TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பத்தாம் வகுப்பு கணிதவியல் March 2025: விடையுடன் கூடிய வினாக்கள்

14 வினாக்கள் 100 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள் வினாத்தாள் குறியீடு 8512
இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

March 2025 பத்தாம் வகுப்பு கணிதவியல் பொதுத் தேர்வின் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள், வினாத்தாள் வரிசையில், சரியான விடை குறிக்கப்பட்டு சுருக்கமான விளக்கத்துடன்.

விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்

ஆன்லைன் தேர்வு எழுது → 📄 முழு வினாத்தாள் + PDF
Q1
\(R=\{(x, x^2)\ |\ x\) ஆனது 13 ஐ விடக் குறைவான பகா எண்கள்\(\}\) என்ற உறவின் வீச்சகமானது :
  • A. \(\{2, 3, 5, 7\}\)
  • B. \(\{2, 3, 5, 7, 11\}\)
  • C. \(\{4, 9, 25, 49, 121\}\)சரி
  • D. \(\{1, 4, 9, 25, 49, 121\}\)
விளக்கம். 13 -க்குக் குறைவான பகா எண்கள் 2, 3, 5, 7, 11; அவற்றின் வர்க்கங்கள் \(\{4, 9, 25, 49, 121\}\) வீச்சகம் ஆகும்.
Q2
\(n(A)=m\) மற்றும் \(n(B)=n\) எனில் B -லிருந்து A -க்கு வரையறுக்கப்பட்ட சார்புகளின் மொத்த எண்ணிக்கை :
  • A. \(m^n\)சரி
  • B. \(n^m\)
  • C. \(2^{mn}-1\)
  • D. \(2^{mn}\)
விளக்கம். B -யின் n உறுப்புகள் ஒவ்வொன்றும் A -யின் m உறுப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் இணையலாம்; எனவே \(m^n\) சார்புகள்.
Q3
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின்படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, \(a=bq+r\) என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது :
  • A. \(1<r<b\)
  • B. \(0<r<b\)
  • C. \(0\le r<b\)சரி
  • D. \(0<r\le b\)
விளக்கம். மீதி குறையற்றது மற்றும் வகுஎண்ணை விடக் குறைவு: \(0\le r<b\).
Q4
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13 வது உறுப்பு :
  • A. 0சரி
  • B. 6
  • C. 7
  • D. 13
விளக்கம். \(6(a+5d)=7(a+6d)\) எனில் \(a+12d=0\), அதாவது \(t_{13}=0\).
Q5
\(x^2-2x-24\) மற்றும் \(x^2-kx-6\) -யின் மீ.பொ.வ \((x-6)\) எனில், k-யின் மதிப்பு :
  • A. 3
  • B. 5சரி
  • C. 6
  • D. 8
விளக்கம். \(x=6\) என்பது \(x^2-kx-6\) -ன் மூலம்: \(36-6k-6=0\), எனவே \(k=5\).
Q6
ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி :
  • A. அலகு அணி
  • B. மூலைவிட்ட அணி
  • C. நிரல் அணி
  • D. நிரை அணிசரி
விளக்கம். \(m\times 1\) நிரல் அணியின் நிரை நிரல் மாற்று \(1\times m\) நிரை அணி ஆகும்.
Q7
வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் :
  • A. மையம்
  • B. தொடு புள்ளிசரி
  • C. முடிவிலி
  • D. நாண்
விளக்கம். வட்டத்தின் தொடுகோடு, தொடுபுள்ளி வழியே செல்லும் ஆரத்திற்குச் செங்குத்தாக இருக்கும்.
பாடம்: வடிவியல்
Q8
\(7x-3y+4=0\) என்ற நேர்கோட்டிற்கு இணையாகவும் ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு :
  • A. \(7x-3y+4=0\)
  • B. \(3x-7y+4=0\)
  • C. \(3x+7y=0\)
  • D. \(7x-3y=0\)சரி
