TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 4

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q1
'பல்' என்னும் சொல்லின் முதல் எழுத்தைக் குறிலிலிருந்து நெடிலாக மாற்றினால் கிடைக்கும் சொல்
Q28ஆம் வகுப்பு · கல்வி கரையில
'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q39ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
Q4
ஒற்றுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q58ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
திரிகூட ராசப்பக் கவிராயர் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர்.
2. 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
3. இவர் தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் என்னும் ஊரில் பிறந்தவர்.
Q66ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
அப்துல் கலாமின் கருத்துப்படி, இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் ______.
Q79ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
'அறிவை மறந்த உணர்ச்சி' என்பதைக் கவிஞர் வைரமுத்து எதனோடு ஒப்பிடுகிறார்?
Q8
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு: ஒசரமா
Q9
Ticket (பேருந்தில் வாங்குவது) என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் எது?
Q10
மாவட்டக் கலைத் திருவிழா – நிகழ்ச்சி நிரல் (சனிக்கிழமை)
காலை 9.00 – தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை (முதன்மை அரங்கம்)
காலை 9.30 – பேச்சுப் போட்டி (அரங்கம் 1)
காலை 11.00 – கவிதை ஒப்பித்தல் போட்டி (அரங்கம் 2)
பகல் 12.30 – உணவு இடைவேளை
பிற்பகல் 1.30 – கிராமிய நடனப் போட்டி (திறந்தவெளி அரங்கம்)
மாலை 4.00 – பரிசளிப்பு விழா, நன்றியுரை (முதன்மை அரங்கம்)
குறிப்பு: போட்டியாளர்கள் தங்கள் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே உரிய அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் பள்ளியின் அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

கவிதை ஒப்பித்தல் போட்டியாளர் அரங்கிற்கு வந்து பெயரைப் பதிவு செய்ய வேண்டிய நேரம் எது?
Q118ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் 1920ஆம் ஆண்டு ______ சென்றார்.
Q12
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q13
லிப்ரேஆபீஸ் இம்ப்ரஸ் பாடத்தில் வரும் 'நிகழ்த்துதல்' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q148ஆம் வகுப்பு · கல்வி கரையில
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.
Q15
அயற்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக: விடம்
Q169ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
சேக்கிழாரைப் 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று பாராட்டியவர் யார்?
Q17
சுற்றறிக்கை
பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உடற்கல்வி ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சம் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்கலாம். விழா நாளன்று மாணவர்கள் வெள்ளை நிறச் சீருடையில் வர வேண்டும். மழை பெய்தால் விழா அடுத்த வாரம் இதே நாளுக்கு ஒத்திவைக்கப்படும். விழாவின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பெற்றோர் விழாவைக் காண அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
– தலைமையாசிரியர்

