TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணிதவியல் மார்ச் 2025: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2025 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
கழித்தலின் கீழ் பின்வரும் கணம் அடைவு பெறவில்லை :
Q2
0, 1 மற்றும் 2 ஆகிய மதிப்புகளில் ஒன்றை X கொள்கிறது என்க. ஏதோ ஒரு மாறிலி k -விற்கு, \(P(X=i)=k\,P(X=i-1)\), \(i=1, 2\) மற்றும் \(P(X=0)=\frac{1}{7}\) எனில் k -இன் மதிப்பு காண்க.
Q3
A என்பது \(3\times 3\) வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி மேலும் \(|A|=5\) எனில் \(|A^{-1}|=\) :
Q4
ஒரு கல்லானது செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. t நேரத்தில் அது அடைந்த உயரம் \(x=80t-16t^2\). கல் அதிகபட்ச உயரத்தை t வினாடி நேரத்தில் அடைந்தால் t ஆனது :
Q5
\(\sqrt{\frac{dy}{dx}}-4\frac{dy}{dx}-7x=0\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி முறையே :
Q6
\(A=\begin{bmatrix}2 & 3\\ 5 & -2\end{bmatrix}\) மற்றும் \(\lambda A^{-1}=A\) எனில், \(\lambda\) -ன் மதிப்பு :
Q7
\(y=f(x)\) எனும் வளைவரையின் ஏதேனும் ஒரு புள்ளியிடத்து சாய்வு \(\frac{dy}{dx}=3x^2\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வளைவரையானது \((-1, 1)\) புள்ளி வழியாகச் செல்கிறது எனில், வளைவரையின் சமன்பாடு :
Q8
\(f(x)=\sin^{-1}\sqrt{x-1}\) என வரையறுக்கப்படும் சார்பின் சார்பகம் :
Q9
\(u(x, y)=e^{x^2+y^2}\), எனில் \(\frac{\partial u}{\partial x}\) -ன் மதிப்பு :
Q10
\([0, 2\pi]\) -ல் \(\sin^4x-2\sin^2x+1\) -ஐ நிறைவு செய்யும் மெய்யெண்களின் எண்ணிக்கை :
Q11
i -ன் வர்க்க மூலங்கள் :
Q12
\(\sum_{n=1}^{13}(i^n+i^{n-1})\) -ன் மதிப்பு :
Q13
ஈருறுப்பு மாறி X ஆறு முயற்சிகளில் \(9P(X=4)=P(X=2)\) எனும் தொடர்பினை அனுசரிக்கிறது எனில் வெற்றியின் நிகழ்தகவு :
Q14
\(\frac{x-2}{3}=\frac{y+1}{-2}, z=2\) மற்றும் \(\frac{x-1}{1}=\frac{2y+3}{3}=\frac{z+5}{2}\) என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் :
Q15
\(y=(x-1)^3\) என்ற வளைவரையின் வளைவு மாற்றப் புள்ளி :
Q16
\(\int_0^{\frac{2}{3}}\frac{dx}{\sqrt{4-9x^2}}\) இன் மதிப்பு :
Q17
\(y^2=x(a-x)\) என்ற வளைவரையில் அடைபடும் அரங்கத்தின் பரப்பை x -அச்சைப் பொருத்து சுழற்றுவதால் உருவாகும் திடப்பொருளின் கனஅளவு :
Q18
நீள்வட்டத்தின் அரைக்குற்றச்சு OB, F மற்றும் F' குவியங்கள் மற்றும் FBF' ஒரு செங்கோணம் எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு காண்க.
Q19
\(\hat{i}+\hat{j}, \hat{i}+2\hat{j}, \hat{i}+\hat{j}+\pi\hat{k}\) என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவு :
Q20
x -ன் அனைத்து மதிப்பிற்கும் \(f(x)>0\) என்க, மேலும் \(g(x)=\log(f(x))\), எனில் dg = :