TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பொது அறிவு 7 ஜூலை 2012: விடையுடன் கூடிய வினாக்கள்

100 வினாக்கள் 300 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள் வினாத்தாள் குறியீடு CCSE-IV
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

7 ஜூலை 2012 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பொது அறிவு பொதுத் தேர்வின் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.

இந்த ஆண்டுக்கு TNPSC இறுதி விடைக்குறிப்பு கிடைக்கவில்லை. விடைகள் வினாத்தொகுப்பில் குறிக்கப்பட்ட TNPSC தற்காலிக விடைக்குறிப்பின்படி உள்ளன.

விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்

ஆன்லைன் தேர்வு எழுது →
Q1
கால வரிசைப்படி எழுதுக :
I. Dr. A. P. J. அப்துல் கலாம்
II. Dr. சங்கர்தயால் சர்மா
III. K. R. நாராயணன்
IV. P. வெங்கடராமன்
இவற்றுள் :
  • A. IV, II, III மற்றும் Iசரி
  • B. III, I, II மற்றும் IV
  • C. I, III, IV மற்றும் II
  • D. II, IV, I மற்றும் III.
விளக்கம். குடியரசுத் தலைவர்களாக வெங்கடராமன் (1987-92), சங்கர் தயாள் சர்மா (1992-97), கே. ஆர். நாராயணன் (1997-2002), அப்துல் கலாம் (2002-07) பதவி வகித்தனர். எனவே வரிசை IV, II, III, I.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q2
கீழ்க்கண்டவற்றுள் 'தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி' என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது ?
  • A. டிட்கோ
  • B. சிப்காட்
  • C. டிக்
  • D. ஐடிசி.சரி
விளக்கம். டிட்கோ, சிப்காட், டிக் ஆகியவை தொழில் வளர்ச்சிக்கும் தொழில் நிதிக்கும் உரிய தமிழ்நாடு அரசு நிறுவனங்கள். ஐடிசி ஒரு தனியார் நிறுவனம்.
பாடம்: தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
Q3
பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?
  • A. சென்னை பெட்ரோலியம் கம்பெனி
  • B. மங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்
  • C. இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்
  • D. ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்.சரி
விளக்கம். ரிலையன்ஸ் பெட்ரோலியம் தனியார் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது. சென்னை பெட்ரோலியம், மங்களூர் சுத்திகரிப்பு ஆகியவை பொதுத்துறை நிறுவனங்கள்.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q4
கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ?
I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி.
இவற்றுள் :
  • A. I மட்டும்
  • B. II மட்டும்
  • C. I மற்றும் IIசரி
  • D. I ம் இல்லை II ம் இல்லை.
விளக்கம். பிரதமரின் தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி இரண்டுமே பிரதமர் தலைமையில் பிரதமர் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q5
சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
  • A. மனிதன்
  • B. பறவைகள்
  • C. மண்புழு
  • D. கரப்பான் பூச்சி.சரி
விளக்கம். கரப்பான் பூச்சியின் இரத்தத்தில் (ஹீமோலிம்ஃப்) சுவாச நிறமி இல்லை, அதனால் அது நிறமற்றது; பூச்சிகள் மூச்சுக் குழல்கள் வழியே ஆக்சிஜனைப் பெறுகின்றன. மண்புழுவின் பிளாஸ்மாவில் ஹீமோகுளோபின் உண்டு.
பாடம்: பொது அறிவியல்
Q6
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I ( ஆறுகள் ) – பட்டியல் II ( தோன்றும் இடம் )
(a) மகாநதி – 1. நாசிக் குன்றுகள்
(b) பெரியார் – 2. மகாபலீஸ்வரர் மலை
(c) கோதாவரி – 3. அமர்கண்டாக்
(d) கிருஷ்ணா – 4. கார்டமன் மலை.
  • A. (a)-3, (b)-4, (c)-1, (d)-2சரி
  • B. (a)-2, (b)-3, (c)-1, (d)-4
  • C. (a)-4, (b)-1, (c)-3, (d)-2
  • D. (a)-1, (b)-2, (c)-4, (d)-3
விளக்கம். கோதாவரி நாசிக் குன்றுகளில் உள்ள திரியம்பகத்திலும், கிருஷ்ணா மகாபலேஸ்வரிலும், பெரியாறு ஏலமலையிலும் (கார்டமன் மலை) தோன்றுகின்றன. மீதமுள்ள மகாநதி அமர்கண்டாக் பகுதியுடன் பொருந்துகிறது; குறியீடு 3, 4, 1, 2.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q7
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I – பட்டியல் II
(a) காலரா – 1. பூஞ்சை
(b) ஆப்பிரிக்க தூக்க வியாதி – 2. வைரஸ்
(c) மார்புச் சளி – 3. பாக்டீரியா
(d) பொடுகு – 4. ப்ரோட்டோசோவா.
  • A. (a)-3, (b)-4, (c)-2, (d)-1சரி
  • B. (a)-4, (b)-2, (c)-1, (d)-3
  • C. (a)-2, (b)-1, (c)-3, (d)-4
  • D. (a)-1, (b)-3, (c)-4, (d)-2
விளக்கம். காலரா பாக்டீரியாவாலும், ஆப்பிரிக்க தூக்க வியாதி புரோட்டோசோவாவாலும் (டிரிப்பனோசோமா), சளி வைரஸாலும், பொடுகு பூஞ்சையாலும் ஏற்படுகின்றன.
பாடம்: பொது அறிவியல்
Q8
தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?
  • A. கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்
  • B. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலிசரி
  • C. நெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
  • D. கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி.
விளக்கம். ஆரல்வாய்மொழி கணவாய் அருகே உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் வலுவான பருவக்காற்று வீசுவதால் அங்கு காற்றாலைகள் அதிகம்.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q9
சந்திராயன் I. உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?
  • A. ISRO
  • B. BARC
  • C. NASA
  • D. ONGC.சரி
விளக்கம். சந்திரயான்-1 (2008) இஸ்ரோவின் திட்டம்; நாசா போன்ற கூட்டாளிகளின் கருவிகளும் அதில் இடம்பெற்றன. ONGC எண்ணெய், எரிவாயு நிறுவனம்; அதற்கு இத்திட்டத்தில் பங்கு இல்லை.
பாடம்: பொது அறிவியல்
Q10
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும்.
காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
  • A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்சரி
  • B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • C. (A) சரி, ஆனால் (R) தவறு
  • D. (A) தவறு, ஆனால் (R) சரி.
விளக்கம். சனிக்கோளின் சராசரி அடர்த்தி (சுமார் 0.69 g/cm³) நீரின் அடர்த்தியை விடக் குறைவு; அதாவது ஒப்படர்த்தி ஒன்றை விடக் குறைவு. அதனால்தான் அது நீரில் மிதக்கும்; எனவே R, A-க்குச் சரியான விளக்கம்.
பாடம்: பொது அறிவியல்
Q11
வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
  • A. 0·2 ஆம்பியர்சரி
  • B. 0·5 ஆம்பியர்
  • C. 1 ஆம்பியர்
  • D. 5·75 ஆம்பியர்.
விளக்கம். மின்னோட்டம் = திறன் ÷ மின்னழுத்தம். வீட்டு மின்னழுத்தம் சுமார் 220-230 V என்பதால் 40 ÷ 220 ≈ 0·18 A, அதாவது சுமார் 0·2 ஆம்பியர்.
பாடம்: பொது அறிவியல்
Q12
இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ?
