24 ஜூலை 2022 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பொது அறிவு பொதுத் தேர்வின் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.
Q101
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
1. பி.டி. ராஜன்
2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார்
3. பி. முனுசாமி நாயுடு
4. சி. ராஜாஜி
5. பி. சுப்பராயன்
- A. 2, 4, 3, 5, 1
- B. 2, 5, 3, 1, 4சரி
- C. 5, 3, 1, 2, 4
- D. 3, 1, 5, 2, 4
விளக்கம். 1920-ல் ஏ. சுப்புராயுலு ரெட்டியார் முதல் முதலமைச்சரானார். அதன்பின் பி. சுப்பராயன் (1926), பி. முனுசாமி நாயுடு (1930), பி.டி. ராஜன் (1936), சி. ராஜாஜி (1937) என்ற வரிசையில் பதவி வகித்தனர்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q102
தவறான இணையைக் கண்டறிக.
(i) மகாராஷ்டிரா – ஈரவை சட்டமன்றம்
(ii) தெலுங்கானா – ஓரவை சட்டமன்றம்
(iii) பீகார் – ஓரவை சட்டமன்றம்
(iv) ஆந்திரபிரதேசம் – ஈரவை சட்டமன்றம்
- A. (i), (ii) மற்றும் (iii) தவறான இணை
- B. (i) மற்றும் (ii) தவறான இணை
- C. (ii) மற்றும் (iii) தவறான இணைசரி
- D. அனைத்தும் தவறான இணை
விளக்கம். தெலுங்கானா, பீகார் இரண்டிலும் சட்ட மேலவை உள்ளது; எனவே அவை ஈரவை சட்டமன்றங்கள். ஆகவே (ii), (iii) இணைகள் தவறு.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q103
சரியான இணையைத் தேர்ந்தெடு :
1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் – ஷரத்து 269
2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது – ஷரத்து 268
3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் – ஷரத்து 267
- A. 1 மட்டும்
- B. 2 மற்றும் 3 மட்டும்
- C. 1 மற்றும் 2 மட்டும்சரி
- D. 1 மற்றும் 3 மட்டும்
விளக்கம். மத்திய அரசு விதித்து மாநிலங்கள் வசூலித்துப் பயன்படுத்தும் வரிகள் ஷரத்து 268-லும், மத்திய அரசு விதித்து வசூலித்து மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரிகள் ஷரத்து 269-லும் உள்ளன. ஷரத்து 267 எதிர்பாரா செலவு நிதி பற்றியது; எனவே 3 தவறு.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q104
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ______ என்று பெயர்.
- A. லூக்கோமியா
- B. சார்க்கோமா
- C. கார்சினோமாசரி
- D. லிப்போமா
விளக்கம். எபிதீலியல் செல்களில் தோன்றும் புற்றுநோய் கார்சினோமா ஆகும். இணைப்புத் திசுவில் தோன்றுவது சார்க்கோமா; இரத்தம் உருவாக்கும் திசுவில் தோன்றுவது லூக்கோமியா.
பாடம்:
பொது அறிவியல்
Q105
பொருத்துக.
தேசியப் பூங்கா – மாநிலம்
(a) கிர் தேசியப் பூங்கா – 1. இராஜஸ்தான்
(b) கார்பெட் தேசியப் பூங்கா – 2. ஜார்கண்ட்
(c) இராஜ்கிர் தேசியப் பூங்கா – 3. குஜராத்
(d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா – 4. உத்தரகாண்ட்
- A. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
- B. (a)-4, (b)-3, (c)-2, (d)-1
- C. (a)-3, (b)-4, (c)-2, (d)-1சரி
- D. (a)-3, (b)-2, (c)-1, (d)-4
விளக்கம். கிர் குஜராத்திலும், கார்பெட் உத்தரகாண்டிலும், இரந்தம்பூர் இராஜஸ்தானிலும் உள்ளன. மீதமுள்ள இராஜ்கிர் ஜார்கண்டுடன் பொருந்துகிறது; எனவே 3, 4, 2, 1.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பில் இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q106
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i) சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(ii) ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
(iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது
(iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்
- A. (i) மற்றும் (ii)
- B. (i) மற்றும் (iv)
- C. (ii) மற்றும் (iii)சரி
- D. (ii) மற்றும் (iv)
விளக்கம். கனமான ஹேமடைட் தாது புவியீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது; உருகிய அலுமினாவை மின்னாற்பகுத்து அலுமினியம் பெறப்படுகிறது. சிங்க் ப்ளன்ட் நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது; மேட் என்பது குப்ரஸ் சல்பைடு, பெர்ரஸ் சல்பைடு கலவை (10ஆம் வகுப்பு அறிவியல், உலோகவியல்).
பாடம்:
பொது அறிவியல்
Q107
கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள் – மிஷன்
(a) யு.எஸ்.ஏ – 1. மங்கல்யான்
(b) இந்தியா – 2. Psyche
(c) ஜப்பான் – 3. Zheng He
(d) சீனா – 4. TEREX
- A. (a)-1, (b)-4, (c)-3, (d)-2
- B. (a)-2, (b)-1, (c)-4, (d)-3சரி
- C. (a)-2, (b)-4, (c)-3, (d)-1
- D. (a)-4, (b)-1, (c)-2, (d)-3
விளக்கம். மங்கல்யான் இந்தியாவுடையது, TEREX ஜப்பானுடையது, Zheng He சீனாவுடையது; மீதமுள்ள Psyche அமெரிக்காவின் (NASA) திட்டம். எனவே 2, 1, 4, 3.
பாடம்:
நடப்பு நிகழ்வுகள்
Q108
பொருந்தாததைக் கண்டுபிடி.
- A. இளஞ்சேட்சென்னி
- B. கோச்செங்கணான்
- C. பெருஞ்சேரல் இரும்பொறைசரி
- D. பெருநற்கிள்ளி
விளக்கம். இளஞ்சேட்சென்னி, கோச்செங்கணான், பெருநற்கிள்ளி ஆகியோர் சங்ககால சோழ மன்னர்கள்; பெருஞ்சேரல் இரும்பொறை சேர மன்னர்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q109
கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
- A. (i) மட்டும் சரி
- B. (ii) மட்டும் சரி
- C. (i), (ii) மட்டும் சரிசரி
- D. (i), (iii) மட்டும் சரி
விளக்கம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநெறி கூறுபவை; அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் முதன்மையானவை. சிலப்பதிகாரம், மணிமேகலை இரட்டைக் காப்பியங்கள்; விடைக்குறிப்பு (i), (ii) ஆகியவற்றை மட்டுமே சரி என ஏற்கிறது.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பு (A), (B), (C), (D) ஆகியவற்றைச் சரியான விடைகளாக ஏற்கிறது.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q110
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு
- A. 2, 3, 1, 4
- B. 1, 2, 3, 4சரி
- C. 1, 3, 2, 4
- D. 3, 1, 4, 2
விளக்கம். புலித்தேவர் 1760-களில் தோல்விக்குப் பின் மறைந்தார்; குயிலி 1780-ல் சிவகங்கை மீட்புப் போரில் உயிர்நீத்தார்; கட்டபொம்மன் 1799-ல் தூக்கிலிடப்பட்டார்; மருது சகோதரர்கள் 1801-ல் தூக்கிலிடப்பட்டனர்.
