TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

வேதிவினை வேகவியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 38 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\(A \rightarrow B\) என்ற முதல் வகை வினையின் வினைவேக மாறிலி \(x\) \(min^{-1}\). A ன் துவக்கச் செறிவு \(0.01M\) எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு
Q2
\(X \rightarrow\) விளைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு \(0.02M\) மேலும் அரை வாழ்காலம் \(10 min\). \(0.04M\) துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம்
Q3
A \(\longrightarrow\) விளைபொருள் என்ற முதல் வகை வினையில் தொடக்கச் செறிவு \(x\) mol L\(^{-1}\) மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு தொடக்கச் செறிவு \(\frac{x}{2}\) mol L\(^{-1}\) ஆக இருப்பின், அரை வாழ் காலம்.
Q4
\(2NH_3 \longrightarrow N_2 + 3H_2\) என்ற வினைக்கு \(-\frac{d[NH_3]}{dt} = k_1 [NH_3]\), \(\frac{d[N_2]}{dt} = k_2 [NH_3]\), \(\frac{d[H_2]}{dt} = k_3 [NH_3]\) எனில், \(k_1, k_2\) மற்றும் \(k_3\) ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பு
Q5
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (\(PH_3\)) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் (NEET)
Q6
ஒரு வினைக்கு, வினைவேகம் = k[அசிட்டோன்]\(^{3/2}\) எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே
Q7
ஒரு வேதிவினையின் போது வினைவேக மாற்றியைச் சேர்ப்பது பின்வரும் எந்த அளவை மாற்றுகிறது? (NEET)
Q8
பின்வரும் கூற்றுகளைக் கருதுக. (i) வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பானது, பூஜ்ய வகை வினையின் வினைவேகத்தினை அதிகரிக்கிறது. (ii) \(E_a = 0\) எனில், வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது. (iii) \(E_a = \infty\) எனும் போது, வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது. (iv) ln k vs T வரைபடம் ஒரு நேர்கோடாகும். (v) ln k vs 1/T வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர் கோடாகும். சரியான கூற்றுகளாவன
Q9
ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே \(-x\) மற்றும் \(y\) kJ mol\(^{-1}\) ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்
Q10
வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 JK\(^{-1}\)mol\(^{-1}\))
Q11
இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி \(2.303 \times 10^{-2}\) hour\(^{-1}\). வளையபுரப்பேனின் துவக்கச் செறிவு 0.25 M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன?
Q12
ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 6.909 min\(^{-1}\) எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்களில்)
Q13
x \(\rightarrow\) y என்ற முதல் வகை வினையில் k என்பது வினைவேக மாறிலி மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1M எனில், அரை வாழ் காலம்
Q14
2A + B \(\rightarrow\) C + 3D என்ற வினையின் வேக விதியினைக் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் விவரங்களிலிருந்து கண்டறிக. | வினை எண் | [A] (min) | [B] (min) | வினைவேகம் (M s\(^{-1}\)) | | :--- | :--- | :--- | :--- | | 1 | 0.1 | 0.1 | x | | 2 | 0.2 | 0.1 | 2x | | 3 | 0.1 | 0.2 | 4x | | 4 | 0.2 | 0.2 | 8x |
Q15
ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு \(5.8 \times 10^{-2}\) s\(^{-1}\) அவ்வினையின் வினைவகை
Q16
N\(_2\)O\(_5\)(g) \(\rightarrow\) 2NO\(_2\)(g) + 1/2 O\(_2\)(g) என்ற வினைக்கு N\(_2\)O\(_5\) ன் மறையும் வேகமானது \(6.5 \times 10^{-2}\) mol L\(^{-1}\) s\(^{-1}\). NO\(_2\) மற்றும் O\(_2\) ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே
Q17
H\(_2\)O\(_2\) சிதைவடைந்து O\(_2\) வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48 g O\(_2\) உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்
Q18
வினைபடு பொருளின் தொடக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதி அளவு நிறைவு பெறத் தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை
Q19
A \(\rightarrow\) B + C + D என்ற ஒரு படித்தான வினையில், துவக்க அழுத்தம் P\(_0\). ‘t’ நேரத்திற்குப் பின் ‘P’. P\(_0\), P மற்றும் t ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாறிலி
Q20
ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம்
Q21
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
Q22
முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு
Q23
ஒரு முதல் வகை வினையானது 2 மணி நேரத்தில் 93.75% நிறைவு பெறுகிறது எனில், அவ்வினையின் அரை வாழ் காலம்
Q24
சேர்மங்களின் செறிவு பகுதி அழுத்தத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படும் போது, வாயு நிலை வினையின் வினைவேகத்தைக் குறிப்பிடப் பயன்படும் அலகு எது?