I. பெங்களூர்
II. ஸ்ரீ ஹரிக்கோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்.
இவற்றுள் :
  • A. III மட்டும்
  • B. I மட்டும்
  • C. IV மட்டும்சரி
  • D. II மட்டும்.
விளக்கம். தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் (TERLS) திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் உள்ளது; இங்கிருந்துதான் 1963-ல் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவப்பட்டது.
பாடம்: பொது அறிவியல்
Q13
கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?
  • A. வருமான வரி
  • B. விற்பனை வரிசரி
  • C. வெகுமதி வரி
  • D. சொத்து வரி.
விளக்கம். விற்பனை வரியை விற்பவர் செலுத்தினாலும் அதன் சுமை வாங்குபவர் மீது மாற்றப்படுவதால் அது மறைமுக வரி. வருமான வரி, வெகுமதி வரி, சொத்து வரி ஆகியவை நேர்முக வரிகள்.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q14
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I – பட்டியல் II
(a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் – 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
(b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் – 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
(c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் – 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
(d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் – 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்.
  • A. (a)-4, (b)-2, (c)-1, (d)-3
  • B. (a)-1, (b)-3, (c)-2, (d)-4
  • C. (a)-3, (b)-1, (c)-4, (d)-2சரி
  • D. (a)-3, (b)-1, (c)-2, (d)-4.
விளக்கம். தொழில் வகைப்பாட்டில் தங்கக் கழுத்துப்பட்டையினர் ஐந்தாம் நிலை (உயர் முடிவெடுக்கும்) பணியிலும், வெள்ளைக் கழுத்துப்பட்டையினர் நான்காம் நிலை (அறிவுசார்) பணியிலும், சிவப்புக் கழுத்துப்பட்டையினர் அடிப்படைத் தொழிலிலும், நீலக் கழுத்துப்பட்டையினர் இரண்டாம் நிலை (உற்பத்தி) தொழிலிலும் ஈடுபடுகின்றனர்.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q15
இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
  • A. லிட்டன் பிரபு
  • B. கர்சன் பிரபுசரி
  • C. கானிங் பிரபு
  • D. ரிப்பன் பிரபு.
விளக்கம். பீகாரின் பூசாவில் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் 1905-ல் கர்சன் பிரபு அரசப் பிரதிநிதியாக இருந்தபோது தொடங்கப்பட்டது.
பாடம்: இந்திய வரலாறும் பண்பாடும்
Q16
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
  • A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்லசரி
  • B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  • C. (A) சரி, ஆனால் (R) தவறு
  • D. (A) தவறு, ஆனால் (R) சரி.
விளக்கம். இரு கூற்றுகளும் சரி. ஆனால் தீவிரவாதம் எழுந்தது பிரிவினைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பால் (சுதேசி இயக்கம்); கர்சனின் மறைமுக நோக்கமே அதற்கு விளக்கம் அல்ல. எனவே R, A-க்கு சரியான விளக்கமல்ல.
பாடம்: இந்திய தேசிய இயக்கம்
Q17
எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
  • A. வருமான வரிசரி
  • B. விற்பனை வரி
  • C. மதிப்புக்கூட்டுவரி
  • D. சேவைக்கட்டணம் ( வரி ).
விளக்கம். வருமான வரி நேர்முக வரி; அதைச் செலுத்துபவரே அதன் சுமையையும் ஏற்கிறார். விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி, சேவை வரி ஆகியவற்றின் சுமை நுகர்வோர் மீது மாற்றப்படுகிறது.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q18
கால வரிசைப்படி எழுதுக :
I. சாம வேதம்
II. ரிக் வேதம்
III. யஜூர் வேதம்
IV. அதர்வண வேதம்.
இவற்றுள் :
  • A. I, III, II மற்றும் IV
  • B. III, IV, I மற்றும் II
  • C. IV, I, II மற்றும் III
  • D. II, III, I மற்றும் IV.சரி
விளக்கம். நான்கு வேதங்களில் ரிக் வேதம் மிகப் பழமையானது; அதர்வண வேதம் கடைசியானது. கொடுக்கப்பட்டவற்றில் ரிக் வேதத்தில் தொடங்கி அதர்வணத்தில் முடிவது D மட்டுமே (ரிக், யஜூர், சாம, அதர்வணம்).
பாடம்: இந்திய வரலாறும் பண்பாடும்
Q19
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I – பட்டியல் II
(a) முதல் ஐந்தாண்டு திட்டம் – 1. தன்னிறைவு பெறுதல்
(b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் – 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
(c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் – 3. வேளாண்மை வளர்ச்சி
(d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் – 4. கனரகத் தொழில் வளர்ச்சி.
  • A. (a)-2, (b)-4, (c)-1, (d)-3
  • B. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
  • C. (a)-3, (b)-4, (c)-2, (d)-1
  • D. (a)-3, (b)-4, (c)-1, (d)-2.சரி
விளக்கம். முதல் திட்டம் வேளாண்மைக்கும், இரண்டாம் திட்டம் (மகலனோபிஸ் மாதிரி) கனரகத் தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்தன. மூன்றாம் திட்டம் தன்னிறைவையும், நான்காம் திட்டம் வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டன.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q20
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I – பட்டியல் II
(a) எச். ஜே. பாபா – 1. அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம்
(b) எஸ். எஸ். பட்நாகர் – 2. அணுசக்தி துறை
(c) டி. எஸ். கோத்தாரி – 3. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
(d) விக்ரம் சாராபாய் – 4. பாதுகாப்பு அறிவியல் நிறுவனம்.
  • A. (a)-2, (b)-1, (c)-4, (d)-3சரி
  • B. (a)-2, (b)-4, (c)-1, (d)-3
  • C. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
  • D. (a)-3, (b)-2, (c)-4, (d)-1.
விளக்கம். ஹோமி ஜே. பாபா அணுசக்தித் துறையையும், எஸ். எஸ். பட்நாகர் அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தையும் (CSIR) உருவாக்கினர். டி. எஸ். கோத்தாரி பாதுகாப்பு அறிவியல் ஆலோசகராகவும், விக்ரம் சாராபாய் இஸ்ரோவின் நிறுவனராகவும் இருந்தனர்.
பாடம்: பொது அறிவியல்
Q21
கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :
I. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்.
இவற்றுள் :
  • A. II, III, I மற்றும் IV
  • B. IV, II, I மற்றும் IIIசரி
  • C. I, III, II மற்றும் IV
  • D. III, I, IV மற்றும் II.
விளக்கம். முதலில் பழைய கற்காலம், அடுத்து இடைக் கற்காலம், பிறகு புதிய கற்காலம், இறுதியில் செம்பும் கல்லும் பயன்பட்ட செப்புக் காலம்: IV, II, I, III.
பாடம்: இந்திய வரலாறும் பண்பாடும்
Q22
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/எவை சரி :
  • A. I மட்டும்
  • B. II மட்டும்
  • C. I மற்றும் IIசரி
  • D. I ம் இல்லை II ம் இல்லை.
விளக்கம். அணுசக்தி ஆணையம் 1948-ல் ஹோமி ஜே. பாபா தலைமையில் அமைக்கப்பட்டது; இந்தியாவின் முதல் ஆய்வு அணு உலை 'அப்சரா' 1956-ல் டிராம்பேயில் இயங்கத் தொடங்கியது. இரண்டு கூற்றுகளும் சரி.
