TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 1

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q1
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
வானில் ______ திரண்டதால் மழை பொழிந்தது.
Q2
ரசீது (Receipt) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q37ஆம் வகுப்பு · கலைவண்ணம்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் பீடம் முப்பத்தெட்டு அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?
Q410ஆம் வகுப்பு · மணற்கேணி
'மொழிபெயர்த்தல்' என்னும் தொடரைத் தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்?
Q58ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
'கடல்ஓடா' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ______.
Q66ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q76ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
நாம் ______ சொல்படி நடக்க வேண்டும்.
Q86ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ.) பயணம் செய்யும் பறவையினம் ______.
Q98ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q10
வினைமரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q11
'திராவிடம்' என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
Q129ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
காங்கேயம் மாடுகள் பற்றிய பத்தியின் அடிப்படையில் பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Q136ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
'விழித்தெழும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q149ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
'எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்' - ஏறு தழுவுதல் களத்தைக் காட்டும் இவ்வடிகள் இடம்பெற்றுள்ள கலித்தொகைப் பகுதி எது?
Q158ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
'நமனில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q167ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ______.
Q17
'மொழிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் யார்?
Q189ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
மருத்துவர் முத்துலெட்சுமி 1930இல் சென்னை அடையாற்றில் நிறுவியது எது?
Q19
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q20
ஒருபொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டு எது?
Q217ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்களுள் ஒன்று ______.
Q226ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______.
Q23
கோடிட்ட இடத்தில் ஒருமை பன்மைப் பிழையற்ற வினைமுற்றைத் தேர்ந்தெடு:
நீயும் உன் தங்கையும் நாளை விழாவிற்கு ______.
Q249ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'சிந்தா மணி' என்பதில் சிந்தா என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q258ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q267ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
பூதத்தாழ்வார் பாடலின்படி பொருத்துக:
1. அன்பு – அ) நெய்
2. ஆர்வம் – ஆ) தகளி
3. சிந்தை – இ) விளக்கு
4. ஞானம் – ஈ) இடுதிரி
Q27
டி.கே. சிதம்பரநாதர் உரை எழுதிய நூல்கள் எவை?
Q28
நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து
Q299ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
திருக்குறளைப் பெரியார் மதிப்புமிக்க நூலாகக் கருதியதற்குக் காரணம் -
Q307ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
காயல்பட்டணத்தில் வாழ்ந்து தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்த பெரிய வணிகர் ______.
Q31
'ஆல்' உருபைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (கல்லணை கரிகாலன் கட்டப்பட்டது)
Q327ஆம் வகுப்பு · கலைவண்ணம்
ஓவியங்கள் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. தந்த ஓவியங்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்.
2. கண்ணாடி ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.
3. ஓலைச்சுவடி ஓவியங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள் போன்றவையாக உள்ளன.
சரியான கூற்றுகள் எவை?
Q33
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை ஒப்புமைப்படுத்தி, இவை தனியொரு மொழிக்குடும்பம் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் யார்?
Q346ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q357ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
குற்றியலுகரம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் ஈரெழுத்துச் சொற்களாக மட்டுமே அமையும்.
2. 'வ்' என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
3. சு, டு, று ஆகியவற்றை இறுதியாகக் கொண்ட இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் பல உண்டு.
Q36
மரபுத் தொடரின் பொருள் தருக: எடுப்பார் கைப்பிள்ளை
Q379ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
பொருத்துக.
அ) தஞ்சைப் பெரியகோவில் - 1) மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
ஆ) கங்கைகொண்ட சோழபுரம் - 2) இரண்டாம் இராசராசன்
இ) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில் - 3) முதலாம் இராசராசன்
ஈ) திரிபுவன வீரேசுவரம் - 4) முதலாம் இராசேந்திர சோழன்
Q3810ஆம் வகுப்பு · உயிரின் ஓசை
ஓசோன் படலத்தைச் சிதைப்பதாகப் பாடத்தில் குறிப்பிடப்படும் மூலக்கூறு எது?
Q39
டிபன் என்னும் பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q409ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
'பாய்வன' = பாய் + வ் + அன் + அ. இதில் 'அன்' என்பது -
Q417ஆம் வகுப்பு · கலைவண்ணம்
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q427ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q438ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் ______.
Q447ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ______.
Q457ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q467ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q47
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
சிறுமி ______ கையில் மலர்களை வைத்திருந்தாள்.
Q48
'வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்' – மன்னனுக்கு வெற்றி தருவது எது?
Q499ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'கொள்வார்' என்னும் சொல்லின் பகுபத உறுப்பிலக்கணத்தில் 'வ்' என்பது -