பாடம்:
இந்திய தேசிய இயக்கம்
Q111
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
- A. மூவலூர் ராமாமிர்தம்
- B. முத்துலெட்சுமி ரெட்டிசரி
- C. தர்மாம்பாள்
- D. பண்டிதர் ராமாபாய்
விளக்கம். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சென்னை மாகாணத்தின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி; தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவராகப் போற்றப்படுகிறார். தேவதாசி முறை ஒழிப்புக்கும் பாடுபட்டார்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q112
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
- A. சாக்கிய பௌத்த சங்கம்
- B. அத்வைதானந்த சபா
- C. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
- D. ஆதி திராவிட மகாஜன சபைசரி
விளக்கம். இரட்டைமலை சீனிவாசன் 1893-ல் பறையர் மகாஜன சபையைத் தொடங்கினார்; அதுவே பின்னர் ஆதி திராவிட மகாஜன சபை எனப்பட்டது. சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவியவர் அயோத்திதாசர்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q113
பொருத்துக :
சிந்து சமவெளி நகரங்கள் – அகழ்வாராய்ச்சியாளர்
(a) சன்ஹூ-தாரோ – 1. சூரஜ் பான்
(b) லோத்தல் – 2. என்.ஜி. மஜும்தார்
(c) பனாவளி – 3. எஸ்.ஆர். ராவ்
(d) மிட்டாதல் – 4. பிஷ்ட்
- A. (a)-2, (b)-1, (c)-4, (d)-3
- B. (a)-2, (b)-3, (c)-4, (d)-1சரி
- C. (a)-1, (b)-3, (c)-2, (d)-4
- D. (a)-1, (b)-4, (c)-3, (d)-2
விளக்கம். சன்ஹூ-தாரோவை என்.ஜி. மஜும்தாரும், லோத்தலை எஸ்.ஆர். ராவும், பனாவளியை ஆர்.எஸ். பிஷ்டும், மிட்டாதலை சூரஜ் பானும் அகழ்வாய்வு செய்தனர்.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q114
கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்
- A. (ii) மட்டும் சரிசரி
- B. (i) மற்றும் (iii) மட்டும் சரி
- C. (i) மற்றும் (ii) மட்டும் சரி
- D. (ii) மற்றும் (iii) மட்டும் சரி
விளக்கம். 1929 ஏப்ரலில் பகத்சிங்கும் பி.கே. தத்தும் மத்திய சட்டப்பேரவையில் குண்டு வீசினர். சிட்டகாங் ஆயுதக் கிடங்குத் தாக்குதலை (1930) நடத்தியவர் சூர்யா சென்; இந்துஸ்தான் குடியரசுக் கழகம் 1924-ல் சச்சீந்திரநாத் சன்யால் முதலியோரால் தொடங்கப்பட்டது.
பாடம்:
இந்திய தேசிய இயக்கம்
Q115
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு
2. விடுதலை
3. குடியரசு
4. புரட்சி
- A. 4, 2, 3, 1
- B. 3, 4, 1, 2சரி
- C. 3, 2, 4, 1
- D. 2, 3, 1, 4
விளக்கம். பெரியார் குடியரசு இதழை 1925-லும், புரட்சியை 1933-லும், பகுத்தறிவை 1934-லும், விடுதலையை 1935-லும் தொடங்கினார்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q116
கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
- A. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்சரி
- B. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
- C. கூற்று சரி, காரணம் தவறு
- D. கூற்று தவறு, காரணம் சரி
விளக்கம். விருந்தோம்பல், ஈகை, அன்பு, பெரியோரை மதித்தல், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை இந்தியப் பாரம்பரியம் வலியுறுத்துகிறது; இவை மக்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ உதவுவதால் காரணம் கூற்றை விளக்குகிறது.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q117
பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) முதல் ஐந்தாண்டு திட்டம் – 1. பொருளாதார நிலைத்தன்மை
(b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
(c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் – 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
(d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் – 4. சுய உருவாக்கப் பொருளாதாரம்
- A. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
- B. (a)-4, (b)-1, (c)-2, (d)-3
- C. (a)-3, (b)-1, (c)-2, (d)-4சரி
- D. (a)-1, (b)-3, (c)-4, (d)-2
விளக்கம். பிரிவினைக்குப் பின் ஏற்பட்ட அகதிகள், உணவுப் பற்றாக்குறை, பணவீக்கச் சிக்கல்களைச் சமாளிக்க முதல் ஐந்தாண்டு திட்டம் (1951-56) வகுக்கப்பட்டது. மற்றவற்றை விடைக்குறிப்பு இரண்டாவது – பொருளாதார நிலைத்தன்மை, மூன்றாவது – நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி, நான்காவது – சுய உருவாக்கப் பொருளாதாரம் எனப் பொருத்துகிறது.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பில் இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q118
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம்
(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
- A. (i), (ii), (iii), (iv)
- B. (iv), (iii), (ii), (i)சரி
- C. (i), (ii), (iv), (iii)
- D. (ii), (i), (iv), (iii)
விளக்கம். விஸ்வேசுவரய்யா திட்டம் 1934-லும், நேரு தலைமையிலான தேசியத் திட்டக் குழு 1938-லும், பாம்பே திட்டம் 1944-லும், அதன்பின் காந்தியத் திட்டம் (எஸ்.என். அகர்வால்) 1944-லும் வெளியாயின.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q119
2020–21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
(i) GST
(ii) தனி வருமான வரி
(iii) தீர்வை
(iv) நிறுவன வரி
(v) சுங்க வரி
- A. (i), (ii), (iii), (iv), (v)
- B. (ii), (iv), (i), (v), (iii)
- C. (i), (iv), (ii), (iii), (v)சரி
- D. (iv), (i), (iii), (ii), (v)
விளக்கம். 2020-21 மத்திய நிதிநிலை மதிப்பீடுகளில் சரக்கு மற்றும் சேவை வரி (சுமார் ₹6.9 லட்சம் கோடி) முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நிறுவன வரி (சுமார் ₹6.8 லட்சம் கோடி), தனிநபர் வருமான வரி (சுமார் ₹6.4 லட்சம் கோடி), கலால் வரி (சுமார் ₹2.7 லட்சம் கோடி), சுங்க வரி (சுமார் ₹1.4 லட்சம் கோடி) உள்ளன. இது வரிசை (C). TNPSC இறுதி விடைக்குறிப்பு தற்காலிக விடை (A)-ஐ (C) என மாற்றியது.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q120
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- A. (i) மட்டும்
- B. (ii) மட்டும்
- C. (iii) மட்டும்
- D. (iv) மட்டும்சரி
விளக்கம். பிறப்பு விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்களுக்கு நிகழும் உயிருள்ள பிறப்புகளின் எண்ணிக்கை ஆகும்.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q121
15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்
- A. ₹ 16,000சரி
- B. ₹ 15,000
- C. ₹ 14,000
- D. ₹ 20,000
விளக்கம். 3 ஆண்டுகளுக்கு கூ.வ. – த.வ. = P × r²(300 + r) ÷ 100³.