பாடம்: பொது அறிவியல்
Q23
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I – பட்டியல் II
(a) நீதிக்கட்சி – 1. பெரியார் ஈ. வே. ராமசாமி
(b) தேவதாசி முறை – 2. டாக்டர் எஸ். தருமாம்பாள்
(c) வைக்கம் வீரர் – 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
(d) வீரத்தமிழன்னை – 4. தியகராய செட்டியார்.
  • A. (a)-4, (b)-3, (c)-1, (d)-2சரி
  • B. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
  • C. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  • D. (a)-4, (b)-2, (c)-1, (d)-3.
விளக்கம். தியாகராய செட்டியார் நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்; முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்புக்குப் போராடினார்; வைக்கம் போராட்டத்தால் பெரியார் 'வைக்கம் வீரர்' எனப்பட்டார்; டாக்டர் எஸ். தருமாம்பாள் 'வீரத்தமிழன்னை' எனப் போற்றப்பட்டார்.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q24
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
  • A. போன்ஸ்லே — நாக்பூர்
  • B. ஹோல்கார் — இந்தோர்
  • C. பேஷ்வா — டில்லிசரி
  • D. சிந்தியா — குவாலியர்.
விளக்கம். மராட்டியக் கூட்டமைப்பின் தலைவர்களான பேஷ்வாக்கள் பூனாவிலிருந்து ஆட்சி செய்தனர், டில்லியிலிருந்து அல்ல. போன்ஸ்லே நாக்பூர், ஹோல்கார் இந்தோர், சிந்தியா குவாலியர் ஆகியவை சரியான இணைகள்.
பாடம்: இந்திய வரலாறும் பண்பாடும்
Q25
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
  • A. சுயராஜ்யக் கட்சி — C. R. தாஸ்
  • B. பார்வர்டு பிளாக் — சுபாஷ் சந்திரபோஸ்
  • C. முஸ்லீம் லீக் கட்சி — நவாப் சலிமுல்லாகான்.
  • D. நீதிக்கட்சி — பெரியார் ஈ.வே.ரா.சரி
விளக்கம். நீதிக்கட்சியை 1916-ல் டாக்டர் டி. எம். நாயர், பி. தியாகராய செட்டியார் ஆகியோர் தொடங்கினர்; பெரியார் பின்னரே அதன் தலைவரானார். சுயராஜ்யக் கட்சி சி. ஆர். தாஸ், பார்வர்டு பிளாக் போஸ், முஸ்லீம் லீக் நவாப் சலிமுல்லா ஆகியோருடன் சரியாகப் பொருந்துகின்றன.
பாடம்: இந்திய தேசிய இயக்கம்
Q26
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
  • A. டெல்லி தர்பார் — S. N. பானர்ஜி
  • B. அபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்சரி
  • C. இந்திய சங்கம் — தாதாபாய் நௌரோஜி
  • D. இந்திய பணியாளர் சங்கம் — W. C. பானர்ஜி
விளக்கம். அபிநவ பாரத் என்ற புரட்சி அமைப்பை வி. டி. சவார்க்கரும் அவரது சகோதரர் கணேஷ் சவார்க்கரும் தோற்றுவித்தனர். இந்திய சங்கத்தைச் சுரேந்திரநாத் பானர்ஜியும், இந்திய பணியாளர் சங்கத்தைக் கோபால கிருஷ்ண கோகலேவும் தொடங்கினர்.
பாடம்: இந்திய தேசிய இயக்கம்
Q27
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
  • A. புதிய இராணுவ விதிமுறைகள் — வேலூர் கலகம்
  • B. சர் ஜான் கிரடாக் — படைத் தளபதி
  • C. வில்லியம் பெண்டிங் பிரபு — சென்னை ஆளுநர்
  • D. 4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது — கலோனல் போர்ப்ஸ்சரி
விளக்கம். 1806 வேலூர் கலகத்துக்குப் படைத்தளபதி சர் ஜான் கிரடாக் கொண்டுவந்த புதிய இராணுவ விதிமுறைகளே காரணம்; அப்போது வில்லியம் பெண்டிங் சென்னை ஆளுநர். கலகக்காரர்களால் கொல்லப்பட்ட தளபதி கர்னல் ஃபேன்கோர்ட், கர்னல் போர்ப்ஸ் அல்ல. எனவே D தவறான இணை.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q28
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) அஸ்ஸாம் – 1. பொன்னம்
(b) ஒரிசா – 2. மாசன்
(c) ஆந்திரபிரதேசம் – 3. ஜூம்
(d) கேரளா – 4. பொடு
  • A. (a)-3, (b)-2, (c)-1, (d)-4
  • B. (a)-4, (b)-3, (c)-1, (d)-2
  • C. (a)-3, (b)-4, (c)-2, (d)-1சரி
  • D. (a)-2, (b)-1, (c)-4, (d)-3
விளக்கம். இவை இடம்பெயரும் வேளாண்மையின் வட்டாரப் பெயர்கள். அஸ்ஸாமில் ஜூம் என்றும் கேரளாவில் பொன்னம் என்றும் அழைக்கப்படுகிறது; விடை ஒரிசாவைப் பொடுவுடனும் ஆந்திரப் பிரதேசத்தை மாசனுடனும் இணைக்கிறது.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q29
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
( கணினி தலைமுறைகள் )
(a) தற்போதைய தலைமுறை – 1. வால்வுகள்
(b) முதலாவது – 2. ஒருங்கிணைந்த மின்சுற்றை
(c) இரண்டாவது – 3. ஐந்தாம் தலைமுறை
(d) மூன்றாவது – 4. டிரான்சிஸ்டர்
  • A. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  • B. (a)-4, (b)-2, (c)-1, (d)-3
  • C. (a)-3, (b)-1, (c)-4, (d)-2சரி
  • D. (a)-1, (b)-4, (c)-3, (d)-2
விளக்கம். முதல் தலைமுறைக் கணினிகள் வால்வுகளையும், இரண்டாம் தலைமுறை டிரான்சிஸ்டர்களையும், மூன்றாம் தலைமுறை ஒருங்கிணைந்த மின்சுற்றுகளையும் பயன்படுத்தின. தற்போதைய கணினிகள் ஐந்தாம் தலைமுறை எனப்படுகின்றன.
பாடம்: பொது அறிவியல்
Q30
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?
I. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
  • A. I மட்டும்சரி
  • B. II மட்டும்
  • C. III மட்டும்
  • D. IV மட்டும்
விளக்கம். அறுவடைக்குப் பின் மீதமுள்ள அடிக்கட்டையிலிருந்து பயிரை மீண்டும் வளரவிடுவது கட்டைப்பயிர் (ரேட்டூன்) முறை. இது கரும்புச் சாகுபடியில் வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q31
பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) தார் – 1. ஆப்பிரிக்கா
(b) அடகாமா – 2. சீனா
(c) சாகேல் – 3. சிலி
(d) கோபி – 4. இந்தியா
  • A. (a)-1, (b)-3, (c)-4, (d)-2
  • B. (a)-2, (b)-1, (c)-3, (d)-4
  • C. (a)-4, (b)-3, (c)-1, (d)-2சரி
  • D. (a)-3, (b)-2, (c)-1, (d)-4
விளக்கம். தார் பாலைவனம் இந்தியாவிலும், அடகாமா சிலியிலும், சாகேல் ஆப்பிரிக்காவிலும் (சஹாராவுக்குத் தெற்கே), கோபி சீனா–மங்கோலியாவிலும் உள்ளன.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q32
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது.