Q50
'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?
Q517ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ______.
Q529ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
பெண்கள் நலம் குறித்த பெரியாரின் கருத்துகளுள் சரியானவற்றைத் தேர்க.
1. வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்.
2. நாட்டு விடுதலையைவிடப் பெண் விடுதலையே முதன்மையானது.
3. குடும்பப் பணிகள் பெண்களுக்கு மட்டுமே உரியவை.
Q539ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
ஆகுபெயர் வகைகளைப் பொருத்துக. அ) வகுப்பறை சிரித்தது - 1) கருவியாகுபெயர் ஆ) கார் அறுத்தான் - 2) பண்பாகுபெயர் இ) மஞ்சள் பூசினாள் - 3) காலவாகுபெயர் ஈ) வானொலி கேட்டு மகிழ்ந்தனர் - 4) இடவாகுபெயர்
Q547ஆம் வகுப்பு · கலைவண்ணம்
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.
Q559ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
சு. சமுத்திரம் எழுதிய படைப்புகளுள் சாகித்திய அகாதெமி விருது பெற்றது எது?
Q568ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
கூற்று (A): எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்பட்ட குழப்பங்களை வீரமாமுனிவர் களைந்தார்.
காரணம் (R): எ என்னும் எழுத்துக்குச் சுழி இட்டு ஏ எனவும், ஒ என்னும் எழுத்துக்குக் கீழ்க்கோடிட்டு ஓ எனவும் அவர் உருவாக்கினார்.
Q57
ஊர்ப்பெயரின் மரூஉ வடிவைத் தேர்ந்தெடு: புதுச்சேரி
Q586ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ______.
Q597ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
மக்களுக்கு வருமானம் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியது ______.
Q60
'ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?
Q617ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
பொருத்துக.
1. சீவன் - அ) சூளுரை
2. சத்தியம் - ஆ) உலகம்
3. வையம் - இ) உயிர்
4. சபதம் - ஈ) உண்மை
Q627ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது ______.
Q638ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக பாடலில் ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டிருப்பதால் அவ்வடி ______ எனப்படும்.
Q646ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______.
Q65
'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?
Q666ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
'கதிர்ச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q676ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q687ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'உண்மை ஒளி' படக்கதையில், உண்மையான ஒளி எப்போது ஏற்படுவதாகக் குரு கூறுகிறார்?
Q69
'எங்கள் தலைமையாசிரியர் நாளை பள்ளிக்கு வருவார்.' – ஒருவரைக் குறிக்கும் இத்தொடரில் 'வருவார்' எனப் பன்மை வடிவம் வந்ததற்குக் காரணம் யாது?
Q7010ஆம் வகுப்பு · பெருவழி
'பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க' என்று ______ வேண்டினார்.
Q71
இந்திய அரசியலமைப்பின் 'Preamble' என்பதற்குப் பாடநூல் தரும் தமிழ்க் கலைச்சொல் எது?
Q726ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ______.
Q737ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'ஜென்' என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லின் பொருள் ______.
Q748ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
வளம் பெருகுக பாடல் இடம்பெற்றுள்ள தகடூர் யாத்திரையில் குறிப்பிடப்படும் தகடூர் இன்று ______ என்று அழைக்கப்படுகிறது.
Q759ஆம் வகுப்பு · வாழிய நிலனே
பொருத்துக.
அ) கேப்டன் லட்சுமி - 1) தமிழகத்திலிருந்து பெரும்படை திரட்டி வலுசேர்த்தவர்
ஆ) கேப்டன் தாசன் - 2) ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர்
இ) பசும்பொன் முத்துராமலிங்கனார் - 3) "இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்" என்றவர்
ஈ) தில்லான் - 4) செசல்ஸ் நாட்டுத் தூதுவர்
Q76
'கடமையைச் செய்.' – இது எவ்வகைத் தொடர்?
Q777ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
பொய்கையாழ்வார் தம் பாடலில் அகல்விளக்காக உருவகப்படுத்துவது ______.
Q7810ஆம் வகுப்பு · பெருவழி
'நேர் நிரை நேர்' என்னும் அசைகளுக்குரிய வாய்பாடு எது?
Q796ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில், அஃது ______ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
Q808ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.
Q81
திரிகடுகம் 11ஆம் பாடலின்படி நன்மை பயக்காதவை என்று கூறப்படும் மூன்றனுள் இடம்பெறாதது எது?
Q82
காயிதே மில்லத்தின் இயற்பெயர் யாது?
Q837ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவர் ______.
Q84
'குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு' – நட்புக் கொள்ளும் முன் ஆராய வேண்டியவற்றுள் இக்குறள் குறிப்பிடாதது எது?
Q856ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
காந்தியடிகள் ______ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
Q868ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
அம்பேத்கர் தாம் வணங்கும் தெய்வங்களாகக் குறிப்பிட்ட மூன்றனுள் இடம்பெறாதது எது?
Q87
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q88
ஒருமைப் பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
Q899ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு -
Q9010ஆம் வகுப்பு · நிலா முற்றம்
'மலையும் மலை சார்ந்த இடமும்' எந்தத் திணைக்குரிய நிலம்?
Q917ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
வாய்மை எனப்படுவது ______.
Q929ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
விடுபட்ட இடத்திற்கான விடை எது?
'இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க
__________ புதியவைதாம்'
Q93
அரசுக் கிளை நூலகம் – வேலை நேர அட்டவணை
திங்கள்கிழமை: வார விடுமுறை
செவ்வாய் முதல் சனி வரை: காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை: காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
அரசு விடுமுறை நாள்கள்: நூலகம் இயங்காது
குறிப்பு: உறுப்பினர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நூல்கள் வரை இரவல் பெறலாம். இரவல் பெற்ற நூல்களைப் பதினான்கு நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும். தவறினால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். நூல்களைக் கிழிக்கவோ அவற்றில் எழுதவோ கூடாது.

