TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 6

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q1
செயப்படுபொருளுடன் இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ' மறைந்து வந்துள்ள செய்வினைத் தொடர் எது?
Q2
பெயரெச்சத்தைத் தேர்ந்தெடு
Q36ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
நிறைமதி தன் உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டு, பறவைகளுக்கும் அளித்தாள். இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறள் எது?
Q46ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
அறுவடைத் திருநாள் கொண்டாடப்படும் பெயர்களைப் பொருத்துக.
அ) ஆந்திரப் பிரதேசம் - 1. லோரி
ஆ) பஞ்சாப் - 2. உத்தராயன்
இ) குஜராத் - 3. மகர சங்கராந்தி
Q5
'திங்கள்' என்னும் சொல் குறிக்காத பொருள் எது?
Q68ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
பாய் வகைகளையும் அவற்றின் பயன்களையும் பொருத்துக:
அ. தடுக்குப்பாய் - 1. உட்கார்ந்து உண்ண உதவுவது
ஆ. பந்திப்பாய் - 2. இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுவது
இ. திண்ணைப்பாய் - 3. குழந்தைகளைப் படுக்கவைப்பது
ஈ. தொழுகைப்பாய் - 4. உட்காரவும் படுக்கவும் உதவுவது
Q7
'பிறர் மனம் மகிழும்' – இத்தொடரில் உள்ள 'மகிழும்' என்பதன் எதிர்ச்சொல் எது?
Q8
செயப்பாட்டுவினைத் தொடரில் பயனிலையோடு சேர்ந்து வரும் துணைவினை எது?
Q9
Mobile phone என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q10
'மீமிசை' என்னும் ஒருபொருட் பன்மொழியில் 'மீ', 'மிசை' ஆகிய இரண்டும் குறிக்கும் பொருள் யாது?
Q1110ஆம் வகுப்பு · பெருவழி
இராமானுசர் நாடகத்தில், தமக்கு நரகம் கிட்டினாலும் மக்கள் நலம் பெறட்டும் எனக் கருதி அவர் செய்தது யாது?
Q12
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: வேணும்
Q137ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
விருந்தோம்பல் பாடல் இடம்பெற்றுள்ள பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் ______.
Q14
'சொல்லுதல்' என்னும் பொருள் தரும் சொற்களின் தொகுப்பு எது?
Q158ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
'சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்' எனப் பாரதியாரைப் புகழ்ந்தவர் யார்?
Q16
அலுவலகக் கடிதத்தில் From என்பதற்கு இணையாக எழுதப்படும் சொல் எது?
Q1710ஆம் வகுப்பு · மணற்கேணி
'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு' என்று கூறியவர் யார்?
Q187ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க (குற்றியலுகர அடிப்படையில்).
Q198ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q20
'பாடு' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வினையாலணையும் பெயர் எது?
Q217ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
பூதத்தாழ்வார் பாடலின்படி பொருத்துக:
1. அன்பு – அ) நெய்
2. ஆர்வம் – ஆ) தகளி
3. சிந்தை – இ) விளக்கு
4. ஞானம் – ஈ) இடுதிரி
Q2210ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
'பாடினாள் கண்ணகி' என்பது எவ்வகைத் தொடர்?
Q239ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
சீத்தலைச் சாத்தனாரைத் 'தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன்' என்று பாராட்டியவர் யார்?
Q24
'பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்' – இக்குறள் கூறும் ஐந்தில் இடம்பெறாதது எது?
Q259ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
யசோதர காவியப் பாடலின் சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) அறம் - 1) அறிவு
ஆ) வெகுளி - 2) மேற்கொண்ட நன்னெறி
இ) ஞானம் - 3) நற்செயல்
ஈ) விரதம் - 4) சினம்
Q2610ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
'மலர்க்கை' என்னும் தொடரில் தொக்கி நிற்கும் உருபு எது?
Q278ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் ______.
Q287ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
காயல்பட்டணத்தில் வாழ்ந்து தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்த பெரிய வணிகர் ______.
Q299ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
பொருத்துக. அ) குறம், பள்ளு - 1) ஒருவகை இசைப்பாடல் ஆ) மூன்றினம் - 2) சிதறாத மணி இ) சிந்தாமணி - 3) சிற்றிலக்கிய வகைகள் ஈ) சிந்து - 4) துறை, தாழிசை, விருத்தம்
Q309ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
திருக்குறள் பற்றிய செய்திகளைப் பொருத்துக. அ) முதன்முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு - 1) மணக்குடவர் ஆ) முதன்முதலில் உரை எழுதியவர் - 2) குறிப்பறிதல் இ) இருமுறை வரும் ஒரே அதிகாரம் - 3) ஜி.யு. போப் ஈ) ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் - 4) 1812
Q319ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'சிந்தா மணி' என்பதில் சிந்தா என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q329ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
பொருத்துக. அ) குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - 1) இளங்கோவடிகள் ஆ) சனி நீராடு - 2) மாங்குடி மருதனார் இ) மாமழை போற்றுதும் - 3) ஆண்டாள் ஈ) விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது - 4) ஔவை
Q337ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
காயிதே மில்லத் ______ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
Q34
பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்ந்தெடு
Q359ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' - இதில் வந்துள்ள அளபெடை -
Q36
'அவனா?' என்னும் சொல்லில் அமைந்துள்ள வினா
Q377ஆம் வகுப்பு · கலைவண்ணம்
கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் ______.
Q38
'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?
Q39
கோடிட்ட இடங்களுக்குப் பொருத்தமான சொற்களை வரிசைப்படி தேர்ந்தெடு:
மரங்களை வளர்த்து ______ வளத்தைக் காப்போம்; ______ உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம்.
Q4010ஆம் வகுப்பு · விதை நெல்
மண்ணாசை கருதிப் பகைவர் நாட்டைக் கைப்பற்றப் போர் தொடுக்கச் செல்லும் அரசர் சூடுவது எது?
Q417ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
'கனவு' என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் ______.
Q42
'புலி' என்பதன் இளமைப் பெயர் எது?
Q43
'குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' – இத்தொடர் எவ்வகை வழுவமைதி?
Q448ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ______ தகுதி அறிந்து பேச வேண்டும்.
Q45
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு எது?
Q466ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
'இந்தியாவின் பறவை மனிதர்' சலீம் அலி தம் தன்வரலாற்று நூலுக்கு இட்ட பெயர் ______.
Q47
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: வெரசா
Q48
செயப்பாட்டுவினைத் தொடரைத் தேர்ந்தெடு.
Q499ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
'செப்புத்திருமேனிகளின் பொற்காலம்' என்று அழைக்கப்படும் காலம் எது?
Q506ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் ______.