TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மின்னோட்டவியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு இயற்பியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 30 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?
மின்னழுத்த வேறுபாடு (V) மற்றும் மின்னோட்டம் (I) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பைக் காட்டும் வரைபடம். — மின்னோட்டவியல், 12ஆம் வகுப்பு இயற்பியல்
Q2
ஒரு மீட்டர் நீளத்திற்கு \(2 \Omega\) மின்தடை கொண்ட கம்பியானது 1 m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்குகிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.
A மற்றும் B ஆகிய புள்ளிகளை நேர் எதிரே கொண்டுள்ள வட்ட வடிவக் கம்பிச் சுருள். — மின்னோட்டவியல், 12ஆம் வகுப்பு இயற்பியல்
Q3
ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை \(120 \Omega\) எனில் அதன் திறன்
Q4
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு \((47 \pm 4.7) k \Omega\) எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை
Q5
பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?
பழுப்பு, கருப்பு, மஞ்சள் மற்றும் தங்க நிற வளையங்களைக் கொண்ட ஒரு கார்பன் மின்தடையாக்கி. — மின்னோட்டவியல், 12ஆம் வகுப்பு இயற்பியல்
Q6
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. \(R_A = 3 R_B\) எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?
Q7
230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு \(P_1\). அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு \(P_2\) எனில் \(\frac{P_2}{P_1}\) எனும் விகிதம்
Q8
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை
Q9
ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220 V எனில் கட்டிடத்தின் மைய மின் உருக்கியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு
Q10
பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?
9V மின்னழுத்த மூலம், 3 ஓம், R மற்றும் 2.5 ஓம் மின்தடையாக்கிகள் தொடரிணைப்பில் உள்ள ஒரு மின்சுற்று. — மின்னோட்டவியல், 12ஆம் வகுப்பு இயற்பியல்
Q11
மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
5V மின்னழுத்த மூலத்துடன் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மூன்று 15 ஓம் மின்தடையாக்கிகள் கொண்ட மின்சுற்று. — மின்னோட்டவியல், 12ஆம் வகுப்பு இயற்பியல்
Q12
ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் \(0.00125/^{\circ}C\). \(20^{\circ}C\) வெப்பநிலையில் கம்பியின் மின்தடை \(1 \Omega\) எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை \(2 \Omega\) ஆகும்?
Q13
2.1 V மின்கலமானது \(10 \Omega\) மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை
Q14
ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.
Q15
ஜூலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் \(I^2\) ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு
Q16
கொடுக்கப்பட்ட குறுக்குவெட்டுப் பரப்பின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் என வரையறுக்கப்படும் இயற்பியல் அளவு எது?
Q17
மரபுப்படி, புறச்சுற்றில் மரபு மின்னோட்டத்தின் திசை எதிலிருந்து எதை நோக்கி எடுத்துக்கொள்ளப்படுகிறது?
Q18
புற மின்புலத்திற்கு உட்படுத்தப்படும்போது கடத்தியினுள் எலக்ட்ரான்கள் பெறும் சராசரித் திசைவேகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q19
மின்னோட்டத்தின் நுண்மாதிரியில் (microscopic model), மின்னோட்டம் (\(I\)) மற்றும் இழுப்புத் திசைவேகம் (\(v_d\)) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு:
Q20
மின்னோட்டத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையே நேர்க்கோட்டுத் தொடர்பைப் பின்பற்றாத சாதனத்தைக் குறிப்பது பின்வருவனவற்றுள் எது?
Q21
மின்தடை எண் என்பது ______ கொண்ட கடத்தி அளிக்கும் மின்தடை என வரையறுக்கப்படுகிறது.
Q22
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் நிறவளையங்கள் பச்சை, நீலம், ஆரஞ்சு மற்றும் தங்கம் எனில் அதன் மின்தடை மதிப்பு யாது?
Q23
\(R_1\), \(R_2\) மற்றும் \(R_3\) ஆகிய மூன்று மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுபயன் மின்தடை \(R_P\) ஐத் தரும் சமன்பாடு:
Q24
இலட்சிய மின்கலம் என்பது ______ கொண்ட மின்னியக்கு விசை (emf) மூலமாக வரையறுக்கப்படுகிறது.
Q25
கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி (முதல் விதி) யின்படி, மின்சுற்றின் எந்தவொரு சந்தியிலும் உள்ள மின்னோட்டங்களின் இயற்கணிதக் கூடுதல்:
Q26
வீட்ஸ்டோன் சமனச்சுற்றில், கால்வனாமீட்டர் வழியே செல்லும் மின்னோட்டம் ______ ஆக இருக்கும்போது சமனச்சுற்று சமநிலையில் உள்ளது எனப்படும்.
Q27
மீட்டர் சமனச்சுற்று முதன்மையாக எதனை அளக்கப் பயன்படுகிறது?
Q28
மின்னழுத்தமானியின் தத்துவத்தின்படி, சீரான குறுக்குவெட்டுப் பரப்புடைய கம்பியின் ஏதேனும் ஒரு நீளத்தின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு:
Q29
ஜூலின் வெப்ப விதியின்படி, மின்தடையாக்கியில் உருவாகும் வெப்பம் (\(H\)) எதற்கு நேர்த்தகவில் இருக்கும்?
Q30
இரு வேறுபட்ட உலோகங்களாலான சுற்றில் அவற்றின் சந்திகளை வெவ்வேறு வெப்பநிலைகளில் வைப்பதன் மூலம் மின்னோட்டம் உருவாகும் நிகழ்வு:

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின்னோட்டவியல் test

This free online practice test covers மின்னோட்டவியல் from the 12ஆம் வகுப்பு இயற்பியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல் 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் 5 மின்காந்த அலைகள் 6 கதிர் ஒளியியல் 7 அலை ஒளியியல் 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு 9 அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் 10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் 11 இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்