நூலகத்தின் வார விடுமுறை நாள் எது?
Q946ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
கானாடுகாத்தானில் வெளிநாட்டுப் பொருள்களால் அழகுபடுத்தப்பட்ட வீட்டைக் கண்ட காந்தியடிகள், அதற்குச் செலவான பணத்தில் தமக்குத் தருமாறு கேட்டது ______.
Q95
பள்ளி மாணவர்கள் தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானது எனக் கருதிய அயல்நாட்டுத் தமிழறிஞர் யார்?
Q96
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். இது வறண்ட நிலத்திலும் குறைந்த நீரிலும் வளரும் இயல்புடையது. பனையின் ஓலை கூரை வேயவும் பாய், கூடை முடையவும் பயன்படுகிறது. பனை நார் கயிறு திரிக்கவும், பனைமரத் தண்டு வீடு கட்டவும் பயன்படுகின்றன. பனையிலிருந்து நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி முதலிய உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. பண்டைக் காலத்தில் நம் முன்னோர் பனை ஓலைகளில்தான் நூல்களை எழுதி வைத்தனர். வேர் முதல் உச்சி வரை பயன் தருவதால் பனையைக் 'கற்பகத் தரு' என்று போற்றுவர். நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் மண் அரிப்பைத் தடுக்கவும் பனைமரங்கள் உதவுகின்றன.

பனையிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருளாகப் பத்தியில் குறிப்பிடப்படாதது எது?
Q97
'ஏலாதி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Q989ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
கூற்று: தமிழில் துணைவினைகள் முதல்வினைகளுக்குப் பின்பே இடம்பெறும். காரணம்: தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையைப் போன்றதே.
Q998ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
அயோத்திதாசர் ______ சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
Q1007ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ______.

பகுதி ஆ · பொது அறிவியல்

Q1019ஆம் வகுப்பு · ஒளி
தேடும் விளக்கில் (search light) பயன்படும் ஆடி ______.
The mirror used in search light is ______.
Q1028ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் ______ இணைக்கப்பட்டுள்ளது.
______ is attached to soft parts of the body like blood vessels, iris, bronchi and the skin.
Q1039ஆம் வகுப்பு · வெப்பம்
வெப்பக் கடத்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பொருள்களுக்கிடையே வெப்பநிலை வேறுபாடு இருக்கும்போது நடைபெறும்.
2. பொருளின் பரப்பு அதிகமாகும்போது வெப்பக் கடத்தல் அதிகமாகும்.
3. திரவங்களும் வாயுக்களும் வெப்பத்தைச் சிறிதும் கடத்துவதில்லை.
4. வெப்பக் கடத்தல் ஒரு மெதுவான செயல்முறை.
Which of the following statements about conduction are correct?
1. It takes place when there is a temperature difference between the objects.
2. More heat is conducted when the area of the object is large.
3. Liquids and gases do not conduct heat at all.
4. Conduction is a slow process.
Q1047ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கூற்று: இரும்புப் பூட்டை வெப்பப்படுத்தும்போது அதன் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
காரணம்: வெப்பப்படுத்தும்போது துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது; ஆனால் துகள்களின் பரிமாணமும் எண்ணிக்கையும் மாறுவதில்லை.
Assertion (A): When an iron lock is heated, its mass does not change.
Reason (R): On heating, the distance between the particles increases but the size and number of particles do not change.
Q1057ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
கரோலஸ் லின்னேயஸ் ______ தந்தை ஆவார்.
Carolus Linnaeus is known as the Father of ______

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q1066ஆம் வகுப்பு · வளங்கள்
பொருத்துக: புதுப்பிக்க இயலாதது
Match the following: Non-renewable
Q1078ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
பாடத்தின்படி, ஒரு நாட்டின் பொருளாதார வலிமை எப்பொழுதும் எதன் வளர்ச்சியால் அளவிடப்படுகிறது?
According to the lesson, the economic strength of a country is always measured by the development of
Q1088ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
புவியின் வளிமண்டலம் _______ நைட்ரஜன் மற்றும் _______ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
Earth's atmosphere contains about _______ percentage of nitrogen and oxygen.
Q1099ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
கூற்று I: புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று II: கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
Statement I: Mountain ranges are formed by the collision of tectonic plates.
Statement II: The movement of tectonic plates is due to the thermal energy from the mantle.
Q1106ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A serious disruption of the functioning of a society involving human and material loss is called