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் யாரிடம் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்?
Q186ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'தொன்மை' என்னும் சொல்லின் பொருள் ______.
Q198ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
பொருத்துக:
அ. ஓர்தல் - 1. அடங்கி இருத்தல்
ஆ. தெளிவு - 2. துன்பம்
இ. பிணி - 3. நல்லறிவு
ஈ. உவசமம் - 4. நற்காட்சி
Q20
Software என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q218ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆர். பிறந்த இடம் எது?
Q228ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர்' என்னும் செய்வினைத் தொடரின் செயப்பாட்டுவினை வடிவம் ______.
Q236ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
சியாட்டலின் கடிதம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள் என்கிறார்.
2. ஆறுகளில் ஓடும் நீர் எமது மூதாதையரின் குருதி என்கிறார்.
3. செவ்விந்தியர்கள் பூமியைத் தந்தையாகவும் வானத்தைத் தாயாகவும் கருதுவர் என்கிறார்.
Q249ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
'தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன' - இது எவ்வகைத் தொடர்?
Q259ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
'பெரியார் விதைத்த விதைகள்' என்னும் 'தெரியுமா?' பகுதியில் இடம்பெறாதது எது?
Q26
'இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?' – 'இடிக்கும் துணையார்' என்போர் யார்?
Q276ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
தாராபாரதி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
2. பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் உள்ளது.
3. இவரது இயற்பெயர் துரைராசு.
Q287ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வழங்கிய 'வேணுவனம்' என்னும் பெயரின் பொருள் ______.
Q29
எதிர்ச்சொல் தருக: உதித்த
Q308ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'காலம் உடன் வரும்' என்னும் சிறுகதையை எழுதியவர் ______.
Q318ஆம் வகுப்பு · குழலினிது யாழினிது
அரசரை அவரது ______ காப்பாற்றும்.
Q3210ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
'வீசுதென்றல்' என்பது எத்தகைய தொகை?
Q336ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
'நூலாடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q34
'நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.' – இத்தொடரில் அரைப்புள்ளி இடப்பட்டதற்குக் காரணம் யாது?
Q35
பொருத்துக:
(அ) Carcinogens – 1. மூலச் செல்
(ஆ) Stem cell – 2. அடிமையாதல்
(இ) Neurotransmitters – 3. புற்றுநோய்க் காரணி
(ஈ) Addiction – 4. நரம்புணர்வுக் கடத்திகள்
Q367ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
கவிஞர் சுரதா குறித்த கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இவரது இயற்பெயர் இராசகோபாலன்.
2. சுப்புரத்தின தாசன் என்பதன் சுருக்கமே சுரதா.
3. இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
Q376ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
மெய்யெழுத்துகள் பதினெட்டுடன் உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ______.
Q38
திரிகடுகம் எந்த நூல் தொகுப்பைச் சேர்ந்தது?
Q397ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
கீழ்க்காண்பவற்றுள் மரூஉச் சொல் அல்லாதது எது?
Q4010ஆம் வகுப்பு · அமுதஊற்று
'ஒருமொழி ஒருபொருள் எனவாம் தொடர்மொழி பலபொருள் எனபொது இருமையும் ஏற்பன' எனக் கூறும் நூல் எது?
Q419ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
ஹீராஸ் பாதிரியார் விளக்கியபடி 'தமிழ்' என்னும் சொல் 'திராவிடா' ஆக மாறிய சரியான வரிசை எது?
Q42
பொருத்துக:
அ. மை – 1. உயர்வு
ஆ. யா – 2. வறுமை
இ. சே – 3. அஞ்சனம்
ஈ. நோ – 4. அகலம்
Q439ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்னும் குறள்தொடர் இடம்பெறும் அதிகாரம் எது?
Q447ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச் ______ என்பது பொருள்.
Q45
'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கள்பண்பு இல்லா தவர்' – மக்கட்பண்பு இல்லாதவர் எதற்கு ஒப்பாவர்?
Q468ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
'ஆழிக்கு இணை' பாடல் எடுத்தாளப்பட்டுள்ள நூல் எது?
Q47
அதியமானுக்கும் யாருக்கும் இடையே நிகழவிருந்த போரை ஔவையார் தடுத்தார்?
Q487ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
வானில் ______ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
Q4910ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
வடக்கிலிருந்து வீசும் மிகக் குளிர்ச்சியான காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5010ஆம் வகுப்பு · நிலா முற்றம்
சித்திரை, வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
Q519ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
எழுத்தாளரான அண்ணாவை எவ்வாறு அழைத்தனர்?
Q52
கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
பறவைகள் வானில் ______.
Q53
புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை 'Extracts from purananooru & Purapporul venbamalai' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Q54
'அறத்தான் வருவதே இன்பம்' என்ற மேற்கோள் இடம்பெறும் திருக்குறள் அதிகாரம் எது?
Q559ஆம் வகுப்பு · வாழிய நிலனே
தவிர்தலின்றிக் காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது ______
Q566ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
காடு + ஆறு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q576ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
குறளை நிறைவு செய்க.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
______ உரியர் பிறர்க்கு
Q58
கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
குதிரைகள் வேகமாக ______.
Q596ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ______ கட்டுவர்.
Q607ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q61
'ஆ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q62
ஔவையாரின் கூற்றுப்படி மன்னனுக்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லை; கற்றோர்க்கு ______.
Q637ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பொருத்துக:
1. ஓட்டம் - அ) முதல்நிலைத் தொழிற்பெயர்
2. பிடி - ஆ) முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்
3. சூடு - இ) விகுதி பெற்ற தொழிற்பெயர்
Q64
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q656ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'பாதம்' கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு ______.
Q66
அணுக்கருப் பிளவு என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q679ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
திருப்பாவைப் பாடலின் சொல்லையும் பொருளையும் பொருத்துக. அ) ஆனைச்சாத்தன் - 1) கூந்தல் ஆ) அரவம் - 2) கைஅசைத்து இ) கைபேர்த்து - 3) ஓசை ஈ) குழல் - 4) கரிக்குருவி
Q689ஆம் வகுப்பு · வாழிய நிலனே
கூற்று - "கருத்துகள்", "பொருள்கள்" என வல்லினம் மிகாமல் எழுதுவதே தற்கால உரைநடை வழக்கு.
காரணம் - கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
Q699ஆம் வகுப்பு · வாழிய நிலனே
உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது என்னும் விதியில், விலக்காகக் குறிப்பிடப்படும் உரிச்சொற்கள் எவை?
Q70
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக:
Q716ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'நிலம் பொது' கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ள நூலும் அதன் ஆசிரியரும் ______.
Q726ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
விருந்தினரின் முகம் ______ வாடும்.
Q739ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
தனித்தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள்?
Q74
பொருத்துக:
(அ) மாரி அல்லது காரியம் இல்லை – 1. நாலடியார்
(ஆ) கிழமை பட வாழ் – 2. பழமொழி நானூறு
(இ) ஒன்றுறா முன்றிலோ இல் – 3. கொன்றை வேந்தன்
(ஈ) விச்சைமற்று அல்ல பிற – 4. ஆத்திசூடி
Q759ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
27.06.1970இல் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிய அமைப்பு எது?
Q768ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ______ கண்டு அஞ்சமாட்டார்கள்.
Q777ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
வெளிப்படை விடைகளுள் அடங்காதது எது?
Q78
நல்லவர் ஒருவருக்காகக் கிடைக்கும் நன்மை அவரைச் சார்ந்த பிறருக்கும் கிடைப்பதைக் குறிக்கும் பழமொழி எது?
Q7910ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
Q807ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க (குற்றியலுகர அடிப்படையில்).
Q818ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ______.
Q82
டி.கே.சி-க்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களுள் அல்லாதது எது?
Q8310ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
'நண்பா எழுது!' என்பது எவ்வகைத் தொடர்?
Q848ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ______.
Q856ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
மலை + எலாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q866ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
நிறைமதி தன் உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டு, பறவைகளுக்கும் அளித்தாள். இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறள் எது?
Q87
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
இலக்கிய மன்ற விழாவில் தலைமையாசிரியர் சிறப்பாக ______ ஆற்றினார்.
Q88
பசுவைப் பார்த்து 'என் அம்மை வந்தாள்' என்று கூறுவது எவ்வகை வழுவமைதி?
Q89
Residence Certificate என்பதன் சரியான தமிழாக்கம் எது?
Q908ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் ______.
Q918ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் ______ பயன்படுத்தினர்.
Q928ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q93
Antibiotic என்ற கலைச்சொல்லுக்குப் பாடநூல் தரும் தமிழ்ச் சொல் எது?
Q949ஆம் வகுப்பு · வாழிய நிலனே
தேமாங்கனி என்பது ______ ஆகும்.
Q956ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______.
Q966ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
தேசிக விநாயகனார் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
2. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
3. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
Q97
'சோ' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?
Q987ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
மலைப்பொழிவு என்னும் பாடப்பகுதி இடம்பெற்றுள்ள நூல் ______.
Q998ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
'குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்' - இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q10010ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

