TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

அயனிச் சமநிலை: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 38 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு \(Ag_2C_2O_4\) இன் தெவிட்டிய கரைசலில் உள்ள \(Ag^+\) அயனிகளின் செறிவு \(2.24 \times 10^{-4}\text{ mol L}^{-1}\) எனில், \(Ag_2C_2O_4\) இன் கரைதிறன் பெருக்க மதிப்பு (NEET – 2017)
Q2
வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கனஅளவுகளில் கலந்து பின்வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன. (NEET – 2018) i. 60 mL \(\frac{M}{10}\) HCl + 40mL \(\frac{M}{10}\) NaOH ii. 55 mL \(\frac{M}{10}\) HCl + 45 mL \(\frac{M}{10}\) NaOH iii. 75 mL \(\frac{M}{5}\) HCl + 25mL \(\frac{M}{5}\) NaOH iv. 100 mL \(\frac{M}{10}\) HCl + 100 mL \(\frac{M}{10}\) NaOH அவற்றில் எந்த கரைசலின் pH மதிப்பு 1 ஆக இருக்கும்?
Q3
298K ல், நீரில் \(BaSO_4\) இன் கரைதிறன் \(2.42 \times 10^{-3}\text{ gL}^{-1}\) எனில் அதன் கரைதிறன் பெருக்க \(K_{sp}\) மதிப்பு (NEET -2018). (\(BaSO_4\) இன் மோலார் நிறை \(= 233\text{g mol}^{-1}\))
Q4
தெவிட்டிய \(Ca(OH)_2\) கரைசலின் pH மதிப்பு 9 எனில், \(Ca(OH)_2\) இன் கரைதிறன் பெருக்க (\(K_{sp}\)) மதிப்பு
Q5
\(H_2O\) மற்றும் HF ஆகிய பிரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள் முறையே
Q6
எது காரத் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
Q7
பின்வரும் புளூரைடு சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?
Q8
பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?
Q9
சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்க்கரைசல்கள் முறையே
Q10
0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை (\(C_5H_5NH^+\)) உருவாக்கக்கூடிய பிரிடின் (\(C_5H_5N\)) மூலக்கூறுகளின் சதவீதம் (\(C_5H_5N\) க்கு \(K_b = 1.7 \times 10^{-9}\))
Q11
சம கனஅளவுடைய, 1, 2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமில கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள \(H^+\) அயனிச் செறிவு என்ன?
Q12
0.1M NaCl கரைசலில், கரைதிறன் பெருக்க மதிப்பு \(1.6 \times 10^{-10}\) கொண்ட AgCl(s) திடத்தின் கரைதிறன் மதிப்பு
Q13
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு $3.2 \times 10^{-8}$ எனில், அதன் கரைதிறன் மதிப்பு
Q14
அறை வெப்பநிலையில் $MY$ மற்றும் $NY_3$ ஆகிய கரையாத உப்புகள் $6.2 \times 10^{-13}$ என்ற சமமான $K_{sp}$ மதிப்புகளைக் கொண்டுள்ளன. $MY$ மற்றும் $NY_3$ ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்தக் கூற்று உண்மையானது?
Q15
சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும்போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?
Q16
ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு \(1 \times 10^{-3}\). pH = 4 எனும் மதிப்பு கொண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான [அமிலம்]/[உப்பு] விகிதம்
Q17
\(10^{-5}\) M KOH கரைசலின் pH மதிப்பு
Q18
\(H_2PO_4^-\) ஆனது எதன் இணை காரம்?
Q19
பின்வருவனவற்றுள் எது லௌரி – ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?
Q20
ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல்
Q21
பின்வருவனவற்றுள் அமிலத் தாங்கல் கரைசலின் $[H^+]$ அயனிச் செறிவைக் கணக்கிட உதவும் சரியான தொடர்பு எது?
Q22
பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது?
Q23
$NH_4OH$-ன் பிரிகை மாறிலி மதிப்பு $1.8 \times 10^{-5}$ எனில், $NH_4Cl$-ன் நீராற்பகுப்பு மாறிலி மதிப்பு
Q24
அரீனியஸ் கொள்கையின்படி, காரத்தைச் சிறப்பாக விவரிப்பது பின்வருவனவற்றுள் எது?
Q25
லௌரி – ப்ரான்ஸ்டட் கொள்கையில், \(H_2O\) ஒரு காரமாகச் செயல்பட்டு ஒரு புரோட்டானை ஏற்கும்போது உருவாகும் இணை அமிலம் எது?
Q26
பின்வருவனவற்றுள் லூயி அமிலமாகச் செயல்படும் எலக்ட்ரான் குறை மூலக்கூறு எது?
Q27
ஒரு நீர்க்கரைசலின் ஹைட்ரோனியம் அயனிச் செறிவு \([H_3O^+]\) \(1 \times 10^{-4}\) M எனில், அதன் pH மதிப்பு என்ன?
Q28
பின்வருவனவற்றுள் எது நிகழும்போது நீரின் அயனிப் பெருக்கம் (\(K_w\)) அதிகரிக்கிறது?
Q29
ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியின்படி, வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை வீதம் (\(\alpha\)):
Q30
பொது அயனியைக் கொண்ட ஒரு உப்பைச் சேர்ப்பதன் மூலம், வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை ஒடுக்கப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31
பின்வரும் எந்தச் சேர்க்கை அமிலத் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
Q32
காரத் தாங்கல் கரைசலின் pOH ஐக் கணக்கிடப் பயன்படும் ஹென்டர்சன்-ஹேசல்பாக் சமன்பாட்டைக் கண்டறிக.
Q33
அம்மோனியம் குளோரைடின் (\(NH_4Cl\)) நீர்க்கரைசல் எந்த அயனியின் நீராற்பகுத்தலால் அமிலத்தன்மை பெறுகிறது?
Q34
பின்வரும் உப்புகளில் எது 298K வெப்பநிலையில் pH மதிப்பு 7 கொண்ட நடுநிலையான நீர்க்கரைசலைத் தரும்?
Q35
சொற்ப அளவு கரையும் உப்பான சில்வர் குரோமேட்டின் (\(Ag_2CrO_4\)) கரைதிறன் பெருக்க (\(K_{sp}\)) கோவை:
Q36
நீரில் \(Ag_2CrO_4\) இன் மோலார் கரைதிறனை 's' குறிக்கிறது எனில், \(K_{sp}\) ஆனது 's' உடன் எவ்வாறு தொடர்புடையது?
Q37
இரண்டு கரைசல்களைக் கலக்கும்போது எந்த நிபந்தனையில் வீழ்படிவு உறுதியாக உருவாகும்?
Q38
எலக்ட்ரான் இரட்டையை வழங்கி ஈதல் சகப்பிணைப்பை உருவாக்குவதன் மூலம் லூயி காரமாகச் செயல்படுவது பின்வருவனவற்றுள் எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்23 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அயனிச் சமநிலை test

This free online practice test covers அயனிச் சமநிலை from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்