இவற்றுள் எது / எவை சரி :
  • A. I மட்டும்
  • B. I மற்றும் IIசரி
  • C. II மற்றும் III
  • D. I, II மற்றும் III
விளக்கம். சூரியனுக்கு அருகிலுள்ள புதன் தன் பாதையில் மிக வேகமாகச் சுற்றுகிறது; செவ்வாய் சூரியனைச் சுற்ற சுமார் 687 நாட்கள் ஆகின்றன. சனி சூரியனிடமிருந்து ஆறாவது கோள் (ஐந்தாவது வியாழன்), எனவே I, II மட்டுமே சரி.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q33
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் I ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) வேலூர் – 1. கொல்லிமலை
(b) நாமக்கல் – 2. கல்வராயன் மலை
(c) விழுப்புரம் – 3. செஞ்சி மலை
(d) திருவண்ணாமலை – 4. ஏலகிரி மலை
  • A. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  • B. (a)-3, (b)-2, (c)-1, (d)-4
  • C. (a)-4, (b)-1, (c)-2, (d)-3சரி
  • D. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
விளக்கம். ஏலகிரி மலை வேலூர் மாவட்டத்திலும் கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளன. விடை விழுப்புரத்தைக் கல்வராயன் மலையுடனும் திருவண்ணாமலையைச் செஞ்சி மலையுடனும் இணைக்கிறது.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q34
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
  • A. I மட்டும்
  • B. II மட்டும்சரி
  • C. I மற்றும் II
  • D. I ம் இல்லை II ம் இல்லை
விளக்கம். பின்னடையும் (வடகிழக்கு) பருவக்காற்று புவிச் சுழற்சியால் திசை மாறி வடகிழக்கிலிருந்து வீசுகிறது; இது அக்டோபர்–டிசம்பரில் தமிழ்நாட்டுக்கு மழை தருகிறது. எனவே II மட்டுமே சரி.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q35
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி ?
  • A. I மட்டும்
  • B. II மட்டும்
  • C. I மற்றும் IIசரி
  • D. I ம் இல்லை II ம் இல்லை
விளக்கம். இமாச்சல் (சிறிய இமயம்) தொடர், இமாத்திரி (பெரிய இமயம்) தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையே அமைந்துள்ளது. மலைத்தொடரின் குறுக்கே இயற்கையாக அமைந்த இடைவெளிப் பாதையே கணவாய். எனவே இரண்டும் சரி.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q36
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) ஆஸ்திரேலியா – 1. காட்டுக்குதிரை
(b) தென் ஆப்பிரிக்கா – 2. காட்டெருமை
(c) யுரேஷியா – 3. கங்காரு
(d) வட அமெரிக்கா – 4. வரிக்குதிரை
  • A. (a)-4, (b)-3, (c)-2, (d)-1
  • B. (a)-4, (b)-3, (c)-1, (d)-2
  • C. (a)-3, (b)-4, (c)-1, (d)-2சரி
  • D. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
விளக்கம். புல்வெளி விலங்குகள்: ஆஸ்திரேலியாவில் கங்காரு, தென் ஆப்பிரிக்க வெல்டில் வரிக்குதிரை, யுரேஷிய ஸ்டெப்பியில் காட்டுக்குதிரை, வட அமெரிக்கப் பிரெய்ரியில் காட்டெருமை.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q37
இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6·4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன
  • A. 8 மற்றும் 8
  • B. 32 மற்றும் 2
  • C. 4 மற்றும் 16சரி
  • D. 10 மற்றும் 6
விளக்கம். பெருக்கல் சராசரி √(ab) = 8 எனவே ab = 64. இசைச்சராசரி 2ab/(a + b) = 128/(a + b) = 6.4 எனவே a + b = 20. கூடுதல் 20, பெருக்கற்பலன் 64 உள்ள எண்கள் 4, 16.
பாடம்: திறனறிவு
Q38
அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.
  • A. 178, 179, 183
  • B. 176, 186, 178
  • C. 178, 180, 182
  • D. 179, 180, 181சரி
விளக்கம். எண்கள் n − 1, n, n + 1 என்க. 3n = 540, எனவே n = 180. எண்கள் 179, 180, 181.
பாடம்: திறனறிவு
Q39
5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு .................. ஆகும்.
  • A. 2/5
  • B. 3/5
  • C. 5/9சரி
  • D. 4/9
விளக்கம். 10 பேரில் இருவரைத் தேர்வு செய்யும் வழிகள் 10C2 = 45. ஒரு ஆண், ஒரு பெண் தேர்வு செய்யும் வழிகள் 5 × 5 = 25. நிகழ்தகவு = 25/45 = 5/9.
பாடம்: திறனறிவு
Q40
ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு
  • A. (5 × 6)/(15 × 14)
  • B. (5 × 6 × 2)/(15 × 14)சரி
  • C. (4 × 5)/(15 × 14)
  • D. (4 × 5 × 2)/(14 × 15)
விளக்கம். மொத்தம் 15 பந்துகள். முதலில் நீலம் பின் பச்சை = (5/15)(6/14); முதலில் பச்சை பின் நீலம் = (6/15)(5/14). இரண்டையும் கூட்ட (5 × 6 × 2)/(15 × 14) = 2/7.
பாடம்: திறனறிவு
Q41
மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?
  • A. பிட்யூட்டரி சுரப்பி
  • B. தைராய்டு சுரப்பி
  • C. கணைய சுரப்பி
  • D. அட்ரீனல் சுரப்பிசரி
விளக்கம். அட்ரீனல் சுரப்பிகள் ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் அமைந்துள்ளன; எனவே இவை சிறுநீரக மேற்சுரப்பிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
பாடம்: பொது அறிவியல்
Q42
கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை .................. என்று அழைக்கப்படுகிறது.
  • A. ரெடினோபதி
  • B. கண்புரைசரி
  • C. அஸ்டிக் மாட்டிசம்
  • D. பிரஸ்பியோபியா
விளக்கம். கண்புரை நோயில் கண் லென்ஸ் கலங்கி ஒளி புகாததாகி பார்வை மங்குகிறது. அறுவை சிகிச்சையால் லென்ஸை மாற்றி இது சரிசெய்யப்படுகிறது.
பாடம்: பொது அறிவியல்
Q43
தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?
  • A. சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள், வைட்டமின்சரி
  • B. சர்க்கரை, புரதம், மகரந்தத்தூள், வைட்டமின்
  • C. சர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
  • D. சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்
விளக்கம். தேனில் பெரும்பகுதி சர்க்கரை; சிறிதளவு தாது உப்புகள், மகரந்தத்தூள், வைட்டமின்கள் உள்ளன. தேனில் கொழுப்பு ஏறக்குறைய இல்லை, எனவே C, D பொருந்தாது.
பாடம்: பொது அறிவியல்
Q44
மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
  • A. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
  • B. கருச்செல் ஜீன் சிகிச்சை முறைசரி
  • C. குளோனிங் முறை
  • D. கேரியோடைப்பிங் முறை
விளக்கம். கருச்செல் ஜீன் சிகிச்சையில் விந்து, அண்டம் அல்லது தொடக்க நிலை கருவின் செல்களில் ஜீன் திருத்தப்படுவதால், அந்தத் திருத்தம் சந்ததிக்கும் செல்கிறது. உடற்செல் சிகிச்சை சிகிச்சை பெறுபவரை மட்டுமே பாதிக்கும்.
பாடம்: பொது அறிவியல்
Q45
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட ) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
  • A. I சரி ஆனால் II தவறுசரி
  • B. I தவறு ஆனால் II சரி
  • C. இரண்டுமே சரி
  • D. இரண்டுமே தவறு
விளக்கம். மரங்களை வெட்டுவதால் மண் அரிப்பு, வாழிட இழப்பு ஏற்பட்டு நில, நீர் சூழ்மண்டலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உயிரிகளுக்கு உணவு குறையுமே தவிர கூடாது; எனவே I மட்டும் சரி.