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q1117ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
ஜப்தி என்னும் முறை _________ ஆட்சிக்காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
During the reign of _________ the Zabti system was extended to the Deccan provinces.
Q1126ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
அனாத்மா (எல்லையற்ற ஆன்மா) அனித்யா (நிலையாமை) ஆகிய கருத்துகளுக்கு அழுத்தம் வழங்கிய சமயம் எது?
Which religion emphasises ANATMA (no eternal soul) and ANITYA (impermanence)?
Q1138ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
கஜுராஹோவில் காணப்படும் 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துக் கோவிலில் வழக்கமான சிகரத்திற்குப் பதிலாகப் பல சமயக் கூறுகள் உள்ளன. பின்வருவனவற்றுள் அவற்றில் இடம்பெறாதது எது?
The 19th century Hindu temple in Khajuraho incorporates elements of several faiths in place of the usual shikara. Which of the following is NOT one of them?
Q1146ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை ______ என்று அழைத்தார்.
V.A. Smith called India as ______
Q1159ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
மொகலாய அரசில் பல கைவினைஞர்களைப் பணியமர்த்திச் செயல்பட்ட மிகப்பெரிய தொழிற்கூடங்கள்
Larger manufacturing units employing many craftsmen, set up under the Mughal state, were called

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q116
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 அன்று கொண்டாடப்படும் தேசியக் கல்வி நாள் யாருடைய பிறந்த நாளைக் குறிக்கிறது?
National Education Day, observed in India on 11 November every year, marks the birth anniversary of
Q11710ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
Assertion (A): The Congress Ministries resigned in 1939.
Reason (R): The Colonial government of India entered the war without consulting the elected Congress ministries.
Q1188ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
_______ தமிழர்களால் 'வீர மங்கை' எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.
_______ was known by Tamils as Veeramangai and Jhansi Rani of South India.
Q11910ஆம் வகுப்பு · 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட பிரம்மஞான சபை சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்ட ஆண்டு _______.
The Theosophical Society, founded in the USA in 1875, shifted to Adyar, Chennai in _______.
Q1208ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _______ கர்நாடகப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
The Treaty of Pondicherry brought the _______ Carnatic war to an end.

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q12110ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
'சிறு அரசியலமைப்பு' என அறியப்படும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் எது?
Which amendment of the Constitution is known as the mini Constitution?
Q12210ஆம் வகுப்பு · நடுவண் அரசு
நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளில் பேசவும் பங்கு கொள்ளவும் உரிமை உடைய, ஆனால் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் யார்?
Who has the right to speak and take part in the proceedings of both Houses of Parliament, but without a right to vote?
Q12310ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
One of the following is not an instance of an exercise of a fundamental right?
Q124
மத்திய கண்காணிப்பு ஆணையரைப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் யார் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
The Central Vigilance Commissioner is appointed by the President on the recommendation of a committee of the Prime Minister, the Leader of the Opposition in the Lok Sabha and the
Q1258ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
2004 டிசம்பர் 3 முதல் வெளிநாட்டில் பிறந்தவர் வம்சாவளிக் குடிமகனாக, அவரது பிறப்பை இந்தியத் தூதரகத்தில் எத்தனை காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்?
From 3rd December 2004, a person born outside India becomes a citizen by descent only if the birth is registered at an Indian consulate within
Q1267ஆம் வகுப்பு · மாநில அரசு
சட்டமன்ற உறுப்பினராக இருந்து முதலமைச்சராக விரும்புபவர் நிறைவடைந்திருக்க வேண்டிய வயது
A person who wants to become Chief Minister as an MLA should have completed
Q12710ஆம் வகுப்பு · மாநில அரசு
சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டம் எந்தக் காலத்திற்குள் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?
Ordinances promulgated by the Governor under Article 213 must be approved by the legislature within
Q1287ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
உள்ளூர் ஊடகம் முக்கியமாக யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது?
Local media mainly addresses
Q1299ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
கீழ்க்காணும் எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
Which one of the following countries has the Presidential form of government?
Q1306ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
ஊராட்சி ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் யார்?
Who elects the Chairperson of a Panchayat Union?
Q1319ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்தில் இடம் பெறாதவர்கள் யார்?
Who among the following are NOT included in the electoral college that elects the President of India?
Q1326ஆம் வகுப்பு · மக்களாட்சி
ஆதிமனிதன் ________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
Early man settled near ________ and practiced agriculture.
Q1338ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
__________ of the Constitution of India deals with the Citizenship.
Q1347ஆம் வகுப்பு · மாநில அரசு
சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சாராதவராக இருப்பின் ____ என்று அழைக்கப்படுவர்.
The elected representatives who are not members of the ruling party are called ____.
Q1357ஆம் வகுப்பு · சமத்துவம்
தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
Right to contest in the election is a ____________ right.