= P × 225 × 315 ÷ 1,000,000 = 0.070875 P.
0.070875 P = 1134 எனவே அசல் P = ₹ 16,000.
பாடம்:
திறனறிவு
Q122
p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
- A. pq
- B. qy
- C. xy
- D. pyசரி
விளக்கம். மீ.சி.ம × மீ.பொ.வ = p × q.
மீ.சி.ம = pq ÷ x = p × xy ÷ x = py.
பாடம்:
திறனறிவு
Q123
ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x – 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
- A. 3596 ச.அலகுகள்சரி
- B. 3956 ச.அலகுகள்
- C. 4256 ச.அலகுகள்
- D. 5356 ச.அலகுகள்
விளக்கம். பரப்பளவு = (3x + 2)(3x – 2) = 9x² – 4.
x = 20 எனில் 9 × 400 – 4 = 3596 ச.அலகுகள்.
பாடம்:
திறனறிவு
Q124
இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
- A. 1/9
- B. 3/9
- C. 4/9
- D. 2/9சரி
விளக்கம். இரண்டிலும் ஒரே முகம்: 6 வாய்ப்புகள். கூடுதல் 4: (1,3), (2,2), (3,1); இதில் (2,2) ஏற்கனவே எண்ணப்பட்டது.
சாதகமானவை = 6 + 2 = 8; நிகழ்தகவு = 8/36 = 2/9.
பாடம்:
திறனறிவு
Q125
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். “இன்று எனது பிறந்த நாள்” என கலா கூறினாள். வாணியிடம் “உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?” எனக் கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்” என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
- A. செவ்வாய் கிழமை
- B. புதன் கிழமைசரி
- C. வியாழன் கிழமை
- D. வெள்ளி கிழமை
விளக்கம். 75-ஐ 7-ஆல் வகுத்தால் மீதி 5.
திங்கட்கிழமையிலிருந்து 5 நாட்கள் பின்னோக்கிச் சென்றால் புதன்கிழமை.
பாடம்:
திறனறிவு
Q126
ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ______ ஆகும்.
- A. 99972
- B. 99958
- C. 99960
- D. 99962சரி
விளக்கம். 3, 5, 8, 12 ஆகியவற்றின் மீ.சி.ம = 120. 120-ன் மிகப் பெரிய ஐந்து இலக்க மடங்கு 120 × 833 = 99960. மீதி 2-ஐக் கூட்டினால் 99962.
பாடம்:
திறனறிவு
Q127
\(4^{3.5} : 2^{5}\) என்பதற்கு சமமான விகிதம்.
- A. 2 : 1
- B. 4 : 1சரி
- C. 7 : 5
- D. 7 : 10
விளக்கம். \(4^{3.5} = 2^{7} = 128\), 2⁵ = 32. எனவே 128 : 32 = 4 : 1.
பாடம்:
திறனறிவு
Q128
4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.
விளக்கம். தொடரில் 22 உறுப்புகள் உள்ளன; முதல் பாதி 11 உறுப்புகள் (4 P + S r 9 B # A 3 ?). பின்னோக்கி எழுதினால் ? 3 A # B 9 r S + P 4, அதன் பின் 7 c > Z % 6 d * Q @ 1. வலமிருந்து 14-வது = இடமிருந்து 9-வது (22 − 14 + 1), அது +.
பாடம்:
திறனறிவு
Q129
10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
- A. 14 நாட்கள்
- B. 15 நாட்கள்சரி
- C. 16 நாட்கள்
- D. 17 நாட்கள்
விளக்கம். மொத்த வேலை = 10 × 21 = 210 நபர்-நாட்கள். 14 பேருக்கு: 210 ÷ 14 = 15 நாட்கள்.
பாடம்:
திறனறிவு
Q130
18, a, b, −3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக் காண்க.
- A. 7
- B. 11
- C. 15சரி
- D. 21
விளக்கம். −3 = 18 + 3d என்பதால் d = −7. எனவே a = 11, b = 4; a + b = 15. (கூட்டுத்தொடரில் a + b = 18 + (−3) = 15 என்றும் காணலாம்.)
பாடம்:
திறனறிவு
Q131
ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹ 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
- A. ₹ 3,000
- B. ₹ 4,000சரி
- C. ₹ 4,500
- D. ₹ 5,000
விளக்கம். சேமிப்புகள் பொது விகிதம் 1/2 உடைய பெருக்குத்தொடர்: x × 63/32 = 7875. எனவே x = 7875 × 32 ÷ 63 = ₹4,000.
பாடம்:
திறனறிவு
Q132
ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
- A. ₹ 2,160
- B. ₹ 3,120
- C. ₹ 3,972சரி
- D. ₹ 6,240
விளக்கம். வட்டி வீதம் = 60% ÷ 6 = ஆண்டுக்கு 10%. தொகை = 12000 × (1.1)³ = 15972; கூட்டு வட்டி = 15972 − 12000 = ₹3,972.
பாடம்:
திறனறிவு
Q133
ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
- A. 96,300
- B. 1,03,000
- C. 1,00,000
- D. 1,03,041சரி
விளக்கம். மக்கள் தொகை = 90000 × (1.07)² = 90000 × 1.1449 = 1,03,041.
பாடம்:
திறனறிவு
Q134
86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
- A. 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்சரி
- B. பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
- C. தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
- D. இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
விளக்கம். 2002-ஆம் ஆண்டு 86-வது திருத்தம் சட்டப்பிரிவு 51A(k)-ஐச் சேர்த்தது: 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை. மற்ற விருப்பங்கள் 1976-இல் சேர்க்கப்பட்ட கடமைகள்.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பில் இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q135
கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி – சின்னம்
1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் – இரு பூக்கள் மற்றும் புற்கள்
2. தேசியவாத காங்கிரஸ் கட்சி – கடிகாரம்
3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி – கார்
4. அஸாம் கண பரிஷத் – பூட்டு மற்றும் சாவி
- A. 1 இணை
- B. 2 இணைகள்
- C. 3 இணைகள்சரி
- D. 4 இணைகள்
விளக்கம். 1, 2, 3 ஆகிய இணைகள் சரி. அஸாம் கண பரிஷத்தின் சின்னம் யானை; பூட்டு மற்றும் சாவி அல்ல. எனவே 3 இணைகள் மட்டுமே சரி.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q136
இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
- A. (i) மற்றும் (ii) மட்டும்சரி
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (ii) மற்றும் (iii) மட்டும்
- D. (i), (ii) மற்றும் (iii)
விளக்கம். நீதிப்புனராய்வு அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டது; ஒன்றிய, மாநில சட்டங்கள் இரண்டையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யலாம். 13B என்ற சட்டப்பிரிவு இல்லை; சில சட்டங்களைப் பாதுகாப்பது சட்டப்பிரிவு 31B (ஒன்பதாவது அட்டவணை). எனவே (iii) தவறு.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q137
பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
- A. சட்டப்பிரிவு 23 மற்றும் 226
- B. சட்டப்பிரிவு 32 மற்றும் 228
- C. சட்டப்பிரிவு 226 மற்றும் 36
- D. சட்டப்பிரிவு 32 மற்றும் 226சரி
விளக்கம். சட்டப்பிரிவு 32 உச்ச நீதிமன்றத்திற்கும், சட்டப்பிரிவு 226 உயர் நீதிமன்றங்களுக்கும் பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை அளிக்கின்றன.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q138
“தந்தை மகற்காற்றும் நன்றி”
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
- A. அவையில் முந்தியிருக்கச் செய்தல்சரி
- B. செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
- C. குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
- D. நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
விளக்கம். “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்பது குறள். கற்றோர் அவையில் மகனை முதன்மையாக இருக்கச் செய்வதே தந்தையின் கடமை.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q139
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
- A. சார்லஸ் மேசன்
- B. அலெக்சாண்டர் பர்ன்ஸ்
- C. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்சரி
- D. சர் ஜான் மார்ஷல்
விளக்கம். 1861-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தொடங்கப்பட்டபோது அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அதன் முதல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவர் இந்தியத் தொல்லியலின் தந்தை எனப்படுகிறார்.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q140
குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
- A. அரிவாள் இரத்த சோகை
- B. டவுன் சின்ட்ரோம்சரி
- C. க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
- D. தலசீமியா
விளக்கம். 21-வது குரோமோசோம் மூன்று நகல்களாக இருப்பது (டிரைசோமி 21) டவுன் சின்ட்ரோம் ஆகும். க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம் XXY நிலை; அரிவாள் இரத்த சோகை, தலசீமியா ஆகியவை ஹீமோகுளோபின் மரபணுக் குறைபாடுகள்.