பாடம்: பொது அறிவியல்
Q46
கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
  • A. கிரிகர் மெண்டல்
  • B. சார்லஸ் டார்வின்
  • C. இராபர்ட் ஹூக்சரி
  • D. இராபர்ட் பிரவுன்
விளக்கம். 1665-ல் இராபர்ட் ஹூக் கார்க்கின் மெல்லிய துண்டை நுண்ணோக்கியில் பார்த்தபோது சிறிய அறைகளைக் கண்டு அவற்றுக்கு 'செல்' எனப் பெயரிட்டார்.
பாடம்: பொது அறிவியல்
Q47
ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO₂, H₂O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H₂O, வைட்டமின்கள்.
  • A. I & IV
  • B. II & IV
  • C. I & IIசரி
  • D. III & IV
விளக்கம். பசுந்தாவரங்கள் பசுங்கணிகம் ஈர்க்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றன. வைட்டமின்கள், பைலி புரதம் தேவையில்லை; எனவே I, II.
பாடம்: பொது அறிவியல்
Q48
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) கத்தரி – 1. லெக்யூம்
(b) ஆப்பிள் – 2. பெர்ரி
(c) பட்டாணி – 3. அறை வெடிகனி
(d) வெண்டை – 4. போம்
  • A. (a)-2, (b)-4, (c)-1, (d)-3சரி
  • B. (a)-4, (b)-1, (c)-3, (d)-2
  • C. (a)-3, (b)-1, (c)-2, (d)-4
  • D. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
விளக்கம். கத்தரி பெர்ரி வகைக் கனி, ஆப்பிள் போம் (பொய்க்கனி), பட்டாணி லெக்யூம் (காய்), வெண்டை உலர் வெடிகனி (கேப்சூல்).
பாடம்: பொது அறிவியல்
Q49
சுவாசத் தளப்பொருட்கள் என்பன
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
  • A. I, II மற்றும் IV
  • B. I, II மற்றும் IIIசரி
  • C. I, III மற்றும் IV
  • D. I, II, III மற்றும் IV
விளக்கம். சுவாசத்தின்போது ஆக்சிஜனேற்றம் அடைந்து ஆற்றல் தரும் உணவுப்பொருட்கள் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம். வைட்டமின்கள் ஆற்றல் தருவதில்லை.
பாடம்: பொது அறிவியல்
Q50
ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?
  • A. மேற்கு
  • B. தெற்கு
  • C. வடக்கு
  • D. கிழக்குசரி
விளக்கம். அனைவரும் வட்டத்தின் மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். தென்மேற்கை நோக்கும் A வடகிழக்கிலும், தென்கிழக்கை நோக்கும் D வடமேற்கிலும் உள்ளனர். A-க்கு எதிரே B தென்மேற்கில். D (வடமேற்கு), B (தென்மேற்கு) இடையே சமதொலைவில் C மேற்கில் அமர்ந்து கிழக்கை நோக்குகிறார்.
பாடம்: திறனறிவு
Q51
ஒருவரின் மாத வருமானம் ரூ. 28,000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ?
வட்ட விளக்கப்படம்: உணவு 45%, போக்குவரத்து 20%, சேமிப்பு 15%, வாடகை 13%, பொழுதுபோக்கு 7%
  • A. ரூ 1950
  • B. ரூ.1960சரி
  • C. ரூ. 1970
  • D. ரூ. 1980
விளக்கம். பொழுதுபோக்கிற்கான பங்கு 7%.
7/100 × 28,000 = ரூ. 1,960.
பாடம்: திறனறிவு
Q52
ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்
  • A. 6%
  • B. 8%சரி
  • C. 10%
  • D. 12%
விளக்கம். அடக்க விலை = 100 எனக் கொள்க. குறித்த விலை = 120.
விற்ற விலை = 120 × 90/100 = 108.
இலாபம் = 8, அதாவது 8%.
பாடம்: திறனறிவு
Q53
ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்
  • A. 1224சரி
  • B. 1242
  • C. 1222
  • D. 120
விளக்கம். வகுத்தி = 5 × 24 = 120.
ஈவு = 120 ÷ 12 = 10.
வகுபடும் எண் = 120 × 10 + 24 = 1224.
பாடம்: திறனறிவு
Q54
அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
  • A. ஆக்ஸிஜனேற்றி
  • B. வினைவேக மாற்றி
  • C. ஒடுக்கிசரி
  • D. மட்டாக்கி
விளக்கம். அலுமினோ வெப்ப முறையில் அலுமினியம் உலோக ஆக்சைடுகளிலிருந்து (Fe₂O₃, Cr₂O₃ போன்றவை) ஆக்ஸிஜனை நீக்குகிறது. எனவே அது ஒடுக்கியாகச் செயல்படுகிறது.
பாடம்: பொது அறிவியல்
Q55
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் – 1. ஆக்ஸிஜனேற்றம்
(b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட் – 2. ஒடுக்க வினை காரணி
(c) எலக்ட்ரான் இழத்தல் – 3. ஒடுக்கம்
(d) எலக்ட்ரான் ஏற்றல் – 4. ஆக்ஸிஜனேற்றி
  • A. (a)-2, (b)-1, (c)-3, (d)-4
  • B. (a)-3, (b)-2, (c)-1, (d)-4
  • C. (a)-2, (b)-4, (c)-1, (d)-3சரி
  • D. (a)-1, (b)-2, (c)-4, (d)-3
விளக்கம். அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட் ஒரு வலிமையான ஆக்ஸிஜனேற்றி; எலக்ட்ரான் இழத்தல் ஆக்ஸிஜனேற்றம்; எலக்ட்ரான் ஏற்றல் ஒடுக்கம். மீதமுள்ள 'ஒடுக்க வினை காரணி' நிக்கலுக்குப் பொருந்துகிறது.
பாடம்: பொது அறிவியல்
Q56
பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது ?
  • A. பசுஞ்சாணம் மற்றும் தாவரக் கழிவுகள்
  • B. சணப்பை மற்றும் கொத்தவரைசரி
  • C. சணப்பை மற்றும் பசுஞ்சாணம்
  • D. பசுஞ்சாணம் மற்றும் விலங்குக் கழிவுகள்
விளக்கம். சணப்பை, கொத்தவரை போன்ற பயறு வகைப் பயிர்களை வளர்த்து மண்ணில் உழுது சேர்ப்பதே பசுந்தாள் உரம். பசுஞ்சாணம் தொழு உரம் ஆகும்.
பாடம்: பொது அறிவியல்
Q57
மின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி .................. ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
  • A. எதிர்மின்வாய்சரி
  • B. நேர்மின்வாய்
  • C. மின்பகுளி
  • D. (A) மற்றும் (B) இரண்டும்
விளக்கம். முலாம் பூசப்பட வேண்டிய பொருள் எதிர்மின்வாயாக வைக்கப்படுகிறது; அங்கு தங்க நேர் அயனிகள் படிகின்றன. தங்கத் தகடு நேர்மின்வாயாகும்.
பாடம்: பொது அறிவியல்
Q58
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க :
I. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது.
