நிதிச் சந்தை - ஓர் அறிமுகம் - பாடக் குறிப்புகள்
பாடச் சுருக்கம்
வணிக நிறுவனங்களுக்குத் திட்டங்களை மேற்கொள்ளப் பெரிய அளவில் நிதி தேவை; அரசாங்கங்களுக்கு மக்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் வழங்க நிதி தேவை. பல்வேறு கருவிகளை வழங்குதல், விற்பனை செய்தல் மூலம் நிதி திரட்டவும், முதலீட்டாளர்கள் உபரி நிதியை முதலீடு செய்து வருமானம் ஈட்டவும் நிதிச் சந்தை உதவுகிறது. இது குறுகிய கால, நீண்ட கால நிதி இரண்டையும் வழங்குகிறது.
இந்திய நிதி முறை
| அமைப்பு நிறுவனங்கள் | அமைப்புச்சாரா நிறுவனங்கள் |
|---|---|
| ஒழுங்காற்று நிறுவனங்கள் | கடன் வழங்குபவர்கள் |
| நிதி நிறுவனங்கள் | நாட்டுப்புற வங்கியர் |
| நிதிச் சந்தை | |
| நிதிச்சார் சேவைகள் |
4.01 பொருளும் வரையறையும்
- நிதி கோருதல்கள், சொத்துக்கள், பத்திரங்கள் போன்ற நிதிக் கருவிகள் வியாபாரம் செய்யப்படும் சந்தை நிதிச் சந்தை.
- உபரி நிதி உள்ளவரிடமிருந்து நிதிப் பற்றாக்குறை உள்ளவரை நோக்கிக் கடன் நிதியை எடுத்துச் செல்வது.
- ப்ரிகாம் யூஜின் எஃப்: பணத்தைக் கடன் வாங்க விரும்பும் மக்களும் அமைப்புகளும் உபரிநிதி உள்ளவர்களுடன் ஒன்றிணைக்கப்படும் இடம்.
4.02 எல்லை
தனிநபர்கள், விவசாயம், தொழில், சேவை துறைகள், வங்கிகள், காப்பீட்டுத் துறைகள், சேம நல காப்பு நிதிகள், அரசு ஆகியோருக்கு உரிய நேரத்தில் குறுகிய, நீண்ட கால நிதி உதவியை வழங்கி, ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
4.03 வகைகள்
| அடிப்படை | சந்தைகள் |
|---|---|
| நிதி கோருதல் வகை | கடன் சந்தை (அரசு பத்திரங்கள், நிறும கடனீட்டுப் பத்திரங்கள்); நேர்மை பங்குச் சந்தை |
| முதிர்வு | பணச் சந்தை (ஓராண்டு அல்லது குறைவு: கருவூலச் சீட்டுகள், வணிகத் தாள்கள், வைப்புச் சான்றிதழ்கள்); மூலதனச் சந்தை (ஓராண்டுக்கு மேல்: பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள்) |
| வெளியீட்டுக் காலம் | முதல் நிலைச் சந்தை (பணம் நேரடியாக நிறுமங்களுக்கு); இரண்டாம் நிலைச் சந்தை (பங்கு மாற்றகம்) |
| வழங்கல் காலம் | ரொக்கம் (அ) உடனடிச் சந்தை; முன்னோக்கிய (அ) எதிர்கால சந்தை |
| அமைப்பு | பரிமாற்ற வர்த்தகச் சந்தை (மையப்படுத்தப்பட்டது); எதிர்ச் சந்தை (மையப்படுத்தப்படாதது) |
இவ்வகைகள் நிலையானவை அல்ல; ஒரு சந்தை ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இடம் பெறலாம்.
4.04 பங்கு
- சேமிப்பை பெருக்குதல்: சேமிப்பாளர்களிடமிருந்து நிதி பெறுதல்.
- முதலீடுகள்: திரட்டிய நிதியைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்குதல்.
- தேசிய வளர்ச்சி: உபரி நிதிகள் தடங்கலின்றிப் பற்றாக்குறை நிறுவனங்களுக்குச் செல்லுதல்.
- தொழில்முனைவோர் வளர்ச்சி: தேவையான நிதி வளங்களைக் கிடைக்கச் செய்தல்.
- தொழிற்துறை மேம்பாடு: துரித தொழில் வளர்ச்சியும் உயர்ந்த வாழ்க்கைத் தரமும்.
4.05 பணிகள்
இடைநிலையர் பணிகள்: வள ஆதாரங்களின் பரிமாற்றம், வருவாயை அதிகரித்தல், ஆக்க பூர்வ பயன்பாடு, மூலதன உருவாக்கம், விலை நிர்ணயம் (விலை கண்டுபிடிப்பு), விற்பனை வழிமுறைகள், தகவல்கள்.
நிதி சார்ந்த பணிகள்: கடன் வாங்குபவர்களுக்கு நிதி, கடன் வழங்குபவர்களுக்கு ஈட்டும் சொத்துக்கள், சந்தையில் நீர்மைத் தன்மை.
4.06 புதிய வெளியீடுகள் சந்தை Vs இரண்டாம் நிலைச் சந்தை
| அடிப்படை | புதிய வெளியீடுகள் சந்தை | இரண்டாம் நிலைச் சந்தை |
|---|---|---|
| கொள்முதல் | நேரடி | மறைமுகம் |
| நிதி | நிறுமங்களுக்கு நிதி வழங்குகிறது | நிதி வழங்குவதில்லை |
| விற்கும் முறை | ஒரே ஒரு முறை | பல முறை |
| இடைநிலையர் | ஒப்புறுதியாளர்கள் | தரகர்கள் |
| விலை | நிலையான விலை | தேவை, அளிப்பைப் பொறுத்து மாறும் |
| அமைப்பு | குறிப்பிட்ட புவியியல் இடம் இல்லை | புற அமைப்பு உள்ளது |
நிதிச் சொத்துக்கள்
- சந்தைப்படுத்தப்படும்: பட்டியலிடப்பட்ட பங்குகள், அரசு பத்திரங்கள், பொதுத்துறை பிணையங்கள்.
- சந்தைப்படுத்தப்படாத: வங்கி வைப்புகள், சேமநல காப்பு நிதிகள், ஓய்வூதிய நிதிகள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், காப்பீடுகள்.
- குடியிருப்புக்கான கட்டிடம் புற அமைப்பு சொத்து; வாடகைக்கு விடும் நோக்கில் வாங்கினால் நிதிச் சொத்து.