பாடம்:
பொது அறிவியல்
Q141
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் – வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் – அசோகர்
(3) எல்லோரா குகைகள் – ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
- A. 1, 3, 4 சரியானதுசரி
- B. 2, 3, 4 சரியானது
- C. 4, 3, 2 சரியானது
- D. 4, 1, 2 சரியானது
விளக்கம். பட்டடக்கல் கோயில்கள் வாதாபி சாளுக்கியர்களுடையவை; எல்லோரா கைலாசநாதர் கோயில் ராஷ்டிரக்கூடர்களுடையது; மாமல்லபுரம் முதலாம் நரசிம்மவர்மனின் (மாமல்லன்) பெயரால் அமைந்தது. எலிபெண்டா குகைகள் அசோகருடையவை அல்ல.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q142
“இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்” எனக் கூறியவர்
- A. மகாத்மா காந்தி
- B. ஜவஹர்லால் நேருசரி
- C. Dr. B.R. அம்பேத்கர்
- D. சர் சையது அகமதுகான்
விளக்கம். இக்கூற்று ஜவஹர்லால் நேருவுடையது; ஒரே தேசியக் கண்ணோட்டம் கொண்ட சமயச்சார்பற்ற இந்தியா என்ற அவரது கருத்தை இது வெளிப்படுத்துகிறது.
பாடம்:
இந்திய தேசிய இயக்கம்
Q143
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
- A. (i), (iii) மற்றும் (iv) மட்டும்
- B. (i) மற்றும் (ii) மட்டும்சரி
- C. (ii) மற்றும் (iii) மட்டும்
- D. (ii) மற்றும் (iv) மட்டும்
விளக்கம். (i), (ii) சரி. கங்கைச் சமவெளி யமுனையிலிருந்து கிழக்கே வங்காளதேச எல்லை வரை பரவியுள்ளது, மிசோரம் வரை அல்ல; பிரம்மபுத்திரா சமவெளி பெரும்பாலும் அசாமில் உள்ளது, மேகாலயாவில் அல்ல.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q144
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் :
வாக்கியம் 1 : கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2 : அலையாத்திக் காடுகள் “மாங்குரோவ்” காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
- A. இரண்டு வாக்கியங்களும் சரிசரி
- B. இரண்டு வாக்கியங்களும் தவறு
- C. வாக்கியம் 1 சரி; 2 தவறு
- D. வாக்கியம் 1 தவறு; 2 சரி
விளக்கம். கங்கை-பிரம்மபுத்திரா டெல்டாவில் உள்ள சுந்தரவனக் காடுகளே மிகப்பெரிய அலையாத்திக் காடுகள்; அலையாத்திக் காடுகள் மாங்குரோவ் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டும் சரி.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q145
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
விருதுகள் – அங்கீகாரம்
(a) பெருந்தலைவர் காமராசர் விருது – 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
(b) புதுமைப் பள்ளி விருது – 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது
(c) கனவு ஆசிரியர் விருது – 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
(d) ராதா கிருஷ்ணன் விருது – 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
- A. (a)-4, (b)-3, (c)-1, (d)-2
- B. (a)-2, (b)-3, (c)-1, (d)-4சரி
- C. (a)-1, (b)-2, (c)-4, (d)-3
- D. (a)-3, (b)-4, (c)-2, (d)-1
விளக்கம். பெருந்தலைவர் காமராசர் விருது சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சிறந்த ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகின்றன. விடைக்குறிப்பின்படி புதுமைப் பள்ளி விருது பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதலுடனும், கனவு ஆசிரியர் விருது பள்ளிச் சேர்க்கை அதிகரிப்புடனும் பொருந்துகின்றன.
பாடம்:
தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
Q146
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள் – இடம்
(a) மஞ்சள் – 1. மதுரை
(b) பாய் – 2. ஈரோடு
(c) வண்ணப்பூச்சு (ஓவியம்) – 3. பத்தமடை
(d) சுங்குடி – 4. தஞ்சாவூர்
- A. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
- B. (a)-2, (b)-3, (c)-4, (d)-1சரி
- C. (a)-1, (b)-3, (c)-2, (d)-4
- D. (a)-2, (b)-1, (c)-4, (d)-3
விளக்கம். ஈரோடு மஞ்சள், பத்தமடை பாய், தஞ்சாவூர் ஓவியம், மதுரை சுங்குடி ஆகியவை புவிசார் குறியீடு பெற்றவை. எனவே (a)-2, (b)-3, (c)-4, (d)-1.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q147
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ______ எனப்படும்.
- A. சமுதாய நல்லிணக்கம்
- B. தேசிய ஒருங்கிணைப்புசரி
- C. பெண்கள் முன்னேற்றம்
- D. சமுதாய நலம்
விளக்கம். நாட்டின் பல்வேறு சமுதாயங்களிடையே சமூக, கல்வி, உளவியல் நலனில் ஒற்றுமை உணர்வு நிலவுவதே தேசிய ஒருங்கிணைப்பு.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q148
தேசிய ஊராட்சி நாள் ______ ஆகும்.
- A. டிசம்பர் 24
- B. ஆகஸ்ட் 24
- C. ஏப்ரல் 24சரி
- D. செப்டம்பர் 24
விளக்கம். 73-வது அரசியலமைப்புத் திருத்தம் 1993 ஏப்ரல் 24 அன்று நடைமுறைக்கு வந்தது. அதனால் ஏப்ரல் 24 தேசிய ஊராட்சி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q149
“இழுக்கா இயன்றது அறம்” – எவை?
