TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு இயற்பியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 30 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
V வோல்ட் மின்னழுத்தம் மூலமாக முடுக்கப்படும் ஆல்ஃபா துகள் ஒன்று அணு எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும் போது, அணுக்கருவிலிருந்து ஆல்பா துகளின் மீச்சிறு அணுகு தொலைவு
Q2
ஹைட்ரஜன் அணுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம்
Q3
n = 1 க்கு அயனியாக்கும் மின்னழுத்தம் 122.4 V கொண்ட ஹைட்ரஜனைப் போன்ற அணுவின் அணு எண்
Q4
ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம்
Q5
கேதோடு கதிர்களின் மின்னூட்டம்
Q6
ஜே.ஜே. தாம்சன் e/m ஆய்வில், 2.6 kV மின்னழுத்தத்தில் முடுக்கப்பட்ட எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான மின் மற்றும் காந்தப்புல மதிப்புள்ள \(3.0 × 10^4\) Vm–1 மற்றும் \(1.0 × 10^–3 T\) பகுதியில் செலுத்தப்படும்போது விலக்கமடையாமல் செல்கிறது எனில், எலக்ட்ரானின் மின்னூட்ட எண்
Q7
Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n =2 லிருந்து n = 1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்
Q8
ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் \(V = V_0 \ln(r/r_0)\) எனத் தரப்பட்டுள்ளது; இங்கு \(r_0\) ஒரு மாறிலி. போர் அணு மாதிரி பொருந்தும் எனில், n ஆவது சுற்றுப்பாதையின் ஆரம் \(r_n\), முதன்மை குவாண்டம் எண் n-ஐப் பொறுத்து மாறுபடும் விதம்
Q9
27Al அணுக்கரு ஆரம் 3.6 ஃபெர்மி எனில் 64Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய (ஃபெர்மியில்)
Q10
அணுக்கரு ஏறக்குறையக் கோள வடிவமுடையது. எனவே நிறை எண் A கொண்ட அணுக்கருவின் புறப்பரப்பு எதற்கேற்ப மாறுபடும்?
Q11
3Li7 அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில், 3Li7 அணுக்கருவின் ஒரு நியூக்ளியானுக்கான சராசரி பிணைப்பாற்றல் ஏறக்குறைய
Q12
\(M_p\) என்பது புரோட்டானின் நிறையையும் \(M_n\) என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில், அவ்வணுக்கருவின் நிறை M(N,Z) ஆனது (இங்கு c என்பது ஒளியின் வேகம்)
Q13
(தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்ட) கதிரியக்க அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது. இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் எண்களின் விகிதம்
Q14
A என்ற கதிரியக்கத் தனிமத்தின் அரை ஆயுட்காலம், B என்ற மற்றொரு கதிரியக்கத் தனிமத்தின் சராசரி ஆயுட்காலத்திற்குச் சமம். தொடக்கத்தில் இரண்டிலும் சம எண்ணிக்கையிலான அணுக்கள் உள்ளன எனில்
Q15
t = 0 இல் ஒரு கதிரியக்கத் தனிமத்தில் \(N_0\) அணுக்கருக்கள் உள்ளன. அரை ஆயுட்காலத்தின் பாதி நேரத்திற்குப் பிறகு (அதாவது \(t = \frac{1}{2} T_{1/2}\) இல்) மீதமுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை
Q16
எலக்ட்ரானின் மின்னூட்ட எண்ணைக் கண்டறியும் ஜே.ஜே. தாம்சன் ஆய்வில், செலுத்தப்படும் புலங்களின் அமைப்பு யாது?
Q17
மில்லிகன் எண்ணெய்த் துளி ஆய்வில், எந்த ஒரு துளியின் மீதுள்ள மின்னூட்டமும் எந்த அடிப்படை மதிப்பின் முழு எண் மடங்காக இருப்பது கண்டறியப்பட்டது?
Q18
ரூதர்ஃபோர்டு சிதறல் ஆய்வின்படி, மோதல் காரணிக்கும் சிதறல் கோணத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?
Q19
போர் அணு மாதிரியில், நிலையான சுற்றுப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரானின் கோண உந்தம் எதன் முழு எண் மடங்காகக் குவாண்டமாக்கப்படுகிறது?
Q20
ஹைட்ரஜன் அணுவின் \(n\)ஆவது சுற்றுப்பாதையின் ஆரம் \(r_n\), முதன்மை குவாண்டம் எண் \(n\)-ஐப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது?
Q21
ஹைட்ரஜன் அணுவின் எந்த நிறமாலை வரிசை மின்காந்த நிறமாலையின் கண்ணுறு பகுதியில் அமைகிறது?
Q22
அணுக்கருவின் திட்டக் குறியீட்டு முறை \(_Z^A X\)-இல், \(A - Z\) என்ற மதிப்பு எதைக் குறிக்கிறது?
Q23
சம எண்ணிக்கையில் நியூட்ரான்களைக் கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன:
Q24
நிறை எண் \(A > 10\) கொண்ட அணுக்கருக்களுக்கு, அணுக்கரு அடர்த்தியின் சிறப்புப் பண்பு யாது?
Q25
நிறை-ஆற்றல் சமானத் தத்துவத்தின்படி, ஒரு அணு நிறை அலகு (u) ஏறக்குறைய எவ்வளவு ஆற்றலுக்குச் சமம்?
Q26
தன்னிச்சையான ஆல்பா சிதைவில், தாய் அணுக்கருவின் நிறை எண் எத்தனை அலகுகள் குறைகிறது?
Q27
பீட்டா சிதைவில் காணப்படும் துகள்களின் தொடர் ஆற்றல் நெடுக்கத்தை விளக்க பௌலி முன்மொழிந்த துகள் எது?
Q28
ஒரு கதிரியக்க மாதிரியின் சிதைவு மாறிலி \(\lambda\) க்கும் அரை ஆயுட்காலம் \(T_{1/2}\) க்கும் இடையேயான தொடர்பு யாது?
Q29
அணுக்கரு உலையில், கனநீர் போன்ற தணிப்பானின் முதன்மைப் பணி என்ன?
Q30
ஹான்ஸ் பெத்தேயின் கருத்துப்படி, சூரியனின் முதன்மை ஆற்றல் மூலமாக விளங்கும் அணுக்கரு இணைவுச் சுழற்சி எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் test

This free online practice test covers அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் from the 12ஆம் வகுப்பு இயற்பியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல் 2 மின்னோட்டவியல் 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் 5 மின்காந்த அலைகள் 6 கதிர் ஒளியியல் 7 அலை ஒளியியல் 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு 10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் 11 இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்