TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

புரட்சிகளின் காலம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வரலாறு)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 33 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
வட அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் ________
Q2
நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு ________ என மறுபெயர் சூட்டப்பட்டது.
Q3
கூற்று: ஆங்கிலேயர் நாவாய்ச் சட்டங்களை இயற்றினர்.
காரணம்: காலனி நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டுமென்பதை இச்சட்டம் கட்டாயப்படுத்தியது.
Q4
கூற்று: 1770இல் இங்கிலாந்து தேயிலையைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தது.
காரணம்: காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக் கொள்ளப்பட்டது.
Q5
பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு ________ இல் நடைபெற்றது.
Q6
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
கூற்று I: 1776 ஜூலை 4இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தன.
கூற்று II: சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.
Q7
அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை தாங்கியவர்
Q8
கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
கூற்று I: பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பகுதி விவசாயிகளால் ஆனது.
கூற்று II: பிரெஞ்சு விவசாயிகள் பண்ணை அடிமைகளாய் இருந்தனர்.
கூற்று III: வாரத்தில் சில நாட்களில் விவசாயிகள் தங்கள் பிரபுக்களுக்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்தாக வேண்டும்.
Q9
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்குத் தலைமையேற்ற பிரபு ________ ஆவார்.
Q10
கூற்று: வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
காரணம்: அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
Q11
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) மாண்டெஸ்கியூ - 1. ஜேகோபியர்கள்
(ஆ) வால்டர் - 2. ஆங்கிலேய நாட்டுத் தத்துவவாதி
(இ) பயங்கர ஆட்சி - 3. பதினான்காம் லூயியின் காலம்
(ஈ) ஜான் லாக் - 4. சட்டங்களின் சாரம்
Q12
பாஸ்டில் சிறை தகர்ப்பு ________ இல் நடந்தது.
Q13
பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் ________ அதிருப்தி கொண்டிருந்தார்.
Q14
________ பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது.
Q15
________ தொடக்கத்தில் செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.
Q16
மெக்சிகோவில் புரட்சிக்குத் தலைமையேற்றவர் ________
Q17
அர்ஜென்டினாவை விடுதலையடையச் செய்தவர் ________
Q18
________ நகரம் 'காட்டன்பொலிஸ்' எனும் புனைப் பெயரைப் பெற்றது.
Q19
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) மைக்கேல் பாரடே - 1. ஆர்க்ரைட்
(ஆ) எலியாஸ் ஹோவே - 2. ராபர்ட் புல்டன்
(இ) நீர்ச் சட்டகம் - 3. மின்சாரம்
(ஈ) நீராவிப் படகு - 4. தையல் இயந்திரம்
Q20
குடியேற்ற நாடுகளின் மக்கள் சட்டத் தொடர்புடைய அனைத்து ஆவணங்களிலும் முத்திரைகளை ஒட்டவும் அதற்கு வரி செலுத்தவும் கட்டாயப்படுத்திய 1765ஆம் ஆண்டு ஆங்கிலேய வரிச்சட்டம் எது?
Q21
கீழ்க்காணும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. பாஸ்டன் தேநீர் விருந்து
2. முத்திரைச் சட்டம்
3. சர்க்கரை, சர்க்கரைப்பாகு மீதான வரி
4. பாஸ்டன் படுகொலை
Q22
பாரிஸ் உடன்படிக்கை (1783) பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. 13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் புதிய நாட்டையும் இங்கிலாந்து அங்கீகரித்தது.
2. ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.
3. மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்துக்குச் சொந்தமான சில பகுதிகளைப் பிரான்ஸ் பெற்றது.
4. மேற்கே மிசிசிபி ஆற்றை எல்லையாகக் கொண்ட பகுதியை ஹாலந்து பெற்றது.
Q23
குடியேற்ற நாடுகளின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி எழுதப்பட்டு 1,50,000 பிரதிகள் விற்பனையான 'பொது அறிவு' (1776) எனும் துண்டுப் பிரசுரத்தை எழுதிய ஆங்கிலேயர் யார்?