- A. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்சரி
- B. அறம், பொருள், இன்பம், வீடு
- C. மகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி
- D. காமம், வெகுளி, மயக்கம், வினை
விளக்கம். “அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்பது குறள். பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி வாழ்வதே அறம்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q150
சரியான இணைகளைத் தேர்வு செய்க.
1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள்
2. கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு
3. குயிலி – புலித்தேவர்
4. முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்
- A. 1 மற்றும் 3 சரி
- B. 1 மற்றும் 2 சரி
- C. 2 மற்றும் 3 சரி
- D. 2 மற்றும் 4 சரிசரி
விளக்கம். கோபால நாயக்கர் திண்டுக்கல் கூட்டமைப்பை வழிநடத்தினார்; முத்துவடுகநாதர் 1772 காளையார் கோவில் போரில் உயிர் நீத்தார். ஒண்டிவீரன் புலித்தேவரின் படைத்தலைவர், குயிலி வேலுநாச்சியாரின் படையைச் சேர்ந்தவர்; எனவே 1, 3 தவறு.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q151
ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
- A. ஊருணிசரி
- B. கடல்
- C. ஆறு
- D. ஏரி
விளக்கம். "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு" (குறள் 215) என்று, உலகை விரும்பும் அறிவாளனின் செல்வம் எல்லோருக்கும் பயன்படும் நீர் நிறைந்த ஊருணி போன்றது என்கிறார் வள்ளுவர்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q152
தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ______ அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
- A. சென்னைத் துறைமுகக் கழகம்
- B. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
- C. நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
- D. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்சரி
விளக்கம். சென்னை அருகே (மப்பேடு) அமையும் பல்முனைய சரக்குப் பூங்கா, நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட், சென்னைத் துறைமுகக் கழகம், மாநிலத் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி; சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதில் பங்குதாரர் அல்ல.
பாடம்:
நடப்பு நிகழ்வுகள்
Q153
2021ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை" வென்றவர் யார்?
- A. தாமோதர் மௌசோ
- B. கிருஷ்ணா சோப்தி
- C. அமிதவ் கோஷ்
- D. நில்மணி பூக்கன்சரி
விளக்கம். 2021 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட 56ஆவது ஞானபீட விருது (2021ஆம் ஆண்டுக்கானது) அசாமியக் கவிஞர் நீல்மணி பூக்கனுக்கும், 57ஆவது விருது (2022ஆம் ஆண்டுக்கானது) கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மௌசோவுக்கும் வழங்கப்பட்டது. எனவே 2021 விருது பெற்றவர் நீல்மணி பூக்கன். TNPSC இறுதி விடைக்குறிப்பு தற்காலிக விடை (A)-ஐ (D) என மாற்றியது.
பாடம்:
நடப்பு நிகழ்வுகள்
Q154
இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
- A. 334, 342A மற்றும் 366
- B. 338B, 341 மற்றும் 363
- C. 338B, 342A மற்றும் 366சரி
- D. 333, 341A மற்றும் 362
விளக்கம். அரசமைப்பு (105ஆவது திருத்தம்) சட்டம், 2021 – கூறுகள் 338B, 342A, 366 ஆகியவற்றைத் திருத்தி, சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீண்டும் வழங்கியது.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q155
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
(i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே "Om" எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
(ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி "Om"
(iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி "Om"
- A. (i) மற்றும் (ii) மட்டும்
- B. (ii) மற்றும் (iii) மட்டும்
- C. (i) மற்றும் (iii) மட்டும்
- D. (i), (ii) மற்றும் (iii) அனைத்தும்சரி
விளக்கம். லக்னோவில் உள்ள CDRI ஒமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிய "Om" என்ற ஆர்டி-பிசிஆர் கருவியை உருவாக்கியது. இது அரசு நிறுவனம் உருவாக்கிய முதல் கருவியும், உள்நாட்டில் தயாரான மூன்றாவது ஒமிக்ரான் சோதனைக் கருவியும் ஆகும்; எனவே மூன்றும் சரி.
பாடம்:
நடப்பு நிகழ்வுகள்
Q156
தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
- A. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
- B. கிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி
- C. நர்மதை, தபதி மற்றும் மாஹிசரி
- D. மாஹி, மகாநதி மற்றும் கோதாவரி
விளக்கம். நர்மதை, தபதி, மாஹி ஆகியவை மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன; மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q157
சரியான இணையைக் கண்டுபிடி.
- A. நியூக்ளியோசைடு – நைட்ரஜன் காரம் + பாஸ்பேட்
- B. பிரிமிடின்கள் – சைட்டோசின் மற்றும் சர்க்கரை
- C. பியூரின்கள் – அடினைன் மற்றும் குவானைன்சரி
- D. நியூக்ளியோடைடு – நியூக்ளியோசைடு + சர்க்கரை
விளக்கம். அடினைன், குவானைன் ஆகியவை பியூரின் காரங்கள். நியூக்ளியோசைடு = நைட்ரஜன் காரம் + சர்க்கரை; நியூக்ளியோடைடு = நியூக்ளியோசைடு + பாஸ்பேட்; சைட்டோசின், தைமின், யூராசில் ஆகியவை பிரிமிடின்கள்.
பாடம்:
பொது அறிவியல்
Q158
மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
- A. ஷேல் வாயுசரி
- B. கோபர் வாயு
- C. நீர் வாயு
- D. ஆக்சிஜன் வாயு
விளக்கம். ஷேல் என்பது மென்மையான, மெல்லிய அடுக்குகளைக் கொண்ட வண்டல் பாறை; அதன் துளைகளில் சிக்கியுள்ள இயற்கை வாயு ஷேல் வாயு எனப்படும்.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q159
கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
கூட்டுப்பொருள் – வினைபடு தொகுதி
(a) ஆல்கஹால் – 1. –COOH
(b) ஆல்டிஹைடு – 2. –OH
(c) கீட்டோன் – 3. –CHO
(d) கார்பாக்ஸிலிக் அமிலம் – 4. –C(=O)–
- A. (a)-2, (b)-1, (c)-3, (d)-4
- B. (a)-2, (b)-3, (c)-1, (d)-4
- C. (a)-3, (b)-2, (c)-4, (d)-1
- D. (a)-2, (b)-3, (c)-4, (d)-1சரி
விளக்கம். ஆல்கஹாலில் –OH, ஆல்டிஹைடில் –CHO, கீட்டோனில் இரு கார்பன்களுக்கு இடையே –C(=O)– கார்போனைல் தொகுதி, கார்பாக்ஸிலிக் அமிலத்தில் –COOH உள்ளன.
பாடம்:
பொது அறிவியல்
Q160
வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?
- A. நியூட்டனின் முதல் விதி
- B. நியூட்டனின் இரண்டாம் விதி
- C. பாஸ்கல் விதிசரி
- D. மேற்கண்ட அனைத்தும்
விளக்கம். மூடிய திரவத்தின் மீது செலுத்தப்படும் அழுத்தம் எல்லாத் திசைகளிலும் சமமாகப் பரவும் என்ற பாஸ்கல் விதிப்படி நீரியல் உயர்த்தி இயங்குகிறது; சிறிய விசையால் பெரிய சுமையைத் தூக்க முடிகிறது.