பகுதி ஆ · பொது அறிவியல்

Q1018ஆம் வகுப்பு · நீர்
1781ஆம் ஆண்டில் நீரை முதன்முதலில் தயாரித்த ஹென்றி கேவென்டிஷ் ஹைட்ரஜனை எவ்வாறு அழைத்தார்?
Henry Cavendish, who first prepared water in 1781, called hydrogen gas by which name?
Q1028ஆம் வகுப்பு · ஒளியியல்
பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் ________.
If the image and object distance is same, then the object is placed at
Q1038ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
காரத்தை நீரில் கரைக்கும்போது அது ________ அயனிகளைத் தருகிறது.
Base is a substance that gives _____ on dissolving in water.
Q1049ஆம் வகுப்பு · அளவீடு
அழுத்தம் = விசை / பரப்பளவு. அழுத்தத்தின் SI அலகு
Pressure is defined as force / area. Its SI unit is
Q1058ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
1970களில் தொடங்கப்பட்ட வனப் பாதுகாப்பு இயக்கமான 'சிப்கோ' என்ற சொல்லின் பொருள் என்ன?
The word 'Chipko', the name of a forest conservation movement started in the 1970s, means

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q1068ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
கூற்று (A): வேலை தேடி ஆண் தொழிலாளர்கள் இடம்பெயர்வதால் பூர்வீகப் பகுதியில் பிறரைச் சார்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
காரணம் (R): இவ்விடம்பெயர்வு பூர்வீகப் பகுதியில் தற்சார்பு உடையோரின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
Assertion (A): Migration of male workers in search of jobs increases the dependency ratio in the source regions.
Reason (R): Such migration decreases the independent population of the source regions.
Q1077ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
__________ குடியிருப்பானது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
__________ settlement comes up around a place of worship.
Q1089ஆம் வகுப்பு · வளிமண்டலம்
வெப்ப மண்டலச் சூறாவளிகளின் பெயர்களை அவை வழங்கும் பகுதிகளுடன் பொருத்துக:
1. டைஃபூன்கள் - A. பிலிப்பைன்ஸ்
2. ஹரிகேன்கள் - B. இந்தியப் பெருங்கடல்
3. பேக்யுஸ் - C. மேற்கு பசிபிக் பெருங்கடல்
4. சூறாவளிகள் - D. அட்லாண்டிக் பெருங்கடல்
Match the tropical cyclones with the regions where they are known by these names:
1. Typhoons - A. Philippines
2. Hurricanes - B. Indian Ocean
3. Baguios - C. Western Pacific Ocean
4. Cyclones - D. Atlantic Ocean
Q1098ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______
_______ is a ratio between the actual amount of water vapour and the maximum amount of water vapour the air can hold.
Q1108ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
சார்புத் துறை ________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Tertiary activity is divided into ________ types.