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q1369ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
ஒரு புத்தகத்தின் விலை ₹50 என்றால், அதன் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது. இது பணத்தின் எந்தச் செயல்பாட்டைக் காட்டுகிறது?
If a book costs ₹50, its price is equal to 50 units of money. Which function of money does this show?
Q13712ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
GST இதற்குச் சமம்?
GST is the equivalent of ____________.
Q1389ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
நெல் வைத்திருப்பவருக்கு மட்பாண்டம் தேவை; ஆனால் மட்பாண்டம் வைத்திருப்பவருக்கு நெல் தேவையில்லை. இது பண்டமாற்று முறையின் எந்தச் சிக்கலைக் காட்டுகிறது?
A person with paddy needs earthenware, but the potter does not need paddy. Which problem of the barter system does this show?
Q13912ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
மந்த காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்?
During depression the level of economic activity becomes extremely
Q14012ஆம் வகுப்பு · வங்கியியல்
அனைத்து வணிக வங்கிகளும் குறைந்தபட்சம் 20 சதவீத ரொக்க-வைப்பு விகிதத்தை வைத்திருக்க வேண்டுமெனில், பணப் பெருக்கியின் மதிப்பு என்ன?
If all commercial banks are obliged to keep a minimum cash-to-deposit ratio of 20 percent, what is the value of the money multiplier?
Q1419ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. நாடுகளின் மேம்பாட்டை ஒப்பிட மொத்த வருமானம் ஒரு திருப்திகரமான அளவீடு ஆகும்.
2. சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அனைத்து நாடுகளின் தலா வருமானமும் அமெரிக்க டாலரில் கணக்கிடப்படுகிறது.
3. நாட்டின் மொத்த மக்கள் தொகையை மொத்த வருமானத்தால் வகுத்தால் தலா வருமானம் கிடைக்கும்.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. Total income is a satisfactory measure for comparing the development of various countries.
2. Per capita income of all countries is calculated in US dollars for international comparison.
3. Per capita income is obtained by dividing a country's total population by its total income.
Which of the statements given above is/are correct?
Q1429ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
பாடத்தில் உள்ள உலக வங்கியின் FY23 வகைப்பாட்டின்படி, தலா வருமானம் 3,000 அமெரிக்க டாலர் உள்ள ஒரு நாடு எந்த வகையைச் சேரும்?
Using the World Bank classification for FY23 given in the lesson, a country with a per capita income of US$ 3,000 belongs to which group?
Q1439ஆம் வகுப்பு · மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Find the odd one
Q14412ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
உற்பத்திப் புள்ளியில் NNPயின் மதிப்பு ____________ என அழைக்கப்படுகிறது
The value of NNP at production point is called _________
Q14510ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
1990களின் தொடக்கத்தில் வந்த புதிய பொருளாதாரக் கொள்கை LPG என அழைக்கப்படுவது
The New Economic Policy of the early 1990s, known as LPG, stands for
Q1468ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
'இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
Who is known as the 'Father of Public sector undertakings in India'?
Q1478ஆம் வகுப்பு · பொது மற்றும் தனியார் துறைகள்
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
According to the 2011 Census of India, what is the life expectancy of women in India?

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q1489ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
Both agricultural productivity and food productivity has
Q149
தமிழ்நாட்டில் சமூகத்தையும் அதற்கான இட ஒதுக்கீட்டு அளவையும் பொருத்துக:
(a) பிற்படுத்தப்பட்டோர் - 1. 1%
(b) பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் - 2. 3.5%
(c) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - 3. 20%
(d) பழங்குடியினர் - 4. 26.5%
Match the community with its share of reservation in Tamil Nadu:
(a) Backward Classes - 1. 1%
(b) Backward Class Muslims - 2. 3.5%
(c) Most Backward Classes / Denotified Communities - 3. 20%
(d) Scheduled Tribes - 4. 26.5%
Q15010ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் நகரம்
Which city is often referred to as the 'Manchester of South India'?
Q151
1989ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் உறுதி செய்தது
The Hindu Succession (Tamil Nadu Amendment) Act of 1989 ensured
Q1529ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் துறைகள் வகைப்படுத்தப்படுகின்றன?
The sectors are classified into Public and Private sectors on the basis of
Q153
பொருந்தாததைக் கண்டறிக (தவறாகப் பொருத்தப்பட்ட தொழில் தொகுப்பும் அதன் சிறப்புத் தொழிலும்):
Find the odd one out (the wrongly matched cluster and specialisation):
Q154
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 உள்ளடக்குவது
The National Food Security Act, 2013 covers
Q155
10ஆம் வகுப்புப் பாடநூலில் உள்ள தமிழ்நாட்டு மாவட்டங்களின் வறுமை வகைப்பாட்டின்படி, 'அதிக வறுமை மாவட்டம்' என்பது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள்தொகை
In the classification of Tamil Nadu districts by poverty given in the 10th standard textbook, a 'high-poverty district' is one where the population living below the poverty line is