பாடம்:
பொது அறிவியல்
Q161
கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
- A. F = m × a
- B. F = ΔP × tசரி
- C. F = m(v – u)/t
- D. F = ΔP/t
விளக்கம். விசை என்பது உந்த மாறுபாட்டு வீதம்: F = ΔP/t = m(v – u)/t = ma. ΔP × t என்பது விசையின் பரிமாணத்தைத் தராது; எனவே அது தவறான சமன்பாடு.
பாடம்:
பொது அறிவியல்
Q162
கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு – 1. பளபளப்பான தோற்றம்
(b) உணவு நிறமூட்டிகள் – 2. பால்
(c) கால்சியம் கார்பைடு – 3. பசுமைத் தோற்றம்
(d) கார்னோபா மெழுகு – 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு
- A. (a)-1, (b)-3, (c)-4, (d)-2
- B. (a)-2, (b)-3, (c)-4, (d)-1சரி
- C. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
- D. (a)-4, (b)-1, (c)-2, (d)-3
விளக்கம். பால் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்க்கப்படுகிறது; காய்கறிகளுக்குப் பசுமைத் தோற்றம் தர நிறமூட்டிகள்; வாழைப்பழத்தை செயற்கையாகப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு; பழங்களுக்குப் பளபளப்பு தர கார்னோபா மெழுகு.
பாடம்:
பொது அறிவியல்
Q163
பொருத்துக :
(a) சிவசுப்ரமணியனார் – 1. கயத்தாறு கோட்டை
(b) கட்டபொம்மன் – 2. சங்ககிரி கோட்டை
(c) மருது சகோதரர்கள் – 3. நாகலாபுரம்
(d) தீரன் சின்னமலை – 4. திருப்பத்தூர் கோட்டை
- A. (a)-3, (b)-1, (c)-4, (d)-2சரி
- B. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
- C. (a)-3, (b)-1, (c)-2, (d)-4
- D. (a)-4, (b)-1, (c)-3, (d)-2
விளக்கம். சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்; கட்டபொம்மன் கயத்தாற்றிலும், மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையிலும், தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையிலும் தூக்கிலிடப்பட்டனர்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q164
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
- A. சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்
- B. சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்
- C. சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்சரி
- D. 1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்
விளக்கம். சிவாஜி சூரத்தை முதன்முதலில் 1664இல் (மீண்டும் 1670இல்) சூறையாடினார்; 1665 அல்ல. எனவே (C) தவறான கூற்று. தாதாஜி கொண்டதேவ் அவரது பாதுகாவலர்; 1674இல் சத்ரபதியாக முடிசூடினார்.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பு (B), (C) ஆகியவற்றைச் சரியான விடைகளாக ஏற்கிறது.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q165
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
- A. 1 மற்றும் 2 மட்டும் சரி
- B. 1, 2 மற்றும் 3 மட்டும் சரி
- C. 2 மற்றும் 3 மட்டும் சரி
- D. 2, 3 மற்றும் 4 மட்டும் சரிசரி
விளக்கம். பாரதியின் 'இந்தியா' இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக இருந்தது; எனவே கூற்று 1 தவறு. 1907 சூரத் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார், சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் இதழ்களில் பணியாற்றினார், தி இந்து நாளிதழைத் தொடங்கியவர் G. சுப்ரமணிய ஐயர்.
பாடம்:
இந்திய தேசிய இயக்கம்
Q166
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
(i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
- A. (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
- B. (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரிசரி
- C. (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
- D. (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விளக்கம். ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப்பிரிவு ஒன்றை வழிநடத்தினார், கட்டபொம்மனுடையதை அல்ல; எனவே (iv) தவறு. மற்ற மூன்று கூற்றுகளும் சரி.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q167
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
- A. ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
- B. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
- C. வ.உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
- D. கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.சரி
விளக்கம். தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் வ.உ.சி. நிறுவனத்தைத் தொடங்கினார் என்று பத்தி கூறுகிறது. வருமானம் பற்றியோ, ஏகபோகம் நின்றது பற்றியோ, அவர் பிறரைச் சார்ந்திருந்தது பற்றியோ பத்தியில் இல்லை.
பாடம்:
இந்திய தேசிய இயக்கம்
Q168
குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
(a) சேத்ரா – 1. தரிசு நிலம்
(b) கிலா – 2. வேளாண்மைக்கு உகந்த நிலம்
(c) அப்ரகதா – 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்
(d) வஸ்தி – 4. வன நிலம்
- A. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
- B. (a)-4, (b)-2, (c)-1, (d)-3
- C. (a)-2, (b)-1, (c)-4, (d)-3சரி
- D. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
விளக்கம். குப்தர் காலத்தில் சேத்ரா – வேளாண் நிலம், கிலா – தரிசு நிலம், அப்ரகதா – வன நிலம், வஸ்தி – குடியிருப்பு நிலம் என வகைப்படுத்தப்பட்டன.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q169
கீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது?
I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.
- A. II மற்றும் III மட்டும்
- B. II மட்டும்சரி
- C. I மட்டும்
- D. I மற்றும் II மட்டும்
விளக்கம். நிதி ஆயோக்கின் தலைவர் பிரதமர். ஆளும் குழுவில் அனைத்து மாநில முதல்வர்களும் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேச முதல்வர்களும் உள்ளனர்; எனவே I தவறு. துணைத் தலைவரைப் பிரதமர் நியமிக்கிறார், நிதியமைச்சர் அல்ல; எனவே III தவறு.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q170
கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
- A. (A) தவறு; (R) சரி
- B. (A) சரி; ஆனால் (R) தவறு
- C. (A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
- D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்சரி
விளக்கம். ரிசர்வ் வங்கி தனது பணக் கொள்கை மூலம் பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது; விலைவாசியையும் செலாவணி விகிதத்தையும் நிலைப்படுத்துவதே அதன் நோக்கம். எனவே R, A-க்குச் சரியான விளக்கம்.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q171
கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
- A. (A) சரி; ஆனால் (R) தவறு
- B. (A) தவறு; ஆனால் (R) சரி
- C. (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்சரி
- D. (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
விளக்கம். சொட்டு நீர், தெளிப்பு நீர் போன்ற நுண்ணீர் பாசனத்தில் அளவான நீர் சீரான இடைவெளியில் கிடைக்கிறது, கூலிச் செலவு குறைகிறது, உரப் பயன்பாட்டுத் திறன் கூடுகிறது; இவையே அதிக மகசூலுக்குக் காரணம். எனவே R, A-க்குச் சரியான விளக்கம்.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q172
கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
- A. 12
- B. 13
- C. 14
- D. 15சரி
விளக்கம். மூலைகள் வாரியாக எண்ணுக. இடது முனையைக் கொண்டவை: 5. மேல்-இடது மூலையைக் கொண்டவை (இடது முனை இல்லாமல்): 5. கீழ்-இடது மூலையைக் கொண்டவை (முந்தையவை இல்லாமல்): 2. மேல்-வலது மூலையைக் கொண்டவை (முந்தையவை இல்லாமல்): 2. வலப்பக்க நடுப்புள்ளியும் இரு வெட்டுப்புள்ளிகளும் சேர்ந்தது: 1. மொத்தம் = 5 + 5 + 2 + 2 + 1 = 15.