இவற்றுள் :
  • A. I மற்றும் III சரியானவை
  • B. III மட்டும் சரியானது
  • C. II மட்டும் சரியானதுசரி
  • D. I மற்றும் IV சரியானவை
விளக்கம். ஆக்ஸிஜனேற்றம் என்பது எலக்ட்ரான் இழத்தல் (கூற்று II). ஹைட்ரஜன் சேர்க்கை, எலக்ட்ரான் ஏற்றல், நேர்மின் தனிமம் சேர்தல் ஆகியவை ஒடுக்க வினையைக் குறிக்கின்றன.
பாடம்: பொது அறிவியல்
Q59
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
  • A. pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்சரி
  • B. அமிலம் — ஃபாரடே
  • C. மின்கலன் — அர்ஹீனியஸ்
  • D. ஜெர்மானியம் — மின்கடத்தி
விளக்கம். pH அளவுகோலை அறிமுகப்படுத்தியவர் S. P. L. சோரன்சன். அர்ஹீனியஸ் அமிலக் கொள்கையுடன் தொடர்புடையவர்; ஜெர்மானியம் ஒரு குறைகடத்தி.
பாடம்: பொது அறிவியல்
Q60
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
  • A. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
  • B. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
  • C. எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்சரி
  • D. பத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்
விளக்கம். எட்டாவது திட்டம் (1992–97) 2000-க்குள் ஏறக்குறைய முழு வேலைவாய்ப்பை அடையும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்தது. வறுமை ஒழிப்பும் சுயசார்பும் ஐந்தாவது திட்டத்தின் நோக்கங்கள்.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q61
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) உலக சுகாதார நிறுவனம் – 1. பாரிஸ்
(b) பெண்கள் காப்பகம் – 2. ரோம்
(c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு – 3. நியூயார்க்
(d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி – 4. ஜெனீவா
  • A. (a)-3, (b)-4, (c)-2, (d)-1
  • B. (a)-4, (b)-3, (c)-1, (d)-2சரி
  • C. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  • D. (a)-4, (b)-3, (c)-1, (d)-4
விளக்கம். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் ஜெனீவா, யுனெஸ்கோ பாரிஸ், பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி ரோம். பெண்கள் காப்பகம் (WomenWatch) நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்திலிருந்து செயல்படுகிறது.
பாடம்: நடப்பு நிகழ்வுகள்
Q62
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
  • A. குடியரசுத் தலைவர்சரி
  • B. பிரதம அமைச்சர்
  • C. மக்களவை சபாநாயகர்
  • D. நிதி அமைச்சர்
விளக்கம். அரசியலமைப்பின் 280-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் நிதிக்குழுவை அமைத்து அதன் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கிறார்.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q63
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :
I. திரு. சரண்சிங்
II. திரு. வி. பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :
  • A. III, I, II & IVசரி
  • B. IV, II, III & I
  • C. II, III, IV & I
  • D. IV, III, I & II
விளக்கம். லால்பகதூர் சாஸ்திரி (1964), சரண்சிங் (1979), வி. பி. சிங் (1989), சந்திரசேகர் (1990). எனவே வரிசை III, I, II, IV.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q64
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
  • A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்சரி
  • C. (A) சரி, ஆனால் (R) தவறு
  • D. (A) தவறு, ஆனால் (R) சரி
விளக்கம். 'கருத்தியல்' (ideology) என்ற சொல்லை உருவாக்கியவர் பிரெஞ்சு அறிஞர் டெஸ்டட் டி டிரேசி. மக்களின் நம்பிக்கைகள், இலட்சியங்கள் ஆகியவற்றின் தொகுப்பே கருத்தியல். வினாத்தாள் R-ஐ A-க்கான விளக்கமாகக் கொள்கிறது.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q65
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?
  • A. அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
  • B. அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்சரி
  • C. அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • D. அவர், மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்
விளக்கம். பிரிவு 66-ன்படி துணைக் குடியரசுத் தலைவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகத் தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். மொழித் தகுதி எதுவும் இல்லை.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q66
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
  • A. இந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
  • B. தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
  • C. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்திசரி
  • D. இந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு
விளக்கம். இந்திரா காந்தி 1966-ல் இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார். இந்தியத் திட்டமிடலின் தந்தை எம். விஸ்வேஸ்வரய்யா; முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q67
நுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
  • A. தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
  • B. குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
  • C. எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
  • D. இவை அனைத்தும்சரி
விளக்கம். அபரிகிரகம் என்பது உடைமை சேர்க்காமை. தேவைகளைக் கட்டுப்படுத்துதல், குறைந்தபட்சத் தேவையில் நிறைவடைதல், அவசியமானதை மட்டும் பெறுதல் ஆகிய மூன்றும் இதையே குறிக்கின்றன.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q68
எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
  • A. இராஜசிம்மன்சரி
  • B. இரண்டாம் மகேந்திரன்
  • C. முதலாம் நரசிம்மவர்மன்
  • D. மூன்றாம் நந்திவர்மன்
விளக்கம். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் பல்லவ மன்னன் இராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்). இது கட்டுமானக் கோயில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q69
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?
  • A. தாயுமானவர்சரி
  • B. வள்ளலார்
  • C. அருணகிரிநாதர்
  • D. குமரகுருபரர்
விளக்கம். 'பராபரமே' என முடியும் இவ்வரிகள் தாயுமானவர் பாடல்களில் உள்ளவை. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே அவர் வேண்டுதல்.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q70
விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?
  • A. வன்தொடர்க் குற்றியலுகரம்
  • B. மென்தொடர்க் குற்றியலுகரம்
  • C. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்சரி
  • D. இடைத் தொடர்க் குற்றியலுகரம்
விளக்கம். 'விறகு' என்பதில் இறுதி 'கு'-க்கு முன் உள்ள 'ற' உயிர்மெய் (ற் + அ); அதாவது உயிரைத் தொடர்ந்து உகரம் வருகிறது. எனவே இது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q71
திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?
  • A. முதலாம் இராஜராஜன்
  • B. மூன்றாம் குலோத்துங்கன்
  • C. நம்பியாண்டார் நம்பிசரி
  • D. கருவூர்த் தேவர்
விளக்கம். சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இப்பணிக்கு முதலாம் இராஜராஜ சோழன் ஆதரவு அளித்தான்.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q72
ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?
  • A. சிலப்பதிகாரம்
  • B. மணிமேகலைசரி
  • C. சீவகசிந்தாமணி
  • D. வளையாபதி
விளக்கம். ஐம்பெருங்காப்பியங்களில் பௌத்தக் காப்பியமான மணிமேகலை, வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பௌத்த ஒழுக்க நெறிகளை (ஐந்து சீலங்கள்) விளக்குகிறது.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q73
'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
  • A. விளம்பி நாகனார்
  • B. கபிலர்
  • C. பூதஞ்சேந்தனார்சரி
  • D. மதுரைக்கண்ணன் கூத்தனார்
விளக்கம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இனியவை நாற்பதை இயற்றியவர் பூதஞ்சேந்தனார். நான்மணிக்கடிகை விளம்பி நாகனாருடையது; இன்னா நாற்பது கபிலருடையது.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q74
புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?
  • A. வைரமுத்து
  • B. திலகவதி
  • C. ஈரோடு தமிழன்பன்சரி
  • D. இந்திரா பார்த்தசாரதி
விளக்கம். புதுக்கவிதை இயக்கத்தின் முன்னணிக் கவிஞரான ஈரோடு தமிழன்பன் 'வணக்கம் வள்ளுவ' என்ற கவிதை நூலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q75
தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
  • A. ஏழு
  • B. எட்டுசரி
  • C. ஒன்பது
  • D. பத்து
விளக்கம். தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q76
கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
  • A. நிமிர்ந்த நன்னடை
  • B. தமிழன் என்றொரு இனமுண்டுசரி
  • C. தனியொருவனுக்கு உணவிலை எனில்
  • D. காக்கைக் குருவி எங்கள் ஜாதி
விளக்கம். "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்று பாடியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. மற்ற மூன்று தொடர்களும் பாரதியாருடையவை.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q77
மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?