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q1117ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
மகாராஷ்டிராவில் பரவிய _______ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
The spread of the _______ movement in Maharashtra helped the Maratha people develop consciousness and oneness.
Q1127ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் யார்?
Who was the greatest ruler of the Sangama dynasty?
Q1136ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
மகாவீரர் இறந்த இடம் எது?
Where did Mahavira die?
Q1149ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
(ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
(iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.
(iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
Choose the correct answer:
(i) The period before the introduction of writing is called pre-history.
(ii) The pre-historic people developed language, made beautiful paintings and artefacts.
(iii) The pre-historic societies are treated as literate.
(iv) The pre-historic period is called ancient.
Q1156ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
What was the ratio of land revenue collected during Vedic Age?

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q1168ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
1857இல் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தைப் போன்று அமைக்கப்பட்டன?
The universities set up at Madras, Bombay and Calcutta in 1857 were modelled after the
Q1178ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் _______.
The main cause for the Second Carnatic War was _______.
Q118
மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அவர் மெக்காவில் பிறந்தார்.
2. 'குபார்-இ-காதிர்' அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்று.
3. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அவர் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
4. இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றம் (ICCR) கல்வி அமைச்சராக இருந்த அவரால் நிறுவப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Consider the following statements about Maulana Abul Kalam Azad:
1. He was born in Mecca.
2. Ghubar-i-Khatir is one of his best-known writings.
3. During the Quit India Movement of 1942 he was taken to the Yeravada prison.
4. The Indian Council for Cultural Relations was founded by him as Education Minister.
Which of the statements given above are correct?
Q1198ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
1813இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனத்தைப் புதுப்பிக்கும்போது, இலக்கியம், அறிவியலை மேம்படுத்த இங்கிலாந்து பாராளுமன்றம் ஒதுக்கிய நிதி எவ்வளவு?
While renewing the East India Company's Charter in 1813, the English Parliament set aside how much for the promotion of literature and sciences in India?
Q1208ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
சார்ஜென்ட் கல்விக்குழுவின் திட்டம் (1944) எந்த வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வியை முன்மொழிந்தது?
The Sargent Commission's Scheme (1944) proposed free and compulsory education for Indian children in the age group of

