தொழில் முனைவு - பாடக் குறிப்புகள்
பாடச் சுருக்கம்
தனி நபர்கள் அல்லது குழுவினர்கள் சந்தையில் உள்ள தேவையான வளங்களைப் பயன்படுத்தி நீண்ட கால ஆதாயத்திற்காக வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான செயல்முறையே தொழில் முனைவு. இது மூலதன உருவாக்கத்திற்கும் வருமானத்திற்கும் உதவுகிறது; வேலையின்மை மற்றும் வறுமையைக் குறைக்க வழிவகுக்கிறது. தொழில் முனைவோர் என்பவர் ஏற்கனவே தொடங்கிய அல்லது ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்குவதற்கான செயலைச் செய்யும் நபர் ஆவார்.
பொருளும் வரையறைகளும்
- 'எண்டிரிபெண்டர்' என்ற பிரெஞ்சு சொல்லின் பொருள் 'மேற்கொண்டு'. பிற பெயர்கள்: சாகசம், சவால் எடுத்தல், புதுமைகள்.
- ஹிக்கின்ஸ்: முதலீடு மற்றும் உற்பத்தி வாய்ப்பைத் தேடுதல், மூலதனத்தை அதிகரித்தல், பணியாளர்களை நியமித்தல், மூலப்பொருட்களை ஏற்பாடு செய்தல், இடங்களைத் தேர்ந்தெடுத்தல், புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்.
- ஏ.ஹெச்.கோல்: தனிநபர் அல்லது குழுவினரின் செயல்பாடுகளினால் தொழிலைத் தொடங்குதல், பராமரித்தல், பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் இலாபம் பெறுவது.
- ஜோசப் ஸ்கம்பீட்டர்: புதிய உற்பத்தி காரணிகளை கொண்டு பொருளாதார வளர்ச்சி அடைபவரே புதுமையான தொழில் முனைவோர்.
- பெண் தொழில் முனைவோர் (இந்திய அரசு): குறைந்தபட்சம் 51% நிதி பங்குகளும் 51% பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும்.
- ஆகஸ்ட் 21 உலக தொழில் முனைவோர் நாள்; நவம்பர் 19 பெண் தொழில்முனைவோர் தினம்.
| தொழில் முனைவு | தொழில் முனைவோர் |
|---|---|
| செயல்முறை | நபர் |
| அமைப்பு | அமைப்பாளர் |
| முடிவெடுத்தல் | முடிவெடுப்பவர் |
| படைப்பு | படைப்பாளர் |
| மேலாண்மை | மேலாளர் |
| தலைமைத்துவம் | தலைவர் |
நோக்கமும் முக்கியத்துவமும்
தொழிலாளர் பணியகத்தின் 2015-2016 அறிக்கையின்படி வேலையின்மை விகிதம் 5%. வேலையின்மையைக் குறைத்தல், சந்தையில் போட்டியை உருவாக்குதல், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், பொருளாதார சுதந்திரம் ஆகியவை தொழில் முனைவின் முக்கியத்துவம்.
தொழில் முனைவோரின் பணிகள்
- தொழில் முனைவோர் செயல்பாடுகள்: ஒருங்கிணைத்தல், இடர்பாடுகளை தாங்குதல், புதுமைகளைக் கண்டுபிடித்தல்.
- நிர்வாக செயல்பாடுகள்: மேலாண்மை என்பது மற்றவர்களிடம் இணைந்து பணியாற்றக் கூடிய கலை. ஹென்றி போயல் (1949) மேலாண்மை கொள்கையின் தந்தை. திட்டமிடுதல், ஏற்பாடு செய்தல், பணியாளர்கள் நியமனம் செய்தல், இயக்குதல், கட்டுப்படுத்துதல்; கட்டுப்படுத்துதல் கடைசி செயல்பாடு.
- தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி செயல்பாடுகள்: வியாபார எண்ணங்களின் மூலம் தொழிலை அடையாளம் மற்றும் தேர்வு செய்தல், வணிகத்திட்டம் அல்லது திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி தேவைகள்.
- வணிக செயல்பாடுகள்: தயாரிப்பு உற்பத்தி, சந்தைப்படுத்துதல் (4P's, 3P's), கணக்கு வைப்பு அல்லது கணக்கியல். இருப்புநிலைக் குறிப்பு 'நிலை அறிக்கை' எனவும் அழைக்கப்படுகிறது.
தொழில்முனைவோரின் பண்புகள்
அறிவுத் திறன், வியாபார இரகசியம், மனித உறவுகள், தொடர்பு திறன், தொழில் நுட்ப அறிவு, புதுமையான திறன், சவால் எடுத்தல், நல்ல கருத்துக்களின் உணர்வு, எதிர் கால நோக்குநிலை, நெகிழ்வு தன்மை.
