச் 2020
பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது :
உள்ளீடுகள் இணைக்கப்பட்ட இரண்டு NAND கேட்டுகள் (A, B), அவற்றின் வெளியீடுகள் மூன்றாவது NAND கேட்டில் சென்று Y தருகின்றன
Q102 மார்ச் 2020
மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் R தொலைவில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் எவ்வாறு மாறுபடுகிறது ?
Q103 மார்ச் 2020
ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V -லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க :
Q104 மார்ச் 2020
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளி உணர்வு மிக்க உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம் கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும் ஒளி எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல் (\(h=6.6\times10^{-34}\) Js எனக் கொள்க).
Q105 மார்ச் 2020
மின் சுற்றில் உள்ள மின்னோட்டத்தின் மதிப்பு :
மூன்று 15 ஓம் மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் 15 V மின்கலத்துடன்