TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு இயற்பியல் — காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு
A circular arc of radius r and two straight wire segments carrying current I.
Q2
சீரான மின்னூட்ட அடர்த்தி \(\sigma\) கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்க்கோட்டுப்பாதையில் செல்கிறது. சீரான காந்தப்புலத்திற்கு (\(\vec{B}\)) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்
An electron moving through parallel capacitor plates in a perpendicular magnetic field.
Q3
செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் (\(\vec{B}\)) உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
Q4
5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?
Q5
மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு
Q6
சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளில் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?
Q7
N சுற்றுகளும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே சரியாக \(R/2\) தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்
Two circular coils separated by distance R with a point P at R/2 between them.
Q8
\(l\) நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec{B} = \frac{\beta}{\sqrt{3}}(\hat{i} + \hat{j} + \hat{k}) T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு
Q9
\(l\) நீளமும் \(p_m\) திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு
A bar magnet of length l bent into a circular arc of 60 degrees.
Q10
q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் R ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று \(\omega\) என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன
Q11
ஃபெர்ரோ காந்தப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்த தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்?
A B-H hysteresis loop showing coercivity H value on the x-axis.
Q12
இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே \(1.20 A m^2\) மற்றும் \(1.00 A m^2\) ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தங்களுக்கும் இடையிலான கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு \(3.6 \times 10^{-5} Wb m^{-2}\))
Q13
புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?
Q14
R ஆரமும், \(\sigma\) பரப்பு மின்னூட்ட அடர்த்தியும் கொண்ட மின்சுற்றுப்பெற்ற தட்டு அதன் பரப்பின் மீது அதிகப்படியான மின்னூட்டங்களைப் பெற்றுள்ளது. தட்டின் பரப்பிற்கு செங்குத்தாக உள்ள அச்சைப் பொறுத்து \(\omega\) என்ற கோணதிசைவேகத்துடன் இது சுழல்கிறது. சுழலும் அச்சுக்கு செங்குத்தான திசையில் செயல்படும் B வலிமை கொண்ட காந்தப்புலத்திற்கு நடுவே இத்தட்டு சுழன்றால், அதன் மீது செயல்படும் திருப்புத்திறனின் எண்மதிப்பு என்ன?
Q15
\(\vec{p}_m = (-0.5\hat{i} + 0.4\hat{j}) A m^2\) என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec{B} = 0.2\hat{i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலை ஆற்றல் மதிப்பு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் test

This free online practice test covers காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் from the 12ஆம் வகுப்பு இயற்பியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல் 2 மின்னோட்டவியல் 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் 5 மின்காந்த அலைகள் 6 கதிர் ஒளியியல் 7 அலை ஒளியியல் 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு 9 அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் 10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் 11 இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்