நிறுவனங்களின் வகைகள்
| வகை | உற்பத்தி (ஆலை, இயந்திரங்கள்) | சேவை (உபகரணங்கள்) | பணியாளர்கள் |
|---|---|---|---|
| குறுந்தொழில் | 5 லட்சம் முதல் 25 லட்சம் | 10 லட்சம் வரை | 10 அல்லது குறைவு |
| சிறுதொழில் | 25 லட்சம் முதல் 5 கோடி | 10 லட்சம் முதல் 2 கோடி | 50 அல்லது குறைவு |
| நடுத்தர தொழில் | 5 கோடி முதல் 10 கோடி | 2 கோடி முதல் 5 கோடி | அதிகபட்சம் 250 |
சிறு தொழில் தொடங்குவதற்கான படிநிலைகள்
தொடக்க நிலை (9 படிநிலைகள்)
- சுய தொழில் தொடங்க முடிவு எடுத்தல் (உட்புற, வெளிப்புறக் காரணிகள்), வணிக சூழலை ஆய்வு செய்தல், எண்ணங்களைத் தேர்வு செய்தல்.
- நிறுவன அமைப்பைத் தீர்மானித்தல்: தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டு நிறுவனம் (20 நபர்களுக்கு மேல் கூடாது; கூட்டு ஒப்பந்தம்), கூட்டுறவு சங்கம், கூட்டு குடும்ப நிறுவனம் (தலைவர் கர்த்தா; மற்றவர்கள் கோபர்செனர்ஸ்), நிறுவன கழகம் (தனியார் 2 முதல் 50; பொது குறைந்தபட்சம் 7).
- திட்ட அறிக்கை, திட்ட மதிப்பீடு, இடம் மற்றும் மனை தேர்வு.
- தற்காலிக பதிவு: மாவட்ட தொழில் மையத்தில்; 7 நாட்களுக்குள்; 6 மாதங்கள் செல்லுபடி.
- இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்தல்.
செயல்பாட்டு நிலை (12 படிநிலைகள்)
- சட்ட ரீதியாக உரிமம், நிதி ஏற்பாடு, நிதி உதவிக்கான விண்ணப்பம். SIDBI, SFC, NSIC, SIDCO, அரசு கிராம வங்கிகள், வர்த்தக வங்கிகள் நிதி உதவி வழங்குகின்றன.
- கட்டிட கட்டுமானம், இயந்திரங்கள் கொள்முதல், ஆலை மற்றும் இயந்திரங்களை நிறுவுதல்.
- மின்சாரம்: 75 HP க்கு குறைவு LT; 75-130 HP LT அல்லது HT; 130 HP க்கு மேல் HT மட்டும்.
- பணியாளர் நியமனம் மற்றும் பயிற்சி (ESI சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், ஊக்க ஊதியச் சட்டம், இழப்பீட்டுச் சட்டம், வருங்கால வைப்பு நிதி சட்டம்).
- மூலப்பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல், நிரந்தர பதிவு (மாவட்ட தொழில் மையம் - DIC), இலாபம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் (12 முதல் 24 மாதங்கள்).
சுற்றுச் சூழல் காரணிகளும் பொருளாதாரப் பங்கும்
அரசாங்கக் கொள்கையில் திடீர் மாற்றம், அரசியல் எழுச்சி, போர், லஞ்சம், உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, சாதகமற்ற சந்தை ஏற்ற இறக்கங்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. தொழில் முனைவு செயலற்ற சேமிப்பை அணிதிரட்டி மூலதனத்தை உருவாக்குகிறது, வேலைவாய்ப்பை வழங்குகிறது, சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தொழில் முனைவோர் உருவாக்கப்படுகிறார்கள்.
குடிசைத் தொழிலும் பாரம்பரிய உணவுகளும்
குடிசைத் தொழில் வீட்டை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய திறனைப் பயன்படுத்துகிறது; கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு; பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது.
- சென்னை வடகறி: இட்லி, தோசை, சப்பாத்திக்கு துணை உணவு; தேங்காய் பால் கிரேவி.
- மதுரை ஜிகர்தண்டா: பாதாம் பிசின், காய்ச்சிய பால், ஐஸ்கிரீம், நன்னாரி சிரப்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: ஆண்டாளின் பிறப்பிடம்; மண்பானைகளில் பால் கொதிக்க வைத்து.
- கோவில்பட்டி கடலை மிட்டாய்: வேர்க்கடலை, வெல்லப் பாகு.
- சாத்தூர் காராசேவு: கடலை பருப்பு மாவுடன் அரிசி மாவு, பூண்டு.
- நாஞ்சில் நாடு மீன் குழம்பு: கன்னியாகுமரி, நாகர்கோவில்; தேங்காய் விழுது.
- காஞ்சிபுரம் இட்லி: வரதராஜ பெருமாள் கோவில் புனித உணவு; மந்தாரை இலைகளில்.