பாடுபொருள்: உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றிக் கடல் சூழ் உலகின் புற இருளை அகற்றுவது கதிரவன்; பொதிகை மலையில் தோன்றிச் சான்றோரால் தொழப்பட்டு மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவது தன்னிகரில்லாத தமிழ்.
பா வகை - நேரிசை வெண்பா; அணி - பொருள் வேற்றுமை அணி (வேற்றுமை அணியின் ஒரு பிரிவு).
பொருள் வேற்றுமை அணி: இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது.
புணர்ச்சி: ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் (உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே); தனியாழி = தனி + ஆழி (இ ஈ ஐ வழி யவ்வும்); வெங்கதிர் = வெம்மை + கதிர் (ஈறுபோதல்; முன்னின்ற மெய் திரிதல்).
தண்டியலங்காரம்: பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகள்; வடமொழிக் காவியதர்சம் தழுவியது; ஆசிரியர் தண்டி, பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறுபவை: தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம். அணியிலக்கணத்தையும் கூறுபவை: தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்.
மயிலை சீனி. வேங்கடசாமி
குறிப்பு
விவரம்
பிறப்பு
16.12.1900, சென்னை மயிலாப்பூர்; தந்தை சீனிவாசன் (சித்த மருத்துவர்), அண்ணன் கோவிந்தராசன் (தமிழாசிரியர்)
பணி
தொடக்கப்பள்ளி ஆசிரியராக 25 ஆண்டுகள்
முதல் நூல்
கிறித்துவமும் தமிழும் (1934இல் ச.த. சற்குணரின் உரையால் பெற்ற ஆர்வம்)
சமய நூல்கள்
பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
வரலாற்று ஆய்வு
மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் (அம்மன்னன் பற்றிய தமிழின் முதல் நூல்); களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
கலையியல்
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (கவின்கலை பற்றிய முழுமையான முதல் நூல்; தமிழக அரசின் முதற்பரிசு)
இலக்கிய ஆய்வு
1962 அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவு; தமிழ்நாட்டு வரலாறு; பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்; மறைந்துபோன தமிழ் நூல்கள் (333 நூல்கள்)
சொல்லாய்வு
செந்தமிழ்ச் செல்வி இதழ்க் கட்டுரைகள் - அஞ்சிறைத் தும்பி
நூல்வெளி: நிலவுப்பூ தொகுப்பு; பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்; மொழிபெயர்ப்புக்காகவும் 'ஒரு கிராமத்து நதி'க்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது; கவிதை நூல்கள் - ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், மௌன மயக்கங்கள், பூஜ்யங்களின் சங்கிலி; உரைநடை - இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும்.
தம்பி நெல்லையப்பருக்கு - பாரதியார்
புதுச்சேரி, 19 ஜூலை 1915இல் எழுதப்பட்ட கடிதம்; ரா.அ. பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்' நூலில் உள்ளது.
கருத்துகள்: தமிழில் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய இன்பம் ஏறிக்கொண்டே போக வேண்டும்; தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக; ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள்; தொழில்கள், வியாபாரம், யந்திரங்கள் பெருகுக.
பரலி சு. நெல்லையப்பர்: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர்; சூரியோதயம், கர்மயோகி இதழ்களில் துணையாசிரியர்; லோகோபகாரி, தேசபக்தன் இதழ்களில் துணையாசிரியர், பின் ஆசிரியர்; நூல்கள் - நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி; பாரதியைவிட ஏழாண்டுகள் இளையவர்.
கவிகேசரி சாமி தீட்சிதர் 1879இல் வெளியிட்ட 'வம்சமணி தீபிகை' நூலைத் திருத்தி வெளியிட விரும்பி, பாரதி வெங்கடேசுர எட்டப்பருக்கு 6.8.1919இல் கடிதம் எழுதினார்; அந்நூல் 2008இல் இளசை மணியால் மறுபதிப்பானது.
தமிழாய் எழுதுவோம் (இலக்கணம்)
பிழைகளின் வகை: எழுத்துப் பிழை, சொற்பொருட் பிழை, சொற்றொடர்ப் பிழை, பொதுவான பிழைகள்.
உயிர் 12, மெய் 18 (வல்லினம் க் ச் ட் த் ப் ற்; மெல்லினம் ங் ஞ் ண் ந் ம் ன்; இடையினம் ய் ர் ல் வ் ழ் ள்), உயிர்மெய் 216 (குறில் 90, நெடில் 126), ஆய்தம் 1 - மொத்தம் 247.
ந, ண, ன, ற, ர, ல, ள, ழ எட்டில் 'ந'கரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்; 'ந'கர மெய் சொல்லின் இறுதியில் வாராது.
வல்லின மெய்யோடு சொல் முடியாது; வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா; ட, ற சொல்லின் முதலில் வாரா.
ய், ர், ழ் ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும் (பார்க்கும், வாழ்க்கை).
ணகர ஒற்றை அடுத்து டகரமும், னகர ஒற்றை அடுத்து றகரமும் வரும் (கண்டு, மன்றம்).
வருமொழி முதலில் உயிர் வரின் ஒரு, இரு என்பன ஓர், ஈர் ஆகும் (ஓர் ஊர்); அது, இது, எது என்பன அஃது, இஃது, எஃது ஆகும்.