TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 11

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
'போக்குக' என்ற சொல்லின் பகுதி -
Q2
'Consumer' என்பதன் நேரான தமிழ்க் கலைச்சொல் எது?
Q36ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'நிலம் பொது' கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ள நூலும் அதன் ஆசிரியரும் ______.
Q48ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
உடனிகழ்ச்சிப் பொருளில் ______ வேற்றுமை வரும்.
Q510ஆம் வகுப்பு · மணற்கேணி
டேனிஷ் கிறித்துவ நிறுவனத்தால் 1723ஆம் ஆண்டு மொழிபெயர்த்து அச்சுருவாக்கம் பெற்ற தமிழ் நூல் வெளிவந்த ஊர் எது?
Q69ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
யசோதர காவியம் குறித்த சரியான கூற்று எது?
Q79ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
பெண்கள் நலம் குறித்த பெரியாரின் கருத்துகளுள் சரியானவற்றைத் தேர்க.
1. வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்.
2. நாட்டு விடுதலையைவிடப் பெண் விடுதலையே முதன்மையானது.
3. குடும்பப் பணிகள் பெண்களுக்கு மட்டுமே உரியவை.
Q8
அலுவலகக் கடிதத்தின் விளியாக வரும் Respected Sir என்பதன் தமிழாக்கம் எது?
Q98ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
கால் + ஆழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q108ஆம் வகுப்பு · கல்வி கரையில
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q119ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
பொருளுக்கேற்ற குறளடியைப் பொருத்துக.
அ) பகைவரையும் நட்பாக்கும் கருவி - 1) கண்டானாம் தான்கண்ட வாறு
ஆ) தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் - 2) அறம்நாணத் தக்கது உடைத்து
இ) அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும் - 3) மாற்றாரை மாற்றும் படை
Q12
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழை பெய்யும்போது மரங்களின் அடியிலும் மின்கம்பங்களின் அருகிலும் நிற்கக் கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடாமல், உடனே மின்வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். கைப்பேசிகளை முழுமையாக மின்னேற்றம் செய்து வைத்துக்கொள்வதும், கைவிளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதும் நல்லது. ஆறுகளிலும் ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவற்றில் இறங்கிக் குளிக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வந்தவுடன் அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைக் கண்டால் செய்ய வேண்டியது யாது?
Q13
'இதழ்' என்னும் சொல் குறிக்காத பொருள் எது?
Q14
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: அகம்பாவம்
Q1510ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
'கேட்ட பாடல்' என்பது எவ்வகைத் தொடர்?
Q169ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?
Q17
எழுவாய், ஒரு வினையைப் பிறரைச் செய்ய வைத்தால் அது ______.
Q1810ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
'வருக! வருக! வருக!' என்பது எவ்வகைத் தொடர்?
Q197ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
தொல்காப்பியம் கடற்பயணத்தை ______ வழக்கம் என்று கூறுகிறது.
Q209ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
புலம்பெயர்ந்தோர் நிலையைக் காட்டும் 'வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி' என்னும் அடி இடம்பெறும் நூலும், பாடிய புலவரும் -
Q21
'கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?
Q229ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
அறைந்தனன் = அறை + த்(ந்) + த் + அன் + அன். இதில் முதலில் வரும் 'அன்' என்பது -
Q2310ஆம் வகுப்பு · மணற்கேணி
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ______
Q24
'கடைப்பிடித்தல்' என வல்லினம் மிகுந்து வரும்போது அதன் பொருள்
Q2510ஆம் வகுப்பு · பெருவழி
'நிரை நிரை' என்னும் அசைகளுக்குரிய வாய்பாடு எது?
Q267ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பொருத்துக:
1. ஓட்டம் - அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
2. பிடி - ஆ) முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்
3. சூடு - இ) விகுதி பெற்ற தொழிற்பெயர்
Q27
எதிர்ச்சொல் தருக: அன்பு
Q28
பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு இணைகளில் தவறானதைக் கண்டறிக
Q296ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்' என்னும் குறள் விலக்கச் சொல்லும் நான்கனுள் இடம்பெறாதது எது?
Q308ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q31
அரசுக் கிளை நூலகம் – வேலை நேர அட்டவணை
திங்கள்கிழமை: வார விடுமுறை
செவ்வாய் முதல் சனி வரை: காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை: காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
அரசு விடுமுறை நாள்கள்: நூலகம் இயங்காது
குறிப்பு: உறுப்பினர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நூல்கள் வரை இரவல் பெறலாம். இரவல் பெற்ற நூல்களைப் பதினான்கு நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும். தவறினால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். நூல்களைக் கிழிக்கவோ அவற்றில் எழுதவோ கூடாது.

நூலகத்தின் வார விடுமுறை நாள் எது?
Q327ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பொருத்துக:
அ) ஒப்புமை - 1. மேகம்
ஆ) அற்புதம் - 2. வள்ளல்
இ) முகில் - 3. இணை
ஈ) உபகாரி - 4. வியப்பு
Q33
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
எழுவது, அதிகாலையில், நல்லது, துயில்
Q34
ஊர்ப்பெயரின் மரூஉ வடிவைத் தேர்ந்தெடு: திருநெல்வேலி
Q35
ஒற்றுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q367ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'குற்றியலுகரம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q37
களர்நிலம் என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q388ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ______.
Q3910ஆம் வகுப்பு · அமுதஊற்று
'நடத்தல்' என்னும் தொழிற்பெயரில் அமைந்துள்ள விகுதி எது?
Q40
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை ஒப்புமைப்படுத்தி, இவை தனியொரு மொழிக்குடும்பம் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் யார்?
Q417ஆம் வகுப்பு · கலைவண்ணம்
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q42
ஒற்றுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q43
கோடிட்ட இடங்களுக்குப் பொருந்தும் சொற்களை வரிசைப்படி தேர்ந்தெடு: மழை பெய்தது; ______ ஏரி நிறைந்தது. ஏரி நிறைந்த ______ உழவர் விதைத்தனர்.
Q44
வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடு: வென்றான்
Q458ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
பொருத்துக:
அ. ஒடுக்கப்பட்ட பாரதம் இதழ் - 1. 1924
ஆ. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை - 2. 1927
இ. நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் - 3. 1956
ஈ. புத்த சமயத்தில் இணைதல் - 4. 1930
Q466ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______.
Q47
எதிர்ச்சொல் தருக: ஆக்கம்
Q486ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
'கடலோடு விளையாடு' என்னும் நாட்டுப்புறப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ______.
Q497ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
பொருத்துக:
அ) பந்தர் - 1. முதற்போலி
ஆ) மைஞ்சு - 2. முற்றுப்போலி
இ) அஞ்சு - 3. இடைப்போலி
ஈ) அரையர் - 4. கடைப்போலி
Q50
நன்னூலார் குறிப்பிடும் ஓரெழுத்து ஒருமொழிகளுள் குறில் எழுத்துகளாக அமைந்தவை எவை?