Q24
பதினெட்டாம் நூற்றாண்டு பிரான்ஸ் தொடர்பான சொற்களை அவற்றின் பொருளுடன் பொருத்துக.
(அ) டைத் - 1. பழைய ஒழுங்குமுறை
(ஆ) காபெல் - 2. உப்பின் மீதான வரி
(இ) பண்டைய ஆட்சிமுறை - 3. கல்வியறிவு பெற்ற இடைத்தட்டு மக்கள்
(ஈ) பூர்ஷ்வா - 4. திருச்சபையால் வசூலிக்கப்பட்ட வரி
Q25
கூற்று: அந்நிய சக்திகளுக்கு எதிராகப் போர் அறிவிக்கும் கிரோண்டியர்களின் திட்டத்தை ரோபஸ்பியர் எதிர்த்தார்.
காரணம்: போர் எதிர்ப்புரட்சிக்கான கதவுகளைத் திறந்து வைக்கும் என அவர் வாதாடினார்.
Q26
பிரெஞ்சுப் புரட்சியின் கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. செப்டம்பர் படுகொலைகள்
2. டென்னிஸ் மைதான உறுதிமொழி
3. பதினாறாம் லூயி கொல்லப்படுதல்
4. மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்கப்படுதல்
Q27
1793-94இல் ஜேகோபியர்கள் ஆதிக்கம் செலுத்திய அரசின் நடவடிக்கைகளில் இடம்பெறாதது எது?
Q28
டூசையின்ட் எல் ஓவர்ச்சர் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னர், கருப்பின மக்களின் எதிர்ப்பை ஒழுங்கமைத்து நெப்போலியனின் படைகளைத் தோற்கடித்தவர் யார்?
Q29
1819இல் அங்கோஸ்டுரா என்ற இடத்தில் கூட்டப்பட்ட மாநாடு சைமன் பொலிவரை கிரான் கொலம்பியாவின் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இன்றைய நாடுகளில் கிரான் கொலம்பியாவில் இடம்பெறாதது எது?
Q30
பிரேசில் எந்த ஆண்டு போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்று முதலாம் பெட்ரோவை முதல் பேரரசராகக் கொண்டது?
Q31
கண்டுபிடிப்புகளை அவற்றைக் கண்டுபிடித்தவர்களுடன் பொருத்துக.
(அ) பறக்கும் நாடா - 1. ஆபிரகாம் டர்பி
(ஆ) ஸ்பின்னிங் ஜென்னி - 2. ஜான் கே
(இ) கிராம்டன் மியூல் - 3. சாமுவெல் கிராம்டன்
(ஈ) இரும்பை உருக்க நிலக்கரியைப் பயன்படுத்துதல் - 4. ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ்
Q32
ஜெர்மனியில் தொழிற்புரட்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. சுதந்திர வணிகத்தைப் பொதுக் கொள்கையாகக் கொண்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஸோல்வரெய்ன் எனும் அமைப்பு பிரஷ்யாவில் உருவாக்கப்பட்டது.
2. 1871இல் ஜெர்மனி இணைக்கப்பட்டது வேகமான தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டது.
3. பேயர், ஹோசெட் போன்ற நிறுவனங்கள் ஜெர்மனியின் இரசாயனத் தொழிலுக்குத் தலைமை தாங்கின.
4. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஜெர்மனி தொழில்துறையில் இங்கிலாந்தை விட மிகவும் பின்தங்கியிருந்தது.
Q33
தொழிலாளர் இயக்கம் தொடர்பான கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. சிக்காகோவில் ஹேமார்கெட் படுகொலை
2. டோல்புடில் குற்றவழக்கு
3. பீட்டர்லூ படுகொலை
4. அமெரிக்காவில் மாபெரும் இருப்புப்பாதை வேலை நிறுத்தம்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்19 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்14 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this புரட்சிகளின் காலம் test

This free online practice test covers புரட்சிகளின் காலம் from the 12ஆம் வகுப்பு வரலாறு (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வரலாறு பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் 12 ஐரோப்பாவில் அமைதியின்மை 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்