TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொதுத் தமிழ் — பயிற்சித் தொகுப்பு 24

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு — 100 வினாக்கள் (150 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q16ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
பாரதிதாசனின் இயற்பெயர் ______.
Q28ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
'நாடகம் + கலை = நாடகக்கலை' - இப்புணர்ச்சியில் நிகழ்ந்துள்ள விகாரங்கள் எவை?
Q38ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
அயோத்திதாசர் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. அவரது இயற்பெயர் காத்தவராயன்.
2. 1892ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
3. ஒருபைசாத்தமிழன் இதழை 1907ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கினார்.
சரியான கூற்றுகள் எவை?
Q48ஆம் வகுப்பு · கல்வி கரையில
திரு.வி.க. பற்றிய கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இவரது முழுப்பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்.
2. இவர் தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுகிறார்.
3. பல்துறைக் கல்வி பாடம் இவரது இளமை விருந்து நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
4. இவர் ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதினார்.
Q56ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q6
தொண்டைமான் போர் எண்ணத்தைக் கைவிடக் காரணமான ஔவையாரின் கூற்று எது?
Q7
தென்னாப்பிரிக்காவில் தமிழ் கற்கத் தொடங்கிய காந்தியடிகளைக் கவர்ந்த 'தமிழ்க்கையேடு' நூலை எழுதியவர் யார்?
Q87ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
பலபொருள் தரும் ஒருசொல் என்பது ______.
Q9
பிழை திருத்துக: 'பானையை உடைத்தது கண்ணன் அல்ல.'
Q106ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
அன்னை தெரசாவிற்கு ______க்கான 'நோபல் பரிசு' கிடைத்தது.
Q117ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
இளங்கோவடிகள் ______ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
Q12
கோடிட்ட இடத்தில் சரியான வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
குயவர் பானை ______.
Q13
சாவி என்னும் பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q148ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q15
இலவச மருத்துவ முகாம்
மாவட்டச் சுகாதாரத் துறை சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும். இம்முகாமில் கண், பல், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படும். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட இருபது பேர் கொண்ட குழு பணியாற்றும். தேவைப்படுவோருக்கு மருந்துகளும் மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்படும். சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர் காலை உணவு உண்ணாமல் வர வேண்டும். முன்பதிவு தேவையில்லை; பொதுமக்கள் நேரில் வந்து பயன்பெறலாம்.

செய்தியின்படி தவறான கூற்று எது?
Q167ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'மலையளவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q178ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
கூற்று (A): 'ஆழிக்கு இணை' பாடலில் இரட்டுறமொழிதல் அணி அமைந்துள்ளது.
காரணம் (R): அப்பாடலின் சொற்றொடர்களின் பொருள் தமிழ், கடல் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
Q186ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ______.
Q197ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
நூலையும் ஆசிரியரையும் பொருத்துக:
1. முதல் திருவந்தாதி – அ) முனைப்பாடியார்
2. இரண்டாம் திருவந்தாதி – ஆ) குன்றக்குடி அடிகளார்
3. அறநெறிச்சாரம் – இ) பொய்கையாழ்வார்
4. குறட்செல்வம் – ஈ) பூதத்தாழ்வார்
Q20
Printer என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q217ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'கேள் + மியா = கேண்மியா' என்பதில் வரும் 'மியா' என்பது ______.
Q22
கோடிட்ட இடத்தில் சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
குதிரைகள் வேகமாக ______.
Q23
ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – பொருந்தாத இணையைக் கண்டறிக
Q249ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
பொருத்துக.
அ) தஞ்சைப் பெரியகோவில் - 1) மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
ஆ) கங்கைகொண்ட சோழபுரம் - 2) இரண்டாம் இராசராசன்
இ) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில் - 3) முதலாம் இராசராசன்
ஈ) திரிபுவன வீரேசுவரம் - 4) முதலாம் இராசேந்திர சோழன்
Q25
'ஒப்புரவு நெறி' என்னும் தலைப்பில் கூறப்பட்ட கருத்துகள் யாருடையவை?
Q266ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'பாதம்' கதையில் சிறுமி மாரியிடம் தைக்கக் கொடுத்துச் சென்றது ______.
Q278ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ______.
Q289ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
"காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!" - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
Q296ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q30
இதய இயக்கச் சீராக்கி என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q316ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q326ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ______ காட்டியவர் வள்ளலார்.
Q338ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
'குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்' எனக் கதைசொல்லி வியந்து குறிப்பிடும் 'ஒருவன்' யார்?
Q34
நிறுத்தக்குறிகள் சரியாக இடப்பட்ட தொடர் எது?
Q358ஆம் வகுப்பு · பாருக்குள்ளே நல்ல நாடு
'ஒருவன் இருக்கிறான்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
Q367ஆம் வகுப்பு · கலைவண்ணம்
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ______.
Q376ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க (மு. மேத்தாவின் நூல்கள்).
Q38
'அசதி' என்னும் சொல்லுக்கு இணையான சொல் எது?
Q397ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது இரட்டை வழக்கு மொழி எனப்படும்.
2. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.
3. எழுத்துமொழியில் உடல்மொழிக்கும் குரல் ஏற்றத்தாழ்வுக்கும் இடம் அதிகம்.
Q40
அலுவலகக் கடிதத்தில் Subject என்பதற்கு இணையாக எழுதப்படும் சொல் எது?
Q417ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
'தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க ______' - குறளை நிறைவு செய்க.
Q42
தொகை மரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q437ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ______.
Q4410ஆம் வகுப்பு · பெருவழி
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
Q458ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
வறுமை வந்த காலத்தில் ______ குறையாமல் வாழ வேண்டும்.
Q466ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'தொன்மை' என்னும் சொல்லின் பொருள் ______.
Q47
'கப்பல்' என்னும் ஒரே பொருளைத் தரும் திரிசொற்கள் எவை?
Q487ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
பொருத்துக.
1. பெயர்ப் பகுபதம் - அ) வாழ்ந்தான்
2. வினைப் பகுபதம் - ஆ) மன்
3. இடைப் பகாப்பதம் - இ) நனி
4. உரிப் பகாப்பதம் - ஈ) பெரியார்
Q49
அறிவிப்பு
ஊராட்சி மன்றம் சார்பில் 'பசுமை ஊர்' மரம் நடும் இயக்கம் ஜூலை 15 முதல் 30 வரை நடைபெறும். விருப்பமுள்ள குடும்பத்தினர் ஊராட்சி அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, ஒரு குடும்பத்துக்கு இரண்டு மரக்கன்றுகள் வீதம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய வரும்போது குடும்ப அட்டையின் நகலைக் கொண்டுவர வேண்டும். நட்ட கன்றுகளை மூன்று ஆண்டுகள் பேணி வளர்க்கும் குடும்பங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கன்றுகளைச் சாலையோரங்களிலோ மின்கம்பிகளுக்கு அடியிலோ நடக்கூடாது. இயக்கத்தின் தொடக்க நாளன்று ஊராட்சிப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கன்றுகளை நடுவார்கள்.
– ஊராட்சி மன்ற அலுவலகம்

பெயரைப் பதிவு செய்ய வருவோர் கொண்டுவர வேண்டியது எது?
Q506ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப