TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 30

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q18ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
சேரர்களின் நாடு ______ எனப்பட்டது.
Q27ஆம் வகுப்பு · கலைவண்ணம்
'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q3
பொருத்துக (குறள் தொடர் – அதிகாரம்):
அ. உடையர் எனப்படுவது ஊக்கம் – 1. கூடா ஒழுக்கம்
ஆ. நல்ஆறு எனினும் கொளல்தீது – 2. அன்புடைமை
இ. வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் – 3. ஊக்கமுடைமை
ஈ. அன்புஈனும் ஆர்வம் உடைமை – 4. ஈகை
Q46ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த 'விளக்குகள் பல தந்த ஒளி' (Lights from many lamps) என்னும் நூலை எழுதியவர் ______.
Q5
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q66ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q7
'உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்' என்று கூறியவர் யார்?
Q87ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
'பொய் பேசாமை' என்னும் அறத்தை வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதால் காந்தியடிகள் அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்தார். இப்பத்திக்குப் பொருத்தமான குறள் எது?
Q98ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
பொருத்துக:
அ. கொத்தார் - 1. முன்பு
ஆ. குழல் - 2. இறந்த
இ. மாண்ட - 3. கூந்தல்
ஈ. பண்டு - 4. பூங்கொத்துகளை அணிந்த
Q10
Television என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q11
Transplantation என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q12
Download என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q13
Green Revolution என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q14
மாவட்டக் கலைத் திருவிழா – நிகழ்ச்சி நிரல் (சனிக்கிழமை)
காலை 9.00 – தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை (முதன்மை அரங்கம்)
காலை 9.30 – பேச்சுப் போட்டி (அரங்கம் 1)
காலை 11.00 – கவிதை ஒப்பித்தல் போட்டி (அரங்கம் 2)
பகல் 12.30 – உணவு இடைவேளை
பிற்பகல் 1.30 – கிராமிய நடனப் போட்டி (திறந்தவெளி அரங்கம்)
மாலை 4.00 – பரிசளிப்பு விழா, நன்றியுரை (முதன்மை அரங்கம்)
குறிப்பு: போட்டியாளர்கள் தங்கள் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே உரிய அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் பள்ளியின் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

கிராமிய நடனப் போட்டி நடைபெறும் இடம் எது?
Q15
தேனீக்கள் கூட்டமாக வாழும் சிறிய பூச்சிகள். ஒரு கூட்டில் ஓர் அரசித் தேனீ, சில ஆண் தேனீக்கள், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்கள் வாழ்கின்றன. தேனீக்கள் ஆறுகோண வடிவ அறைகளை அமைத்துக் கூடு கட்டுகின்றன. வேலைக்காரத் தேனீக்கள் பூக்களிலிருந்து தேனைச் சேகரித்துக் கூட்டில் சேமிக்கின்றன. அவை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்குச் செல்லும்போது மகரந்தத்தையும் எடுத்துச் செல்கின்றன. இதனால் பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று விளைச்சல் பெருகுகிறது. ஆகவே, தேனீக்கள் இல்லையேல் உழவும் செழிக்காது. சுறுசுறுப்பாக உழைப்பவரைத் 'தேனீ போல உழைக்கிறார்' என்று பாராட்டுவது நம் மரபு.

'தேனீ போல உழைக்கிறார்' என்ற தொடர் உணர்த்தும் பண்பு எது?
Q166ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
1954ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற 'கிழவனும் கடலும்' (The Old Man and the Sea) புதினத்தின் ஆசிரியர் ______.
Q17
'நெறி' என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
Q18
'ஒன்றுறா முன்றிலோ இல்' என்னும் பழமொழியின் பொருள் யாது?
Q197ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ______.
Q208ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
ல, ழ, ள மயங்கொலிச் சொற்களையும் பொருளையும் பொருத்துக:
அ. விளை - 1. விருப்பு
ஆ. விழை - 2. நூல் இழை
இ. இளை - 3. உண்டாக்குதல்
ஈ. இழை - 4. மெலிந்து போதல்
Q217ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்களுள் ஒன்று ______.
Q227ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
முற்காலத்தில் இந்திய மக்கள் துன்பப்பட்டதற்குக் காரணம் ______ இல்லாமை.
Q2310ஆம் வகுப்பு · விதை நெல்
'விதை நெல்' இயலின் செய்யுள் பகுதியாக இடம்பெற்றுள்ள நூல்கள் எவை?
Q248ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
எழுவாய், ஒரு வினையைச் செய்தால் அது ______.
Q257ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'பகுத்தறிவுக் கவிராயர்' என்று புகழப்படுபவர் ______.
Q269ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
'தண்ணீர்' சிறுகதையில் இந்திராவும் ஊர்ப் பெண்களும் குடிநீர் பிடித்தது எங்கிருந்து?
Q27
மரபுத் தொடரின் பொருள் தருக: கொடிகட்டிப் பறத்தல்
Q28
Password என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q29
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: சாப்ட்டியா
Q307ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q31
'படித்தான்', 'படித்த' – இவற்றுள் பொருள் முற்றுப்பெற்ற சொல்லும் அதன் வகையும்
Q328ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ______.
Q337ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
பயணம் கதை தொடர்பான கூற்றுகளைக் கவனி.
கூற்று: கதைசொல்லி இறுதியில் தன் மிதிவண்டியைச் சிறுவனிடமே விட்டுவிட்டு ஹாசன் பேருந்தில் ஏறிச் சென்றார்.
காரணம்: பிறருக்கு உதவி செய்து அவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பதே சிறந்த மனிதப்பண்பு.
Q34
ஆல் தி பெஸ்ட் (All the best) என்பதற்கு இணையான தமிழ்த் தொடர் எது?
Q357ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ______.
Q3610ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' எனத் தென்றலைப் பாடியவர் யார்?
Q379ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்' - இதில் 'நசைஇ' குறித்த சரியான கூற்று எது?
Q388ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
பொருத்துக (கொங்கு மண்டல எல்லைகள்):
1. கிழக்கு - அ. பெரும்பாலை
2. மேற்கு - ஆ. பழனிமலை
3. வடக்கு - இ. வெள்ளிமலை
4. தெற்கு - ஈ. மதிற்கரை
Q397ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
திருநெல்வேலி ______ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
Q409ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்னும் குறள்தொடர் இடம்பெறும் அதிகாரம் எது?
Q41
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக:
Q427ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
'பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q43
பிழை திருத்துக: 'அந்தப் பூனை பாலைக் குடித்தன.'
Q44
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q456ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q468ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
ஆங்கிலத்தில் 'டெரகோட்டா' என்று அழைக்கப்படும் கலை எது?
Q47
'ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?
Q489ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
தி. ஜானகிராமனின் பயண நூல்களைப் பொருத்துக.
அ) உதய சூரியன் - 1) காவிரிக்கரை வழியான பயணம்
ஆ) கருங்கடலும் கலைக்கடலும் - 2) ஜப்பான் பயணம்
இ) நடந்தாய் வாழி காவேரி - 3) ரோம், செக்கோஸ்லோவாக்கியா பயணம்
Q49
உவமைத் தொடரின் பொருள் தருக: தாயைக் கண்ட சேயைப் போல
Q50
கணினியில் பயன்படும் Mouse என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?