1991 இல் இந்தியா வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த உலக வங்கி (IBRD), சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றிடம் கடன் பெற்றது. இவ்வமைப்புகள் இந்தியா தனது பொருளாதாரத்தைத் தாராளமயமாக்க வேண்டும் என எதிர்பார்த்தன. அவற்றின் நிபந்தனைகளை ஏற்று இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையை (NEP) அறிவித்தது. இது எல்பிஜி (LPG) அல்லது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் எனப்படுகிறது.
20.01 புதிய பொருளாதாரக் கொள்கையின் கோணங்கள்
மூன்று கோணங்கள்: தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்.
பல நாடுகளின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அடித்தளம் டங்கன் வரைவுத் திட்டம்.
ஆர்தர் டங்கன் (1932-2005) 22,000 பக்கங்கள் கொண்ட வரைவு ஆவணத்தை உலக வர்த்தக அமைப்பிற்குச் சமர்ப்பித்தார்.
இந்தியா 1991 இல் புதிய பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்தியது.
20.02 தாராளமயமாக்கலின் பொருள் மற்றும் உருவாக்கம்
வணிக நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்களை அல்லது விதிகளை அரசாங்கம் தளர்த்துவதே தாராளமயமாக்கல்.
வரிவிதிப்பு, மானியங்கள், பிற கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
உரிமம் முறை அல்லது "உரிமம் ராஜ்" போன்றவற்றை அகற்றிய புதிய தொழில்கொள்கையின் விளைவே தாராளமயமாக்கல்.
உருவாக்கம்
மாற்றம்
தொழில் உரிமம்
ஆறு துறைகள் தவிர அனைத்தும் உரிமத்திலிருந்து விடுவிக்கப்பட்டன: மருந்து மற்றும் மருந்தாக்கியல், அபாயகரமான வேதிப்பொருள்கள், வெடிமருந்து, புகையிலை, மதுபானம், மின்னணு-வான்வழி-பாதுகாப்புத் துறை. தற்போது மருந்தாக்கியல் தவிர ஐந்து மட்டுமே.
விரிவாக்கம், உற்பத்திச் சுதந்திரம்
சந்தைத் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும் சுதந்திரம்.
சிறு தொழில்கள்
முதலீட்டு உச்சவரம்பு ரூ. 1 கோடி.
அந்நியச் செலாவணி மறுசீரமைப்பு
1991 இல் ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது.
ஏற்றுமதி, இறக்குமதி
நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு உலக வர்த்தகம் அதிகரித்தது.
20.03 தாராளமயமாக்கலின் நன்மைகள், குறைபாடுகள்
நன்மைகள்
குறைபாடுகள்
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு
வேலையின்மை அதிகரித்தல்
அந்நியச் செலாவணி இருப்பு அதிகரிப்பு
உள்நாட்டுத் தொழில் அலகுகளின் இழப்பு
நுகர்வு அதிகரிப்பு
அயல் நாடுகளைச் சார்ந்திருத்தல் பெருக்கம்
விலைக் கட்டுப்பாடு
சமநிலையற்ற வளர்ச்சி
வெளிநாட்டுக் கடன்களைக் குறைக்கிறது
நிதிக்கொள்கை, வரித்துறை, தொழில்துறை, வர்த்தகத்துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
20.04 தாராளமயமாக்கலின் தாக்கம்
உலக GDP யில் இந்தியாவின் பங்களிப்பு $1.3 டிரில்லியன்; உலகப் பொருளாதாரத்தில் ஏழாவது இடம்.
பன்னாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு.
புதிய சந்தை வாய்ப்புகளால் நகர்ப்புற, கிராமப்புற முன்னேற்றம்.
தொழில் விரிவாக்கத்திற்கு வங்கிக் கடன் எளிதானது.
அயல்நாட்டு வணிக ஒத்துழைப்பு (Foreign Collaboration) உருவானது; பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின.
20.05 தனியார்மயமாக்கலின் பொருள் மற்றும் உருவாக்கம்
பொதுத்துறை நிறுவனங்களின் உரிமைகளைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் நிகழ்வே தனியார்மயமாக்கல்.
சுருங்கக் கூறின், பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களைத் தனியார் துறை தொடங்க அனுமதிப்பது.