பாடம்:
திறனறிவு
Q173
3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது?
விளக்கம். இரு தோற்றங்களிலும் 2, 5 அடுத்தடுத்த தளங்கள். 3-உம் 4-உம் 2, 5 இரண்டையும் தொடுகின்றன. அடுத்தடுத்த இரு தளங்களையும் தொடும் தளங்கள் இரண்டே; அவை ஒன்றுக்கொன்று எதிரானவை. எனவே 3-க்கு எதிரே 4.
பாடம்:
திறனறிவு
Q174
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
49, 121, 169, ?, 361
- A. 225
- B. 256
- C. 289சரி
- D. 324
விளக்கம். தொடர்ச்சியான பகா எண்களின் வர்க்கங்கள்: 7² = 49, 11² = 121, 13² = 169, 17² = 289, 19² = 361.
பாடம்:
திறனறிவு
Q175
ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.
- A. 74 செ.மீ.²
- B. 96 செ.மீ.²
- C. 60 செ.மீ.²சரி
- D. 56 செ.மீ.²
விளக்கம். மற்றொரு பக்கம் = √(13² – 5²) = √(169 – 25) = √144 = 12 செ.மீ. பரப்பு = 5 × 12 = 60 செ.மீ.²
பாடம்:
திறனறிவு
Q176
ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ. 1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
- A. 19சரி
- B. 21
- C. 24
- D. 29
விளக்கம். தின ஊதியம் இரு தொகைகளையும் வகுக்க வேண்டும்: மீ.பொ.வ(1387, 1752) = 73 (1387 = 19 × 73, 1752 = 24 × 73). எனவே அவர் வேலை செய்த நாட்கள் 1387 ÷ 73 = 19.
பாடம்:
திறனறிவு
Q177
கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
- A. 75சரி
- B. 125
- C. 375
- D. 450
விளக்கம். எண்களை 5a, 5b, 5c என்க: 125 × abc = 1875, எனவே abc = 15 = 1 × 3 × 5. எண்கள் 5, 15, 25; இவற்றின் மீ.பொ.ம 75.
பாடம்:
திறனறிவு
Q178
ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி
- A. 28
- B. 30சரி
- C. 36
- D. 40
விளக்கம். முதல் பகுதி x என்க. (x/5) : ((94 − x)/8) = 3 : 4 ⇒ 32x = 15(94 − x) ⇒ 47x = 1410 ⇒ x = 30.
பாடம்:
திறனறிவு
Q179
எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
↓ ↓ ↓ ↓ ↓ ↓
1 2 3 4 5 6
- A. 625314
- B. 462531சரி
- C. 462315
- D. 542531
விளக்கம். எழுத்துகளை மாற்றியமைத்தால் NUMBER கிடைக்கும்: N = 4, U = 6, M = 2, B = 5, E = 3, R = 1; குறியீடு 462531.
பாடம்:
திறனறிவு
Q180
100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
- A. 1சரி
- B. 100
- C. 10
- D. 9
விளக்கம். இது ஒரு புதிர் வினா: 100-லிருந்து 10-ஐ ஒரு முறை மட்டுமே கழிக்க முடியும்; அதன் பின் கழிப்பது 90-லிருந்து தான்.
பாடம்:
திறனறிவு
Q181
முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
- A. 2½ நாட்கள்
- B. 3½ நாட்கள்சரி
- C. 4½ நாட்கள்
- D. 5½ நாட்கள்
விளக்கம். நாட்கள் = 1 ÷ (2/7) = 7/2 = 3½ நாட்கள்.
பாடம்:
திறனறிவு
Q182
ஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
- A. ₹ 4,500
- B. ₹ 15,500
- C. ₹ 17,000
- D. ₹ 24,500சரி
விளக்கம். தனி வட்டி = 20000 × 4.5 × 5 ÷ 100 = ₹ 4,500. செலுத்த வேண்டிய தொகை = 20,000 + 4,500 = ₹ 24,500.
பாடம்:
திறனறிவு
Q183
₹ 1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹ 13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
- A. 0.1%
- B. 0.2%
- C. 0.3%சரி
- D. 0.4%
விளக்கம். 1500 × 3 × d ÷ 100 = 13.50 ⇒ 45d = 13.5 ⇒ d = 0.3%.
பாடம்:
திறனறிவு
Q184
தவறாக பொருந்தியுள்ளது எது?
- A. அரசியல் அமைப்பு பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- B. அரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்புசரி
- C. அரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை
- D. அரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
விளக்கம். பிரிவு 17 தீண்டாமையை ஒழிக்கிறது. பொது வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு பிரிவு 16-இல் உள்ளது; எனவே (B) தவறான இணை.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q185
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.
- A. மாக்னா சாசனம், 1215
- B. பட்டயச் சட்டம், 1813
- C. அறிவுறுத்தல் செயற்கருவி, 1935சரி
- D. ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
விளக்கம். 1935 இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் ஆவணங்களை (Instrument of Instructions) ஒத்தவை வழிகாட்டு நெறிமுறைகள் என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q186
பொருத்துக:
(a) சர்க்காரியா ஆணையம் – 1. தமிழ்நாடு அரசாங்கம்
(b) இராஜமன்னார் குழு – 2. அகாலி தளம்
(c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் – 3. உச்சநீதிமன்றம்
(d) பொம்மை தீர்ப்பு – 4. மத்திய அரசாங்கம்
- A. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
- B. (a)-4, (b)-1, (c)-2, (d)-3சரி
- C. (a)-2, (b)-1, (c)-3, (d)-4
- D. (a)-3, (b)-2, (c)-4, (d)-1
விளக்கம். சர்க்காரியா ஆணையத்தை (1983) மத்திய அரசும், இராஜமன்னார் குழுவை (1969) தமிழ்நாடு அரசும் அமைத்தன. அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் (1973) அகாலி தளத்தால் நிறைவேற்றப்பட்டது; எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பு (1994) உச்சநீதிமன்றம் வழங்கியது.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q187
கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் – 1. 1980
(b) சட்ட அளவியல் சட்டம் – 2. 1955
(c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் – 3. 2009
(d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் – 4. 1986
- A. (a)-4, (b)-3, (c)-2, (d)-1சரி
- B. (a)-1, (b)-2, (c)-3, (d)-4
- C. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
- D. (a)-4, (b)-1, (c)-3, (d)-2
விளக்கம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, சட்ட அளவியல் சட்டம் 2009, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்புச் சட்டம் 1980.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q188
பொருத்துக.