  • A. கொள்ளெனக் கொடுத்தல்
  • B. ஈயேன் என்றல்
  • C. கொள்ளேன் என்றல்சரி
  • D. ஈயென இரத்தல்
விளக்கம். "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனினும் கொள்ளேன் என்றல் உயர்ந்தன்று" என்கிறது புறநானூறு. கொடுக்கப்படுவதை ஏற்க மறுப்பதே மிக உயர்ந்த பண்பு.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q78
ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?
  • A. ஜி. யு. போப்
  • B. கால்டுவெல்
  • C. எல்லீசுசரி
  • D. வின்சுலோ
விளக்கம். சென்னை ஆட்சியராக இருந்த தமிழ் ஆர்வலர் எல்லீசு, திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டார்.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q79
பொருந்தாததைச் சுட்டுக :
  • A. அரிவை
  • B. மடந்தை
  • C. விடலைசரி
  • D. மங்கை
விளக்கம். மங்கை, மடந்தை, அரிவை ஆகியவை பெண்களின் ஏழு பருவங்களில் அடங்கும். விடலை என்பது இளைஞனைக் குறிக்கும்; எனவே அது பொருந்தாதது.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q80
கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?
  • A. மரப்பசு
  • B. பாரிசுக்குப் போசரி
  • C. கள்ளோ காவியமோ
  • D. மோக முள்
விளக்கம். பாரிசுக்குப் போ ஜெயகாந்தனின் புதினம். மரப்பசு, மோக முள் தி. ஜானகிராமனுடையவை; கள்ளோ காவியமோ மு. வரதராசனாருடையது.
பாடம்: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q81
ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
  • A. ஆசியா, ஐரோப்பா
  • B. ஐரோப்பா, ஆப்பிரிக்கா
  • C. ஐரோப்பா, ஆஸ்திரேலியா
  • D. ஐரோப்பா, வட அமெரிக்காசரி
விளக்கம். இந்தியப் பெருங்கடலை ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவை சூழ்ந்துள்ளன. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் அதைத் தொடுவதில்லை.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q82
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?
  • A. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
  • B. 'நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம்' என்பது இதன் முக்கிய வாசகமாகும்
  • C. இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
  • D. கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை.சரி
விளக்கம். 2011 வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் கைப்பேசி, கணினி, இணைய வசதி பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. எனவே கூற்று D தவறு; மற்றவை சரி.
பாடம்: நடப்பு நிகழ்வுகள்
Q83
பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நீதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
  • A. நீதியரசர் ஏ. என். ரே
  • B. நீதியரசர் பி. வி. ரெட்டிசரி
  • C. நீதியரசர் எஸ். எம். சிக்ரி
  • D. நீதியரசர் ஒய். வி. சந்திரசூட்.
விளக்கம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. வி. ரெட்டி 19வது சட்ட ஆணையத்தின் (2009–2012) தலைவராக இருந்தார்.
பாடம்: இந்திய ஆட்சியியல்
Q84
பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
  • A. பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
  • B. அரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
  • C. வங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
  • D. தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்.சரி
விளக்கம். ரிசர்வ் வங்கி நாணயம் வெளியிடுகிறது; அரசுக்கும் வங்கிகளுக்கும் வங்கியாகச் செயல்படுகிறது. தனி நபர்களுக்குக் கடன் வழங்குவது வணிக வங்கிகளின் பணி.
பாடம்: இந்தியப் பொருளாதாரம்
Q85
மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமை தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம் ?
  • A. வளர்ச்சி ஹார்மோன்
  • B. ஆக்ஸிடாசின்
  • C. வாஸோபிரிசின்
  • D. தைராக்சின்.சரி
விளக்கம். தைராய்டு சுரப்பியின் தைராக்சின் வளர்சிதை மாற்றத்தையும் உடல், மன வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவதால் ஆளுமை ஹார்மோன் எனப்படுகிறது.
பாடம்: பொது அறிவியல்
Q86
கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?
  • A. சனி
  • B. வீனஸ்
  • C. புளூட்டோசரி
  • D. நெப்டியூன்.
விளக்கம். 2006-ல் பன்னாட்டு வானியல் ஒன்றியம் புளூட்டோவைக் குறுங்கோளாக (dwarf planet) வகைப்படுத்தியது. சனி, வெள்ளி, நெப்டியூன் முழுக் கோள்கள்.
பாடம்: பொது அறிவியல்
Q87
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள் :
  • A. I மற்றும் II சரியானவை
  • B. II மற்றும் III சரியானவை
  • C. III மட்டும் சரியானது
  • D. I, II மற்றும் IV சரியானவை.சரி
விளக்கம். இந்தியாவின் வணிக முதன்மை ஆற்றல் மூலங்களாக நிலக்கரி-லிக்னைட், எண்ணெய்-இயற்கை வாயு, நீர் மற்றும் அணு மின்சாரம் கணக்கிடப்படுகின்றன. "எண்ணெய் மட்டும்" தனி மூலம் அல்ல.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q88
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :
  • A. மின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
  • B. இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானதுசரி
  • C. இது சூடானது அல்ல
  • D. இது மிக அதிக குளிர்ச்சியானது.
விளக்கம். மின்னலின் வெப்பநிலை சுமார் 30,000 °C வரை செல்லும்; இது சூரியனின் மேற்பரப்பை (சுமார் 5,500 °C) விடப் பல மடங்கு அதிகம். மின்னல் சூரியனை விட வெப்பமானது என்று கூறும் ஒரே விடை B.
பாடம்: பொது அறிவியல்
Q89
மனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோஸின் அளவு
  • A. 80-120 mg/100 mlசரி
  • B. 70-110 mg/100 ml
  • C. 60-110 mg/100 ml
  • D. 50-110 mg/100 ml.
விளக்கம். பள்ளிப் பாடநூல்களின்படி இயல்பான இரத்த குளுக்கோஸ் அளவு 100 மி.லி. இரத்தத்தில் 80–120 மி.கி. இன்சுலினும் குளுகோகானும் இதைச் சீராக வைக்கின்றன.
பாடம்: பொது அறிவியல்
Q90
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) பிளத்தல் – 1. ஈஸ்ட்
(b) மொட்டுகள் – 2. பூக்கும் தாவரங்கள்
(c) துண்டாதல் – 3. பாக்டீரியா
(d) மகரந்தச் சேர்க்கை – 4. ஆல்கா.
  • A. (a)-3, (b)-1, (c)-4, (d)-2சரி
  • B. (a)-1, (b)-4, (c)-2, (d)-3
  • C. (a)-4, (b)-2, (c)-3, (d)-1
  • D. (a)-2, (b)-3, (c)-1, (d)-4
விளக்கம். பாக்டீரியா பிளத்தல் மூலமும், ஈஸ்ட் மொட்டுவிடுதல் மூலமும், ஸ்பைரோகைரா போன்ற ஆல்காக்கள் துண்டாதல் மூலமும் இனப்பெருக்கம் செய்கின்றன. மகரந்தச் சேர்க்கை பூக்கும் தாவரங்களில் நடைபெறுகிறது.