விளக்கம். இணைகோடு \(7x-3y+k=0\); (0, 0) வழிச் செல்வதால் \(k=0\), எனவே \(7x-3y=0\).
Q9
\((0, 0)\) மற்றும் \((-8, 8)\) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு :
  • A. -1
  • B. 1சரி
  • C. \(\frac{1}{3}\)
  • D. -8
விளக்கம். இணைக்கும் கோட்டின் சாய்வு = \(\frac{8-0}{-8-0}=-1\); செங்குத்துக் கோட்டின் சாய்வு \(-\frac{1}{-1}=1\).
Q10
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் \(\sqrt{3}:1\) எனில், சூரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது :
  • A. \(45^\circ\)
  • B. \(30^\circ\)
  • C. \(90^\circ\)
  • D. \(60^\circ\)சரி
விளக்கம். \(\tan\theta=\frac{\sqrt{3}}{1}\), எனவே \(\theta=60^\circ\).
Q11
15 செ.மீ. உயரமும் 16 செ.மீ. விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு :
  • A. 60 \(\pi\) ச.செ.மீ.
  • B. 68 \(\pi\) ச.செ.மீ.
  • C. 120 \(\pi\) ச.செ.மீ.
  • D. 136 \(\pi\) ச.செ.மீ.சரி
விளக்கம். r = 8, \(l=\sqrt{15^2+8^2}=17\); வளைபரப்பு = \(\pi rl=136\pi\) ச.செ.மீ.
பாடம்: அளவியல்
Q12
1 செ.மீ. ஆரமும், 5 செ.மீ. உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கன அளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கன அளவு. (க.செ.மீ. -ல்)
  • A. \(\frac{4}{3}\pi\)சரி
  • B. \(\frac{10}{3}\pi\)
  • C. \(5\pi\)
  • D. \(\frac{20}{3}\pi\)
விளக்கம். கோளத்தின் ஆரம் அடிப்பக்க ஆரம் 1 செ.மீ -க்கு மேல் இருக்க முடியாது; கன அளவு = \(\frac{4}{3}\pi(1)^3=\frac{4}{3}\pi\).
பாடம்: அளவியல்
Q13
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது ?
  • A. \(P(A)>1\)சரி
  • B. \(0\le P(A)\le 1\)
  • C. \(P(\phi)=0\)
  • D. \(P(A)+P(\bar{A})=1\)
விளக்கம். நிகழ்தகவு 1 -ஐ விட அதிகமாக இருக்க முடியாது; எனவே P(A) > 1 தவறு.
Q14
ஒரு பணப்பையில் ₹ 2000 நோட்டுகள் 10-ம், ₹ 500 நோட்டுகள் 15 -ம், ₹ 200 நோட்டுகள் 25 -ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ₹ 500 நோட்டாகவோ அல்லது ₹ 200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன ?
  • A. \(\frac{1}{5}\)
  • B. \(\frac{3}{10}\)
  • C. \(\frac{2}{3}\)
  • D. \(\frac{4}{5}\)சரி
விளக்கம். சாதகமான நோட்டுகள் = 15 + 25 = 40, மொத்தம் 50; P = \(\frac{40}{50}=\frac{4}{5}\).
ஆன்லைன் தேர்வு எழுது → அனைத்து முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

இந்த வினாத்தாள் பற்றி

இவை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய March 2025 பத்தாம் வகுப்பு கணிதவியல் பொதுத் தேர்வின் பகுதி I ஒரு மதிப்பெண் பலவுள் தெரிவு வினாக்கள். விடைகளும் விளக்கங்களும் மீள்பார்வைக்காக TN Online Test ஆல் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவும் அது இடம்பெற்ற பாடநூல் அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த அத்தியாயத்தின் குறிப்புகள் மற்றும் வினாக்களுக்குத் திரும்பிச் செல்லலாம்.

பிற ஆண்டுகள்

2026 · March 2026 2024 · March 2024 2023 · April 2023