முக்கியக் காரணம்: அரசியல் குறுக்கீடு, நிர்வாக சீர்கேட்டால் பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கின; மேலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியவில்லை.
இந்தியன் ஸ்கூட்டர் லிமிடெட் இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனம்.
உருவாக்கம்
முக்கியக் கருத்து
பொதுத்துறை எண்ணிக்கையைச் சுருக்குதல்
1956 கொள்கைப்படி 17 தொழில்கள் 8 ஆகக் குறைப்பு. தற்போது அணுசக்தி, பாதுகாப்பு, இரயில்வே மட்டும் அரசின் முன்னுரிமைத் துறைகள்.
பொதுத்துறைப் பங்குகளை விற்றல்
2011 க்குப் பிறகு தனியார் பங்கு 45% இலிருந்து 55% ஆக உயர்வு.
புரிந்துணர்வு குறிப்பாணை
1991 இல் அறிமுகம்; உற்பத்தித்திறன், செயல்திறனை உயர்த்த.
முதலீடுகளை விலக்கிக்கொள்ளுதல்
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் முதலீடுகளைத் தனியாருக்கு விற்றல்.
20.06 தனியார்மயமாக்கலின் நன்மைகள், குறைபாடுகள்
நன்மைகள்
குறைபாடுகள்
செயல்திறனை அதிகரித்தல்
பொதுநலனில் கவனமின்மை
தொழில்சார் மேலாண்மை
அரசியல் நிர்ப்பந்தம்
போட்டியைப் பெருக்குதல்
நலிவடைந்த பிரிவுகளைப் புறக்கணித்தல்
அரசின் பொருளாதாரச் சுமையைக் குறைத்தல்
20.07 தனியார்மயமாக்கலின் தாக்கம்
நிதிப்பற்றாக்குறை, கடன் சுமைகளைக் குறைத்து நிதி வளர்ச்சிக்குப் பங்களிப்பு.
பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் அதிகரிப்பு.
நுகர்வோருக்குச் சிறந்த பொருட்கள், சேவைகள்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) உருவாக்குதல்.
20.08 உலகமயமாக்கலின் பொருள் மற்றும் உருவாக்கம்
உள்நாட்டுப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடு, வர்த்தகம், உற்பத்தி, நிதி ஆகியவற்றில் உலகின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பதே உலகமயமாக்கல்.
தேசியப் பொருளாதாரங்களுக்கு இடையிலான தடைகளை அகற்றுவதன் விளைவு இது.
உருவாக்கம்: வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (TRIPS), ஏற்றுமதி ஊக்குவிப்பு, புலம் பெயர்ந்தோர் வளங்களை மீட்டல், கட்டணக் குறைப்பு, திறந்த போட்டியை ஊக்குவித்தல்.
20.09 உலகமயமாக்கலின் நன்மைகள், குறைபாடுகள்
நன்மைகள்
குறைபாடுகள்
வெளிநாட்டு ஒத்துழைப்பைக் கூட்டுதல்
உள்நாட்டுத் தொழில்கள் இழப்பு
சந்தை விரிவாக்கம்
சமநிலையற்ற தன்மை அதிகரித்தல்
தொழில் நுட்ப வளர்ச்சி
வெளிநாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம்
கற்றோரின் புலம்பெயர்வைக் குறைத்தல்
20.10 உலகமயமாக்கலின் தாக்கம்
குறைந்த இயக்கச் செலவு, புதிய மூலப்பொருள்கள், கூடுதல் சந்தை.
பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் தயாரிக்க, வாங்க, விற்க முடிகிறது.
நுகர்வோர் பொருட்களின் சந்தை பெருக்கம்; வேலைவாய்ப்பு உருவாக்கம்.
20.11 எல்பிஜி கொள்கையின் சிறப்பு அம்சங்கள்
புதிய வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள்; வெளிநாட்டு முதலீடுகள் (FDI, FII); கட்டுப்பாடுகள் அகற்றுதல்; பன்னாட்டு வணிகம்; பணவீக்கக் கட்டுப்பாடு; வரி மறுசீரமைப்பு; உரிமம் முறை ஒழிப்பு.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பிரதானியாகக் கருதப்படுகிறார்.