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q15610ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
எந்த உடன்படிக்கையின்படி பிரிட்டிஷார் தமிழகத்தின் மீது நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்?
Under which agreement did the British assume direct control over Tamilagam and bring the Palayakkarar system to an end?
Q15710ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்?
Who among the following were Swarajists?
Q15810ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
ராபர்ட் கால்டுவெல் 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்ற நூலை வெளியிட்ட ஆண்டு எது?
In which year did Robert Caldwell publish A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages?
Q159
'இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.'
- இக்குறள் 'துன்பத்துள் துன்பம்' என்று குறிப்பிடுவது எது?
Kural: 'இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.'
What does this kural call 'the sorrow of sorrows' (துன்பத்துள் துன்பம்)?
Q1609ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
1. கல்வெட்டியல் - அ. முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
2. காலவரிசைக் குறிப்புகள் - ஆ. சங்க காலத் துறைமுகம்
3. மேய்ச்சல் வாழ்க்கை - இ. விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்
4. புடைப்பு மணிகள் (Cameo) - ஈ. கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
5. அரிக்கமேடு - உ. கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடோடி மக்கள்
Match the following and choose the correct code:
1. Epigraphy - A. A narrative text presenting the important historical events
2. Chronicle - B. A Sangam Age port
3. Pastoralism - C. An ornament made in precious stone
4. Cameo - D. The study of inscriptions
5. Arikkamedu - E. Nomadic people earning livelihood by rearing cattle
Q161
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின்படி, கீழடி அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிம மாதிரிகளின் காலம்
According to the Tamil Nadu State Department of Archaeology, carbon samples from the Keeladi excavations were dated to
Q162
தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கற்படுக்கைகளும் கொண்ட தமிழ்நாட்டின் இயற்கைக் குகைகள் பெரும்பாலும் யாருடைய வாழிடங்களாக இருந்தன?
The natural caves in Tamil Nadu bearing Tamil-Brahmi inscriptions and stone beds were mostly the abodes of
Q1636ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
பூம்புகார் நகரத்துக்கு வழங்கிய வேறு பெயர்கள் யாவை?
By which other names was Poompuhar known?
Q164
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
Thiruppavai and Nachiyar Thirumozhi are the celebrated works of
Q16510ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1801 அக்டோபர் 24 அன்று மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
Where were the Marudhu brothers executed on 24 October 1801?
Q166
தன்னாட்சிக் கொள்கையைப் பரப்ப அன்னிபெசன்ட் தொடங்கிய செய்தித்தாள்கள் எவை?
Which pair of newspapers was started by Annie Besant to carry forward the Home Rule agenda?
Q16710ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
_______ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
_______ was declared the new Sultan by the rebels in Vellore Fort.
Q168
கூற்று (A): 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.' என்னும் குறள், சோர்வின்றி முயல்பவர் ஊழையும் வெல்வர் எனக் கூறுகிறது.
காரணம் (R): ஊழ் அதிகாரத்தில் 'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.' என வள்ளுவர் கூறுகிறார்; பல நுட்பமான நூல்களைக் கற்றாலும் ஒருவருக்கு இயல்பான அறிவே மேலோங்கும் என்பது அதன் பொருள்.
Assertion (A): The kural 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.' says that those who strive tirelessly can overcome even fate (oozh).
Reason (R): In the chapter Oozh, Valluvar says 'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.', meaning one's innate knowledge prevails even after studying many subtle books.
Q1697ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
Which is the oldest structural temple in south India?
Q1707ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
கீழ்க்காண்பவற்றை அவை சார்ந்த காலத்தின் வரிசைப்படி அமைக்கவும்:
1. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் பிரகாரங்கள்
2. மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்
3. 13ஆம் நூற்றாண்டு பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்
4. தஞ்சாவூர் பெரிய கோவில்
Arrange the following in chronological order of their epochs:
1. Ramanathaswamy temple corridors, Rameswaram
2. Mandagapattu rock-cut temple
3. Pillayarpatti cave temple of the 13th century
4. Thanjavur Big Temple
Q1716ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
வெண்ணிப் போரில் வெற்றி பெற்றவர் ______.
The battle of Venni was won by ______.
Q1727ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் பற்றிய கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. இக்கோவில் மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
2. வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரகாரங்கள் 195 மீட்டர் நீளமுடையவை.
3. வெளிப்புறப் பிரகாரமே மூன்றிலும் மிகப் பழமையானது.
Which of the following statements about the Ramanathaswamy temple at Rameswaram is/are correct?
1. The temple has three sets of corridors.
2. The corridors to the north and south are about 195 metres long.
3. The outermost set of corridors is the oldest of the three.
Q17310ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
கீழ்க்கண்டவற்றுள் கிழக்குப் பாளையம் எது?
Which one of the following was an eastern Palayam?
Q1747ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
தவறான இணையைக் காண்க:
1. கிருஷ்ணாபுரம் கோவில் - திருநெல்வேலி
2. கூடலழகர் கோவில் - ஆழ்வார் திருநகரி
3. சேதுபதிகள் - மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
4. ஜலகண்டேஸ்வரர் கோவில் - வேலூர்
Find out the wrong pair/pairs:
1. Krishnapuram Temple - Tirunelveli
2. Kudalazhagar Temple - Azhwar Tirunagari
3. Sethupathis - Feudatories of Madurai Nayaks
4. Jalagandeshwara temple - Vellore
Q1757ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முற்காலப் பாண்டியர் சிலைகள் தற்போது எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன?
Many early Pandya images unearthed from Madurai and its surroundings are now kept in