(a) வராகமிகிரர் – 1. மருத்துவர்
(b) காளிதாசர் – 2. அகராதியியல் ஆசிரியர்
(c) அமரசிம்ஹா – 3. சமஸ்கிருத புலவர்
(d) தன்வந்திரி – 4. வானியல் அறிஞர்
- A. (a)-4, (b)-3, (c)-1, (d)-2
- B. (a)-4, (b)-2, (c)-1, (d)-3
- C. (a)-4, (b)-3, (c)-2, (d)-1சரி
- D. (a)-3, (b)-4, (c)-1, (d)-2
விளக்கம். வராகமிகிரர் வானியல் அறிஞர், காளிதாசர் சமஸ்கிருதப் புலவர், அமரசிம்ஹர் அமரகோசம் என்ற அகராதியை எழுதியவர், தன்வந்திரி மருத்துவர்.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q189
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ________ என்பவரால் கொண்டு வரப்பட்டது.
- A. புனித பீட்டர்
- B. புனித ஜான்
- C. புனித மேத்யூ
- D. புனித தாமஸ்சரி
விளக்கம். மரபுப்படி, இயேசுவின் சீடரான புனித தாமஸ் கி.பி. முதல் நூற்றாண்டில் மலபார் கடற்கரைக்கு வந்து கிறித்துவத்தைப் பரப்பினார்.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q190
கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்
- A. 2, 3, 4, 1
- B. 3, 1, 4, 2
- C. 4, 2, 3, 1
- D. 4, 1, 2, 3சரி
விளக்கம். தமிழ் 2004-இல், சமஸ்கிருதம் 2005-இல், தெலுங்கு 2008-இல், மலையாளம் 2013-இல் செம்மொழித் தகுதி பெற்றன.
பாடம்:
இந்திய வரலாறும் பண்பாடும்
Q191
பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
- A. ஹிரன்சரி
- B. பர்னர்
- C. பஞ்சர்
- D. தவா
விளக்கம். ஹிரன் ஆறு நர்மதையுடன் வலது (வடக்கு) கரையில் இணைகிறது. பர்னர், பஞ்சர், தவா ஆகியவை இடது கரை துணை ஆறுகள்.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q192
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
(a) கீழடி – 1. தூத்துக்குடி
(b) கொற்கை – 2. அரியலூர்
(c) கங்கை கொண்ட சோழபுரம் – 3. தஞ்சாவூர்
(d) குரும்பன்மேடு – 4. சிவகங்கை
- A. (a)-4, (b)-3, (c)-2, (d)-1
- B. (a)-3, (b)-2, (c)-1, (d)-4
- C. (a)-4, (b)-1, (c)-2, (d)-3சரி
- D. (a)-1, (b)-4, (c)-3, (d)-2
விளக்கம். கீழடி சிவகங்கை மாவட்டத்திலும், கொற்கை தூத்துக்குடியிலும், கங்கைகொண்ட சோழபுரம் அரியலூரிலும், குரும்பன்மேடு தஞ்சாவூரிலும் உள்ளன.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q193
இந்தியாவின் 'மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
- A. ஹைதராபாத்
- B. பெங்களூருசரி
- C. சென்னை
- D. டெல்லி
விளக்கம். மின்னணு மற்றும் மென்பொருள் தொழில்களின் மையமான பெங்களூரு இந்தியாவின் மின்னியல் தலைநகரம் (சிலிக்கான் பள்ளத்தாக்கு) என அழைக்கப்படுகிறது.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q194
ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக.
(a) கால்வனோ மீட்டர் – 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b) வோல்ட் மீட்டர் – 2. மின்னோட்டத்தை அளவிட
(c) அம்மீட்டர் – 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d) மின்தடையாக்கி – 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய
- A. (a)-4, (b)-3, (c)-2, (d)-1சரி
- B. (a)-2, (b)-3, (c)-1, (d)-4
- C. (a)-4, (b)-2, (c)-3, (d)-1
- D. (a)-2, (b)-3, (c)-4, (d)-1
விளக்கம். கால்வனோமீட்டர் மின்னோட்டத்தையும் அதன் திசையையும் கண்டறியும்; வோல்ட்மீட்டர் மின்னழுத்த வேறுபாட்டையும், அம்மீட்டர் மின்னோட்டத்தையும் அளவிடும்; மின்தடையாக்கி மின்னோட்டத்தின் அளவை நிர்ணயிக்கும்.
பாடம்:
பொது அறிவியல்
Q195
முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
- A. 1964
- B. 1946
- C. 1968சரி
- D. 1986
விளக்கம். கோத்தாரி கல்விக் குழுவின் (1964–66) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் தேசியக் கல்விக் கொள்கை 1968-இல் உருவாக்கப்பட்டது; இரண்டாவது 1986-இல்.
பாடம்:
இந்தியப் பொருளாதாரம்
Q196
வலியுறுத்தல் (A): சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R): இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.
- A. (A) உண்மை (R) தவறு
- B. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
- C. (A) தவறு (R) உண்மை
- D. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.சரி
விளக்கம். இரண்டு கூற்றுகளும் உண்மை. கோவிட் காலத்தில் வழக்கமான சுகாதாரச் சேவைகளையும் தொடர்ந்து வழங்கியது மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் கொள்கையின் விளைவு; மருத்துவர்–நோயாளி விகிதம் மட்டும் அதற்கான விளக்கம் அல்ல.
பாடம்:
தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
Q197
மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
(i) தர்மபுரி
(ii) ஈரோடு
(iii) வேலூர்
(iv) கோயம்புத்தூர்
- A. (i), (ii), (iii), (iv)
- B. (ii), (iv), (i), (iii)
- C. (iv), (i), (ii), (iii)
- D. (i), (iv), (ii), (iii)சரி
விளக்கம். அதிகாரப்பூர்வ விடையின்படி காடுகளின் பரப்பு இறங்குவரிசை: தர்மபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, வேலூர்.
குறிப்பு: TNPSC இறுதி விடைக்குறிப்பில் இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
பாடம்:
இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்
Q198
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
(1) வாக்களிக்கும் உரிமை
(2) அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
(3) அரசை விமர்சிக்கக் கூடாது
- A. (1) மற்றும் (2)
- B. (1) மற்றும் (3)
- C. (2) மற்றும் (3)
- D. (3) மட்டும்சரி
விளக்கம். வாக்களித்தல், தேர்தலில் போட்டியிடுதல், அரசுப் பதவி வகித்தல், அரசை விமர்சித்தல் ஆகியவை அரசியல் உரிமைகள். எனவே (3) மட்டுமே தவறு.
பாடம்:
இந்திய ஆட்சியியல்
Q199
நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
(1) செல்வம்
(2) இன்பம்
(3) ஏமம்
(4) பிணியின்மை
(5) விளைவு
- A. (4), (1), (5), (2), (3)சரி
- B. (1), (2), (3), (4), (5)
- C. (4), (3), (5), (2), (1)
- D. (1), (4), (3), (5), (2)
விளக்கம். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து" (குறள் 738) – பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் என்ற வரிசையில் வருகின்றன.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்
Q200
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
- A. அன்பும் அறனும்
- B. பணிவும் இன்சொல்லும்சரி
- C. அறிவும் ஆற்றலும்
- D. இல்லறமும் துறவறமும்
விளக்கம். "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" (குறள் 95) – பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு உண்மையான அணிகலன்கள்.
பாடம்:
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்