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q12110ஆம் வகுப்பு · மாநில அரசு
தமிழ்நாடு சட்ட மேலவையை நீக்கிய சட்டம் எந்த நாளன்று நடைமுறைக்கு வந்தது?
The Tamil Nadu Legislative Council was abolished by an Act that came into force on
Q1228ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
குடியுரிமை பெறும் வழிகளைப் பொருத்துக:
A. பிறப்பால் - 1. 1962இல் பாண்டிச்சேரி மக்களுக்குக் குடியுரிமை
B. வம்சாவளியால் - 2. எட்டாவது அட்டவணை மொழியில் அறிவு
C. இயல்புக் குடியுரிமை - 3. இந்தியப் பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறத்தல்
D. பிரதேசங்களை இணைத்தல் - 4. இந்தியாவில் பிறத்தல்
Match the following ways of acquiring citizenship with their descriptions:
A. By birth - 1. Citizenship (Pondicherry) Order, 1962
B. By descent - 2. Knowledge of a language in the Eighth Schedule
C. By naturalisation - 3. Born outside India to an Indian parent
D. By incorporation of territory - 4. Born in India
Q12310ஆம் வகுப்பு · மாநில அரசு
விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது?
The High Court of Madras was established by letters patent granted by Queen Victoria bearing which date?
Q12410ஆம் வகுப்பு · நடுவண் அரசு
மக்களவைக்கு அதிகபட்சமாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
What is the maximum number of members that can be elected to the Lok Sabha?
Q1258ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
நேர்மையான விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை ஆகியவை மனித உரிமைகளின் எந்த அடிப்படை மதிப்பைச் சார்ந்தவை?
The right to fair trial and punishment proportional to the crime are based on which value of human rights?
Q12610ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
எந்தக் குழுக்கள் / ஆணையங்கள் நடுவண்-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
Which of the following committees/commissions made recommendations about the Centre-State Relations?
1. Sarkaria Commission
2. Rajamannar Committee
3. M.N.Venkatachaliah Commission
Select the correct answer using the codes
Q12710ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
குடியுரிமை பெறுதல், இழத்தல் பற்றி விளக்கும் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
The Citizenship Act, which provides for the acquisition and loss of Indian citizenship, was passed in
Q1288ஆம் வகுப்பு · நீதித்துறை
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் _______ ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
The System of Public Interest Litigation has been introduced in India by
Q1298ஆம் வகுப்பு · நீதித்துறை
கோடிட்ட இடத்தை நிரப்புக: பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் _______ ன்படி நீதியை வழங்கின.
Fill in the blank: During ancient times, most of the Kings' courts dispensed justice according to _______.
Q1306ஆம் வகுப்பு · மக்களாட்சி
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ________
Who has the right to work in a direct Democracy?
Q1317ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
தேர்தலுக்கு முன்பான பரப்புரையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளும் திட்டங்களையும் கொள்கைகளையும் வேட்பாளர்கள் அறிவிப்பது ____ எனப்படும்.
During the campaign before an election, the public declaration of the programmes and policies a party will follow if voted to power is called the ____.
Q1328ஆம் வகுப்பு · நீதித்துறை
நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்கும் தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA) எந்த ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது?
NALSA, which provides free legal services to the weaker sections, was constituted under the Legal Services Authorities Act of
Q1339ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
3. இந்திய தேர்தல் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன.
Arrange the following in chronological order:
1. NOTA was first introduced in a General Election.
2. The Constitution of India came into force.
3. The Conduct of Elections Rules were framed.
Q134
சமச்சீர் பாடநூலில் இந்திய அரசியலமைப்பின் ஒற்றையாட்சிப் பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எது?
Which one of the following is listed in the Samacheer textbook as a unitary feature of the Indian Constitution?
Q13510ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
கீழ்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றிய சரியான தொடர் எது?
Which of the following sequences is right regarding the Preamble?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q13612ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
வருமான முறை வாய்ப்பாடு Y = w + r + i + \pi + (R - P) இல், '\(\pi\)' என்ற குறியீடு எதைக் குறிக்கிறது?
In the income method formula, Y = w + r + i + \pi + (R - P), what does the symbol '\(\pi\)' represent?
Q1377ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
________ வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொறுத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
________ is paid to the Government by the recipient of a gift depending on the value of the gift.
Q13810ஆம் வகுப்பு · அரசாங்கமும் வரிகளும்
₹50 கோடிக்குள் வருமானம் உள்ள இந்திய நிறுவனங்களுக்கான நிறுவன வரி விகிதம்
The corporate tax rate for Indian companies with income of less than Rs. 50 crore is
Q1398ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
ஒன்பது வகையான பொதுத்துறை நிறுவனங்களில், மெக்கான் நிறுவனம் (MECON) எந்த வகைக்கு எடுத்துக்காட்டு?
Among the nine categories of public sector enterprises, MECON Ltd. is an example of an enterprise that
Q1408ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
What was not the reason for the decline of Indian industries?
Q14112ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
பணம் என்பது பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது?
Money is
Q14210ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக இருந்தது
What was the early capital of the Portuguese in India?
Q1437ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
வரிகள் என்பவை ________ செலுத்தப்பட வேண்டும்.
Taxes are ________ payment.
Q14410ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
_____ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
_____ revolution was born in India paving way for self-sufficiency in food grain production.
Q14512ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
இந்திய அரசு முதன்முதலில் எந்த நிதியாண்டில் 'சுழிய வரவு செலவுத் திட்டத்தை' (Zero-Base-Budgeting) அறிமுகப்படுத்தியது?
In which financial year did the Government of India present Zero-Base-Budgeting (ZBB) for the first time?
Q14610ஆம் வகுப்பு · உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாள்
The WTO Agreement came into force from
Q14712ஆம் வகுப்பு · வங்கியியல்
நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Online Banking is also known as

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q1488ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
_______ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
_______ is the modified version of the Zamindari system.
Q149
தமிழ்நாட்டின் மொத்த சாகுபடியாளர்களில் சுமார் 78% பேர் குறு விவசாயிகள் (1 ஹெக்டேருக்கும் குறைவாகச் சாகுபடி செய்வோர்). மொத்த சாகுபடிப் பரப்பில் ஏறத்தாழ எத்தனை சதவீதத்தை அவர்கள் சாகுபடி செய்கின்றனர்?
Micro farmers (cultivating less than 1 hectare) form about 78% of all cultivators in Tamil Nadu. About what share of the cultivated area do they cultivate?
Q1509ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
தமிழ்நாட்டில் உள்ள 2,239 வாய்க்கால்கள் பாயும் மொத்தத் தூரம்
The 2,239 canals that run through Tamil Nadu cover a total length of
Q1519ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
தமிழ்நாட்டின் குறு விவசாயிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இவர்கள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்.
2. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் இவர்கள் 78% உள்ளனர்.
3. மொத்தச் சாகுபடி பரப்பளவில் 78% நிலத்தை இவர்கள் சாகுபடி செய்கின்றனர்.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements about micro farmers in Tamil Nadu:
1. They cultivate an area of less than 1 hectare.
2. They account for around 78% of the total cultivators.
3. They cultivate around 78% of the total cultivated area.
Which of the statements given above is/are correct?
Q152
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969இன் கீழ் தமிழ்நாட்டில் பிறப்பு, இறப்புகளுக்கான தலைமைப் பதிவாளர் யார்?
Under the Registration of Births and Deaths Act, 1969, who is the Chief Registrar of Births and Deaths in Tamil Nadu?
Q1539ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
தமிழ்நாட்டிற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ________ பருவ மழையாகும்.
The major source of water for Tamil Nadu is the ________ monsoon.
Q1548ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி குறைந்தபட்ச திருமண வயது எவ்வாறு திருத்தப்பட்டது?
Under the Hindu Marriage Act of 1955, the minimum marriageable age was amended to
Q1558ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
The first woman doctor in India was