பகுதி இ · திறனறிவு

Q1766ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
₹1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் __________.
The ratio of ₹1 to 20 paise is __________.
Q177
மூன்று மணிகள் முறையே 10, 15, 20 நிமிட இடைவெளியில் ஒலிக்கின்றன. அவை நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக ஒலிக்கின்றன. அடுத்த 3 மணி நேரத்தில் இன்னும் எத்தனை முறை ஒன்றாக ஒலிக்கும்?
Three bells toll at intervals of 10, 15 and 20 minutes. They toll together at 12 noon. How many more times will they toll together in the next 3 hours?
Q178
4, 9, 12 இன் நான்காம் விகிதசம உறுப்பு
The fourth proportional to 4, 9 and 12 is
Q179
250 ஐ 12% குறைத்தால் கிடைக்கும் புதிய எண் யாது?
If 250 is decreased by 12%, what is the new number?
Q1808ஆம் வகுப்பு · அளவைகள்
14 செ.மீ ஆரமுள்ள கால்வட்டத்தின் சுற்றளவைக் காண்க. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Find the perimeter of a circular quadrant of radius 14 cm. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Q181
240 மீ நீளமுள்ள ஒரு தொடர்வண்டி 72 கி.மீ./மணி வேகத்தில் செல்கிறது. 160 மீ நீளமுள்ள ஒரு நடைமேடையைக் கடக்க அதற்கு எத்தனை வினாடிகள் ஆகும்?
A train 240 m long is running at 72 km/h. How many seconds will it take to cross a platform 160 m long?
Q1829ஆம் வகுப்பு · அளவியல்
ஓர் அறையின் நீளம் \( 6 \text{ மீ} \), அகலம் \( 4 \text{ மீ} \), உயரம் \( 3 \text{ மீ} \). ஒரு சதுர மீட்டருக்கு ₹10 வீதம் அதன் நான்கு சுவர்களுக்கு மட்டும் வண்ணம் பூச ஆகும் செலவு
A room is \( 6 \text{ m} \) long, \( 4 \text{ m} \) broad and \( 3 \text{ m} \) high. The cost of painting only its four walls at ₹10 per \( \text{m}^2 \) is
Q1839ஆம் வகுப்பு · அளவியல்
\( 12 \text{ செமீ} \) பக்க அளவுள்ள ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு
The lateral surface area of a cube of side \( 12 \text{ cm} \) is
Q184
₹ 9,000 ஐ ஆண்டுக்கு 8% தனிவட்டியில் 3 ஆண்டுகளுக்கோ, ஆண்டுக்கு 6% தனிவட்டியில் 4 ஆண்டுகளுக்கோ முதலீடு செய்யலாம். எந்த வாய்ப்பு அதிக வட்டி தரும்?
₹ 9,000 can be invested either at 8% per annum simple interest for 3 years or at 6% per annum simple interest for 4 years. Which option gives more interest?
Q185
ஓர் எண்ணின் 40% இன் 25% என்பது 18 எனில், அந்த எண் யாது?
25% of 40% of a number is 18. Find the number.
Q186
இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஒரு தேர்தலில், வெற்றியாளர் செல்லத்தக்க வாக்குகளில் 58% பெற்று 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மொத்தச் செல்லத்தக்க வாக்குகள் எத்தனை?
In an election between two candidates, the winner got 58% of the valid votes and won by 2,400 votes. Find the total number of valid votes.
Q187
₹ 8,000 க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க.
Find the difference between the compound interest and the simple interest on ₹ 8,000 for 3 years at 5% per annum.
Q188
₹ 1,700 ஐ A, B, C மூவருக்கும் பிரிக்கும்போது, A இன் பங்கு B இன் பங்கில் \( \frac{2}{3} \) பங்கு; B இன் பங்கு C இன் பங்கில் \( \frac{1}{4} \) பங்கு. C இன் பங்கு என்ன?
₹ 1,700 is divided among A, B and C such that A gets \( \frac{2}{3} \) of what B gets and B gets \( \frac{1}{4} \) of what C gets. What is C's share?
Q1897ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாட்களில் செய்து முடிப்பர்.
4 typists are employed to complete a work in 12 days. If two more typists are added, they will finish the same work in _______ days.
Q190
ஆரம் 14 செ.மீ உடைய வட்டத்தின் கால்வட்டப் பரப்பைக் காண்க. (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Find the area of a quadrant of a circle of radius 14 cm. (Take \( \pi = \frac{22}{7} \))