Q25
\(x A + y B \to l C + m D\) என்ற பொதுவான வினையில், வெவ்வேறு பொருட்களின் செறிவு மாறுபாட்டு வேகங்களுக்கு இடையேயான சரியான தொடர்பு எது?
Q26
சோதனை மூலம் பெறப்பட்ட செறிவு - நேர வளைகோட்டிலிருந்து, குறிப்பிட்ட நேரம் 't' இல் வேதிவினையின் கணநேர வினைவேகம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
Q27
ஒரு வினையின் வினைவேக மாறிலி 'k' ஐச் சரியாக விவரிக்கும் பண்பு எது?
Q28
மூலக்கூறு எண்ணை வினை வகையிலிருந்து வேறுபடுத்தும் பண்பு எது?
Q29
டைநைட்ரஜன் பென்டாக்சைடு (\(N_2O_5\)) சிதைவு வினையின் வகை என்ன?
Q30
உயர் வகை வினையை போலி முதல் வகை வினையாக ஆய்வு செய்ய எந்த நிபந்தனை உதவுகிறது?
Q31
பூஜ்ய வகை வினையில், வினைபடு பொருளின் செறிவு \([A]\) க்கும் நேரத்திற்கும் இடையே வரையப்படும் வரைபடம் ஒரு நேர்கோட்டைத் தருகிறது. இக்கோட்டின் சாய்வு எதைக் குறிக்கிறது?
Q32
வினைபடு பொருளின் தொடக்கச் செறிவு இருமடங்காக்கப்பட்டால், முதல் வகை வினையின் அரைவாழ் காலம் (\(t_{1/2}\)) எவ்வாறு மாறும்?
Q33
பூஜ்ய வகை வினையின் அரைவாழ் காலம் பற்றி பின்வருவனவற்றுள் எது சரி?
Q34
மோதல் கொள்கையின்படி, போதுமான ஆற்றலுடன் மூலக்கூறுகள் மோதினாலும் அவை வினைபுரியாமல் போகலாம். பயனுள்ள மோதலுக்கு கூடுதலாகத் தேவைப்படும் காரணி எது?
Q35
அர்ஹீனியஸ் சமன்பாடு \(k = A e^{-E_a/RT}\) இல் 'A' என்ற உறுப்பு எதைக் குறிக்கிறது?
Q36
அர்ஹீனியஸ் சமன்பாட்டின் அடிப்படையில் \(\\ln k\) க்கும் \(1/T\) க்கும் இடையே வரைபடம் வரையும்போது ஒரு நேர்கோடு கிடைக்கிறது. இக்கோட்டின் சாய்வு என்ன?
Q37
வினைவேக மாற்றி ஒரு வேதிவினையின் வேகத்தை எவ்வாறு பாதிக்கிறது?
Q38
மார்பிள் துண்டுகள் (\(CaCO_3\)) மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இடையேயான வினையில், அதே நிறையுடைய பெரிய துண்டுகளை விட தூளாக்கப்பட்ட மார்பிள் வேகமாக வினைபுரிவது ஏன்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்23 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this வேதிவினை வேகவியல் test

This free online practice test covers வேதிவினை வேகவியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்