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q1566ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
தமிழ்மொழி இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழமையானது என்றும், பிற மொழிகளின் செல்வாக்கின்றி சுதந்திரமாக எழுந்தது என்றும் கூறியவர் யார்?
Who said that Tamil is as old as Latin and arose as an entirely independent tradition?
Q157
வறுமையிலும் ஆசிரியரிடம் கற்க வேண்டும் என்றும், கற்றோரையே அரசனும் பின்பற்றுவான் என்றும் கூறும் புறநானூற்றுப் பாடலை (183) இயற்றிய சங்ககால மன்னர் யார்?
Purananuru poem 183, which urges everyone to learn from a teacher even in poverty and says a ruler follows the learned, was composed by the Sangam king
Q15810ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
1904இல் நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பு _______.
The secret society started by Nilakanta Brahmachari in 1904 was _______.
Q159
வடசொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களைத் தரும் அகராதியைத் தொகுத்த நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள்?
Neelambikai Ammaiyar, who compiled a dictionary giving pure Tamil equivalents for Sanskrit words, was the daughter of
Q160
பண்டைத் தமிழகத்தில் நடுகற்கள் எதற்காக நடப்பட்டன?
Hero stones (nadukal) of ancient Tamil Nadu were erected
Q161
தமிழ் பிராமி எழுத்தில் அமைந்த 'கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்' என்ற சங்க கால நடுகல் கல்வெட்டு 2006இல் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
The Sangam Age hero stone inscription 'Kudalur Akol pedu tiyan antavan kal', in Tamil-Brahmi script, was discovered in 2006 at
Q1627ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
இடங்களை அவை அமைந்துள்ள மாவட்டங்களுடன் பொருத்துக:
1. தியாகனூர்
2. திருநாட்டியட்டாங்குடி
3. கழுகுமலை
4. திருமலை
Match the sites with their districts:
1. Thiyaganur
2. Tirunattiyattankudi
3. Kazhugumalai
4. Tirumalai
Q1636ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
தனது இறுதிக் காலத்தைக் காஞ்சியில் கழித்த பௌத்தத் துறவி
The Buddhist monk who spent the last part of her life at Kanchi was
Q164
"திருமணம் செய்து கொடுப்பது" என்னும் சொற்கள் பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என்று மறுத்த பெரியார், அதற்கு மாற்றாகத் திருக்குறளிலிருந்து எடுத்த எந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டினார்?
Periyar objected to the phrase "giving in marriage" because it treats a woman as a thing. Which word, taken from the Thirukkural, did he want used instead?
Q165
சங்க காலத்து நகரம் புதைந்திருப்பது கண்டறியப்பட்ட கீழடி அகழாய்வுத் தளம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
The excavation site Keezhadi (Keeladi), where an ancient town of the Sangam Age was unearthed, is in which district?
Q16610ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1806 வேலூர் புரட்சியை விரைவாக ஒடுக்கியவர் யார்?
Who swiftly crushed the Vellore Revolt of 1806?
Q16710ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
கட்டபொம்மனைச் சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _______ என்பவரை அனுப்பிவைத்தார்.
Bannerman deputed _______ to convey his message asking Kattabomman to surrender.
Q168
அகிலத்திரட்டு அம்மானை என்னும் நூல் தென் தமிழகத்தின் எந்தச் சமய, சமூகச் சீர்திருத்த மரபுடன் தொடர்புடையது?
The text Akilathirattu Ammanai is associated with which religious and social reform tradition of southern Tamil Nadu?
Q16910ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்த பின்னர் திராவிடர் கழகம் எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு _______.
After the Justice Party merged with the Self-Respect Movement, it was rechristened as Dravidar Kazhagam in _______.
Q170
'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.'
- வேலைக் காட்டி 'கொடு' என்று வழிப்பறி செய்பவனுக்கு ஒப்பாகக் கூறப்படுபவன் யார்?
Kural: 'வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.'
What is compared to a robber standing with a spear and demanding 'give'?
Q171
கூற்று (A): திருக்குறள் 'உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது.
காரணம் (R): இது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
Assertion (A): Thirukkural is praised as 'Ulaga Podhumarai'.
Reason (R): Its ideas are framed so that they suit all the people of the world, at all times and in every way.
Q1726ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ______.
Pattini cult in Tamil Nadu was introduced by ______.
Q173
சைவத் திருமுறைகள் பன்னிரண்டு நூல்களைக் கொண்டவை. அவற்றுள் பன்னிரண்டாம் திருமுறை எது?
The Tirumurai, the Tamil Saivite sacred canon, consists of 12 books. Which work forms its 12th book?
Q174
தமிழ்நாட்டில் கிடைத்த ரோமானிய நாணயங்கள் எந்தப் பகுதியில் செறிந்து காணப்படுகின்றன?
Roman coins found in Tamil Nadu are concentrated in which region?
Q1757ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
ஆசீவகப் பிரிவின் தலைவர் யார்?
Who was the head of the Ajivika sect?