பகுதி இ · காரணவியல்

Q191
3, 4, 5 ஆகிய ஒவ்வொன்றாலும் வகுக்கும்போது மீதி 2 தரும், 2-ஐவிடப் பெரிய மிகச் சிறிய எண்ணைக் காண்க.
Find the smallest number greater than 2 which leaves a remainder of 2 when divided by 3, by 4 and by 5.
Q192
P + Q என்றால் P என்பவர் Q-வின் தந்தை; P − Q என்றால் P என்பவர் Q-வின் சகோதரி; P × Q என்றால் P என்பவர் Q-வின் சகோதரன். K + L − M × N எனில், K என்பவர் N-க்கு என்ன உறவு?
P + Q means P is the father of Q; P − Q means P is the sister of Q; P × Q means P is the brother of Q. If K + L − M × N, how is K related to N?
Q193
ஒரு பகடையின் ஆறு முகங்கள் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், வெள்ளை, கருப்பு நிறங்களில் உள்ளன. ஒரே பகடையின் இரண்டு நிலைகள் தரப்பட்டுள்ளன (மேல் முகம், முன் முகம், வலது முகம்).
நிலை 1: மேல் சிவப்பு, முன் நீலம், வலது பச்சை
நிலை 2: மேல் சிவப்பு, முன் பச்சை, வலது மஞ்சள்
நிலை 1-இல் பின் முகத்தின் நிறம் எது?
The six faces of a die are coloured Red, Blue, Green, Yellow, White and Black. The same die is shown in two positions (top face, front face, right face).
Position 1: top Red, front Blue, right Green
Position 2: top Red, front Green, right Yellow
In position 1, which colour is on the back face?
Q194
ஆறு முகங்களிலும் வண்ணம் பூசப்பட்ட ஒரு கனசதுரம் 64 சம சிறிய கனசதுரங்களாக (4 × 4 × 4) வெட்டப்படுகிறது. குறைந்தது ஒரு முகத்திலாவது வண்ணம் உள்ள சிறிய கனசதுரங்கள் எத்தனை?
A cube painted on all six faces is cut into 64 equal smaller cubes (4 × 4 × 4). How many small cubes have at least one face painted?
Q195
பின்வரும் ஆங்கிலப் பெரிய எழுத்துகளில் எதற்குச் செங்குத்துச் சமச்சீர் அச்சு உண்டு?
Which of the following capital letters has a vertical line of symmetry?
Q196
25 மாணவர்கள் உள்ள ஒரு வரிசையில் லதா இடது கோடியிலிருந்து 9-ஆவது இடத்தில் உள்ளார். குமார் லதாவுக்கு வலப்புறம் 5 இடங்கள் தள்ளி உள்ளார். வலது கோடியிலிருந்து குமாரின் இடம் என்ன?
In a row of 25 students, Latha is 9th from the left end. Kumar sits 5 places to the right of Latha. What is Kumar's position from the right end?
Q197
நான் ஓர் எண். என்னுடன் 7-ஐக் கூட்டி, கிடைக்கும் விடையை 3-ஆல் பெருக்கினால் 45 கிடைக்கும். நான் எந்த எண்?
I am a number. If 7 is added to me and the result is multiplied by 3, the answer is 45. What number am I?
Q198
ஆறு சதுரங்கள் கொண்ட ஒரு தாள் மடிக்கப்பட்டுக் கனசதுரம் ஆக்கப்படுகிறது. சதுரங்கள் கீழே வரிசைவாரியாக அமைந்துள்ளன (_ என்பது வெற்றிடம்).
வரிசை 1: A B _ _
வரிசை 2: _ C D _
வரிசை 3: _ _ E F
கனசதுரத்தில் B-க்கு எதிர் முகத்தில் உள்ள எழுத்து எது?
A sheet of six squares is folded to make a cube. The squares are laid out row by row as below (_ marks an empty place).
Row 1: A B _ _
Row 2: _ C D _
Row 3: _ _ E F
Which letter is opposite B on the cube?
Q199
2 மணிக்கும் 3 மணிக்கும் இடையே எந்த நேரத்தில் கடிகாரத்தின் மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒன்றாக இருக்கும்?
At what time between 2 o'clock and 3 o'clock will the hour hand and the minute hand of a clock be together?
Q200
ஆறு சதுரங்கள் கொண்ட ஒரு தாள் மடிக்கப்பட்டுக் கனசதுரம் ஆக்கப்படுகிறது. சதுரங்கள் கீழே வரிசைவாரியாக அமைந்துள்ளன (_ என்பது வெற்றிடம்).
வரிசை 1: 1 2 3 _ _
வரிசை 2: _ _ 4 5 6
கனசதுரத்தில் 2-க்கு எதிர் முகத்தில் உள்ள எண் எது?
A sheet of six squares is folded to make a cube. The squares are laid out row by row as below (_ marks an empty place).
Row 1: 1 2 3 _ _
Row 2: _ _ 4 5 6
Which number is opposite 2 on the cube?