பாடம்: பொது அறிவியல்
Q91
நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஒங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஒங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
  • A. ஒங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%சரி
  • B. ஒங்குத்தன்மை 10% ஒடுங்குத் தன்மை 90%
  • C. ஒங்குத்தன்மை 20% ஒடுங்குத் தன்மை 80%
  • D. ஒங்குத்தன்மை 80% ஒடுங்குத் தன்மை 20%.
விளக்கம். ஓங்குப் பண்பு: 72 ÷ 80 × 100 = 90%. ஒடுங்குப் பண்பு: 8 ÷ 80 × 100 = 10%.
பாடம்: பொது அறிவியல்
Q92
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) WHO – 1. மனிதனும் உயிர்க்கோளமும்
(b) NPCB – 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
(c) NLEP – 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
(d) MAB – 4. உலக சுகாதார நிறுவனம்.
  • A. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
  • B. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  • C. (a)-4, (b)-3, (c)-2, (d)-1சரி
  • D. (a)-4, (b)-1, (c)-3, (d)-2
விளக்கம். WHO – உலக சுகாதார நிறுவனம், NPCB – தேசிய பார்வையிழப்புக் கட்டுப்பாட்டுத் திட்டம், NLEP – தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம், MAB – மனிதனும் உயிர்க்கோளமும்.
பாடம்: பொது அறிவியல்
Q93
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
  • A. தமிழ்நாடு
  • B. பீகார்
  • C. கேரளாசரி
  • D. குஜராத்.
விளக்கம். 2011 கணக்கெடுப்பின்படி கேரளாவில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள்; இதுவே மாநிலங்களில் அதிகபட்ச பாலின விகிதம்.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q94
லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ்,
சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம்
கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில்,
கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?
  • A. இந்தூர்
  • B. ஹைதராபாத்
  • C. கான்பூர்சரி
  • D. நாக்பூர்.
விளக்கம். ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் மைதானமும் அது அமைந்த நகரமும். கிரீன் பார்க் மைதானம் கான்பூரில் உள்ளது.
பாடம்: திறனறிவு
Q95
மைக்ரோசாப்ட் எக்செல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
  • A. வரைபடம் உருவாக்கசரி
  • B. ஆவணங்கள் உருவாக்க
  • C. இணைய தளத்தில் உலவ
  • D. ஒலிக்கோப்புகளை உருவாக்க.
விளக்கம். எக்செல் ஒரு விரிதாள் (spreadsheet) மென்பொருள்; எண் அட்டவணைகளைக் கையாளவும் அவற்றிலிருந்து வரைபடங்கள் உருவாக்கவும் பயன்படுகிறது.
பாடம்: பொது அறிவியல்
Q96
புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
  • A. அலைகள்
  • B. ஓதங்கள்சரி
  • C. நீரோட்டங்கள்
  • D. சுனாமி.
விளக்கம். கடல் மட்டம் சீராக உயர்ந்து தாழ்வதே ஓதம்; இது முக்கியமாக சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஏற்படுகிறது.
பாடம்: இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q97
தவறான இணை எது ?
  • A. கிரிக்கெட் — வினோத் காம்ளி
  • B. கால்பந்து — மரடோனா
  • C. டென்னிஸ் — சானியா மிர்சா
  • D. ஹாக்கி — செய்னா நெய்வால்.சரி
விளக்கம். சாய்னா நேவால் ஒரு இறகுப்பந்து (பேட்மிண்டன்) வீராங்கனை; ஹாக்கி அல்ல. மற்ற மூன்று இணைகளும் சரி.
பாடம்: நடப்பு நிகழ்வுகள்
Q98
களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது ?
  • A. சலவைத்தூள்
  • B. படிகாரம்சரி
  • C. குளோரின் டை ஆக்ஸைடு
  • D. மயில் துத்தம்.
விளக்கம். படிகாரம் கலங்கிய நீரில் மிதக்கும் களிமண் துகள்களை ஒன்றுசேர்த்து அடியில் படிய வைக்கிறது; மேலே தெளிந்த நீர் கிடைக்கிறது.
பாடம்: பொது அறிவியல்
Q99
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துதலில் உதவுகிறது.
காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
  • A. (A) மற்றும் (R) சரியானவைசரி
  • B. (A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
  • C. (A) தவறானது, ஆனால் (R) சரியானது
  • D. (A) மற்றும் (R) தவறானவை.
விளக்கம். தலைகீழ் சவ்வூடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்தப் பரவலாகப் பயன்படுகிறது. அழுத்தம் கொடுத்து, கரைந்த அயனிகளையும் பெரிய மூலக்கூறுகளையும் தடுக்கும் சவ்வின் வழியே நீரைச் செலுத்துவதே அதன் முறை; எனவே இரண்டும் சரி.
பாடம்: பொது அறிவியல்
Q100
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(a) வெய்ன் ரூனி – 1. பிரேசில்
(b) கிரிஸ்டியன் ரோனால்டோ – 2. அர்ஜெண்டினா
(c) மரடோனா – 3. நெதர்லாண்ட்
(d) ரோனால்டின்ஹோ – 4. இங்கிலாந்து.
  • A. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  • B. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
  • C. (a)-4, (b)-3, (c)-2, (d)-1சரி
  • D. (a)-4, (b)-1, (c)-2, (d)-3
விளக்கம். வெய்ன் ரூனி – இங்கிலாந்து, மரடோனா – அர்ஜெண்டினா, ரோனால்டின்ஹோ – பிரேசில் என்பதால் குறியீடு C பொருந்துகிறது. (கிரிஸ்டியானோ ரொனால்டோ உண்மையில் போர்ச்சுகல் வீரர்; இப்பட்டியலில் அவருக்கு மீதமுள்ளது நெதர்லாண்ட் மட்டுமே.)
பாடம்: நடப்பு நிகழ்வுகள்
ஆன்லைன் தேர்வு எழுது → அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
2012 முழு வினாத்தாளை ஒரே தேர்வாக எழுதுங்கள் (200 வினாக்கள், 3 மணி நேரம்) →
பொறுப்புத் துறப்பு: TN Online Test ஒரு தனிப்பட்ட பயிற்சி இணையதளம். இது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் (TNPSC) தொடர்புடையதோ, அதன் அங்கீகாரம் பெற்றதோ அல்ல. இந்த வினாக்கள் முந்தைய TNPSC குரூப் 4 தேர்வுகளிலிருந்து பயிற்சிக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. விளக்கங்கள் எங்கள் குழுவால் எழுதப்பட்டவை. இங்குள்ள விடை TNPSC அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பிலிருந்து மாறுபட்டால், அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பே இறுதியானது.

இந்த வினாத்தாள் பற்றி

இவை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய 7 ஜூலை 2012 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பொது அறிவு பொதுத் தேர்வின் பகுதி I ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு வினாக்கள். விடைகளும் விளக்கங்களும் மீள்பார்வைக்காக TN Online Test ஆல் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவும் அது இடம்பெற்ற பாடநூல் அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தின் குறிப்புகள் மற்றும் வினாக்களுக்குத் திரும்பிச் செல்லலாம்.

பிற ஆண்டுகள்

2025 · 12 ஜூலை 2025 2024 · 9 ஜூன் 2024 2022 · 24 ஜூலை 2022 2019 · 1 செப்டம்பர் 2019 2018 · 11 பிப்ரவரி 2018 2016 · 6 நவம்பர் 2016 2014 · 21 டிசம்பர் 2014 2013 · 25 ஆகஸ்ட் 2013 2011 · 30 ஜூலை 2011