பகுதி இ · திறனறிவு

Q1767ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
இப்பாடத்தின் 'உங்களுக்குத் தெரியுமா' பகுதியின்படி நேர் மற்றும் எதிர் விகிதங்கள் பெரிதும் பயன்படுவது
According to the 'Do you know' box of this chapter, direct and inverse proportion are very useful in
Q1778ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _______ ஆகும்.
The longest chord of a circle is __________.
Q178
ஆரம் 3 cm உடைய ஓர் உலோகக் கோளம், ஆரம் 6 cm உடைய பகுதியளவு நீர் நிரம்பிய ஓர் உருளை வடிவப் பாத்திரத்தில் போடப்படுகிறது. நீர்மட்டம் எவ்வளவு உயரும்?
A metal sphere of radius 3 cm is dropped into a cylindrical vessel of radius 6 cm partly filled with water. By how much does the water level rise?
Q1799ஆம் வகுப்பு · அளவியல்
\( 10 \text{ செமீ} \times 6 \text{ செமீ} \times 5 \text{ செமீ} \) அளவுள்ள ஒரு கனசெவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு
The total surface area of a cuboid with dimension \( 10 \text{ cm} \times 6 \text{ cm} \times 5 \text{ cm} \) is
Q1806ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
ஒரு செவ்வக வடிவத் தாளின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 செ.மீ மற்றும் 12 செ.மீ. தாளின் ஒரு மூலையிலிருந்து ஒரு செவ்வக வடிவத் துண்டு வெட்டப்படுகிறது. மீதியுள்ள தாள் பற்றிய கருத்தில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
The length and breadth of a rectangular sheet of a paper are 15 cm and 12 cm respectively. A rectangular piece is cut from one of its corners. Which of the following statement is correct for the remaining sheet?
Q181
குழாய்கள் A, B ஒரு தொட்டியை முறையே 12 நிமிடங்கள், 15 நிமிடங்களில் நிரப்பும்; குழாய் C அதை 20 நிமிடங்களில் காலி செய்யும். மூன்று குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால், காலியான தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
Pipes A and B can fill a cistern in 12 minutes and 15 minutes respectively, and pipe C can empty it in 20 minutes. If all three pipes are opened together, in how many minutes will the empty cistern be filled?
Q1827ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
\( 28\frac{1}{3} \)% ஐப் பின்னமாக எழுதுக.
Write \( 28\frac{1}{3} \)% as a fraction.
Q183
விடுபட்ட எண்ணைக் காண்க: ? + 237 = 512 − 89
Find the missing number: ? + 237 = 512 − 89
Q1849ஆம் வகுப்பு · அளவியல்
\( 5 \text{ மீ} \times 3 \text{ மீ} \times 2 \text{ மீ} \) அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, \( 50 \text{ செமீ} \times 30 \text{ செமீ} \times 20 \text{ செமீ} \) அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?
The number of bricks each measuring \( 50 \text{ cm} \times 30 \text{ cm} \times 20 \text{ cm} \) that will be required to build a wall whose dimensions are \( 5 \text{ m} \times 3 \text{ m} \times 2 \text{ m} \) is
Q185
₹ 2.50 இற்கும் 75 பைசாவிற்கும் உள்ள விகிதத்தின் எளிய வடிவம்
The ratio of ₹ 2.50 to 75 paise in its simplest form is
Q1866ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
1 லி இக்கும் 50 மி.லி இக்கும் உள்ள விகிதம் __________.
The ratio of 1 l to 50 ml is __________.
Q1879ஆம் வகுப்பு · அளவியல்
\( a \), \( b \) மற்றும் \( c \) என்பன ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் எனில், ஹெரான் சூத்திரத்தில் பயன்படும் அரைச் சுற்றளவு \( s \) என்பது
If \( a \), \( b \) and \( c \) are the sides of a triangle, its semi-perimeter \( s \) used in Heron's formula is
Q188
\( \sqrt{50 + \sqrt{196}} \) இன் மதிப்பைக் காண்க.
Find the value of \( \sqrt{50 + \sqrt{196}} \).
Q189
₹ 10,000 க்கு ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் தொகையைக் காண்க.
Find the amount on ₹ 10,000 at 10% per annum compound interest for 2 years.
Q190
ஒரு சக்கரத்தின் விட்டம் 70 செ.மீ. அது 1.1 கி.மீ தொலைவைக் கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்? (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
The diameter of a wheel is 70 cm. How many revolutions will it make to cover 1.1 km? (Take \( \pi = \frac{22}{7} \))

பகுதி இ · காரணவியல்

Q191
BD : GI :: KM : ?
Q192
தொடரில் அடுத்து வரும் உறுப்பைக் காண்க: AZ, BY, CX, DW, ?
Find the next term in the series: AZ, BY, CX, DW, ?
Q193
பொருந்தாததைக் கண்டறிக: மாம்பழம், ஆப்பிள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம்
Find the odd one out: Mango, Apple, Potato, Banana
Q194
கீழே உள்ள வரிசையை ஆராய்ந்து வினாவுக்கு விடையளிக்க.
M 4 # K 7 R @ 2 B 9 E % 5 T 3 * P A 6 = D 8
இந்த வரிசையில், உடனடியாக அடுத்து ஓர் எண் வரும் எழுத்துகள் எத்தனை?
Study the following arrangement and answer the question.
M 4 # K 7 R @ 2 B 9 E % 5 T 3 * P A 6 = D 8
How many letters in the arrangement are immediately followed by a number?
Q195
அருண் வடக்கு நோக்கி 5 கி.மீ. நடந்து, வலப்புறம் திரும்பி 3 கி.மீ. நடக்கிறார். மீண்டும் வலப்புறம் திரும்பி 5 கி.மீ. நடக்கிறார். இப்போது அவர் தொடக்கப் புள்ளியிலிருந்து எவ்வளவு தூரத்தில், எந்தத் திசையில் இருக்கிறார்?
Arun walks 5 km towards North, turns right and walks 3 km, then turns right again and walks 5 km. How far and in which direction is he now from his starting point?
Q196
ஒரு குறியீட்டு மொழியில் 'பெரிய சிவப்பு பந்து' என்பது 'ta na ko' எனவும், 'சிவப்பு ஆப்பிள்' என்பது 'ko mi' எனவும், 'பெரிய இனிப்பு ஆப்பிள்' என்பது 'mi na su' எனவும் எழுதப்படுகிறது. 'பந்து' என்பதற்கான குறியீடு என்ன?
In a code language, 'big red ball' is written as 'ta na ko', 'red apple' is written as 'ko mi' and 'big sweet apple' is written as 'mi na su'. What is the code for 'ball'?
Q197
கீழே உள்ள கட்டத்தில் விடுபட்ட எண்ணைக் காண்க (ஒரு வரிக்கு ஒரு வரிசை).
3, 4, 12
5, 6, 30
7, 8, ?
Find the missing number in the grid below (one row per line).
3, 4, 12
5, 6, 30
7, 8, ?
Q198
ஒரு கனசதுரத்தின் மேல், அடி முகங்களில் சிவப்பு, நான்கு பக்க முகங்களில் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது. அது 64 சம சிறிய கனசதுரங்களாக (4 × 4 × 4) வெட்டப்படுகிறது. குறைந்தது ஒரு சிவப்பு முகமும் ஒரு பச்சை முகமும் உள்ள சிறிய கனசதுரங்கள் எத்தனை?
A cube has its top and bottom faces painted Red and its four side faces painted Green. It is cut into 64 equal smaller cubes (4 × 4 × 4). How many small cubes have at least one Red face and at least one Green face?
Q199
ஒவ்வொரு தொகுதியிலும் அடைப்புக்குள் உள்ள எண், வெளியே உள்ள இரண்டு எண்களிலிருந்து ஒரே முறையில் பெறப்படுகிறது: 12 (8) 4, 20 (13) 6, 18 (?) 10. விடுபட்ட எண்ணைக் காண்க.
In each group, the number in brackets is formed from the two outer numbers in the same way: 12 (8) 4, 20 (13) 6, 18 (?) 10. Find the missing number.
Q200
ஒரு சதுரக் காகிதம் அதன் செங்குத்து நடுக்கோட்டில், இடப்பாதி வலப்பாதியின் மேல் படியுமாறு மடிக்கப்படுகிறது. பின்னர் கிடைமட்ட நடுக்கோட்டில், மேல்பாதி கீழ்ப்பாதியின் மேல் படியுமாறு மடிக்கப்படுகிறது. மடிக்கப்பட்ட காகிதத்தின் கீழ்-வலது மூலைக்கு அருகில் ஒரு துளை இடப்படுகிறது. பிரித்தால் துளைகள் எங்கே இருக்கும்?
A square sheet is folded along its vertical middle line so that the left half lies on the right half. It is then folded along its horizontal middle line so that the top half lies on the bottom half. A hole is punched near the bottom-right corner of the folded sheet. Where will the holes be when the sheet is unfolded?